Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விஜயகாந்த் மீது மற்ற கட்சி தலைவர்கள் அதிருப்தி: பிரதமர் சந்திப்பு விவகாரத்தில் திருப்பம்

Posted:

பிரதமர் சந்திப்பு விவகாரத்தில், திடீர் திருப்பமாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் கைகோர்த்து சென்ற கட்சிகள், இப்போது அவர் மீது அதிருப்தியில் இருக்கின்றன. மேகதாது அணை உள்ளிட்ட பொதுப் பிரச்னைகளுக்காக, பிரதமரை சந்திக்க சென்ற குழுவில், 10 கட்சிகள் இடம்பெற்றன. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அழைப்பை ஏற்று, இந்த கட்சிகளின் சார்பில், பிரதிநிதிகள் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.குழுவுக்கு யார் தலை மை என்பதில், 'ஈகோ' பார்க்காமல், தி.மு.க., உள்ளிட்ட பெரிய கட்சிகளும் இதில் இடம்பெற்றன. தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்ட, புதிய அத்தியாயம் ...

9,000 என்.ஜி.ஓ., அமைப்புகளின் அங்கீகாரம் ரத்து: வரவு - செலவை காட்டாததால் மத்திய அரசு நடவடிக்கை

Posted:

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக பெற்று, கணக்கு காட்டாத, 9,000 அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை, மத்திய அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால், சட்ட விரோத பணபரிமாற்றங்கள் தடை செய்யப்பட்டு உள்ளதோடு, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. என்.ஜி.ஓ.,க்கள் என, அழைக்கப்படும் இந்த அமைப்புகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் பல சலுகைகள் வழங்குகின்றன. வருமான வரி விலக்கு, நில வசதி, நிதி பலன்கள் ...

அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆச்சார்யா எழுத்துப்பூர்வ வாதம் சமர்ப்பிப்பு

Posted:

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், எட்டரை ஆண்டுகள், அரசு வழக்கறிஞராக பணியாற்றிய, பி.வி.ஆச்சார்யா, மீண்டும் மேல் முறையீட்டு மனு விசாரணையில், அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, அரசு தரப்பிலான, எழுத்துப்பூர்வ வாதத்தை, 18 பக்கங்களில் நேற்று சமர்பித்தார்.'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு விசாரணையில், அரசு வழக்கறிஞராக, பவானி சிங்கை நியமித்தது செல்லாது' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தொடர்ந்த ...

காங்கிரஸ் ஊழலை தானே மோடி கூறினார்; அது தவறா?

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது, '60 ஆண்டு கால அழுக்கை துடைத்து வருகிறோம்' என, கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையில், எதிர்க்கட்சிகள் நேற்று, ராஜ்யசபாவில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. எனினும், ''பிரதமர் பேசியதில் எந்த தவறும் இல்லை,'' என, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உறுதியாக தெரிவித்து, விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.ராஜ்யசபா காங்கிரஸ் துணை தலைவர், ஆனந்த் சர்மா பேசியதாவது:பண்டித நேருவிலிருந்து மோடிக்கு முன் இருந்த பிரதமர்கள் வரை, வெளிநாடு சென்றால், இந்தியாவின் புகழை ...

போலி சான்றிதழ் அளித்த டில்லி சட்டத் துறை அமைச்சருக்கு சிக்கல்

Posted:

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர், சட்டம் படித்ததாக, போலி சான்றிதழ் அளித்துள்ளதாக, தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவைக்கும், சட்டத் துறை அமைச்சர்களுக்கும், ஏழாப்பொருத்தம் போலும். கடந்த முறை, 49 நாட்கள் அவர் முதல்வராக இருந்த போது, சட்டத் துறை அமைச்சராக இருந்த சோம்நாத் பார்தி, சர்ச்சையில் சிக்கினார்.டில்லியில், ஆப்ரிக்க பெண் ஒருவரை விரட்டிச் சென்ற, சோம்நாத் பார்தி, அந்த பெண்ணை விபசாரம் செய்தாகக் ...

பஞ்சாப் தானிய சந்தைகளை பார்வையிட்ட ராகுல்: விவசாயிகளின் சிரமங்களை கேட்டறிந்தார்

Posted:

புதுடில்லி: 'பஞ்சாபில் உள்ள புகழ்பெற்ற தானியச் சந்தைகளில், விவசாயி கள் தங்களின் விளைபொருட்களை விற்க முடியாமல் சிரமப்படுகின்றனர்' என, புகார்கள் வந்ததை அடுத்து, அந்த சந்தைகளுக்கு நேற்று விஜயம் செய்த, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், அங்குள்ள நிலவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பார்லிமென்டின் முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்காமல், வெளி நாட்டில், 56 நாட்கள் ஓய்வில் இருந்த ராகுல், மீண்டும் டில்லி திரும்பியது முதல், விவசாயிகள் பிரச்னையில் அக்கறை காட்டி வருகிறார். விவசாயிகளை, மத்திய அரசு புறக்கணிப்பதாகவும், தொழிலதிபர்கள் மற்றும் ...

பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும்! நேபாள பிரதமர் கொய்ராலா அதிர்ச்சி தகவல்

Posted:

காத்மாண்டு: ''நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 10 ஆயிரமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தற்போது நடந்து வரும் மீட்பு பணிகள் தீவிரமாக இல்லை. இதனால், போர்க்கால அடிப்படை யில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன,'' என, நேபாள பிரதமர் சுஷில் குமார் கொய்ராலா கூறியுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கம், அந்த நாட்டின் அடையாளத்தையே மாற்றி விட்டது. எங்கு பார்த்தாலும், இடிபாடுகளும், புழுதி மண்டலமும், சிதைந்த உடல்களுமாக காணப்படுகின்றன.

திறந்தவெளிகளில்...:
வீடுகள் இடிந்ததால், லட்சக்கணக்கான மக்கள் திறந்தவெளிகளில் ...

பிரதமருடன் தமிழக கட்சிகள் பேசியது என்ன? வைகோ மீது மோடி 'அட்டாக்'

Posted:

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், 10 கட்சிகளின் பிரதிநிதிகள் குழு, டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்தபோது பேசப்பட்ட விஷயங்கள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

குரூப் போட்டோ:
இதுபற்றிய, விவரம் வருமாறு:டில்லியில், பிரதமரை அவரது அலுவலகத்தில், தமிழக பிரதிநிதிகள் குழு சந்தித்தபோது, முதலில், குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. அது முடிந்ததும், தாங்கள் வந்திருக்கும் நோக்கம் குறித்து, பிரதமரிடம் விஜயகாந்த் சில நிமிடங்கள் பேசினார். பின், கொண்டு வந்திருந்த மனுவை, பிரதமரிடம் அளித்தார்.காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டும் ...

மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு ஐந்து மாதங்களாக வராத அமைச்சர்

Posted:

மின் வாரிய அலுவலகத்திற்கு, ஐந்து மாதங்களாக, துறை அமைச்சர் வராதது, ஊழியர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு,* திருவள்ளூர் மாவட்டம் - எண்ணுார் விரிவாக்கம், 660.* எண்ணுார் சிறப்பு, 1,320; வட சென்னை - மூன்றாம் நிலை, 800.* எண்ணுார் மாற்று, 660.* தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி, 1,320.* ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர், 1,600 மெகாவாட்என, புதிய அனல்மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது.இதில், தற்போது, எண்ணுார் விரிவாக்கம்; எண்ணுார் சிறப்பு மின் நிலைய கட்டுமான பணி மட்டும் நடந்து வருகிறது.சென்னை, மின் வாரிய தலைமை ...

பூரம் விழாவில் யானைகளுக்கு தடை 'நோ'

Posted:

திருவனந்தபுரம்: கேரளாவில், கோவில் திருவிழாக்களில், அலங்கரிக்கப்பட்ட யானைகள் பங்கேற்பது, 200 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், சமீப நாட்களாக, யானைகள் பங்கேற்க, விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சூரில் இன்று நடைபெறும் பூரம் திருவிழாவில், வழக்கம் போல, அலங்கரிக்கப்பட்ட யானைகளை பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'பெடா' என்ற, விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது: கோவில் திருவிழாக்களில், யானைகளை ...

'கேதார்நாத்திற்கு ராகுல் சென்றதால் நேபாளத்தில் நிலநடுக்கம்'

Posted:

புதுடில்லி: ''மாட்டுக்கறி சாப்பிட்ட ராகுல், தன்னை புனிதப்படுத்திக் கொள்ளாமல், கேதார்நாத் சிவன் கோவிலுக்கு சென்றதால் தான், நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது,'' என, பா.ஜ., - எம்.பி., சாக் ஷி மகராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். பா.ஜ., - எம்.பி.,யான சாக் ஷி மகராஜ், விவகாரமாக பேசி, அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில், நேபாள நிலநடுக்கத்தையும், ராகுலின் கேதார்நாத் கோவில் விஜயத்தையும் ஒப்பிட்டு, அவர் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நிருபர்களிடம் சாக் ஷி மகராஜ் கூறுகையில், ''காங்கிரஸ் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™