Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பிரபல மலையாள நடிகர்– அரசியல் பிரமுகர்கள் கற்பழித்தனர்: சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 07 Apr 2015 11:06 PM PDT

கேரளாவை சேர்ந்தவர் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர். இவர் கேரள மற்றும் தமிழகத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் பொருத்தி தருவதாக பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சரிதாநாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சரிதாநாயர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இயற்கை பேரிடரால் 33 சதவீத அளவுக்கு பயிர்கள் சேதமடைந்தால் நிவாரணம் வழங்கப்படும்: மோடி அறிவிப்பு

Posted: 07 Apr 2015 11:05 PM PDT

இயற்கை பேரிடர்களால் 33 சதவீத அளவுக்கு பயிர்கள் சேதமடைந்தால் நிவாரணம் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள், மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் தங்கள் பயிர்கள் சேதமடையும் போது நிவாரணம்

சிறு தொழில் தொடங்க 10 லட்ச ரூபாய் கடன் வழங்கும் முத்ரா வங்கியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Posted: 07 Apr 2015 11:00 PM PDT

சிறு தொழில்கள் தொடங்க ரூபாய் 10 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கும் முத்ரா வங்கி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது மோடி உரையாற்றி கூறியதாவது; சுய வேலை வாய்ப்பை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் வேலை வாய்ப்பை உருவாக்குவதை தான் அரசு முன்னுரிமையாக

கெஜ்ரிவாலுக்கு கொடுத்த காரை திரும்ப கேட்கும் தொண்டர்: கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தி

Posted: 07 Apr 2015 08:03 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான டெல்லியை சேர்ந்த குந்தன் ஷர்மா என்பவர் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, ஒரு மோட்டார்சைக்கிளும், நீல நிற கார் (வேகன் ஆர்) ஒன்றும் ஏற்கனவே பரிசளித்தார். அந்த காரைதான் அரவிந்த் கெஜ்ரிவால் தினமும் பயன்படுத்தி வருகிறார்.

டெல்லி மேல்-சபை 23-ந் தேதி கூடுகிறது: மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

Posted: 07 Apr 2015 07:56 PM PDT

டெல்லி மேல்-சபை கூட்டம் வருகிற 23-ந் தேதி கூடுகிறது. இதுதொடர்பான முடிவு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான மத்திய மந்திரிசபை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை

நோய் வராமல் தடுக்க முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: உம்மன்சாண்டி பேச்சு

Posted: 07 Apr 2015 07:56 PM PDT

உலக சுகாதார தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. சுகாதார துறை மந்திரி வி.எஸ்.சிவகுமார் முன்னிலை வகித்தார். விழாவை தொடங்கி வைத்து

தேர்தல் பிரசார மேடையில் சரத்பவார் மகளுக்கு திடீர் மயக்கம்: தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

Posted: 07 Apr 2015 07:45 PM PDT

தேர்தல் பிரசார மேடையில் பேசி கொண்டிருந்த சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி.க்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்- மந்திரியுமான ஆர்.ஆர்.பாட்டீல் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்த சாங்கிலி மாவட்டம்

பிரதமர் மோடி நாளை பிரான்ஸ் நாட்டுக்கு பயணம்

Posted: 07 Apr 2015 07:36 PM PDT

பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு நாளை(வியாழக்கிழமை) பயணம் மேற்கொள்கிறார். அப்போது அந்த நாட்டு நிறுவனங்களுடன் ராணுவ துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் வட அமெரிக்காவின் கனடா ஆகிய நாடுகளில் 8 நாட்கள் அரசு முறை

தாத்தா,அப்பா,மகள் என்று வரிசையாய் காசநோய்க்கு பலியாகி வரும் பீடி சுற்றும் குடும்பம் - சிறப்பு வீடியோ பதிவு

Posted: 07 Apr 2015 05:41 PM PDT

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ரே பெரேலி மாவட்டத்தில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு, வெறும் 45 ரூபாய்க்காக தினசரி 1000 பீடிகளை சுற்றும், அப்சனா என்ற 13 வயது இளம்பெண்ணிற்கு, புகையிலையில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட தூசு நுரையீரலில் சென்று படிவதால் கடும் உடல்

சந்திரபாபு நாயுடுவுடன் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சு

Posted: 07 Apr 2015 05:11 PM PDT

திருப்பதி திருமலை வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

குஜராத்தில் 9 வயது சிறுமி தற்கொலை

Posted: 07 Apr 2015 04:05 PM PDT

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 9 வயது சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்வாடிபரா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வரும் அந்தச் சிறுமி, பெற்றொர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில்

ஹேர் டிரையருக்குள் தங்க நகைகளை ஒளித்து வைத்துக் கடத்தி வந்த இந்தியப் பயணி கைது

Posted: 07 Apr 2015 03:46 PM PDT

கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தங்க நகைகளை கடத்திக் கொண்டு வந்த இரு வேறு நபர்களிடமிருந்து, 45 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை விமான நிலைய போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

விளைச்சல் பொய்த்துப் போன சோகத்தில் இதயம் செயலிழந்து, பலியான விவசாயி

Posted: 07 Apr 2015 02:37 PM PDT

உத்திர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள முகமத்பூர் ராய்சிங் கிராமத்தில், விளைச்சல் பொய்த்துப் போனதால், வாங்கிய கடனை அடைக்க இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற வேதனையில் தவித்த விவசாயி ஒருவர், இதயம் செயலிழந்து இறந்துள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா

Posted: 07 Apr 2015 12:38 PM PDT

கிளப் கிரிக்கெட் வகையைச் சேர்ந்த ஐபிஎல் போட்டி, ஒரு சர்வதேச போட்டிகளுக்கு நடைபெறுவது போன்ற பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் நேற்று தொடங்கியது. ஐ.பி.எல். சீசன் 8 கிரிக்கெட் தொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முன்னதாக, நேற்றிரவு கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க விழாவில் பர்கான் அக்தர், ஷாகிப் கபூர்,

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

Posted: 07 Apr 2015 09:02 AM PDT

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 107 சதவீத அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள சரிபாதி பேர் சுய வைத்தியத்தையே இன்னும் நம்புகின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted: 07 Apr 2015 08:59 AM PDT

இந்தியர்களில் 52 சதவீதம் மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உடனடியாக உரிய டாக்டர்களிடம் சென்று நிவாரணம் தேடுவதில்லை; மாறாக, மருந்துக் கடைக்காரர்கள் மற்றும் பஸ், ரெயில்களில் அறிமுகமாமும் புதிய நபர்களின் ஆலோசனைப்படி சுய வைத்தியம் செய்து நோயின் தன்மையை தீவிரமடையச் செய்கின்றனர் என தெரிய வந்துள்ளது. உலக சுகாதார தினமான இன்று தங்களது உடல் ஆரோக்கியத்தில் இந்தியர்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளனர்? என்பது தொடர்பாக

அனைத்து அவசர உதவிக்கும் நாடு முழுவதும் ஒரே இலவச அழைப்பு எண் 112: டிராய் பரிந்துரை

Posted: 07 Apr 2015 07:50 AM PDT

அவசர போலீஸ் உதவி, சாலை விபத்து, தீ விபத்து, உயிர் காக்கும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து அவசர உதவிகளுக்கும் '112' என்ற ஒரே இலவச அழைப்பு எண்ணை பயன்படுத்துமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' பரிந்துரைத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள அவசர அழைப்பு எண்களான 100, 101, 102, 108 போன்ற எண்களுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைந்த அவசர அழைப்பு எண்ணான '911' போல் இந்தியாவிலும்

திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை: ஆந்திர மாநில தலைமை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 07 Apr 2015 07:17 AM PDT

திருப்பதியில் உள்ள சேஷாச்சல மலையின் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக ஆந்திர வனத்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் 20 தமிழர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தானே முன்வந்து (சுவோமோட்டிவ்) இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஆந்திர மாநில அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு

மேற்கு வங்காளத்தில் பட்டப்பகலில் துணிகரம்: துப்பாக்கி முனையில் வங்கியில் இருந்து ரூ.13 லட்சம் கொள்ளை

Posted: 07 Apr 2015 06:41 AM PDT

மேற்கு வங்காளம் மாநிலத்தில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை சிறைபிடித்து 13 லட்சம் ரூபாயுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹூக்லி மாவட்டத்தின் பண்டெல் பகுதியில் உள்ள பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்குக்குள் இன்று காலை 10.50 மனியளவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 9 பேர் புகுந்தனர். வங்கியின் மேனேஜர் அனுஜ் குமார் என்பவரை துப்பாக்கி முனையில் ஒருவன் சிறைபிடித்தான்.

சேலை கட்டுவதால் என் மனைவியை யாரும் கிண்டல் செய்வதில்லை: கோவா மந்திரி

Posted: 07 Apr 2015 06:38 AM PDT

என் மனைவி எப்போதும் சேலை மட்டுமே அணிவதால் அவரை இதுவரை யாரும் கிண்டல் செய்தது கிடையாது என கோவா மாநில மந்திரி தீபக் தவாலிகர் தெரிவித்து உள்ளார். கோவாவின் தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் துறை மந்திரி தீபக் தவாலிகரின் மனைவி லதா, ஞாயிற்றுக் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, பெண்கள் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளை கான்வென்ட் பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள், மேற்கத்திய கலாச்சாரத்தால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்பது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™