Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் சூர்யா.?!

Posted:

புதியவர் வினோத் இயக்கத்தில், ஒளிப்பதிவாளர் நட்டி என்ற நட்ராஜ் ஹீரோவாக நடித்து, கடந்தாண்டு வெளிவந்து, அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் சதுரங்க வேட்டை. மக்களை எந்தெந்த வழிகளில் ஏமாற்றுகிறார்கள் என வெளிச்சம் போட்டு காட்டிய படம் இது. வினோத்திற்கு பெரிய அடையாளத்தை கொடுத்துள்ள படம் இது. இந்தப்படத்திற்கு பிறகு வினோத்திற்கு ...

என்னை தைரியமாக நடிக்க வைத்தவர் ஐஸ்வர்யா - வஸந்த்!

Posted:

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவியாளர்களாக பணியாற்றியவர்களில் இயக்குநர் வஸந்த் முக்கியமானவர். கேளடி கண்மணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வஸந்த், ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், ரிதம், சத்தம் போடாதே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்கிய படங்கள் குறைவு தான் என்றாலும் தமிழ் சினிமாவில் ...

உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Posted:

திருப்பதி பிரதர்ஸ், தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காதது தொடர்பாக, உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரி, தங்கம் சினிமாஸ் நிறுவனம் தொடுத்த வழக்கின் விசாரணை, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உத்தமவில்லன் படத்தை தயாரித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், தங்கம் சினிமாஸ் நிறுவனத்திடம், அப்பட பணிகளுக்காக, ரூ. 2 ...

ஆகஸ்ட்டில் கீர்த்தியை மணக்கிறார் சாந்தனு

Posted:

பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் புதல்வனான சாந்தனுவிற்கும், சின்னத்திரை பெண் தொகுப்பாளர் கீர்த்திக்கும், வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக இருவீட்டார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இயக்குநர் பாக்யராஜ் தரப்பில் மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் ...

தமிழினத்தின் பிள்ளைகள் தப்பாக படமெடுப்போமா? - கங்காரு சுரேஷ் காமாட்சி

Posted:

உலகுக்கே கலாச்சாரம் கற்றுத் தந்த தமிழினத்தின் தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படிப் படமெடுக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. கங்காரு படத்தைப் பார்க்காமலே கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களை என்னவென்று சொல்வது, என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

கங்காரு படத்துக்கு ...

அரசியல் த்ரில்லர் படத்தில் ஆர்யா

Posted:

உலக நாயகன் கமலஹாசனாலேயே, அடுத்த காதல் இளவரசன் என்று குறிப்பி்டப்பட்ட நடிகர் ஆர்யா, விரைவில், அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.

ஆர்யா, பெரும்பாலும் காதல் சம்பந்தமான படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ...

'என்னை அறிந்தால்' படத்தை முந்திய 'ஓ காதல் கண்மணி'

Posted:

'ஓ காதல் கண்மணி' படம் மிகவும் 'கிளாஸ்' ஆக அமைந்து 'ஏ' சென்டர்களில் அமோகமான வசூலை அள்ளி வருவதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இளம் ரசிகர்களின் வரவேற்பை அதிகமாகப் பெற்றுள்ள இந்தப் படம் அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்தை வெற்றிகரமாகக் கடந்த இந்தப் படம் இரண்டாவது வார நாட்களிலும் நல்ல வசூலை ...

மலையாளத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் ஆர்வம்..!

Posted:

தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் வரிசையில் அல்லு அர்ஜூனுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உணடு. ஆனால் அதிசயம் என்னவென்றால் தெலுங்கு ஹீரோக்களில் இவரது படங்கள் மட்டுமே கேரளாவில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வசூலை அள்ளுகின்றன. கேரளா முன்னணி நடிகர்களின் படங்கள் எந்த அளவு வசூலை அள்ளுமோ, அந்த அளவு ...

க்யூப், யுஎஸ்ஓ., நிறுவனங்களுக்கு கடிவாளம் போடுகிறது தமிழ் திரையுலம்

Posted:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தலைவர் தாணு மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

க்யூப் மற்றும் யுஎஸ்ஓ., நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரியை செலுத்துவதாக தயாரிப்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கின்றனர். ஆனால் அந்த தொகையை அரசுக்கு அவர்கள் ...

அஜித் படத்தில் வில்லனாக மும்பை நடிகர்

Posted:

தல அஜித் நடிப்பில் விரைவில் உருவாக உள்ள அஜித் 56 படத்தில், மும்பை மாடல் நடிகர் கபீர் துஹான் சிங், வில்லனாக நடிக்க உள்ளார்.

வீரம் சிவா இயக்கத்தி்ல், அஜித், அஜித் 56 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில், அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் ...

எத்தனை பேரைத்தான் காதலிக்கிறது: கவுதம் கார்த்திக் பேட்டி!

Posted:

கடல், என்னமோ ஏதோ படங்களுக்கு பிறகு தேவை ஒரு கட்டாய வெற்றி என்ற நிலையில் இருக்கிறார் கவுதம் கார்த்திக். வை ராஜா வை, சிப்பாய், இந்திரஜித், ரங்கூன் என அடுத்தடுத்து அவரது படங்கள் வெளிவர இருக்கிறது. வருகிற மே 1ம் தேதி வெளிவருகிறது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி உள்ள வை ராஜா வை. தொடக்கம் சின்ன சறுக்கலாக இருந்தாலும் கண்கள் நிறைய நம்பிக்கையுடன் ...

விஜய் அவார்ட்ஸ் விழாவில், பிரபுதேவா-ஸ்ருதிஹாசன் நடனம்

Posted:

ஆண்டுதோறும் நடந்து வரும் மிகப்பெரிய திரைப்பட விருது வழங்கும் விழாவான விஜய் அவார்ட்ஸ் விழா நாளை (ஏப் 25) மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பிரபுதேவா பல வருடங்களுக்கு பிறகு மேடையில் நடனம் ஆடுகிறார். அவர் "மை லைஃப் மை வே" (என் ...

மகனை நடிகராக்குகிறார் டெல்லி கணேஷ்

Posted:

500 படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ், தன் மகன் மகாதேவனையும் நடிகராக்குகிறார். இயக்குனராகும் ஆசையில் அது தொடர்பாக படித்து வந்த மகாதேவன் தற்போது நடிக்க முடிவு செய்திருக்கிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் மதராசபட்டினம், வேலாயுதம், சைவம் படங்களில் பணியாற்றிய கிருஷ்ணா இயக்கும் புதிய படத்தில் ...

இளையராஜா பாடல்கள் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 10 கோடி ரூபாய் வருமானம்: தாணு தகவல்

Posted:

இளையராஜா பாடல்களை பயன்படுத்திய வகையில் ஆடியோ நிறுவனங்கள் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார். சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கம் நல்ல நிலையை நோக்கி ...

கங்காரு படத்துக்கு தடைகேட்டு வழக்கு

Posted:

உயிர், சிந்து சமவெளி, மிருகம் படங்களை இயக்கிய சாமி தற்போது இயக்கி உள்ள படம் கங்காரு. வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். புதுமுகம் அர்ஜுனாவுடன் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். இது அண்ணன் தங்கை பாசத்தை பற்றிய படம். தங்கை மீது வெறித்தனமான பாசம் கொண்ட அண்ணன் சைக்கோவாக மாறுகிற சைக்காலஜிக்கல் ...

“வெட்கமாக இல்லையா..?” - ராம்கோபால் வர்மா மீது குஞ்சாக்கோ போபன் தாக்கு..!

Posted:

இப்படி ஒரு பூதாகரமான விஷயத்தில் சிக்கி, பலபேரின் கண்டனத்துக்கு ஆளாவோம் என்று தெரிந்திருந்தால் ராம்கோபால் வர்மா தனது கருநாக்கை அடக்கி வைத்திருப்பாரோ என்னவோ..? தேவையில்லாமல் மெகாஸ்டார் மம்முட்டியை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்கு அவமானப்படுத்தி விமர்சிக்க, இந்தியாவில் இருந்து மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மலையாள ரசிகர்கள், ...

செம்மரம் கடத்தலில் பிரபல திரைப்பட நடிகை:போலீசார் வழக்கு பதிந்து வலைவீச்சு

Posted:

செம்மரம் கடத்தலில் தொடர்புடைய நடிகை மீது, ஆந்திர மாநில போலீசார், வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர். பிரேமா பிராயணம் என்ற தெலுங்கு திரைப்படத்தில், கதாநாயகியாக நடித்துள்ள நீத்து அகர்வால், 25, மீது ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். செம்மரம் கடத்தலில் தொடர்புடைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்தவர், மஸ்தான் அலி. இவர், இவரது ...

தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டும் துல்கர் சல்மான்

Posted:

மலையாள திரையின் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனும், அங்கு வளர்ந்து வரும் நடிகருமான துல்கர் சல்மானின் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் திரைக்கு வந்த ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றி, அவருக்கு பிற மொழி படங்களின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வாய மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமான துல்கர் சல்மான் ஓகே ...

சிக்கலில் லயன் பட விற்பனை

Posted:

நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கபடிருந்த நிலையில், தற்போது அப்படத்தின் வியாபாரத்தில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது. இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தயாரிப்பாளர் ருத்ரபதி ரமணா ராவ் தனது தயாரிப்பு ...

என்னை நம்பாத நண்பன் சமுத்திரக்கனி - 'காவல்' இயக்குனர்

Posted:

விமல், புன்னகைப் பூ கீதா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள 'காவல்' படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை இயக்குனர் சுசிகணேசனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த நாகேந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு முதலில் 'நீயெல்லாம் நல்லா வருவடா' எனப் பெயர் வைத்திருந்தனர். படத்தைப் பார்த்த பல ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™