Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி!

Posted: 28 Apr 2015 03:30 PM PDT

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.ஆச்சார்யாவை கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞரான பவானி சிங் ஆஜராகி வந்தார். இதனிடையே, பவானி சிங்கை நீக்க கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு ...

தேசியச் செய்திகள்

Posted: 28 Apr 2015 03:10 PM PDT

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம் பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் ...

புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891

Posted: 28 Apr 2015 02:59 PM PDT

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் ...

ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்த தினம்: ஏப்.29- 1848

Posted: 28 Apr 2015 02:55 PM PDT

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா- நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார். ராஜா ...

ரவிவர்மா ஓவியங்கள்

Posted: 28 Apr 2015 02:47 PM PDT



கிராமத்துப் பெண்ணின் அழகு தோற்றம்

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 28 Apr 2015 01:47 PM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Posted: 28 Apr 2015 01:13 PM PDT

நம் வாழ்வில் அனைவரும் பல புத்தகங்களை படித்திருப்போம்.  ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்விற்கு  ஒரு சிறு அன்பளிப்பையாவது  கொடுத்துச்  சென்றிருக்கும். சிலருக்கு சில புத்தகங்கள் தங்கள் வாழ்கையை புரட்டிப் போட்ட  நெம்புகோலாய், சிலருக்கு கடும் குளிரில் காத்த கம்பளியாய், அடை  மழையில் காத்த குடையாய், வழிகாட்டியாய், உலகை அணுகும் முறையை, பிறர் சொல்லின் நுண் பொருளை காணும் அறிவை, வாழ்வில் வர்ண ஜாலம் படைக்கும் வித்தையை கற்றுக் கொடுத்திருக்கும். இந்தத்  திரியின் நோக்கம், உறவுகள் தாங்கள் படித்த, தங்களை பாதித்த ...

உறவு - சிறுகதை

Posted: 28 Apr 2015 10:15 AM PDT

அம்மாவை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து வீட்டுக்கும், வாசலுக்குமாக நடையாய் நடந்தாள் அமுதா. கணவன் கலையரசன் வருகைக்காகத்தான் இத்தனை எதிர்பார்ப்பு. வழக்கமாக ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடுபவன் இன்னும் வராதது அமுதாவுக்கு தவிப்பை அதிகமாக்கியது. கவலையோடு கதவில் சாய்ந்தாள். சிறிது நேரத்துக்கு பின் வாசலில் அரவம் கேட்கவே கவனத்தை கலைத்தாள். கலைய ரசனுடன் அவனுடைய தம்பியும் வந்திருந்தான். இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு, டிபன் தயார் செய்து முடிப்பதற்குள் இரவு எட்டு மணியாகிவிட்டது. அவன் தம்பி சாப்பிட்டுவிட்டு ...

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Posted: 28 Apr 2015 10:00 AM PDT

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ...

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Posted: 28 Apr 2015 09:46 AM PDT

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் ...

அம்பானி ஒரு வெற்றிக் கதை - என். சொக்கன்

Posted: 28 Apr 2015 09:43 AM PDT

'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் உற்பத்தி, அதன்பின் பாலியெஸ்டர் உற்பத்திக்கான மூலப்பொருள்களை உருவாக்குவது, அந்த மூலப்பொருள்களின் ஆதாரமான பெட்ரோலிய சுத்திகரிப்பு, அங்கிருந்து பெட்ரோலையே ...

ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? ,

Posted: 28 Apr 2015 06:29 AM PDT

ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? பெங்களூரு: சப். இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகள் காதலிக்கிறாள் என்ற சந்தேகத்தில் நடு ரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அடித்து உதைத்து தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான படங்கள் முகநூலில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தலை குனிவு சம்பவத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. இவர் தனது ...

ட்வீட்டாம்லேட்: விஜயகாந்த்... நேற்று விறுவிறு இன்று வறுவறு

Posted: 28 Apr 2015 06:27 AM PDT

கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் அணைகளை கட்டுவது உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக தேமுதிக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரை இதற்காக சந்தித்து அவர் அழைப்பு விடித்திருக்கிறார். பொதுப் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளோடு ஒன்றினைந்து ஆலோசனை நடத்துவது மற்ற மாநிலங்களில் அவ்வப்போது நடந்தாலும் தமிழகத்தில் அதற்கான சூழல் இல்லாமல் இருந்துவந்தது. இதனை முதன் முறையாக விஜயகாந்த் தகர்த்தார். இந்த ...

மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண தகவல் மையம் உள்ளதா..? -

Posted: 28 Apr 2015 06:20 AM PDT

எனது உறவினரின் மகன் வாய் பேச முடியாத ஊமை.
-
+2 வரை படித்து சென்னை ஆவடியில் இயங்கும் ஒரு மத்திய அரசு
நிறுவனத்தில் டைலராக பணி புரிகிறார்...
-
இவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர்.
-
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் விதமாக திருமண தகவல் மையம் ஏதும்
சென்னையில் இயங்குகிறதா..?
-
அல்லது சேவை மையங்கள்  மூலம் அணுகலாமா..?
-

தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்

Posted: 28 Apr 2015 06:09 AM PDT

பெயர் புராண பெயர்(கள்): அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம் பெயர்: திருவதிகை வீரட்டானேசுவரர் அமைவிடம் ஊர்: திருவதிகை மாவட்டம்: கடலூர் மாநிலம்: தமிழ்நாடு நாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்: வீரட்டானம் தாயார்: பெரியநாயகி தல விருட்சம்: சரங்கொன்றை தீர்த்தம்: சூலத்தீர்த்தம் பாடல் பாடல் வகை: தேவாரம் பாடியவர்கள்: நாவுக்கரசர் , ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்           திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் ...

டெல்லி சட்ட மந்திரியின் எல்.எல்.பி சான்றிதழ் போலி என அம்பலம்

Posted: 28 Apr 2015 06:03 AM PDT

டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் சட்ட அமைச்சராக பதவி வகித்துவரும் ஜிதேந்தர் சிங் தோமரின் எல்.எல்.பி பட்டபடிப்பு சான்றிதழ் போலியானது என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் முதல் முறையாக மந்திரியாக பதவி வகிக்கும் ஜிதேந்தர் சிங் தோமர் (48), எல்.எல்.பி பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் ...

ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL

Posted: 28 Apr 2015 05:37 AM PDT

ஒரு நாள் மாலை வேலை இறை தேடிச் சென்ற இப் பெண் குருவி ரோட்டில் துள்ளித் திரிந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த ஒரு காரில் அடிபட்டு இறந்து விட்டது ..... தனது காதலி அடிபட்டு உயிர் விட்டதை அறியாத இந்த ஆண் குருவி, ஏன் படுத்தே இருக்கிறாய் எழுந்து வா பறக்கலாம், மற்றொரு வண்டி வருகிறது, விரைவில் எழுந்திரு...... என கூச்சலிடுகிறது..........

சிலம்பம் வரலாறு

Posted: 28 Apr 2015 05:36 AM PDT

சிலம்பம் வரலாறு:- சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் ...

ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு

Posted: 28 Apr 2015 05:29 AM PDT

- – தேவையானவை: – வறுத்த வேர்க்கடலை – 100 கிராம். பொரிகடலை – 100 கிராம். கோதுமை மாவு – 100 கிராம். வெள்ளை எள் வறுத்தது – 100 கிராம். வெல்லம் – 200 கிராம். நெய் – 100 கிராம். ஏலக்காய் – 5 . – செய்முறை: – வேர்க்கடலை வறுத்தது, வறுத்த எள், பொரிகடலை முதலியவற்றைக் தனித்தனியாகப் பொடி செய்து கொள்ள வேண்டும். நெய்யைச் சூடாக்கி முதலில் கோதுமைமாவைப் போட்டு வறுக்க வேண்டும். வாசனை வரும் வரை வறுத்த பிறகு பொடி செய்தவற்றையும் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து வெல்லத்தைப் பொடி செய்து போட்டு ...

தாரகை - பாகம் 02 - ரா.கி.ரங்கராஐன்

Posted: 28 Apr 2015 05:23 AM PDT

ஸிட்னி ஷெல்டன்  எழுதிய If Tomorrow Comes நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவலாகும். இந்நாவலை வாசிக்க தொடங்கினால் முடிக்கும் வரை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் ரா.கி.ரங்கராஐன் வெற்றிபெற்றுள்ளார் என்பதை நீங்கள் படிக்கும் பொழுது உணர்வீர்கள். http://www.mediafire.com/download/h7ckz7cwmecwd2b/Tharakai+-+Part+02.pdf என்றும் அன்புடன் செல்லா

தாரகை - பாகம் 01 - ரா.கி.ரங்கராஐன்

Posted: 28 Apr 2015 05:23 AM PDT

ஸிட்னி ஷெல்டன்  எழுதிய If Tomorrow Comes நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவலாகும். இந்நாவலை வாசிக்க தொடங்கினால் முடிக்கும் வரை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் ரா.கி.ரங்கராஐன் வெற்றிபெற்றுள்ளார் என்பதை நீங்கள் படிக்கும் பொழுது உணர்வீர்கள். http://www.mediafire.com/download/msdjf44hxvb094f/Tharakai+-+Part+01.pdf என்றும் அன்புடன் செல்லா

இலவசமாக மென்பொருள் கருவிகள்குருந்தகடு வடிவில் மத்திய அரசாங்கமே இலவசமாக தருகிறது

Posted: 28 Apr 2015 05:18 AM PDT

இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் மென்பொருள் கருவிகள் குருந்தகடு வடிவில் மத்திய அரசாங்கமே இலவசமாக தருகிறது. நான் 22 மொழிகளின் குறுந்தகடு பெற்றுள்ளேன். ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதுமானது.

முகவரி:

http://www.ildc.gov.in

நான் ரசித்தவை - மிமீஸ்

Posted: 28 Apr 2015 05:15 AM PDT

வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மிமீஸ் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மிமீஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மிமீஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட்

ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்

Posted: 28 Apr 2015 04:44 AM PDT

பேஷியல், கலர்புல் மேக்கப் என்று அழகு விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆண்களோ, கட்டுக்கோப்பான உடல் அமைப்பினை பேணுவதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால் அவர்களுக்கும், பலவகையான பேஷியல்கள் உண்டு என்பதை புரிந்து கொண்டு கொஞ்சம் முக அழகில் அக்கறை காட்டலாம். இதோ உங்களுக்கான சில , பேஷியல்கள்... வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தில் இறந்துபோன செல்களை நீக்கவும், ...

அன்புள்ள, அழகே..! –

Posted: 28 Apr 2015 04:33 AM PDT


மலரை
சட்டையில் வைப்பதற்கு
நான்
நேரு இல்லை
–
மலரை
இறைவன்முன் வைப்பதற்கு
நான்
பக்தனும் இல்லை
–
மலரைக்
காதில் வைப்பதற்கு
நான்
மூடனும் இல்லை
அதனால்தான் அழகே
–
மலரை
உன்னிடம் தருகிறேன்
நான் சராசரி
மனிதனாக
இருப்பதால்!
–
————–


>கா.முகம்மது ஹக்கீம்
நிஜமான நிழல்கள் – கவிதைகள்

மொக்க ஜோக்ஸ்!

Posted: 28 Apr 2015 04:19 AM PDT

நத்தை சிப்பி - paadal

Posted: 28 Apr 2015 04:13 AM PDT

நத்தை சிப்பி

என்று தொடங்கும் பாடலை முழுமையாக கூறுங்கள்...

விவேக சிந்தாமணி அல்லது, ஞான வெட்டியான் பாடலாக இருக்கும் என்பது என் கருது.

விவேக சிந்தாமணி, ஞான வெட்டியான் புத்தகம் இருந்தாலும் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்.

நிலாக்குதிரை-வாண்டுமாமா

Posted: 28 Apr 2015 04:07 AM PDT

பதிவிறக்கம் நிலாக்குதிரை

கடவுள்கள் உறங்குகிறார்கள்.

Posted: 28 Apr 2015 03:49 AM PDT

- வருடங்கள் பிசுபிசுக்கும் கோயில்தரை உடைந்த புல்லாங்குழலிலிருந்து ஊர்கிறது பெயரற்ற ராகம் – மணிகளில் மௌனம் கனத்துத் தொங்க நிழலொளி நேரத்தில் நினைவுகளற்ற பிரார்த்தனைகளை வில்வ இலைகள் விசாரிக்கின்றன் – திரியிலுறங்கும் சுடர் கோலங்களசையும் வாசல் குரல்கள் பெருக கோரிக்கைகள் ஆரத்தி கற்பூரத்திலேறுகின்றன – கடவுள்கள் உறங்குகிறார்கள். – —————————— உமா மஹேஸ்வரி

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Posted: 28 Apr 2015 03:31 AM PDT

மதினி….!!
*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ.
ந.க.துறைவன்.
*

நெருப்புக் கண்

Posted: 28 Apr 2015 03:18 AM PDT

–
அடுத்தவன்
அழகாய் இருந்தால்
அவனை ஒழிக்க

–
அடுத்தவன்
அமைதியாய் இருந்தால்
அவனை ஒழிக்க
நெருப்புக்கண்
–
அடுத்தவன்
நல்லவனாய் இருந்தால்
அவனை ஒழிக்க
நெருப்புக்கண்
–
மனிதா,
அடுத்தவனை மட்டுமல்ல
உன்னையும் அழிப்பது
நெருப்புக்கண்தான்
என்பதை ஏன் மறந்தாய்?
–[b]
[/b]
———————
>கா.முகம்மது ஹக்கீம்
நிஜமான நிழல்கள் – கவிதைகள்

புரியவில்லை இன்னும்

Posted: 28 Apr 2015 03:10 AM PDT

- – நினைத்துப் பார்த்ததுகூட இல்லை பள்ளிக்கூட வயதில் – நான் பிறகு என்ன செய்வேனென்று! – இன்றும் மறந்துவிடவில்லை கல்லூரி நாள்கள் – எனக்கு மின்னல் வேகமாய் சென்றது! – கேள்விக்குறியாய் என் வாழ்க்கை எல்லை வேலை தேடிய நாள்கள் – எனக்கு மிகப்பெரிய வாழ்க்கைப் பாடம்தான்! – திருப்பு முனையாய் இருந்த முதல் வேலை நிறைவேறிய கனவுகள் – எனக்கு இன்றும் வசந்தம்தான் – மாற்றங்கள் நிலையில்லை நிலையான முயற்சி – எனக்குப் பொற்காலமாய் இன்று – நண்பா, இன்னும் புரியவில்லை வெற்றிக்காக காத்திருக்காதே – ...

சிந்தித்துச் செயல்படு!

Posted: 28 Apr 2015 03:06 AM PDT

- குல்லாய் விற்கும் வியாபாரி கூடை தன்னை இறக்கியபின் குளிர்ந்த மரத்தின் நிழலினிலே குறட்டை விட்டுத் தூங்கிட்டான்! – அந்த மரத்தின் கிளைகளிலே அமர்ந்து இருந்த குரங்கெல்லாம் விந்தையான குல்லாயைக் கண்டு கீழே வந்தனவாம்! – எல்லாக் குரங்கும் குல்லாயை இளித்தவாறு அணிந்ததுவாம்; "நல்லா இருக்கு' என்றபடி மரத்தின் மேலே ஏறினவாம்! – கண்ணைத் திறந்த வியாபாரி காலிக் கூடையைக் கண்டானாம்; எண்ணம் ஒன்றைக் கொண்டானாம்; எறிந்தான் மேலே தன் குல்லாய்! – எல்லாக் குரங்கும் அதுபோல எறிந்து விட்ட விளையாட்டால் குல்லா ...

அவரவர் பார்வைப்படி வாழ்க்கை

Posted: 28 Apr 2015 02:49 AM PDT


-
ஒருவர்
வாழ்க்கையை
வட்டமென்கிறார்
-
ஒருவர்
வாழ்க்கையை
முக்கோணமென்கிறார்
-
ஒருவர்
வாழ்க்கையை
சதுரமென்கிறார்
-
ஒருவர்
வாழ்க்கையை
செல்வமென்கிறார்
-
வாழ்க்கையின்
வடிவம்
-
அவரவர் பார்வைப்படி
அமைவதால்
-
==============================

ப.தெய்வசிகாமணி
சிந்தனை வயல் -கவிதை தொகுப்பிலிந்து

மன்மத வருடத்திய பலன் வெண்பா - பாம்பு பஞ்சாங்கம்!

Posted: 28 Apr 2015 02:44 AM PDT

மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே  - மன்னவரால் சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகும் கானப்பொருள் குறையுங் கான். - நன்றி பாம்பு பஞ்சாங்கம்.. இந்த வருடம் தமிழகத்தில் புயலும், வடக்கே சீனாவுடன் சண்டையும் ஏற்படுமா என்று பொறுந்திருந்து பாப்போம்... யாரவது பாடலின் முழு பொருளை விளக்குங்கள் (இன்றைய தமிழில்)

நட்சத்திரக் கனவுகள்

Posted: 28 Apr 2015 02:41 AM PDT

- – நீயும், நானும் நிழல் விழும் இரவும் நீலக் கருமரமும் இருந்தோம் அப்பொழுது இயங்காத கடிகாரங்கள். புலர்தலில்லாப் பொழுது. கசங்காத காலம். பிறகு, நீயில்லை நானும், நட்சத்திரக் கனவுகளும். அப்புறம் நானுமில்லை ஒரேயொரு எழுதாத வரிமட்டும். ==================== உமா மஹேஸ்வரி

நந்தியாவட்ட விரிமலரை…

Posted: 28 Apr 2015 02:40 AM PDT

- — மழை வெளுத்த மனம் முல்லைப் பந்தற் கீழ் காற்று கவிழ்த்த நந்தியாவட்ட விரிமலரை எடுப்பதோ, தொடுப்பதோ, தீண்டுவதோ, நுகர்வதோ… பார்ப்பதும் கூட, இல்லையில்லை; நீள்காம்பையும் பச்சை மலராக்குகிறது உடனடியாக. – ——————— உமா மஹேஸ்வரி

நீளும் இரவு

Posted: 28 Apr 2015 02:36 AM PDT

- தளிர்கள் இமைக்காமல் மரம் விழித்திருக்கிறது. - தொட்டிலுறக்கம் நீட்டிய கிளைகளில். குழந்தை விழித்திடுமென அசையாது கவனம் காக்கும் கர்ண மரம். - வெளிர்பாதம் வெளித் தொங்க, பனிக்கு உடல்குறுகக் குழந்தை தூங்க… பெற்றவள் எவளோ. சுற்றமும் ஏதோ. தனி மழலை தவிக்காமல். அமைதியாய் ஆர்ப்பரிக்கும் உள்மறைத்துக் காக்கும் ஆலின் மடி மட்டும் நீளுமிரவில். oOo —————————————————————– உமா மஹேஸ்வரி

தெரிஞ்சுக்கோங்க!............பறக்கும் பாலூட்டி!

Posted: 28 Apr 2015 02:34 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

எப்படி மறப்பேன் அன்பே?

Posted: 28 Apr 2015 02:30 AM PDT

- – வானவில்லின் வண்ணங்கள் இன்றும் மறக்க முடியவில்லை மின்னலின் வேகத்தை நொடிகூட மறந்ததில்லை – நிலவின் அழகு என் மனதில் அழியவில்லை இப்படி என் மனமிருக்க அன்பே, உன்னை எப்படி மறப்பேன்? – நீ மின்னலாய் வானவில்லாய் நிலவாய் இருக்கும்போது! – ——————– >கா.முகம்மது ஹக்கீம் நிஜமான நிழல்கள் – கவிதைகள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™