Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வரலாற்றில் இன்று - ஏப்ரல்

Posted: 29 Apr 2015 11:35 AM PDT

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Posted: 29 Apr 2015 09:42 AM PDT

சென்னை: புலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக்கொண்டதைப் போல், நடிகராக இருந்து முதல்வர் ஆன எம்ஜிஆர் என்ற புலியைப் பார்த்து சூடு வைத்துக்கொண்ட பூனைகள் ஏராளம். சிவாஜிகணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் போன்ற பூனைகள் எல்லாம், அரசியல் என்ற சூடான பாலில் வாயை வைத்து சுட்டுக்கொண்டன. இவர்களால் கடைசிவரை புலியாகவே முடியவில்லை. இந்த வரிசையில் கடைசி பூனை விஜயகாந்த். மற்ற பூனைகள் எல்லாம், அரசியல் களத்தில் காணாமல் போன நிலையில் இந்த பூனை மட்டும் கொஞ்ச காலம் தாக்குப்பிடித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் மற்ற பூனைகளுக்கு ...

கோடையில் குளிர்விக்கும் ‘நுங்கு’

Posted: 29 Apr 2015 09:39 AM PDT

நுங்கை, கோடை காலத்தில் சாப்பிடக் கிடைக்கும் ஒரு சுவையான உணவுப்பொருளாகத்தான் நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையில் நுங்கு ஒரு மருந்துப் பெட்டகம், வெயில் கொளுத்தும் கோடையில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள வரம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. அது போலத்தான் நுங்கும். குடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடியது இது. நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், ...

ஜப்பானில்.. ராவோடு ராவாக

Posted: 29 Apr 2015 09:29 AM PDT

ஜப்பானில்.. ராவோடு ராவாக கடலுக்கு அடியிலிருந்து 50 அடி மேலே வந்த 1,000 அடி நிலம்! டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஹொக்காய்டோ தீவில் திடீர் என்று 1,000 அடி நிலம் கடலில் இருந்து 50 அடி உயரத்திற்கு மேலே வந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹொக்காய்டோ தீவில் 1,000 அடி நிலம் ஒரே நாள் இரவில் கடலில் இருந்து 50 அடி உயரத்திற்கு மேலே வந்துள்ளது. முன்னதாக கடலின் தரை மட்டமாக இருந்த அந்த 1,000 அடி நிலம் தற்போது கடலுக்கு மேலே உயர்ந்து நிற்பது அப்பகுதி மக்களை ...

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - பத்ரி சேஷாத்ரி

Posted: 29 Apr 2015 09:00 AM PDT

1,75,000 கோடி ரூபாய் ஊழல், உலகமே கண்டிராத மாபெரும் ஊழல் எனப்படும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழுமையான பின்னணி என்ன? உலகிலேயே மிக வேகமாக வளரும் தொலைதொடர்புச் சந்தையில் அரசின் கொள்கைகள் எப்படி மாறியுள்ளன? அதன் விளைவுகள் எப்படி மக்களைப் பாதித்துள்ளன? அரசியல்வாதிகளுக்கும் தொழில்துறையினருக்கும் இடையேயான உறவு எத்தகையது? ஊழலின் ஊற்றுக்-கண் எது? ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிப் புரிந்துகொள்ளத் தேவையான அறிவியல் அடிப்படைகள் என்னென்ன? சி.ஏ.ஜி ரிப்போர்ட் என்ன சொல்கிறது? ஊழல் நடந்துள்ளதா, இல்லையா? நாட்டையே ...

நீங்கள் வாங்கும் தங்கம், சுத்தத் தங்கமா? ஓர் எச்சரிக்கை கைடு

Posted: 29 Apr 2015 06:58 AM PDT

''ஆயிரங்கள், லட்சங்கள் என்று கொடுத்து தங்க நகைகளை வாங்கிக் குவிக்கும் மக்களே, நீங்கள் கொடுக்கும் பணத்துக் கேற்ற எடை மற்றும் தரத்தில் அந்தத் தங்கம் இருக்கிறதா என்று ஒரு நாளாவது யோசித் திருக்கிறீர்களா? நீங்கள் வாங்கும் தங்க நகை களில் பெரும்பாலானவை கலப்பட தங்கத்தில் தயாரானவையே!" - இப்படிச் சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார், `கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் முன்னாள் தலைவர் தேசிகன். ஆண்டு முழுக்கவே தங்கம் வாங்கிக் கொண்டிருந்தாலும், அதற்கும் ஒரு சீஸனாக, அட்சய திருதியை என்பது ...

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா?

Posted: 29 Apr 2015 06:41 AM PDT

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். உடை கட்டுப்பாடு பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்க இந்த கல்வியாண்டு முதல் ஆசிரியைகள் தங்களின் சேலைக்கு மேல் 'கோட்' அணியவேண்டும் என்றும், இந்த உத்தரவு ஆசிரியர்களின் கருத்துகளின் பேரில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. மேலும், இதற்கான முறையான சுற்றறிக்கை பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் ...

நீர் நிலைகள் மொத்தம் 47

Posted: 29 Apr 2015 06:36 AM PDT

ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47 (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. (4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி. (5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். (6) உறை கிணறு ...

இன்று நேபாளம்... நாளை ? மிரட்டும் பூகம்பம்

Posted: 29 Apr 2015 06:33 AM PDT

இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சரியாகக் கணிக்கக்கூட முடியாத அளவில் பூகம்பத்தின் கோரப் பிடியில் சிக்கியிருக்கிறது நேபாளம். பாரபட்சம் காட்டாமல் அனைத்துக் கட்டடங்களையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி இருக்க... அதன் அதிர்வலைகள் தமிழகம் வரை பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறோமா நாம்? இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜனிடம் பேசினோம். ''இயற்கைச் சீரழிவிலே மிகக் கொடூரமானது பூகம்பம்தான். அது, உயிர்களைக் கொல்வதுடன் நிற்காமல், ...

புத்திசாலி நரி

Posted: 29 Apr 2015 06:29 AM PDT

வயதான நரி ஒன்று காட்டில் வசித்து வந்தது. அதற்கு முன்போல ஓடியாடி இரைதேட முடியவில்லை. சிறிது ஓடினாலே மூச்சு வாங்கியது. எனவே நிம்மதியாக பசியாற முடியாமல் தவித்து வந்தது. அப்போது அது ஒரு புலியைக் கண்டது. கொழுத்த மான் ஒன்றை வேட்டையாடி புலி புசித்துக் கொண்டிருந்தது. புலி தின்றதுபோக மிச்சத்தை உண்டு பசியாறுவதற்காக காத்திருந்தது நரி. திடீரென அதற்கு ஒரு யோசனை தோன்றியது. 'புலி நல்ல இளமையாக இருக்கிறது. நன்கு வேட்டையாடி பசியாறு கிறது. இதனுடன் நாம் சேர்ந்து கொண்டால் நமக்கு தினமும் நல்ல விருந்து ...

ஆணவம்

Posted: 29 Apr 2015 06:28 AM PDT

காட்டில் நிறைய மிருகங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. ஆனால் அதில் ஒரு ஆண் யானை மட்டும் எப்போதும் திமிராக நடந்து கொள்ளும். மற்ற எல்லா மிருகங்களையும் மிரட்டுவதையே பொழுது போக்காக கொண்டிருந்தது. அந்த யானையால் பாதிக்கப்பட்ட அனைத்து மிருகங்களும் ஒன்று கூடி காட்டு ராஜாவான சிங்கத்திடம் புகார் தெரிவித்தன. சிங்கம் உடனே யானையை அழைத்து கண்டித்தது. யானையோ ஆவணத்துடன் 'இந்தக் காட்டிலேயே பெரிய மிருகம் நான்தான். எனக்கு கீழ்ப்படிந்துதான் எல்லா மிருகங்களும் நடக்க வேண்டும்' என்றது. 'யானையே ஆணவமாகப் ...

கோபத்திலும் கொடிய பாவம்

Posted: 29 Apr 2015 06:16 AM PDT

கோபப்படுதல் பாவமென்றால், கோபமூட்டுதல் அதைவிடவும் மகாகொடிய பாவம். கோபப்படுகின்றவன் வெளிப்படையானவன். ஆனால் கோபமூட்டுகின்றவன், நல்லவனைப்போல் தன்னைக் காட்டிக்கொண்டு திரைமறைவில் சதிவேலை செய்கின்றவன். இயல்பான கோபம் உடனடியாகத் தணிந்துவிடும். அதனால்தான் 'ஆறுவது சினம்' என்றாள் அவ்வை. பிறரால் தூண்டப்படுகின்ற கோபமோ, தணியும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் தூண்டிவிடப்பட்டுக் கொண்டே இருக்கும். அதுதான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தெருவில் இரண்டு பேருக்கிடையே வாய்த்தகராறு. அதைச் சுற்றி நின்று ...

ஒரே பொண்டாட்டிக்காரனுக்கு உறியிலே சோறு …!!

Posted: 29 Apr 2015 04:49 AM PDT

- ஒரே பொண்டாட்டிக்காரனுக்கு உறியிலே சோறு இருக்குமாம்! – —————————— – இறைவன் படைத்த உலகத்தை மனிதன்தான் ஆட்டிப் படைக்கிறான்! – —————————- – பிள்ளைக் கனியமுதம் பெருங்கவலையைப் போக்கும்! – —————————- – ரெண்டு பொண்டாட்டிக்காரன் தெருத் திண்ணையில் படுப்பானாம்..! – —————————– – இசை! வேதனையுள்ள மனத்துக்கு! ஆறுதலான மருந்து! – —————————– – நாள்தோறும் எழுந்ததும் சந்தோஷத்தையே நினைத்திடு! – —————————– – அன்புக்கு இதயத் தொல்லை! ஆசைக்கு வயசுத் தொல்லை! – ————————— – யானையை ...

கல்வியில் புதுமை - பின்லாந்து

Posted: 29 Apr 2015 04:38 AM PDT

உலக நாடுகளில் பின்லாந்து, கல்வியில் பல்வேறு புதுமைகளை செய்யும் முன்னணி நாடாக விளங்கி வருகிறது. ஏனெனில் அங்கு ஏற்கனவே வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது. அடிக்கடி தேர்வு நடத்தும் முறையும் கிடையாது. அத்துடன் ஒரு மணி நேர பாட வகுப்பிற்கு பிறகு 15 நிமிடம் இடைவெளி பின்பற்றப்படுகிறது. மற்ற நாடுகளைவிட பள்ளி வேலை நாட்களும் குறைவுதான். இந்தத் திட்டங்களை அறியும்போது 'நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா' என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை ...

எப்படி மறப்பது

Posted: 29 Apr 2015 04:32 AM PDT

எப்படி மறப்பது
                                           =============
பிரிவொன்றும் வந்ததும்
பாதித்த நிமிடங்களை நினைக்கையில்
பிரிவுகள் அவளை பாதிக்காத போது
அவள் காதலின் ஆழம் புரிந்தது
கண்ணீர் துளியையும் ,அவளையும்
மறக்க நினைத்த எனக்கு
ஒன்று  மட்டும்
         புரியவில்லை
அவளால் உயிர்ப்பித்த காதலை
எப்படி மறப்பது

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

Posted: 29 Apr 2015 04:08 AM PDT

புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. - -

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Posted: 29 Apr 2015 03:59 AM PDT

டோனி அபாட்டின் தொடர் கோரிக்கைகள், மயூரன் சுகுமாரனின் உருக வைக்கும் ஓவியங்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்திய பிரார்தனைகள் என எதுவும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மனதை அசைத்துப் பார்க்கவில்லை. இந்தோனேசிய நேரப்படி சரியாக நள்ளிரவு 12.25 மணிக்கு மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பாலி நைன் கைதிகளுக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண் கைதியான மேரி ஜேன் வேலோசோவிற்கு மட்டும் கருணை காட்டப்பட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ...

இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்

Posted: 28 Apr 2015 11:30 PM PDT

புதுடில்லி : நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் ஏற்பட்டிருந்தால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்தை கூட தாங்கிக் கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நாடு முழுவதும் உள்ள கட்டிடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 250 மில்லினுக்கும் அதிகமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் திறனற்றவை என தெரிய வந்துள்ளது. இது போன்ற தரமற்ற ...

மழையென்பது யாதென...!! - Mano Red

Posted: 28 Apr 2015 11:11 PM PDT

கருமை சூழ் கார்மேகங்களுடன் காரை வீட்டுக்கு குடை பிடிப்பது போல, படையெடுத்து வந்தது பெருமழை...!! இரவின் இருள் தனிமையில் சொட்டுச் சொட்டாய் விழுந்த மழைத் துளியும் மோகினிப் பேயின் கால் கொலுசாய் காதில் சினுங்கியது ...! குளிரின் தனிமையில் அணைப்பதற்கு விளக்கைத் தவிர யாதுமில்லை என்பதால், கையோடு கை தேய்த்த வெப்பத்துடன் வெக்கம் தான் மிச்சம் இருந்தது..! சன்னல் வழி கம்பிகளின் ஊடாக எதிர் வீட்டு ஓட்டில் வழியும் சொட்டு நீரை எண்ணும் பழக்கம் இருப்பதால், சாரல் மழையின் சொட்டு ...

ஈழம்

Posted: 28 Apr 2015 06:32 PM PDT

ஈழம் என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில்உயிர் பெற்றது பாடல் பாடிய புலவரின் பெயரும் ஈழத்து பூதந் தேவனார் அதற்கு முன்பே இலங்கை தீவுக்கு ஈழம் என்ற நாமம் வந்தது. ஒரு தேசத்தின் யுத்தம் முப்பது ஆண்டுகள் தாண்டிய இரத்தம் வடக்கு –கிழக்கு எங்கள் தாயம் வாழ்வோம் அதில் மட்டுமே என்ற எண்ண குமுறல்கள் ஈழத்து தந்தை செல்வா தொடக்கம் ஒவ்வொரு தமிழனின் காதிலும் எழுச்சி குரலாக எழுந்தது அந்த எழுச்சியின் வளர்ச்சிதான் தனி ஈழம் என்ற கொள்கை ஒளிர்ந்தது. உறவுகளை இழந்தோம் உரிமையும்இழந்தோம் எப்போது ஈழம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™