Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


விவசாயி தற்கொலை: கெஜ்ரிவால் மீது 10 வழக்குகள்

Posted: 24 Apr 2015 10:52 PM PDT

ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல் – மந்திரியுமான கெஜ்ரிவால் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரசிங் மரத்தில் ஏறி

மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை: வாக்குச்சாவடிக்குள் ஒருவர் சுட்டுக்கொலை

Posted: 24 Apr 2015 10:20 PM PDT

மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவர் படுகாயம் அடைந்தார். மேற்கு வங்காளத்தில் 91 நகராட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாநில காவல்துறை மற்றும்

கொப்பல் அருகே கற்பழித்த மடாதிபதியுடன் பெண்ணுக்கு திருமணம்

Posted: 24 Apr 2015 08:55 PM PDT

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் சாமளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 26). இவருக்கும் சாமளாபுரா அருகே உள்ள ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த ஈரண்ணா என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி திருமணம் நடந்தது.

திப்பு சுல்தானின் 30 போர் கருவிகள் ரூ.57.29 கோடிக்கு விற்பனை

Posted: 24 Apr 2015 08:43 PM PDT

ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திப்பு சுல்தான். 'வாழ்நாள் முழுவதும் மந்தையில் ஒரு ஆடாக வாழ்வதை விட ஒரு புலியாக வாழ்ந்து சாவதே மேல்' என வீர முழக்கமிட்டவர் திப்பு சுல்தான். இதனால் 'மைசூரு புலி' என்று அழைக்கப்பட்ட இவர்

மராட்டியத்தில் 58 கிலோ தங்கம் கொள்ளை: போலீசாக நடித்து கொள்ளையர் துணிகரம்

Posted: 24 Apr 2015 08:10 PM PDT

மராட்டிய மாநிலம், மும்பை அந்தேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து, ஒரு காரில், ரூ.16 கோடி மதிப்புள்ள 58 கிலோ தங்கத்தை சுத்திகரிப்பு செய்வதற்காக துலே மாவட்டம், ஷிர்பூர் நகரில் உள்ள தங்க சுத்திகரிப்பு ஆலைக்கு நேற்று எடுத்துச் சென்றனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: ஆம் ஆத்மி வழங்கியது

Posted: 24 Apr 2015 08:06 PM PDT

டெல்லியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்துக்கு நஷ்ட ஈடாக ரூ. 10 லட்ச ரூபாயை நேற்று கஜேந்திர சிங்கின்

பஞ்சாயத்து நிர்வாகத்தில் கணவரின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

Posted: 24 Apr 2015 07:37 PM PDT

டெல்லியில் நேற்று தேசிய பஞ்சாயத்துராஜ் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில் சிறந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார். விழாவில் மோடி பேசியதாவது:- கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களின் செயல்பாடுகள் மிகவும்

யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்: வீடியோ இணைப்பு

Posted: 24 Apr 2015 05:48 PM PDT

பிரபல பாப் பாடகி 'ரே ஜெப்சனின்' மெகா ஹிட் வீடியோ ஆல்பம் 'Call Me, Maybe'. இந்த ஆல்பத்தில் 'பீச் பிகினி' உடை அணிந்து வரும் மாடல்கள் கவர்ச்சி நடனமாடி இந்த ஆல்பத்தின் பெயரை, பாத்ரூம் ஷவர், ஓடும் பேருந்து, நீச்சல் குளத்தின் உள்ளே, என்று வித விதமான லொகேஷன்களில் பாடவும் செய்வர்கள்.

பாஸ்ட் புட் கடை ஊழியரை கொடூரமாக தாக்கிய அமைச்சரின் மகன்

Posted: 24 Apr 2015 02:39 PM PDT

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பாஸ்ட் புட் கடை ஊழியரை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் புருஷோத்தம் சோலன்ச்கியின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது.

மத ஊர்வலங்களில் யானைகளை பயன்படுத்த தடை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted: 24 Apr 2015 01:58 PM PDT

மதம் சார்ந்த ஊர்வலங்கள் அரசியல் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடைகோரும் மனுவின் மீது 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், பொதுவிழாக்கள் ஆகியவற்றில் யானைகளை பயன்படுத்த தடை விதிக்க

கிரிக்கெட் விளையாடிய 6 வயது சிறுவன்: பந்து தாக்கி சுருண்டு விழுந்து பலி

Posted: 24 Apr 2015 11:53 AM PDT

தெலுங்கானாவில் கிரிக்கெட் பந்து பட்டு 6 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் வனஸ்தலிபுரத்தில் உள்ள சகாரா எஸ்டேட்டில் வசிக்கும் சிறுவன் வம்ஷி கிருஷ்ணா(6), கடந்த வியாழன் அன்று மாலை தனது

மேக் இன் இந்தியா: உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் தொடக்கம்

Posted: 24 Apr 2015 10:35 AM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக டிஸ்ட்ரிப்யூட்டர்கள் மூலமாக இந்தியாவில் தங்களது 3-டி பிரிண்டர்களை விற்று வந்த அமெரிக்காவைச் சேர்ந்த

நடைமுறையில் இல்லாத 758 சட்டங்களை நீக்க மசோதா: பாராளுமன்றத்தில் தாக்கல்

Posted: 24 Apr 2015 09:30 AM PDT

நடைமுறையில் இல்லாத 758 சட்டங்களை நீக்குவது தொடர்பான சட்ட மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சட்டவடிவமாக்கப்பட்ட சில விதிமுறைகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இருந்து வருகின்றன. இவற்றில் ஒன்றிரண்டைக்கூட தற்காலச் சூழலுக்கு நடைமுறைப்படுத்த முடியாமல் உள்ள நிலையில், இதைப்போன்ற சட்டங்களை இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தில் இருந்து அகற்றிவிட மத்திய அரசு முடிவு செய்தது.

மின்னணு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய தமிழகத்திற்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது: மத்திய அரசு வழங்கியது

Posted: 24 Apr 2015 09:16 AM PDT

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பான நிர்வாகத்திற்காக ஊராட்சி கணக்குகளை கண்காணிப்பதற்கான கணக்கீட்டு மென்பொருள் (பிரியாசாப்ட்), உள்ளாட்சி அமைப்புகள் விவர தொகுப்பு (எல்.ஜி.டி), ஊராட்சிகளுக்கான தேசிய வலைத்தளம், தேசிய அளவிலான ஊராட்சி சொத்துக்கள் விவர தொகுப்பு மற்றும் ஊராட்சி அளவில் திட்டமிடலுக்கான பிளான் பிளஸ் ஆகிய மின்னணு ஆளுகை மென்பொருட்களை உருவாக்கி

விவசாயிகள் நீடூழி வாழ வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருப்பம்

Posted: 24 Apr 2015 08:54 AM PDT

நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் பெருகிவரும் நிலையில் விவசாயிகள் நீண்ட காலம் வாழ வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருப்பம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள தொழில் நகரமான சூரத்தில் இன்று நடைபெற்ற பல்நோக்கு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்திருந்த

இந்திய ராணுவத்தில் சுபாஷ் படைப்பிரிவை உருவாக்க வேண்டும்: பாராளுமன்றத்தில் காங். எம்.பி. மசோதா தாக்கல்

Posted: 24 Apr 2015 08:21 AM PDT

இந்திய ராணுவத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் படைப்பிரிவை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தினார். மக்களவையில் இன்று காங்கிரஸ் கட்சியின் ரோதக் தொகுதி எம்.பி.யான தீபிந்தர் சிங் ஹூடா ஒரு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். 'போஸ் படைப்பிரிவு மசோதா-2015' என்ற அந்த மசோதாவை அறிமுகம் செய்து

பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Posted: 24 Apr 2015 08:17 AM PDT

பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர் குலாம் அலி (வயது 74) டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். தனது 6-வது வயது முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர்களில் ஒருவராவார். இந்திய மொழிகளில் வெளியான சில திரைப்படங்களிலும் பாடியுள்ள குலாம் அலி, பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்காது: மம்தா திட்டவட்டம்

Posted: 24 Apr 2015 06:59 AM PDT

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்கள் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு ஆதரவு அளிக்கமாட்டோம். நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெளிவாக தெரிவித்துவிட்டோம். வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நான் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவள்.

தற்கொலை செய்த ராஜஸ்தான் விவசாயி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆம் ஆத்மி மூத்த தலைவர்

Posted: 24 Apr 2015 06:28 AM PDT

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆறுதல் கூறினார். நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்றுமுன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. டெல்லி முதல்–மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசத் தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக,

திருமண பந்தலுக்குள் புகுந்த லாரி: 5 பேர் உடல் நசுங்கி சாவு

Posted: 24 Apr 2015 05:15 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமண பந்தலுக்குள் திடீரென லாரி புகுந்ததில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ரேபரேலி மாவட்டத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த கூரியர் நிறுவன லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பந்தலுக்குள் புகுந்தது. இதனால் பந்தல் சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி உயிருக்குப்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™