Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பூகம்பத்தில் 7 மாநிலங்கள் பாதிப்பு: பீகார், உ.பி., மே.வங்கத்தில் 52 பேர் பலி - 237 பேர் காயம்

Posted: 25 Apr 2015 10:39 PM PDT

நேபாள நாட்டை மையமாக கொண்டு நேற்று பயங்கரமாக பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி எடுத்தது. இந்த பூகம்பம் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலித்தது. பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி,

பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் புதுவை உள்பட 9 மாநில கவர்னர்கள் மாற்றம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

Posted: 25 Apr 2015 10:36 PM PDT

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்ததும் உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத், சண்டிகார், கோவா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அரியானா, நாகாலாந்து ஆகிய 11 மாநிலங்களுக்கு புதிதாக கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். பீகார், பஞ்சாப், அசாம், இமாச்சல பிரதேசம், மேகலாயா, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகியவைகளுக்கு கவர்னர்கள்

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள்: விரைவில் மீட்கப்படுவார்கள் என சுஷ்மா உறுதி

Posted: 25 Apr 2015 10:11 PM PDT

நேபாள நாட்டில் நடைபெற்று வரும் 14 வயதுக்கு குறைவான மகளிர் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள சென்ற 18 பேர் கொண்ட இந்திய அணி வீராங்கனைகள்(சிறுமிகள்) அங்கு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். கால்பந்து போட்டியின் அரையிறுதியில் நேபாள அணியுடன் தோற்ற இந்திய அணி, மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக ஈரானுடன்

செம்மர கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்த தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் கைது

Posted: 25 Apr 2015 09:32 PM PDT

செம்மரகடத்தலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் இன்று கைது செய்யப்பட்டார். செம்மரகடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலி அவரது சகோதரர் பாபாவலி ஆகியோரை சமீபத்தில் போலீசார் கைது

கேரளாவில் மழை நீடிப்பு: வீட்டு சுவர் இடிந்து விழுந்து சிறுவன் நசுங்கி பலி

Posted: 25 Apr 2015 09:21 PM PDT

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்த இந்த மழை நேற்றும் நீடித்தது. இன்னும் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழைக்கு ஏற்கனவே கேரளாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். தற்போது ஒரு சிறுவனும் மழைக்கு உயிர் இழந்த பரிதாப சம்பவம்

நேபாளத்தில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டது இந்திய விமானப்படை: 500 பேர் தலைநகர் டெல்லி வந்தனர்

Posted: 25 Apr 2015 09:20 PM PDT

நேபாள நாட்டில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில், அந்நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக அந்நாட்டில் சிக்கி தவித்த குழந்தைகள் உள்பட 500 பேர் மீட்கப்பட்டு, இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று பின்னிரவிலும், இன்று அதிகாலையிலும் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானங்கள் தலைநகர் டெல்லியை வந்தடைந்தன. நேற்று பின்னிரவு 10:45 மணியளவில் சி-130 ஜெ சூப்பர்

மோசமான வானிலை: எவரெஸ்ட் சிகரத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிக்கல்

Posted: 25 Apr 2015 08:42 PM PDT

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேற்று முதல் இந்திய இராணுவத்தின் மீட்புக்குழு ஈடுபட்டுவருகிறது. இதில் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த 61 பேர் மீட்கப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தது

Posted: 25 Apr 2015 08:19 PM PDT

நேபாளத்தை நேற்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4700 பேர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம்

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக்கொலை

Posted: 25 Apr 2015 08:10 PM PDT

மேற்குவங்காளத்தில் 9 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவும் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.

இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் மாற்றக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted: 25 Apr 2015 07:59 PM PDT

சுப்ரீம் கோர்ட்டில் நிரஞ்ஜன் பட்வால் என்ற சமூக ஆர்வலர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்திய நாட்டுக்கு 'பாரத்', 'ந்துஸ்தான்', 'ந்த்' அல்லது 'பரத்வருஷ்' வகையில்தான் பெயரிடப்பட வேண்டும் என்பது இந்திய அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையாக இருந்தது. எனவே 'இண்டியா' என்ற பெயருக்கு பதிலாக இவற்றில் ஒன்றைத்தான் இந்திய நாட்டின் பெயராக பயன்படுத்த வேண்டும் என்று இந்த மனுவில்

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு சோனியா, ராகுல்காந்தி இரங்கல்

Posted: 25 Apr 2015 07:46 PM PDT

நேபாள நாட்டிலும், இந்தியாவின் வடமாநிலங்களிலும் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், துணைத்தலைவர் ராகுல்காந்தியும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சோனியா தனது அனுதாப செய்தியில், ''நிலநடுக்கத்தில்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமரிடம், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Posted: 25 Apr 2015 07:31 PM PDT

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார். 'நிதி ஆயோக்' ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்திருந்த தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை

நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவையை சீரமைக்க நடவடிக்கை: ரவிசங்கர் பிரசாத் உத்தரவு

Posted: 25 Apr 2015 07:04 PM PDT

நேபாளத்தை மையமாக கொண்டு நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த பகுதிகளில் குறிப்பாக பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசத்தில் போலீஸ் அதிகாரி மகன் சுட்டுக்கொலை

Posted: 25 Apr 2015 04:21 PM PDT

சத்தீஷ்கார் மாநிலம் விஜய் நகர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் திலிப் சிங். இவரது மகன் விக்ரம் (வயது 20). விக்ரம் தனது குடும்பத்தினருடன் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் அதிகாரிகளின் குடியிருப்பு பகுதிக்கு திருமண விழா ஒன்றில் கலந்து

மரணம் அடைந்த கிரிக்கெட் வீரர் அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு தனது பிசிசிஐ ஓய்வூதியத்தை கொடுக்கிறார் கங்குலி

Posted: 25 Apr 2015 02:34 PM PDT

அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு இந்திய கிரிகெட் வாரியம் தனக்கு வழங்கும் ஒரு ஆண்டு ஓய்வூதியத்தை கொடுக்க போவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அறிவித்துள்ளார். கிளப் போட்டியின்போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்றபோது மோதி விழுந்ததில், மேற்கு வங்கத்தை

ஞானமும் செல்வமும் ஒன்றோடொன்று கைகோர்த்து செல்ல வேண்டும்: ஞானபீட விருது வழங்கும் விழாவில் மோடி பேச்சு

Posted: 25 Apr 2015 09:09 AM PDT

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற 'ஞானபீடம்' விருது வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஞானமும் செல்வமும் ஒன்றோடொன்று கைகோர்த்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் மராட்டிய எழுத்தாளர் பாலசந்திர நெமாடே என்பவருக்கு 50-வது 'ஞானபீடம்' விருதினை வழங்கி கவுரவித்த மோடி, இன்று இவ்விருதினை பெற்ற பாலசந்திர நெமாடேவுக்கு நான் சால்வை அணிவித்து, பாராட்டுப் பத்திரம் அளித்தபோது

இன்றைய நில நடுக்கத்தில் இந்தியாவில் மட்டும் இதுவரை 38 பேர் பலி

Posted: 25 Apr 2015 08:41 AM PDT

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களையும் தாக்கியது. இதனால் வீடுகள் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி பீகார் மாநிலத்தில் 23 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 12 பேரும், மேற்கு வங்காளத்தில் 3 பேரும் பலியாகியுள்ளனர். இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என மத்திய உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் இன்றிரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை

Posted: 25 Apr 2015 08:08 AM PDT

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் யோகாசன முகாம் நடத்தவும், பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைப்பதற்காகவும் நேபாளத்துக்கு சென்ற யோகாசன குரு பாபா ராம்தேவ் அங்கு பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேபாள

இன்னும் 3 நாட்களுக்கு நேபாளத்துக்கு செய்யும் அழைப்புகள் உள்ளூர் கால்களாக கணக்கிடப்படும்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

Posted: 25 Apr 2015 07:28 AM PDT

மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். தரைவழி இணைப்பு மற்றும் கைபேசி மூலம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டுக்கு அடுத்த மூன்று நாட்களாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளுக்கும் உள்ளூர் அழைப்புக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிப்புக்குள்ளான நேபாள நாட்டு மக்களுடன்

மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது

Posted: 25 Apr 2015 06:11 AM PDT

உலகின் மிகவும் உயரமான மலைச்சிகரம் உள்பட உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைச் சிகரங்களையும் ஏறி சாதனை படைத்த மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் ஆந்திர மாநிலத்தில் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை 172 நாட்களில் ஏறியவர் என்ற சாதனையைப் படைத்த மஸ்தான் பாபு, கடந்த டிசம்பர் மாதம் 16-ம்தேதி அர்ஜெண்டினா மற்றும் சிலி நாட்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™