4TamilMedia செய்திகள் | |
- குத்து விளக்கு இப்படியாகிருச்சே?
- நேபாள மக்களுக்கு இலங்கை அனுதாபம் தெரிவிப்பு!
- தேசியக் கொடியை தவறாக கையாண்டமை; விசாரணைகள் ஆரம்பம்!
- பாராளுமன்றம் ஏப்ரல் 29 ஆம் திகதி கலைப்பு(?)
- உச்ச நீதிமன்றத்தில் இந்திய விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துமாறு பொதுநல மனு!
- டெல்லி மெட்ரோ ரயிலில் முதன்முறையாகப் பயணித்தார் பிரதமர் மோடி
- நேபால் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 450 ஆக உயர்வு!:காத்மண்டு விமான நிலையம் மூடல்
- சூர்யாவின் 'மாஸ்' திரைப்பட டீசர் வெளியானது!
- இவ்வருடம் உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக சுவிட்சர்லாந்து முதலிடத்தில்!
- அமெரிக்க மருத்துவத் துறையின் முதல் இளம் தலைவராக இந்திய வம்சாவளி விவேக் மூர்த்தி பதவியேற்றார்!
| குத்து விளக்கு இப்படியாகிருச்சே? Posted: |
| நேபாள மக்களுக்கு இலங்கை அனுதாபம் தெரிவிப்பு! Posted:
நிலநடுக்காத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு இலங்கை அரசாங்கம் தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளது. Read more ... |
| தேசியக் கொடியை தவறாக கையாண்டமை; விசாரணைகள் ஆரம்பம்! Posted:
தேசியக் கொடியில் மாற்றம் செய்து அதனை போராட்டத்தில் பயன்படுத்திய விவகாரம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read more ... |
| பாராளுமன்றம் ஏப்ரல் 29 ஆம் திகதி கலைப்பு(?) Posted:
பாராளுமன்றம் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 29) கலைக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக அரச முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| உச்ச நீதிமன்றத்தில் இந்திய விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துமாறு பொதுநல மனு! Posted:
இந்தியாவின் ஒரு நாளைக்குக் குறைந்தது 46 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக அண்மைய ஆய்வொன்றின் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கும் நிலையில் அண்மையில் இதனைத் தடுக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கலாகியுள்ளது. Read more ... |
| டெல்லி மெட்ரோ ரயிலில் முதன்முறையாகப் பயணித்தார் பிரதமர் மோடி Posted:
இன்று சனிக்கிழமை நியூடெல்லியில் நடைபெற்ற தேசிய புலனாய்வு அகடாமியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமாக கார் வாகனப் பந்தோபஸ்து இன்றி எளிமையாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். Read more ... |
| நேபால் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 450 ஆக உயர்வு!:காத்மண்டு விமான நிலையம் மூடல் Posted:
இன்று சனிக்கிழமை காலை நேபாலைத் தாக்கிய 7.9 ரிக்டர் அளவுடைய பயங்கர நிலநடுக்கம் மற்றும் தொடர் அதிர்வுகள் காரணமாக அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் நேபாளத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 449 ஆகவும் பீகாரில் 14 ஆகவும் உயர்வடைந்துள்ளது. கடந்த 8 தசாப்தங்களில் நேபாளத்தைத் தாக்கிய மிக மோசமான இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 14 வலிமையான தொடர் அதிர்வுகள் பதியப் பட்டுள்ளன.
மேலும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து காத்மண்டுவுக்குச் செல்லவிருந்த பல விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். காலை 11.30 இற்கு நேபாலுக்குப் புறப்பட்ட ஓர் IndiGo விமானம் உட்பட இரு வேறு இந்திய விமானங்களது பயணங்களும் ரத்து செய்யப் பட்டுத் திருப்பப் பட்டுள்ளன. இதைவிட சவுதி அரேபியாவின் சார்ஜா இலிருந்து காத்மண்டுவுக்குப் புறப்பட்ட அல் அராபியா விமானம் ஒன்றும் திசை திருப்பப் பட்டு டெல்லியில் தரை இறக்கப் பட்டுள்ளது.
தலைநகர் காத்மண்டு மற்றும் அண்மைய பகுதிகளில் பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தும் பாதைகள் பிளவுற்றும் உள்ளன. நேபாளத்தின் நகரக் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள பலத்த சேதங்களைப் பிரதிபலித்து தற்போது இணைய ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கும் புகைப் படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன. முக்கியமாக தலைநகர் காத்மண்டுவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான 19 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட டுர்பார் சதுக்கக் கோபுரம் இந்த நிலநடுக்கத்தால் தரை மட்டமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மத்திய ஆசியாவின் தரைக்குக் கீழே செல்லும் எயூராசியான் டெக்டோனிக் நிலக்கீழ் தகடும் இந்திய டெக்டோனிக் தகடும் சந்திக்கும் பகுதிக்கு மேலே தான் இமய மலைத் தொடரும் நேபாளமும் அமைந்திருப்பதால் நேபாளம் உலகில் புவியீயல் ரீதியாக அதிக அதிர்வுகள் ஓர் வருடத்தில் ஏற்படக் கூடிய பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. Read more ... |
| சூர்யாவின் 'மாஸ்' திரைப்பட டீசர் வெளியானது! Posted:
ஏப்பிரல் 24 நள்ளிரவு வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சூரியாவின் புதிய திரைப்படமான 'மாஸ்' இன் டீசர் வெளியாகி யூடியூப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Read more ... |
| இவ்வருடம் உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக சுவிட்சர்லாந்து முதலிடத்தில்! Posted:
இவ்வருடம் ஏப்பிரல் 23 ஆம் திகதி ஐ.நா சபையின் கீழ் இயங்கும் நிலையான அபிவிருத்தித் தீர்வுகள் வலையமைப்பு (Sustainable Development Solutions Network) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள 3 ஆவது உலக மகிழ்ச்சிகர நாடுகள் அறிக்கையில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. Read more ... |
| அமெரிக்க மருத்துவத் துறையின் முதல் இளம் தலைவராக இந்திய வம்சாவளி விவேக் மூர்த்தி பதவியேற்றார்! Posted:
அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக 37 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அபிராமி,









