மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தாசில்தார் அறையில் ஒய்.எஸ்.ஆர். காங். பிரமுகர் கொலை: 8 பேர் கும்பல் வெட்டி சாய்த்தனர்
- திருப்பதி கோவிலில் அன்னதான அறக்கட்டளை நிதி ரூ.600 கோடியை தாண்டியது
- ஓடும் பேருந்தில் கற்பழிப்பு முயற்சி: எதிர்த்த 14 வயது சிறுமி பேருந்திலிருந்து தூக்கி வீசி கொலை - தாய் படுகாயம்
- விஜயவாடா கனகதுர்க்கா கோவில் கோ சாலையில் 11 பசுக்கள் சாவு
- காவிரியில் அணை கட்டுவது கர்நாடகத்தின் 40 ஆண்டு கால திட்டம்: சட்ட மந்திரி ஜெயச்சந்திரா
- நிலநடுக்கத்தில் மீட்கப்பட்ட இந்திய பெண் பயணிக்கு மாரடைப்பு: 35 நிமிடம் முன்னதாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
- தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு ஊழலுக்கு வழிவகுக்கும்: ராம் ஜெத்மலானி வாதம்
- ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: கேரள மந்திரி மாணி வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
- சொத்து குவிப்பு வழக்கு விசாரணை: ராஜினாமா செய்த பதவியை மீண்டும் ஏற்றது ஏன்? பி.வி.ஆச்சார்யா பதில்
- என்ஜினீயரை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது வழக்கு
- பெங்களூரு ஏரியில் ரசாயன கழிவுகளால் கரைபுரளும் வெள்ளை நுரை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
- காவிரியில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு சாதகமாகவே சட்டம் உள்ளது: சித்தராமையா
- தமிழக மீனவர்களை சுடவேண்டாம்: இலங்கை கடற்படையிடம் இந்தியா வேண்டுகோள்
- டெல்லி மேல்-சபையில் அரிய காட்சி: அ.தி.மு.க. உறுப்பினருக்கு ஆதரவாக குரல் கொடுத்த தி.மு.க. எம்.பி.க்கள்
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு பரிசீலிக்கும்: மந்திரி உமாபாரதி தகவல்
- தொடர் நிலநடுக்கம்: மாவோயிஸ்டு ஊடுருவலை தடுக்க இந்தியா-நேபாள எல்லையில் போலீசார் உஷார் நிலை
- பம்பையில் இருந்து சபரிமலைக்கு பொருட்களை ஏற்றி செல்ல ரோப் கார் திட்டம் கையெழுத்தானது
- தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி போகக்கூடாது: மீனவ பிரதிநிதிகளுக்கு சுஷ்மா சுவராஜ் அறிவுரை
- அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில்
- இந்தியாவில் திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது: மத்திய அரசு
| தாசில்தார் அறையில் ஒய்.எஸ்.ஆர். காங். பிரமுகர் கொலை: 8 பேர் கும்பல் வெட்டி சாய்த்தனர் Posted: 29 Apr 2015 10:40 PM PDT ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராய்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரான இவர் ராய்தாடு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு வெட்டுவது தொடர்பாக தாசில்தார் மற்றும் வருவாய் அதிகாரியை சந்திக்க நேற்று ராய்தாடு தாசில்தார் அலுவலகம் வந்தார். |
| திருப்பதி கோவிலில் அன்னதான அறக்கட்டளை நிதி ரூ.600 கோடியை தாண்டியது Posted: 29 Apr 2015 10:16 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1985–ம் ஆண்டு ஏப்ரல் 6–ந்தேதி அன்னதானம் வழங்கும் திட்டம் திருப்பதி கோவிலில் தொடங்கப்பட்டது. முதலில் தினமும் 2 ஆயிரம் |
| Posted: 29 Apr 2015 10:15 PM PDT பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர், அருகிலுள்ள குருத்வாராவுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினர். அப்போது பேருந்தில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் பேருந்தில் இருந்த ஆண் ஒருவர், 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதை சிறுமியின் தாய் தடுக்கவே, அந்த |
| விஜயவாடா கனகதுர்க்கா கோவில் கோ சாலையில் 11 பசுக்கள் சாவு Posted: 29 Apr 2015 10:14 PM PDT ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் கனகதுர்க்கா கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு சொந்தமான கோ சாலை விஜயவாடாவில் உள்ளது. இங்கு 200–க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோ சாலைக்கு அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் ரவையை இலவசமாக வழங்கினார். 6 மாதம் நிலுவையில் இருந்த ரவை உணவு அங்குள்ள 50 பசுக்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. |
| காவிரியில் அணை கட்டுவது கர்நாடகத்தின் 40 ஆண்டு கால திட்டம்: சட்ட மந்திரி ஜெயச்சந்திரா Posted: 29 Apr 2015 09:25 PM PDT கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை இன்று(வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். மேகதாதுவில் அணை கட்டுவது என்பது மிக பழைய |
| Posted: 29 Apr 2015 09:24 PM PDT நேபாள நாட்டில் நிலநடுக்கத்தில் சிக்கிய இந்திய பயணிகள் ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்டு முதலில் தலைநகர் டெல்லி வந்து சேர்கின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு 142 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் மும்பைக்கு புறப்பட்டது. |
| Posted: 29 Apr 2015 09:21 PM PDT நீதித்துறைக்கும், அரசுக்கும் இடைவெளி இருந்தால் தான் முறையான நீதி கிடைக்க வழி ஏற்படும் என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப, கடந்த 20 ஆண்டு காலமாக கொலீஜியம் மூலம் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு கொலீஜியம் முறைக்கு பதிலாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் மூலம் இனி நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது. |
| ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: கேரள மந்திரி மாணி வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை Posted: 29 Apr 2015 09:12 PM PDT கேரளாவில் மதுபான பார்களை மூட அரசு உத்தர விட்டது. மூடப்பட்ட பார்களை திறக்க மது பார் உரிமையாளர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்கு உதவி செய்ய கேரள நிதி மந்திரி மாணிக்கு மது பார் உரிமையாளர்கள் சார்பில் ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்கப் பட்டதாக புகார் எழுந்தது. மது பார் உரிமையாளர் சங்க தலைவர் பிஜு ரமேஷ் இதனை தெரிவித்தார். |
| சொத்து குவிப்பு வழக்கு விசாரணை: ராஜினாமா செய்த பதவியை மீண்டும் ஏற்றது ஏன்? பி.வி.ஆச்சார்யா பதில் Posted: 29 Apr 2015 08:41 PM PDT பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சார்யா ஆஜராகி வந்தார். இந்த வழக்கில் தனிக்கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே தனது அரசு சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா |
| என்ஜினீயரை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது வழக்கு Posted: 29 Apr 2015 08:40 PM PDT டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜார்நெயில் சிங். திலக்நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர். டெல்லி மாநகராட்சியின் என்ஜினீயர் அசார் முஸ்தபா. இவர் கிருஷ்ணா நகரில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவதற்காக ஊழியர்களுடன் சென்றார். |
| பெங்களூரு ஏரியில் ரசாயன கழிவுகளால் கரைபுரளும் வெள்ளை நுரை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி Posted: 29 Apr 2015 08:32 PM PDT பெங்களூரு நகரில் கடந்த பல ஆண்டுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. நாளடைவில் பெங்களூரு நகரின் வளர்ச்சி, ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஏரிகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. |
| காவிரியில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு சாதகமாகவே சட்டம் உள்ளது: சித்தராமையா Posted: 29 Apr 2015 08:30 PM PDT முதல்-மந்திரி மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் சட்டம் கர்நாடகத்தின் பக்கம் சாதகமாகவே உள்ளது. அதனால் இந்த திட்டம் அமலாகுமோ அமலாகாதோ என்ற பயம் யாருக்கும் வேண்டாம். இந்த திட்டம் உறுதியாக அமல்படுத்தப்படும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு |
| தமிழக மீனவர்களை சுடவேண்டாம்: இலங்கை கடற்படையிடம் இந்தியா வேண்டுகோள் Posted: 29 Apr 2015 08:29 PM PDT இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:- |
| Posted: 29 Apr 2015 08:18 PM PDT மேகதாது அணை விவகாரத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இணைந்து கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரிய சம்பவம் நேற்று டெல்லி மேல்-சபையில் அரங்கேறியது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்து வரும் நிலையில், இந்த |
| காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு பரிசீலிக்கும்: மந்திரி உமாபாரதி தகவல் Posted: 29 Apr 2015 08:05 PM PDT முன்னாள் மத்திய மந்திரியும், பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை மத்திய நீர்வளம் மற்றும் நதிகள் மேம்பாட்டு துறை மந்திரி உமாபாரதியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள |
| தொடர் நிலநடுக்கம்: மாவோயிஸ்டு ஊடுருவலை தடுக்க இந்தியா-நேபாள எல்லையில் போலீசார் உஷார் நிலை Posted: 29 Apr 2015 07:48 PM PDT நேபாளம் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த 25-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் இருநாட்டு பாதுகாப்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த இயற்கை பேரழிவை பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் மற்றும் தேச |
| பம்பையில் இருந்து சபரிமலைக்கு பொருட்களை ஏற்றி செல்ல ரோப் கார் திட்டம் கையெழுத்தானது Posted: 29 Apr 2015 07:40 PM PDT பம்பையில் இருந்து சபரிமலைக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்காக 'ரோப் வே' அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பம்பையில் இருந்து மலைப்பாதையில் |
| தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி போகக்கூடாது: மீனவ பிரதிநிதிகளுக்கு சுஷ்மா சுவராஜ் அறிவுரை Posted: 29 Apr 2015 07:14 PM PDT டெல்லியில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா மற்றும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் 21 பேர் கொண்ட குழுவினர் நேற்று சந்தித்து |
| அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில் Posted: 29 Apr 2015 05:30 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழலை வேரடி மண்ணோடு வீழ்த்தி, ஒழிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக அவர் கனடா சென்றபோது, டொரண்டோ நகரில், கடந்த 16-ந் தேதி கனடா வாழ் இந்தியர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், |
| இந்தியாவில் திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது: மத்திய அரசு Posted: 29 Apr 2015 01:21 PM PDT திருமணம் என்பது புனிதமானது, எனவே திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்ளி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் சவுதாரி "திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக சர்வதேச சமூகங்கள் ஏற்கொண்டாலும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |