Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் 2 பேர் கைது

Posted: 10 Apr 2015 01:27 PM PDT

மதுரையில் நெல்லில் கலப்படம் செய்தது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் 2 பேரை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

"நெல் மூட்டைகளில் கலப்படம்: உயர்நிலை விசாரணை தேவை'

Posted: 10 Apr 2015 01:26 PM PDT

நெல் மூட்டைகளில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சாலை விபத்தில் 3 பேர் சாவு

Posted: 10 Apr 2015 01:25 PM PDT

ஒசூர் அருகே நின்றிருந்த டிப்பர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

லாரி மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் சாவு

Posted: 10 Apr 2015 01:23 PM PDT

சென்னை வியாசர்பாடியில் மோட்டார் சைக்கிள் மீது சென்னை மாநகராட்சி லாரி மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கேரளம் இடையூறு விளைவிக்காமல் தடுக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு முறையீடு

Posted: 10 Apr 2015 01:21 PM PDT

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளைத் தடுத்து இடையூறு விளைவிக்காமல் உள்ளே அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தடைதான் இதற்கு விடை

Posted: 10 Apr 2015 01:16 PM PDT

ஒரு பக்கம் சிகரெட், மது உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்க அனுமதியளித்துவிட்டு, மறுபக்கம் அதனால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து மக்களைக் காக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அரசே நடத்தி வருவது வேடிக்கையான விஷயம்.

பெண்ணே நீ தலை வணங்காய்!

Posted: 10 Apr 2015 01:14 PM PDT

பெண்ணின தீங்கிழைப்புப் பற்றிய விவாதம் தில்லி நிர்பயா நிகழ்வுக்குப் பிறகு நடு மையத்துக்கு வந்து வதைந்து ஓய்ந்து,

தெளிவான இலக்கு!

Posted: 10 Apr 2015 01:13 PM PDT

இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் இல்லாமல் இருப்பதன் காரணம், எந்தவொரு திட்டமிடலிலும், கொள்கை முடிவுகளிலும் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் இருப்பதுதான்.

தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்குச் சாதகமான சூழல்

Posted: 10 Apr 2015 01:07 PM PDT

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்று மாநிலத் தொழில் துறை அமைச்சர் பி. தங்கமணி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுரை

Posted: 10 Apr 2015 01:05 PM PDT

ஆந்திர சம்பவத்தில் கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நிலம் கையக அவசரச் சட்டத்துக்கு எதிரான மனு மீது ஏப்.13-இல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

Posted: 10 Apr 2015 01:04 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு மீண்டும் அவசரச் சட்டம் கொண்டு வந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது திங்கள்கிழமை (ஏப்.13) விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஆந்திரத்தில் காணாமல்போன 40 தொழிலாளர்களை மீட்கக் கோரி மனு

Posted: 10 Apr 2015 01:03 PM PDT

ஆந்திர மாநிலத்தில் காணாமல்போன 40 தொழிலாளர்களைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த, டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

காரைக்குடி

Posted: 10 Apr 2015 01:02 PM PDT

மனித உரிமைகள் ஆணையம் ஏப்ரல் 22 முதல் விசாரணை

Posted: 10 Apr 2015 01:02 PM PDT

ஆந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, வரும் 22-ஆம் தேதி முதல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது.

விருதுநகர்

Posted: 10 Apr 2015 01:02 PM PDT

ராமநாதபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எப்போது?

Posted: 10 Apr 2015 01:02 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் மீனவர் குறைதீர் கூட்டம் தொடர்ந்து 15 மாதங்களாக நடத்தப்படாததால் குறைகளை தெரிவிக்க முடியாமல் மீனவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஆந்திர சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted: 10 Apr 2015 01:01 PM PDT

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் அந்த மாநில காவல் துறையின் அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ். முத்துகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி: புதிய அனல் மின் நிலைய 2-வது அலகில் சோதனை மின் உற்பத்தி தொடக்கம்

Posted: 10 Apr 2015 01:01 PM PDT

தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தின் 2-வது அலகிலும் சோதனை அடிப்படையிலான மின் உற்பத்தி வியாழக்கிழமை தொடங்கியது.

இளம்பெண் கொலை வழக்கு: தாத்தா உள்ளிட்ட 2 பேர் கைது

Posted: 10 Apr 2015 01:00 PM PDT

சிவகங்கை அருகே ஓராண்டுக்கு முன் இளம்பெண்  எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில்  அப்பெண்ணின் தாத்தா உள்ளிட்ட 2 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

திருவோடு ஏந்தி ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Apr 2015 12:59 PM PDT

ராமேசுவரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் திருவோடு ஏந்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 10 Apr 2015 12:58 PM PDT

தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரண்மனை முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

Posted: 10 Apr 2015 12:57 PM PDT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மானாமதுரை மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

இந்தோ-திபெத் வீரர்கள் குண்டு வெடிப்பு மீட்பு ஒத்திகை

Posted: 10 Apr 2015 12:56 PM PDT

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குண்டுவெடிப்பில் சிக்கியோரை மீட்பதற்கான பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

கோவிலூர் மக்களின் கருத்துக்கேற்ப ரசாயன ஆலை குறித்து முடிவு: ஆட்சியர்

Posted: 10 Apr 2015 12:55 PM PDT

காரைக்குடி அருகே கோவிலூர் கிராம மக்களிடம் கருத்துக்கேட்ட பின்னரே தனியார் ரசாயன ஆலை குறித்து முடிவு செய்யப்படும், என ஆட்சியர் து.முனுசாமி  தெரிவித்தார்.

பிகார்: மாவோயிஸ்ட் தாக்குதலில் இருந்து போலீஸார் தப்பினர்

Posted: 10 Apr 2015 12:54 PM PDT

பிகார் மாநிலத்தில், மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீஸார் சென்ற பாதையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்தது. எனினும், அவர்கள் எந்தப் பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: நாளை வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

Posted: 10 Apr 2015 12:54 PM PDT

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர், வயது, முகவரி திருத்தங்கள், இரட்டைப் பதிவுகள் இல்லாமல் செய்வது, புகைப்படம் சரி செய்தல் போன்ற பணிகள் சம்பந்தமான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12)அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது.

"பாஜக ஆட்சியில் குஜராத்தில் மதக் கலவரங்கள் குறைந்துள்ளன'

Posted: 10 Apr 2015 12:53 PM PDT

பாஜக ஆட்சிக் காலத்தில், குஜராத்தில் மதக்கலவரங்களும், பயங்கரவாத நடவடிக்கைகளும் குறைந்துள்ளன என்று அந்த மாநில ஹஜ் கமிட்டியின் தலைவரும், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவின் மைனாரிட்டி மோர்ச்சா அமைப்புத் தலைவருமான எம்.கே. சிஷ்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

விருதுநகர்-தென்காசி  ரயில் பாதையில் கண்ணாடி இழை கேபிள் வசதி அறிமுகம்

Posted: 10 Apr 2015 12:53 PM PDT

விருதுநகர்-தென்காசி ரயில் நிலையங்கள் இடையே ரூ.2.64 கோடி செலவில் பதிக்கப்பட்ட கண்ணாடி இழைக் கேபிள்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி: கபடியில் வேளாண் துறை சாம்பியன்

Posted: 10 Apr 2015 12:52 PM PDT

மதுரை மாவட்ட அளவில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கபடிப்போட்டியில் வேளாண் துறை சாம்பியன் பட்டம் வென்றது.

தேசத்தின் பன்முகத் தன்மையை பலவீனப்படுத்தக் கூடாது: பிரணாப்

Posted: 10 Apr 2015 12:51 PM PDT

தேசத் தலைநகர் தில்லியில், வடகிழக்கு மாநிலத்தவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக் கொள்ள இயலாது.

குழந்தைத் தொழிலாளர் மசோதாவை பட்ஜெட் தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தல்

Posted: 10 Apr 2015 12:51 PM PDT

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முழுமையாக தடை விதிப்பதை உறுதி செய்யும் வகையில், குழந்தை தொழிலாளர் மசோதாவை, நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாம் பகுதியில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று குழந்தை உரிமைகள் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தி உள்ளார்.

சித்திரைத் திருவிழா மே 2-இல் அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடு

Posted: 10 Apr 2015 12:51 PM PDT

சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் கோலத்தில் மே 2 ஆம் தேதி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

மேற்குவங்க தலைமைச் செயலகத்தில் தீ

Posted: 10 Apr 2015 12:50 PM PDT

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து நேரிட்டது.

"விவசாயிகளுக்கு விரைவில் நேரடி மானியம்'

Posted: 10 Apr 2015 12:48 PM PDT

விவசாய உபகரணங்களுக்கான மானியம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் முறையை விரைவில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மது அருந்திய மாணவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை சரியானதே: உயர்நீதிமன்றம்

Posted: 10 Apr 2015 12:48 PM PDT

கல்லூரிக்கு மது அருந்தி வந்த மாணவர் மீது கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கை  சரியானது தான் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விளாங்குடியில் புதிய நியாயவிலைக் கடை:அமைச்சர் திறந்து வைத்தார்

Posted: 10 Apr 2015 12:47 PM PDT

மதுரை விளாங்குடியில், கூட்டுறவுத் துறையின் புதிய நியாய விலைக் கடையை, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

சிவகாசி நகராட்சி காய்கறி சந்தை பிரச்னை: தவறு செய்வோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை

Posted: 10 Apr 2015 12:45 PM PDT

சிவகாசி நகராட்சி தினசரி காய்கறி சந்தையில்  தவறு செய்யும் நபர்கள் மீது  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அமைதிக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

10-ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவு

Posted: 10 Apr 2015 12:45 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் சமூக அறிவியல் பாடத் தேர்வுடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. தேர்வுகள் முடிவடைந்ததால், பல இடங்களில் மாணவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விருதுநகர்- சாத்தூர் இடையே தொழில் பூங்கா: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 10 Apr 2015 12:44 PM PDT

விருதுநகர்-சாத்தூர் இடையே 4 வழிச்சாலை மீது அரசு அறிவித்துள்ள தொழில்பூங்கா திட்டத்தை செயல்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஊரக வாழ்வாதார இயக்கம்: விருதுநகரில் இன்று மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்

Posted: 10 Apr 2015 12:43 PM PDT

மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில் வறுமை ஒழிப்புச் சங்கங்களின் செயல்பாடு குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

மதுரையில் 101 டிகிரி வெயில்

Posted: 10 Apr 2015 12:43 PM PDT

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 101 டிகிரி வெயில் வெள்ளிக்கிழமை பதிவானது. தருமபுரி, கரூர் பரமத்தி, சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி வெயில் பதிவானது.

தங்கம்: பவுனுக்கு ரூ. 80 உயர்வு

Posted: 10 Apr 2015 12:42 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 80 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து 136-க்கு வெள்ளிக்கிழமை விற்கப்பட்டது.

"மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவாக வழங்க ஏற்பாடு'

Posted: 10 Apr 2015 12:42 PM PDT

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தொடங்கும் போது மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவாக வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக,  முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வியாழக்கிழமை தெரிவித்தார். 

இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடியது திருக்குறள்: எம்.ராசாராம்

Posted: 10 Apr 2015 12:41 PM PDT

வாழ்க்கைக்குத் தேவையான அறக் கருத்துகளைக் கொண்ட திருக்குறள் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே நிலைத்து நிற்கக் கூடியது என்று தமிழக அரசின் செய்தித் துறைச் செயலர் எம்.ராசாராம் கூறினார்.

சிவகாசி: நாளை வாக்காளர் பட்டியல்  செம்மைப்படுத்தும் முகாம்

Posted: 10 Apr 2015 12:41 PM PDT

சிவகாசி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் முகாம், அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் என சிவகாசி வட்டாட்சியர் அய்யாக்குட்டி, தேர்தல் தனி துணை வட்டாட்சியர் கோமதிநாயகம் ஆகியோர் தெரிவித்தனர்.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Posted: 10 Apr 2015 12:40 PM PDT

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் நாளில் இலவச பேருந்து பயண அட்டை

Posted: 10 Apr 2015 12:38 PM PDT

2015-16 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் தொடங்கும் நாளிலேயே பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

தமிழ் மூலமே இறைவனைப் புரிந்துகொள்ள முடியும்: பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி

Posted: 10 Apr 2015 12:38 PM PDT

தமிழ் மொழியின் மூலம்தான் இறைவனைப் புரிந்து கொள்ள முடியும் என்று பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.

பள்ளிக் கட்டட அனுமதி தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் விதித்த நிபந்தனை ரத்து

Posted: 10 Apr 2015 12:37 PM PDT

பள்ளிக் கட்டட அனுமதி தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் விதித்த நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

திண்டுக்கல்லில் போக்குவரத்து மாற்றம்

Posted: 10 Apr 2015 12:36 PM PDT

திண்டுக்கல் அனுமந்தன் நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு ஆட்சியர் த.ந.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

தேனியில் வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

Posted: 10 Apr 2015 12:35 PM PDT

தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசு கூடுதல் தலைமை செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டி.எஸ்.ஸ்ரீதர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Posted: 10 Apr 2015 12:34 PM PDT

தேனி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

கோயில் திருவிழா: வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்

Posted: 10 Apr 2015 12:34 PM PDT

ஆண்டிபட்டி அருகே கோயில் திருவிழாவில் மோதலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக, வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது கட்டமாக மீண்டும் சமாதானக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சுரங்கனாறு நீர்வீழ்ச்சியை மறித்து  தடுப்பணை அமைக்க கேரள அரசு முயற்சிபி. அறிவழகன்

Posted: 10 Apr 2015 12:32 PM PDT

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தமிழகப் பகுதிக்குள் கொட்டும் சுரங்கனாறு   நீர்வீழ்ச்சியை மறித்து ரூ.1.75 கோடி செலவில் தடுப்பணை அமைக்க கேரள அரசு முயற்சித்து வருவதால், தமிழகப் பகுதியில் 500 ஏக்கர் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.

விளையாட்டுத் துறை விருது பெற ஏப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 10 Apr 2015 12:29 PM PDT

விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்குவோருக்கு வழங்கப்படும் கேல் ரத்னா, தயான்சந்த், அர்ஜூனா விருதுகளை பெறவதற்கு, தகுதி வாய்ந்தவர்கள் ஏப்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தேனி ராஜ வாய்க்காலில் தாற்காலிக சீரமைப்புப் பணி

Posted: 10 Apr 2015 12:29 PM PDT

தேனி நேரு சிலை மும்முனை சாலை சந்திப்பில், மழை நீர் தேங்குவதை தவிர்ப்பதற்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் ராஜ வாய்க்காலில் தாற்காலிக சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

பழனியில் குடிநீர் தட்டுப்பாடு நகர்மன்ற உறுப்பினர்கள் தர்னா

Posted: 10 Apr 2015 12:28 PM PDT

பழனி நகராட்சியில் குழாயில் உடைப்புகளால் பத்து நாள்களுக்கும் மேலாக 12-க்கும் மேற்பட்ட வார்டுகளில் குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

விசாரணை நீதிமன்றத்தில் சுப்ரதா ராய் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட ஆணைக்குத் தடை

Posted: 10 Apr 2015 12:28 PM PDT

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய் உள்பட 4 பேர், விசாரணை நீதிமன்றம் முன்பு ஆஜராவதற்கான ஆணைக்கு, தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

Posted: 10 Apr 2015 12:27 PM PDT

போடி தென்திரு அண்ணாமலை எனப்படும்  பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, போடி பெரியாண்டவர்      கோயிலில் இருந்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட கொடிமரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ரூ. 1,000 ஓய்வூதியத் திட்டம் நிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

Posted: 10 Apr 2015 12:27 PM PDT

மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 1,000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) நிறுத்தியதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஜெயகாந்தன் மறைவுக்கு பிரணாப் இரங்கல்

Posted: 10 Apr 2015 12:26 PM PDT

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம்: போக்குவரத்து நெரிசல்

Posted: 10 Apr 2015 12:24 PM PDT

தேனியில், மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து, சிற்றுந்து மற்றும் ஆட்டோ நிறுத்தங்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, பழைய பேருந்து நிலையத்தை பேருந்து நிறுத்தமாகப் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.

முன்னாள் தளபதி மூல்கான்கர் காலமானார்

Posted: 10 Apr 2015 12:24 PM PDT

முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி ரிஷிகேஷ் மூல்கான்கர் (95) காலமானார். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு எதிரான மனு தள்ளுபடி

Posted: 10 Apr 2015 12:23 PM PDT

சிவில் மேல்முறையீட்டு வழக்கு ஒன்றில், ஒரு சாராருக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான சி.கே. பிரசாத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பொது நல மனுவை, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

நிகழ் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சாலைப் பாதுகாப்பு மசோதா தாக்கல்?

Posted: 10 Apr 2015 12:22 PM PDT

நிகழ் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, சாலைப் போக்குவரத்து, பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை செயலாளர் விஜய் சிப்பர் தெரிவித்ததாவது:

எச்சரிக்கை!

Posted: 10 Apr 2015 12:22 PM PDT

ஆந்திர, தெலங்கானா சம்பவங்களை கண்டித்து தில்லியில் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Apr 2015 12:21 PM PDT

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கண்டித்து தில்லியில் உள்ள ஆந்திர பவன் இல்லத்தை சமூக ஆர்வலர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேதாஜியின் உறவினர்களை கண்காணித்த புலனாய்வு அமைப்பு

Posted: 10 Apr 2015 12:20 PM PDT

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உறவினர்களை, 20 ஆண்டுகளாக புலனாய்வு அமைப்பான ஐ.பி. கண்காணித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யேமனில் மீட்கப்பட்ட எகிப்திய பெண்: இந்தியாவுக்குப் பாராட்டு

Posted: 10 Apr 2015 12:12 PM PDT

யேமனில் இருந்து தன்னை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவத்துக்கு எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றம்

Posted: 10 Apr 2015 12:11 PM PDT

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

எட்டாம் வகுப்புத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 10 Apr 2015 12:11 PM PDT

எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருச்சி, மண்டலத் துணை இயக்குநர் ந. மாதவி தெரிவித்துள்ளார்.

நடுநிலை வகிக்க பாகிஸ்தான் முடிவு

Posted: 10 Apr 2015 12:11 PM PDT

யேமன் விவகாரத்தில் நடுநிலை வகிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யேமனுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவ உதவிப் பொருள்கள்

Posted: 10 Apr 2015 12:10 PM PDT

யேமனுக்கு விமானம் மூலம் மருத்துவ உதவிப் பொருள்களை அனுப்பியதாக செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக யஷ்வந்த்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்

Posted: 10 Apr 2015 12:10 PM PDT

ராமேஸ்வரத்திலிருந்து யஷ்வந்த்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.

குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது

Posted: 10 Apr 2015 12:10 PM PDT

திருச்சி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் ஏப். 11-ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமிலம் நிறைந்த கடலால் உயிரினங்களின் பேரழிவு

Posted: 10 Apr 2015 12:10 PM PDT

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீரில் இருந்த அமிலத் தன்மையால், கடல் வாழ் உயிரினங்களில் 90 சதவீத அளவும் நிலத்தில் இருந்த உயிரினங்களில் மூன்றில் இரு பங்கு அளவும் அழிக்கப்பட்டன என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் 143 பேர் கைதாகி விடுதலை

Posted: 10 Apr 2015 12:10 PM PDT

திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் மதுக்கடை இருப்பதாகக் கூறி, அந்த கடையை அகற்றக் கோரி தமுமுக மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 143 பேர் கைது செய்யப்பட்டனர்.

மலேசியாவிலிருந்து உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.6.68 லட்சம் தங்கம் பறிமுதல்

Posted: 10 Apr 2015 12:09 PM PDT

உடலுக்குள் மறைத்து மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 6.68 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் திருச்சியில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிப்பு

Posted: 10 Apr 2015 12:09 PM PDT

ஆந்திர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பிலும், அதிமுக, தேமுதிக, தமாகா சார்பிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

ஆந்திர வனத்தில் ஆம்பூர் பகுதி மரம் வெட்டும் தொழிலாளர்கள்

Posted: 10 Apr 2015 12:08 PM PDT

ஆந்திர வனப் பகுதியில் ஆம்பூர் பகுதி மலைக் கிராமத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் மரம் வெட்டுவதற்கு சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் பலி

Posted: 10 Apr 2015 12:08 PM PDT

பாகிஸ்தானின் வட மேற்கில் பழங்குடிப் பகுதியில் செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டு விமானப் படை விமானங்கள் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய தாக்குதல்களில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

துரியோதனன் படுகளம், தீமிதி விழா

Posted: 10 Apr 2015 12:08 PM PDT

கந்திலி திரெüபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளமும், தீமிதி உற்சவமும் நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: ஹிலாரி நாளை அறிவிப்பு?

Posted: 10 Apr 2015 12:07 PM PDT

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஹிலாரி கிளிண்டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார் எனத் தெரிகிறது.

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்

Posted: 10 Apr 2015 12:07 PM PDT

மழை வேண்டி. ஆரணியில் கழுதைகளுக்கு சலவைத் தொழிலாளர்கள் திருமணம் செய்துவைத்து, பூஜை செய்தனர்.

இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

Posted: 10 Apr 2015 12:07 PM PDT

ஆரணி கமண்டல நாகநதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து விற்றால் லாபம் பெறலாம்

Posted: 10 Apr 2015 12:06 PM PDT

விவசாயிகள் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து மே, ஜூன் மாதங்களில் விற்றால் நல்ல லாபம் பெறலாம் என்று வேளாண் வணிகத் துறை தெரிவித்துள்ளது.

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Apr 2015 12:06 PM PDT

புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத செங்கம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண் கழுத்தை அறுத்து எரித்துக் கொலை

Posted: 10 Apr 2015 12:05 PM PDT

வந்தவாசியில் பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

மனுநீதி நாள் முகாமில் 160 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 10 Apr 2015 12:05 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த சு.வாளாவெட்டி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 160 பயனாளிகளுக்கு ரூ.3.62 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி வழங்கினார்.

செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 10 Apr 2015 12:05 PM PDT

திருவண்ணாமலையில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியைக்கு கொலை மிரட்டல்:கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு

Posted: 10 Apr 2015 12:04 PM PDT

திருவண்ணாமலையில் 2-வது திருமணத்தை தட்டிக்கேட்ட ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

பள்ளி செல்லாக் குழந்தைகள் 10 பேர் மீண்டும் சேர்ப்பு

Posted: 10 Apr 2015 12:04 PM PDT

பள்ளிச் செல்லாக் குழந்தைகள் 10 பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

நேட்டோ வாகனம் மீது தற்கொலைத் தாக்குதல்: ஆப்கனில் 3 பேர் பலி

Posted: 10 Apr 2015 12:04 PM PDT

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினருக்கு எதிராக வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.

இரு சக்கர வாகனத்தில் சேலை சிக்கி விபத்து: குழந்தை சாவு

Posted: 10 Apr 2015 12:04 PM PDT

செய்யாறு அருகே, இரு சக்கர வாகனத்தில் சேலை சிக்கி 5 மாதக் குழந்தை இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி தற்கொலை

Posted: 10 Apr 2015 12:04 PM PDT

திருவண்ணாமலை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

குறுந்தகவல் சேவையைத் தொடங்கியது ரிலையன்ஸ் ஜியோ

Posted: 10 Apr 2015 12:03 PM PDT

"ஜியோ சாட்' எனும் உடனடி குறுந்தகவல் மற்றும் அழைப்பு அப்ளிகேஷனைத் தொடங்கியதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்தது.

ஆந்திர அரசுப் பேருந்துகள் 4-ஆவது நாளாக ரத்து

Posted: 10 Apr 2015 12:03 PM PDT

வேலூர் மாவட்டத்துக்கு வந்து செல்லும் ஆந்திர மாநில அரசின் பேருந்துகள் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இயக்கப்படவில்லை.

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 10 Apr 2015 12:02 PM PDT

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தையில் மந்த நிலை

Posted: 10 Apr 2015 12:02 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் மந்த நிலை காணப்பட்டது. சென்செக்ஸில் 5 புள்ளிகள் குறைந்து 28,879 புள்ளிகளாக நிலைத்தது.

ஆந்திர முதல்வருக்கு அருந்ததி மக்கள் கட்சி கண்டனம்

Posted: 10 Apr 2015 12:02 PM PDT

திருப்பதி வனப் பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலக வேண்டும் என அருந்ததி மக்கள் கட்சித் தலைவர் வலசை ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™