Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விரைவில் வீடுகளுக்கு ஒரு மணி நேரம் மின்வெட்டு: நஷ்டத்தை சமாளிக்க மி.வா., திட்டம்

Posted:

தமிழ்நாடு மின்வாரிய நஷ்டத்தை சமாளிக்க, விரைவில், வீடுகளுக்கு, ஒரு மணி நேரம் மின் தடையை அமல்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, வீடு, தொழிற்சாலை, வணிக மின் இணைப்புகளுக்கு மின் தடை அமல்படுத்தப்பட்டது. வீடுகளுக்கு, மின்தடை செய்யப்படும் இடம், நேரம் ஆகியவை மின் வாரியம் சார்பில், முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

2,500 மெகாவாட்:
வல்லுார், வடசென்னை, மேட்டூர் விரிவாக்கம் ஆகிய, புதிய அனல் மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, கூடுதலாக, 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்தும், மின் ...

காசு வாங்கி ஓட்டளிப்பவர்களுக்கு கிடைக்க போகுது சுதந்திரம்? கண்டுகொள்ள முடியாத வகையில் புதிய ஓட்டு எண்ணிக்கை

Posted:

புதுடில்லி : தேர்தலின் போது, ஓட்டளித்தவர்களின் ரகசியத்தை, மேலும் காக்கும் வகையிலும், எந்த ஓட்டுச்சாவடியில் யாருக்கு ஓட்டு கிடைத்தது என்பதை, வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் அறியாத வகையிலும், 'டோட்டலைசர்' என்ற இயந்திரத்தை பயன்படுத்தி ஓட்டுகளை எண்ண, தேர்தல் கமிஷன் விரும்புகிறது; இதற்கு, மத்திய சட்டக் கமிஷனும் ஆதரவு அளிக்கிறது. அரசின் அனுமதி கிடைத்தால், இந்த புதிய ஓட்டு எண்ணும் முறை அமலுக்கு வரும்; அதனால், வாக்காளர்களின் ஓட்டுப்போட்ட ரகசியம் பாதுகாக்கப்படும்.வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உட்பட, பல நாடுகளிலேயே, முழுமையான முறையில், ...

ஆடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: மத்திய அமைச்சர் ஸ்மிருதி கோவாவில் அதிர்ச்சி

Posted:

கோவா : மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பெண் அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோவா நகரில், பிரபல நிறுவனம் ஒன்றில் வாங்கிய ஆடையை உடுத்திப் பார்க்க, ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்த போது, அங்கு ரகசிய கேமரா இருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்; போலீசில் புகார் அளித்தார்; கடை ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.பெங்களூருவில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, தன் கணவர் ஜுபினுடன் கோவா சென்றிருந்த ஸ்மிருதி, 39, அங்குள்ள, 'பேப் இந்தியா' என்ற பிரபல ஆடை, அலங்கார கடையில், 'ஷாப்பிங்' செய்தார்.சில ஆடைகளை வாங்கிய ...

ஸ்பெக்ட்ரம் மூலம் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் : நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி

Posted:

பெங்களூரு : ''நிலக்கரியை வைரமாக்கியும், ஸ்பெக்ட்ரம் மூலம் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளோம். இதன் மூலம் நாடு முன்னேற்றப்பாதையில் செல்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தையொட்டி, பசவனகுடி நேஷனல் கல்லுாரி மைதானத்தில், கட்சி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது; கடந்த, 30 ஆண்டுகளுக்கு பின் நாடு முன்னேற்ற பாதையில் அடியெடுத்துள்ளது. காங்., ஆட்சியின் போது முன்னேற்றமில்லாமல், நாடு பின்னடைவை அடைந்தது. தற்போது மக்களின் ...

நிலம் எடுப்பு அவசர சட்டம் மீண்டும் அமல்

Posted:

புதுடில்லி : நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம், இன்றுடன் காலாவதி ஆவதை முன்னிட்டு, அந்த அவசர சட்டத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று மீண்டும் பிறப்பித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நாளில், ஐந்து அவசர சட்டங்களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார்.

முடங்கியது:
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசர சட்டம், காப்பீடு துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான அவசர சட்டம் உட்பட, ஐந்து அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.அவற்றில், நான்கு அவசர சட்டங்கள், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் ...

கருணை கொலைக்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கு 130 கைதிகள் மனு

Posted:

ராஞ்சி : தண்டனைக் காலம் முடிந்த பிறகும் விடுவிக்கப்படாத, 130 கைதிகள், தங்களை கருணை கொலை செய்ய அனுமதி கோரி, ஜனாதிபதிக்கு மனு அனுப்பி உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.,வின் ரகுவர் தாஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது.மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள, 'பிர்சா முண்டா' மத்திய சிறை யில், 130 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். ஆயுள் தண்டனை காலமாக, 14 முதல் 20 ஆண்டுகளை கடந்தும் விடுவிக்கப்படாமல், இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தங்களை கருணை கொலை செய்யும்படி, சிறை அதிகாரி மூலம், ஜனாதிபதிக்கு மனு அனுப்பி உள்ளனர்.அவர்களுடைய மனுவில் ...

சிகரெட் புகைப்பதற்கும் புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லையாம்: மற்றொரு பா.ஜ., - எம்.பி.,யும் புகையிலைக்கு வக்காலத்து

Posted:

புதுடில்லி : ''சிகரெட், பீடி புகைப்பதற்கும், புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை; தேவையின்றி பீதியை கிளப்புகின்றனர்,'' என, அசாம் மாநிலத்தை சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., ராம் பிரசாத் சர்மா பேசியுள்ளது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பார்லி., துணை சட்டக் குழுவின் தலைவரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான திலீப் காந்தி, 'புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படும் என, எந்த இந்திய ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை' என, பேசினார்; அவரின் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான விதிமுறைகளை ...

கடனில் தத்தளிக்கும் கேரள நர்ஸ்கள் இந்தியா வர மறுப்பு

Posted:

சனா : ஏமன் நாட்டில் சண்டை வலுத்துள்ள நிலையில், அங்கு உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்ற போதிலும், அங்குள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் கேரள நர்ஸ்கள், வெளிநாட்டு வேலைக்காக வாங்கிய கடனை அடைக்க, அந்த நாட்டிலிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர்.வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில், சவுதி அரேபியா தலைமையில், அரேபிய படைகள் தாக்குதல் நடத்தி, ஷியா பிரிவு முஸ்லிம்களின் முன்னேற்றத்தை தடுத்து வருகின்றன. இதனால், ஏமனின் தலைநகர் சனா, துறைமுக நகரம் ஏடன் உட்பட பல இடங்களில், கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, கேரளாவில் இருந்து ...

கரூரில் அ.தி.மு.க., நடந்தும் மருத்துவ முகாம் : அரசு டாக்டர்கள், பணியாளர்கள் பங்கேற்க உத்தரவு

Posted:

கரூர் : அ.தி.மு.க., சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமிற்கு, அரசு டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை விடுமுறை எடுக்காமல் வரவேண்டும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், இன்று, காலை, 8.30 மணி முதல், மாலை, 4.30 மணி வரை, முன்னாள் முதல்வர் ஜெ.,வின், 67 வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடக்கிறது.இந்த மருத்துவ முகாமில் உடல்கூறு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, நுரையீரல் இயக்கம், கண் பரிசோதனை ஆகிய பரிசோதனை ...

மோடி ஆட்சி 20 ஆண்டுகள் நீடிக்கும்: பா.ஜ., தலைவர் அமித் ஷா பெருமிதம்

Posted:

பெங்களூரு: ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 10 மாதங்களில், யாரும் செய்யாத பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இந்த ஆட்சி, இன்னும் 20 ஆண்டுகள் நீடிக்கும்,'' என, பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், அந்த கட்சித் தலைவர் அமித் ஷா பேசினார்.

பொய் பிரசாரம்:
பா.ஜ., தேசிய செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டம், பெங்களூரு லலித் அசோக் ஓட்ட லில், நேற்று துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் ...

நிதி தருவதை நிறுத்திய அகிலேஷ் அரசு: அயோத்தியில் முளைக்கிறது புதிய பிரச்னை

Posted:

அரசின் நிதி தடைபட்டுள்ளதை அடுத்து, பல ஆண்டுகளாக, அயோத்தியில் நடந்து வந்த, 'ராம் கதா' மற்றும் 'ராம் லீலா' நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, இதுகுறித்த பிரச்னை, விரைவில் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், பல ஆண்டுகளாக, தேசிய அரசியலையும், உத்தர பிரதேச அரசியலையும் ஆட்டிப் படைத்து வருகிறது.
துருவங்கள்:
இந்த பிரச்னையை மையமாக வைத்து, பா.ஜ., வும் சமாஜ்வாதி கட்சியும், அம்மாநிலத்தில் எதிரெதிர் துருவங்களாக அரசியல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அயோத்தியில் புதிதாக ஒரு ...

ஈரான் அணு ஆயுத பிரச்னையில் சுமுக தீர்வு: இந்தியா வரவேற்பு

Posted:

புதுடில்லி: ஈரான் அணு ஆயுத தயாரிப்பு தொடர்பான பிரச்னையில், சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளதை, இந்தியா வரவேற்றுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரான் அணுசக்தி விவகாரத்தில், குறிப்பிடத்தக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதை இந்தியா வரவேற்கிறது. இப்பிரச்னையில், ஈரானின் உரிமைக்கு மதிப்பளித்து, அமைதியான முறையில், சர்வதேச நலனை கருத்தில் கொண்டு, முடிவெடுக்க வேண்டும் என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கருத்தொற்றுமையின் அடிப்படையில், ஜூன் 30ம் தேதி, கையெழுத்தாகும் இறுதி ஒப்பந்தத்திற்கு, இந்தியா ஆதரவளிக்கும். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™