Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சொட்டு தண்ணீர்

Posted: 03 Apr 2015 01:35 PM PDT

தண்ணீராய் செலவு இல்லை இல்லை தண்ணீருக்கே பெரும் செலவு, ஓடி ஒளியலாம் இன்னும் சில நாளில் யாரேனும் தண்ணீர் கேட்டு வருகையில். திரண்டு வந்து திரும்பும் மேகம் தகுந்த மரியாதை கிடைக்கவில்லையோ. யாரைக் கண்ட மிரட்சி வந்தவழியே திரும்பிச் செல்கிறது மேகம். கை பிடித்து நடக்கின்றார் பிள்ளைகள் அன்று தண்ணீர் பாட்டில். காத்திருக்கிறார்கள் எல்லோரும் வி வி ஐ பி - ஆனது மழை. முந்நூறு நானூறு பல நூறுக்கு பின்னுமில்லை சொட்டுத் தண்ணீர்..

அன்றும் -இன்றும்

Posted: 03 Apr 2015 01:20 PM PDT

---- தமிழன் ----
       தன்னை கொன்று தமிழை வளர்த்தான் அன்று..
       தமிழை கொன்று தன்னை வளர்கிறான் இன்று..
       மனிதம் முழுவதும் நேசம் அன்று...
       நேசம் முழுவதும் முகமுடி இன்று..
       மனிதன் வாழ கார்முகில் மழை தந்தது அன்று..
       கார்முகிளுக்கு நாம் மரம் தர வேண்டும் இன்று..
       இயற்கையில் இணைந்தோம் அன்று..
       இயற்கைக்கு இடமில்லை இன்று..
       
                                அன்புடன்.அன்பு.

மனோன்மணீயம் பெ.சுந்தரம்பிள்ளை பிறந்த நாள்: ஏப்.4- 1855

Posted: 03 Apr 2015 12:36 PM PDT

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் ...

என்றும் மகிழ்வுடன் - பிரேமா நாவல் .

Posted: 03 Apr 2015 12:27 PM PDT

அமுதினும் இனியவளே - சத்யா ராஜ்குமார் நாவல் .

Posted: 03 Apr 2015 12:26 PM PDT

எங்கிருந்தோ வந்தான் - பிரேமா நாவல் .

Posted: 03 Apr 2015 12:25 PM PDT

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.

Posted: 03 Apr 2015 12:24 PM PDT

"சும்மாவா சொன்னாங்க பெரியவங்க" பட்டாபி வேடத்தில் கலக்கும் துறு துறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள் . சரி என்ன தான் சொல்லியிருக்காங்கனு பார்ப்போம்னு படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொருத்தரும் படிச்சு தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் எக்கசக்கமா இருக்கு.. ஏன் எதுக்குனு நாம கேட்டு விளக்கம் கிடைக்காம இருக்கிற பல விஷயங்களுக்கு தெளிவா விளக்கம் சொல்லியிருக்காரு திரு.பட்டாபி.. யார் எதைபற்றி எழுதினாலும் எழுதறதுக்கு தனி திறமை கண்டிப்பா வேணும்னு மட்டும் தெளிவா தெரியுது. நம்மலால பெரிய அளவுல எழுததான் முடியல, முடிஞ்ச ...

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே - தமிழ் மதுரா நாவல் .

Posted: 03 Apr 2015 12:23 PM PDT

பொன்மொழிகள்........

Posted: 03 Apr 2015 12:18 PM PDT




கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.


A.P.J. அப்துல் கலாம்

பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்

Posted: 03 Apr 2015 11:48 AM PDT

பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம் மலேசியர்களை என்ன செய்யும்? எது தீவிரவாத இயக்கமாகக் கருதப்படும்: பொடா சட்டப்பிரிவு 66பி -ன் கீழ் ஓர் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக உள்துறை அமைச்சரே உறுதி செய்வார், அல்லது ஒரு காவல்துறை அதிகாரி தரும் அறிக்கையின் மேல் உள்துறை அமைச்சர் நம்பிக்கை கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்து அதனை அரசிதழில் வெளியிடும் அதிகாரம் பெற்றிருப்பார் இந்தச் சட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் காலவரையின்றி, விசாரணையின்றி ...

அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன்

Posted: 03 Apr 2015 11:28 AM PDT

http://www.mediafire.com/download/xkb4j83oakybk4r/Athirshta+Vinjanam.படப் என்றும் அன்புடன் செல்லா

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 03 Apr 2015 11:28 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

சாலை விபத்து - சட்டம் போட்டால் ஆயிற்றா?

Posted: 03 Apr 2015 11:12 AM PDT

இரண்டு பேரின் மரணத்துக்கு காரணமான ஒரு சாலை விபத்தில் வாகனத்தை ஓட்டிய நபருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறைத் தண்டனையை, பஞ்சாப் நீதிமன்றம் 24 நாள்களாக குறைத்ததை உச்சநீதிமன்றம் இரு நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது. இந்திய குற்றவியல் சட்டம் 304ஏ-இன் கீழ் தண்டனை வழங்கும் நடைமுறைகள் மீள்பார்வை செய்யப்பட வேண்டும், இந்த சட்டப் பிரிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றோம் என நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304ஏ-இன் படி, ஒரு ...

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Posted: 03 Apr 2015 10:58 AM PDT

விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் சகாப்தம். தமிழ் சினிமாவில் இன்னொரு வாரிசு நடிகர் உருவாகி இருக்கிறார். படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் அலையடித்தன. சகாப்தம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? கிராமத்தில் இருக்கும் சண்முக பாண்டியன் தன்னைப் போலவே வேலை வெட்டி இல்லாத நண்டு ஜெகனுடன் சுற்றித் திரிகிறார். பவர் ஸ்டாரை நம்பி வேலை தேடி மலேசியா செல்கிறார்கள். அங்கு வேலைக்கு வந்து அடிமையாக அவதிப்படும் தமிழர்களைக் காப்பாற்றத் துடிக்கிறார் ...

மீண்டும் ‘பிளேக் நோய்’ உருவாகலாம்

Posted: 03 Apr 2015 10:36 AM PDT

மத்திய நூற்றாண்டுகளில் மிக பரவலாக பரவி வந்த நோய் 'புபானிக் பிளேக்' என்ற கொள்ளை நோய். இந்த நோய் 'பிளாக் டெத்' என்று அழைக்கப்பட்டது. கொத்துக்கொத்தாக மக்களை கொன்று குவித்த இந்த நோயை 'கொள்ளை நோய்' என்றும் கூறிவந்தனர். இந்த நோய் எதிர் காலத்தில் மீண்டும் உருவாகலாம் என்று தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆறாம் நூற்றாண்டில் 3 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்தது, 'ஜஸ்டினியன் பிளேக்' எனப்படும் கொள்ளை நோய். இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த இரண்டு பேரின் பற்களில் இருந்து தடயங்களை ...

உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

Posted: 03 Apr 2015 10:34 AM PDT

புதுடில்லி; உலக பாட்மின்டன் தரவரிசையில் ('ரேங்க்') 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்தார் செய்னா நேவல். இந்த சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனை இவர் தான். டில்லியில் இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இத்தொடரில் பெறும் வெற்றியை பொறுத்து இந்திய வீராங்கனை செய்னா நேவல் ('நம்பர்-2', ஸ்பெயினின் கரோலினா மரின் (நம்பர்-4) இடையே, 'நம்பர்-1' இடத்தை பிடிப்பதில் போட்டி காணப்பட்டது. இதனிடையே, பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் செய்னா நேவல் முன்னேறினார். அதேநேரம் ...

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் நுழைந்தார்

Posted: 03 Apr 2015 10:32 AM PDT

மலேசிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டன் போட்டிகளில் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் நம்பர் 1 சாய்னா நெவால். இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சுன் யூ-வை 21-11, 18-21, 21-17 என்ற 3 செட்கள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் சாய்னா. அடுத்ததாக, ஒலிம்பிக் சாம்பியனான சீன வீராங்கனையும், வீழ்த்த மிகக் கடினமானவருமான லீ ஸ்யூருய் என்பரை சாய்னா சந்திக்கிறார். இவர் சாய்னா நெவாலை சுமார் 8 முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்னா இவரை ...

குர்துகளின் வீரப் போர்

Posted: 03 Apr 2015 10:28 AM PDT

குர்துகள் தாய்நாட்டுப் பற்றும் மதப்பற்றும் நிறைந்தவர்கள், கட்டுக்கோப்பானவர்கள், கண்ணியமிக்கவர்கள். சிரியாவின் பெரும் பகுதியை ஐ.எஸ். அமைப்பு தான் இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இராக்கில் அதன் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஷியா படைகளும் ஈரானியத் தோழமைப் படைகளும் கடுமையாக எதிர்த்துப் போரிடும் அதே வேளையில், 640 கிலோ மீட்டர் எல்லை நெடுகிலும் குர்துகள் நவீன ஆயுதங்களும் பெரிய உதவிகளும் இல்லாமல் வீரத்துடன் போரிட்டு வருகிறார்கள். உலகின் மிகப் பெரிய 'நாடற்ற இனத்தவர்கள்' ...

புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம் கொடுக்கிறீர்கள்!

Posted: 03 Apr 2015 10:18 AM PDT

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் புற்றுநோய்குறித்த எச்சரிக்கையின் பரப்பை 85% ஆக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்காமல், இப்போதுள்ள 40% நீடித்தாலே போதுமானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளுக்கும் ஒருவரைப் புகையிலை கொல்கிறது. இந்த விகிதம் 2030-ல் 3 நொடிகளுக்கு ஒருவர் என்ற அளவில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் மட்டும் புகையிலை பறித்த உயிர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 கோடி. இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ...

இணையத்தில் தேடுபவர் அறிவாளியா?

Posted: 03 Apr 2015 10:08 AM PDT

இணையத்தில் தேடலில் ஈடுபடுவதால் தகவல் கள் கிடைக்கலாம் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் இணைய தேடல் கொஞ்சம் தலைக் கனத்தையும் உண்டாக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இணைய தேடல் தொடர்பான சமீபத்திய ஆய்வு இந்த தகவலைத்தான் சொல் கிறது. இணையத்தில் தேடும் பழக்கம் கொண்டவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைத்துக்கொள் வதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் ஒன் றும் தவறில்லைதான். ஆனால் இணையவாசிகள் தங்கள் அறிவுத் தகுதியை விட கூடுதலான அறி வை கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்ள வைக்கிறது என்பதுதான் ஆய்வில் கவனிக்க வேண்டிய ...

புனித கதவு

Posted: 03 Apr 2015 10:05 AM PDT

- வாடிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தில், புனித கதவு ஒன்று உள்ளது. அதை, 'போர்ட்டா சான்டா' என அழைக்கின்றனர். இதை, 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் திறப்பர். - இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த, 1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை பார்த்ததாக எழுதியுள்ளார். - ஒரு காலத்தில், பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள் இக்கதவு வழியாக உள்ளே சென்றால், பாவம் மறைந்து விடும் என ...

வாழ்த்த வாய்தான் தேவை …!!

Posted: 03 Apr 2015 10:01 AM PDT

வாழ்த்த வயதில்லை என்று ஏன் பெனாத்துகிறீர்கள்? வாழ்த்த வாய்தான் தேவை …!! ராம் ராமச்சந்திரன் – ————————————— – தொலைத்ததை கண்டு பிடித்து விடலாம். ஆனால், இழந்ததை மீட்க முடியாது..! – விமலா சஞ்சீவ் குமார் – —————————————— – மணல் லாரியில் சொட்டிக் கொண்டிருப்பது தண்ணீர் அல்ல….ஆற்றின் கண்ணீர்! – சண்முக வடிவு – —————————————– – பன்னிரெண்டு ரூபாய் போக, ஐந்நூறுக்கு சிரித்துக் கொண்டே சில்லறை தரும் நடத்துனரை, உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கு யார் மூலம் சிபாரிசு செய்ய வேண்டும்..? – இந்திரா ...

வாத்தியாருக்கு பதில் தெரியலைனா நாம பெயிலுதான்…!

Posted: 03 Apr 2015 09:55 AM PDT

முன்னால் போகும் வாகன ஓட்டிகளின் உடல் மொழியை கவனித்து அவர் திருப்பங்களை அவதானிக்கும் திறன், உலகில் இந்தியாகளைத் தவிர வேறு யாருக்கேனும் உள்ளதா..? – விக்னேஸ்வரி சுரேஷ் – ————————————– – விவசாய நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும்: மோடி – ஒருவரை ஏமாத்தணும்னா, முதல்ல அவரோட, ஆசையைத் தூண்டி விடணும் – சதுரங்க வேட்டை – முத்து ராஜ் – ————————————– – நிறைய மனிதர்களின் வாழ்க்கை சவுத் ஆப்ரிக்காகாரங்க போலவே இருக்கிறது எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லாமலே! – ஷங்கர் கார்த்தி – —————————————- – சவுத் ...

புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..!

Posted: 03 Apr 2015 09:51 AM PDT

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் காந்தி அற்புதமான தகவல் ஒன்றை உதிர்த்திருக்கிறார். 'புற்றுநோய் வருவதற்கு புகையிலைதான் காரணமென்று நிரூபிப்பதற்கு இந்தியாவில் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை' என்பதுதான் அந்த அரிய தகவல். திலீப் காந்தியின் இந்த அசாத்தியக் கண்டுபிடிப்புக்கான காரணம் ஏப்ரல் 1-ம் தேதிதான். இந்த நாளில்தான் சிகரெட்டு பாகெட்டுகளின் மீதான அபாயகரமான படத்தை பாக்கெட் அளவில் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற காலக்கெடு முடிகிறது. திலீப் காந்தி ஒரு ...

10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம்: மதுரையில் கணக்கீடு அட்டவணை விநியோகம்

Posted: 03 Apr 2015 09:09 AM PDT

மின் பயன்பாட்டில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு 10 யூனிட்டை சேமித்தால் ரூ.866 மிச்சப்படுத்தலாம் எனக்கூறி மின்கட்டண கணக்கீட்டு அட்டவணையை ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் வீடு,வீடாக விநியோகித்து வருகின்றனர். | முழு அட்டவணை – கீழே |
=

-
500 யூனிட்டுக்கு செலுத்த வேண்டிய தொகை-ரூ 1330

510 யூனிட்டாக இருந்தால் செலுத்த வேண்டிய தொகை- ரூ 2196
---

காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

Posted: 03 Apr 2015 09:02 AM PDT

- • காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? விடை: பிரேஸில் - • 'பாக்ஸைட்' அதிகமாகத் தயாரிக்கும் இந்திய மாநிலம் எது? விடை: ஒரிஸ்ஸா - • லெவியாதன் என்னும் நூலின் ஆசிரியர் யார்? விடை: தாமஸ் ஹாட்ஸ் - • அரேபியப் புவியியலின் தந்தை என ஆராதிக்கப் பெறுபவர் யார்? விடை: ஐகௌபி - • குட்டித் திருவாசகம் என்று போற்றப்பெறும் நூல் எது? விடை: திருக்கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதி - • பிரம்ம விந்திய பத்திரிகை ஆசிரியர் யார்? விடை: சிதம்பரம் கு.ஸ்ரீனிவாச சாஸ்திரி ...

முத்தத் தீர்மானம்

Posted: 03 Apr 2015 08:48 AM PDT

முத்தத் தீர்மானம் முத்தத்தின் மீது வெறுப்பென்று ஒன்றும் இல்லை முத்தம் தூய்மையானதுதான் கண்ணீரைத் தடம் மாற்ற  காமத்தை உருமாற்ற  பெருமைப் பட பாராட்ட எல்லாவற்றிற்குமே  ஒரு முத்தம் போதுமானதாக இருக்கின்றது ஆலயத்திற்கு ஒர் ஆடை அரங்கிற்கு ஒர் ஆடையென தரம் பிரித்து அணிவதைப் போல முத்தங்களும் தரம் பிரித்துப்  பரிமாறப் பட வேண்டும் அழுந்தப் பதியும் புறங்கை முத்தத்தில் கருகி விடுகின்றன உரோமங்கள்  உச்சி முகர்வதில் மெச்சிக் கொடுப்பதில் இதழ்வழி பீறிடும் வெப்பம்  ஓசோனின் கிழிசலாய் ...

இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி

Posted: 03 Apr 2015 08:40 AM PDT

மும்பையை சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திகு 6-ம் வகுப்பு மாணவி மும்பையில் நடந்த கீதை சேம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்டு  முதல் பரிசை பெற்றார். ஒரு முஸ்லீம் பெண் கீதை போட்டியில் முதல் பரிசு பெற்றது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்து உள்ளது. மும்பையில் கிருஷ்ணா சர்வதேச சங்கம் ( இஸ்கான்) கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்து தேர்வு மூலம் போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளை சேர்ந்த  4 ஆயிரத்து 617 பேர்  பேர் கலந்து கொண்டனர். இதில் மும்பை மீரா ரோட்டு காஸ்மோபாலிட்டன் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(360)

Posted: 03 Apr 2015 07:47 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

உறங்காமல் சுற்றுகிறது பூமி

Posted: 03 Apr 2015 07:16 AM PDT

- – ஓயாத கடல் அலைகள் சாயாத நெடுமலைகள் சளைக்காமல் ஓடும் நதி அன்றாடம் உதிக்கிற சூரியன் – இவை அனைத்தும் நமக்கு சொல்ல நினைக்கும் பாடம் ஒன்றுதான் – இயங்கிக் கொண்டே இருங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் இயங்கிக் கொண்டே இருங்கள் உயர்ந்த நிலை வந்த பிறகும் இயங்கிக் கொண்டே இருங்கள் சிகரம் தொட்ட பிறகும் சிறகை விரிப்போம் வானம் தொட…! – ———————————- ராஜன் ராமசாமி நமது நம்பிக்கை – மாரச் 2015

அறுந்த ரீலு 2: ‘தண்ணில கண்டம்’ ரஜினிகாந்த்

Posted: 03 Apr 2015 07:14 AM PDT

- படையப்பா – படக் காட்சி 'முத்து' படத்தில் பாறையில் இருந்து ரஜினி, மீனா இருவரும் உருண்டு தண்ணீரில் வந்து விழுவார்கள். அதற்குப் பிறகு ரஜினி தண்ணீரில் இறங்குவது மாதிரியான காட்சி எந்தப் படத்திலும் கிடையாது என்கிறார்கள், அவரது நெருங்கிய வட்டாரத்தில். ஏன்? இந்தக் கேள்விக்கு பதிலாக கிடைத்தது ஒரு சம்பவம். 'படையப்பா' படத்தில் சவுந்தர்யாவிடம் ரஜினி தனது கையில் இருக்கும் மவுத் ஆர்கனை வாசித்து தனது காதலை வெளிப்படுத்துவது போன்று காட்சிகள் இருக்கும். அதில் முக்கியமான காட்சி குளத்துக் கரையில் ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 03 Apr 2015 06:54 AM PDT



தமிழ்நாட்டில் தாவரங்கள் (105)

Posted: 03 Apr 2015 06:46 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

பாப்லோ பிகாசோ- அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

Posted: 03 Apr 2015 06:41 AM PDT

- ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவ . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து… • பிறந்தது ஸ்பெயினில். வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது பிரான்ஸில். இவரது ஓவியக் கலை ஈடுபாடு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இவர் முதலில் உச்சரித்த வார்த்தை 'பென்சில்' என்பதுதானாம். இதை அவரது தாய் பூரிப்போடு சொல்வார். ஓவியப் பள்ளி ஆசிரியரான தந்தையிடம் 7 வயதில் ஓவியப் பயிற்சியைத் தொடங்கினார். 13 வயதிலேயே தந்தையை விஞ்சிய தனயன் ஆனார். • பள்ளிப் பருவத்தில், ...

நிலவு….

Posted: 03 Apr 2015 05:03 AM PDT


-
வண்ண நிலவே
உன் தரிசனத்தின்
வெட்க மிகுதியால்
காரிருள் கூட
ஓடி மறைகிறாள்

உன்னை முழு
நிலாவாய்
கண்டபோதுதான்
பார் முழுதும்
பேரானந்தம்……..

மாதம் ஒரு முறை
வந்து மறைவதால்
ஆவலின் செறிவில்
அத்தனை இன்பம்

==========================

haseem hafe

நவீன ஓவியத்தின் தந்தை என்று புகழப்படுபவர் யார்?

Posted: 03 Apr 2015 04:47 AM PDT

- • நவீன ஓவியத்தின் தந்தை என்று புகழப்படுபவர் யார்? விடை: ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாபிலோ பிகாஸோ - • வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையர் யார்? விடை: டி.என்.சேஷன் - • ராக்கெட்டின் தந்தை என்ற பாராட்டினைப் பெற்றவர் யார்? விடை: கோடர்ட் - • கர்மவீரர், பெருந்தலைவர், காலா காந்தி என்று புகழ் பெற்ற அரசியல் தலைவர் யார்? விடை: காமராசர் - • சிற்றிதழ் உலகில் சுவடு பதித்த 'விவேக பானு' என்ற இலக்கிய இதழின் ஆசிரியர் யார்? விடை: சி.வி சுவாமிநாதய்யர் – ————————————–

சிங்கப்பூரின் சூயிங்கம் தடைக்கு காரணம் என்ன?

Posted: 03 Apr 2015 04:08 AM PDT

- லீ குவான் யூ- ஒரு சிறிய துறைமுகத் தளத்தை உலக வணிக மையமாக மாற்றியவர். சுத்தத்தையும் நேர்த்தியையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நாட்டு மக்களிடம் எதிர்பார்த்த அவர், சிங்கப்பூரின் சூயிங்கம் மீதான தடைக்கும் காரணமானவராக பார்க்கப்படுகின்றார். சூயிங்கம் மீது அவருக்கு அப்படியென்ன வெறுப்பு? இன்று சிங்கப்பூர் வாழ்க்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சங்களில் ஒன்றாக சூயிங்கம்-தடை உள்ளது. நெடுஞ்சாலைகளை கண்டமாதிரி கடப்பது, கண்ட இடத்தில் குப்பை போடுவது, கண்ட கண்ட இடங்களில் கிறுக்குவது, துப்புவது, ...

4 மொழிகளில், ‘குயின்!’

Posted: 03 Apr 2015 03:57 AM PDT

- கங்கனா ரணாவத்துக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த படம், 'குயின்.' (இந்தி) இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாரிக்கும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருக்கிறார். தமிழில், பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில், முன்னணி நாயகி ஒருவர் நடிக்கிறார். தேசிய விருது பெற்றதை தொடர்ந்து 'குயின்' படத்துக்கு தென்னக திரையுலகில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது! – ——————————————

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

Posted: 03 Apr 2015 03:55 AM PDT

– பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் எப்போது கிரிவலம் செல்லலாம் என்று அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரிவலம் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவி லுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண் ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக் கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார் கள். நாளை இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:– நாளை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™