Tamil News | Online Tamil News |
- முதல் கனரக செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு ஏவ திட்டம்
- நேபாள கிராமங்களில் வசித்தவர்கள் கதி என்ன : மீட்பு குழுவினர் செல்லாததால் நீடிக்கும் மர்மம்
- லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் 7 ஆண்டு சிறை தண்டனை: மிகக் கொடிய குற்றம் என சட்டத்தை திருத்த அரசு முடிவு
- கறுப்பு பண ஒழிப்பில் ஒரே ஆண்டில் சிக்கிய தொகை ரூ.9,000 கோடி: சொத்துகளை முடக்கி மத்திய அமலாக்க துறை அதிரடி
- விவசாயிகள் கடும் துயரில் உள்ளனர்- ராகுல்; பாதல் மருமகள் பதிலடி
- டுவிட்டரில் கலக்கும் தலைவர்கள் மோடிக்கு மூன்றாவது இடம்
- 'பத்தோடு பதினொன்றாக ஒத்து ஊது...': ராஜ்யசபாவில் அ.தி.மு.க., அசமந்தம்?
- நிவாரண நிதிக்காக ஒரு மாத சம்பளம்: கருணாநிதி
- அதிருப்தி அடைந்துள்ள கட்சி தலைவர்கள் மீண்டும் சந்தித்து விளக்கமளிக்க விஜயகாந்த் முடிவு
- அரசு அங்கீகாரம் இல்லாத ரஜினியின் ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி: 4 ஆண்டுகளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை
- புதிய மின் இணைப்பு வழங்க 'மீட்டர் காசு': ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு
| முதல் கனரக செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு ஏவ திட்டம் Posted: புதுடில்லி :''உள்நாட்டில் கிரையோஜனிக் இன்ஜின் தயாரிப்பில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு இறுதியில், இந்தியாவின் முதல் கனரக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்,'' என, விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் லோக்சபாவில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:நேற்று முன்தினம், இஸ்ரோவின் திரவ ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கிரையோஜனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, நான்கு டன் எடையுள்ள, கனரக செயற்கைக்கோள்களை, புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தும் திறனை, இந்தியா பெற்றுள்ளது. ... |
| நேபாள கிராமங்களில் வசித்தவர்கள் கதி என்ன : மீட்பு குழுவினர் செல்லாததால் நீடிக்கும் மர்மம் Posted: காத்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில், தொலை துார பகுதிகளுக்கும், கிராமப் பகுதிகளுக்கும் மீட்பு குழுவினர் இன்னும் செல்லவில்லை. இதனால், அந்த பகுதிகளில் வசித்த மக்களின் கதி என்ன ஆயிற்று என, தெரியவில்லை.நேபாளத்தில், சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், அந்த நாட்டை உருக்குலைத்து விட்டது. இதுவரை, 5,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்; 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.'பலி எண்ணிக்கை, 10 ஆயிரத்தை தொடும்' என, நேபாள பிரதமர் ஏற்கனவே அச்சம் தெரிவித்துள்ளார். வீடுகள் நொறுங்கி விட்டதால், மக்கள், திறந்த வெளிகளில் ... |
| Posted: புதுடில்லி: லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. லஞ்ச வழக்குகளுக்கு, அதிகபட்சம், ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்க, ஏற்கனவே சட்டத்தில் இடமுள்ள நிலையில், 'லஞ்சம், மிகக் கொடிய குற்றம்' என, திருத்தம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தங்களுக்கு சாதகமாக அரசு அலுவலகங்களில் வேலை நடைபெற அல்லது தங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பதற்காக, அரசு அதிகாரிகளுக்கு, தனிநபர்கள் லஞ்சம் கொடுக்கின்றனர். இதனால், நேர்மையான நிர்வாகம் ... |
| Posted: புதுடில்லி : கறுப்பு பண முதலைகள் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது, மத்திய அமலாக்க இயக்குனரகம், கடந்த, 2014 - 15ம் நிதியாண்டில் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளில், 9,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன; 173 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிய வந்துள்ளது.மத்திய நிதித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், மத்திய அமலாக்க இயக்குனரகம், இந்த வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.முறைகேடான விதங்களில் பணத்தை சேர்ப்பவர்கள் மீது, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், அந்த அமைப்பு, கடந்த ஆண்டில் எடுத்த ... |
| விவசாயிகள் கடும் துயரில் உள்ளனர்- ராகுல்; பாதல் மருமகள் பதிலடி Posted: புதுடில்லி: பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக, லோக்சபாவில் நேற்று குரல் கொடுத்த, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மருமகளும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர், காரசாரமாக பதிலளித்தார். |
| டுவிட்டரில் கலக்கும் தலைவர்கள் மோடிக்கு மூன்றாவது இடம் Posted: புதுடில்லி: தன் கருத்துக்களை உடனுக்குடன் டுவிட்டரில் பதிவு செய்து, சமூக வலைதள பயன்பாட்டாளர்களை கவர்ந்துள்ள, உலக தலைவர்களில், பிரதமர் மோடி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.டுவிட்டரில், பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. |
| 'பத்தோடு பதினொன்றாக ஒத்து ஊது...': ராஜ்யசபாவில் அ.தி.மு.க., அசமந்தம்? Posted: 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில், இன்று முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தை வலியுறுத்தி, முக்கிய கட்சியான அ.தி.மு.க., நோட்டீஸ் அளிக்கத் தவறியுள்ளது. இதனால், இன்றைய விவாதத்தில், பத்தோடு பதினொன்றாக, பேச வேண்டிய நிலை, அக்கட்சிக்கு உருவாகியுள்ளது. |
| நிவாரண நிதிக்காக ஒரு மாத சம்பளம்: கருணாநிதி Posted: சென்னை: 'பூகம்ப நிவாரண நிதியாக, தி.மு.க., எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:நேபாளத்தில், கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்; கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் தரைமட்டமாகி, தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர். துயர் துடைக்கும் பணியில், இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் என, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். எம்.பி.,க்கள் சார்பில் துயர் துடைப்பு நிதிக்காக, ஒரு மாத கால ஊதியத்தை ... |
| அதிருப்தி அடைந்துள்ள கட்சி தலைவர்கள் மீண்டும் சந்தித்து விளக்கமளிக்க விஜயகாந்த் முடிவு Posted: டில்லி பயணத்திற்கு பிறகு, கடும் அதிருப்தியில் உள்ள கட்சி தலைவர்களிடம், தன்னிலை விளக்கமளிக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பிரதமர் மோடி, கடந்த ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து, அவரை சந்தித்து பேசுவதற்கு, விஜயகாந்த் பெரும் முயற்சி எடுத்து வந்தார். அனுமதி கிடைக்கவில்லை.இந்நிலையில், காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு, திட்டமிட்டுள்ள விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இப்பிரச்னை தொடர்பாக, பிரதமரை சந்திப்பதற்கு, விஜயகாந்திற்கு அனுமதி கிடைத்தது.இதையடுத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ... |
| அரசு அங்கீகாரம் இல்லாத ரஜினியின் ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி: 4 ஆண்டுகளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை Posted: நடிகர் ரஜினிகாந்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான, சென்னை, கிண்டி யில் செயல்படும் ஆஷ்ரம் பள்ளி, கடந்த, நான்கு ஆண்டுகளாக அங்கீகாரமின்றி செயல்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 'ஸ்ரீ ராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டி' என்ற அறக்கட்டளையை நடிகர் ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். அறக்கட்டளை செயலர், லதா ரஜினிகாந்த். இந்த அறக்கட்டளை சார்பில், சென்னை, கிண்டி, ரேஸ் கோர்ஸ் சாலையில், ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, 500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளி, 1996 முதல், மெட்ரிக் பள்ளி இயக்குனரக அங்கீகாரம் பெற்று இயங்கி ... |
| புதிய மின் இணைப்பு வழங்க 'மீட்டர் காசு': ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு Posted: புதிய மின் இணைப்பு வழங்க, மின் வாரிய அதிகாரிகள், 50 ஆயிரம் ரூபாய் வரை, லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீட்டு மின் நுகர்வோர் எண்ணிக்கை, 1.77 கோடி என்றளவில் உள்ளது. புதிய இணைப்பு: *மின் வாரிய பிரிவு அலுவலகத்தில், பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், 50 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். *ஒரு முனை இணைப்பிற்கு, காப்பு தொகை, மீட்டர் வைப்பு என, 1,550 ரூபாய்; மும்முனை இணைப்பிற்கு, 7,450 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. *மின் வினியோக பெட்டியில் இருந்து, மின்சாரம் வழங்கும் இடம் வரை, கேபிள் அமைக்க, தனி கட்டணம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 30,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |