ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம்
- காஞ்சனா 2 - திரை விமர்சனம்
- அந்தமானை பாருங்கள் அழகு.......
- ஜூலை மாதம் வெளியாகிறது விண்டோஸ் 10
- அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல்
- கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது
- செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!
- முத்தமிழ்: சொல்லேர் உழவர்
- கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
- அட்சய திருதியையும் அட்டகாச ட்வீட்களூம்!
- பழங்காசுகள்
- தியானென்மென் சதுக்கப் போராட்டம் - 1989 ஏப்ரல் 21
- ஏமன் உள்நாட்டுப் போர்
- கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு
- புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள்
- சினிமாத் துறையில் இந்தியா முதலிடம்
- ரூ.157 கோடிக்கு விலை போகும் 100 காரட் வைரம்
- உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red
- ரமணியின் கவிதைகள்
- ஈகரை உறவுகளில் யாராவது இலங்கை கொழும்புவில் வசிக்கிறீர்களா?
- ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது?
- சென்னை உயர் நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் கைது
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- சாதனை வேகத்தை கடந்த ஜப்பான் அதி நவீன புல்லட் ரயில்
- கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு
- காய்கறி வாங்கலாம் வரிங்களா?
- மாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாபம் !
- காதல் வந்திடுச்சு
- இரு கை இல்லாதோரும் ஓட்ட 'ஸ்பெஷல் பைக்': திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு
- சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு
- இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்
- ரத்தத்தைத் தூய்மை செய்யும் புளிச்சக்கீரை!
- கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு… கார்ட்டூனிஸ்ட்!
- பிரான்ஸ் பெண்கள் வாக்குரிமைபெற்று 70 வருடங்கள்!
| கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Posted: 21 Apr 2015 01:09 PM PDT மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவில் புதிய விவகாரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில், உள்ள ஒரு தேவாலயத்தின் சுவற்றில் இருந்த சிலுவையை அகற்றும் படி, நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் தேவாலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 95 சதவிகித முஸ்லிம்கள் வசிக்கும் அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் சிலுவையை வைக்கக் கூடாது என்று கூறி அவர்கள் ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 21 Apr 2015 12:43 PM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Posted: 21 Apr 2015 12:40 PM PDT இன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான 'ஓ காதல் கண்மணி' கல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார். மறதி ... |
| Posted: 21 Apr 2015 12:38 PM PDT கொஞ்சம் திகில், கொஞ் சம் காமெடி கலந்து பேய்கள் ஆட முயற்சி செய்திருக்கும் அதிரடி ஆட்டம்தான் 'காஞ்சனா 2'. வழக்கம்போல, பேய் என்றால் பயம் தொற்றிக்கொள்ளும் பேர் வழி ராகவா லாரன்ஸ் (ராகவா). இவர் கிரீன் டிவி சேனலில் கேமராமேனாக வேலை பார்க் கிறார். நாயகி தாப்ஸி (நந்தினி) அதே சேனலில் நிகழ்ச்சி இயக்குநர். முதல் இடத்தில் இருந்த இந்த சேனல் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறது. காரணம், போட்டி சேனலில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி. கடவுளை மையமாகக் கொண்ட அந்த நிகழ்ச்சியின் வெற்றியை முறியடிக்க பேயைப் பின்னணி ... |
| அந்தமானை பாருங்கள் அழகு....... Posted: 21 Apr 2015 12:33 PM PDT இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................) ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு ... |
| ஜூலை மாதம் வெளியாகிறது விண்டோஸ் 10 Posted: 21 Apr 2015 12:32 PM PDT நீண்ட எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள விண்டோஸ் 10 ஓ.எஸ். வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் OEM நிர்வாகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பெர்ஸனல் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்களின் தேவை வெகுவாக சரிந்துள்ளதால் மைக்ரோசாப்ட்டின் ஹார்டுவேர் பார்ட்னரான AMD 180 மில்லியன் டாலர் அளவுக்கு கடும் நட்டத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில், புதிதாக வெளியாகும் விண்டோஸ் 10 ஓ.எஸ். மீண்டும் வியாபாரத்தை சூடுபிடிக்க செய்யும் என எதிர்பார்க்கிறது. தற்போது டெஸ்டிங் ஸ்டேஜில் இருக்கும் விண்டோஸ் ... |
| அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் Posted: 21 Apr 2015 12:29 PM PDT அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் மும்பையில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் அறிமுக விழா நேற்று நடந்தது. கடற்படை தளபதி ஆர்.கே.தோவானின் மனைவி மினு தோவான் கப்பலை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஆர்.கே.தோவான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் கப்பல் மிதக்க விடப்பட்டது. இக்கப்பல் 163 மீட்டர் நீளமும், 7,300 டன் ... |
| கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Posted: 21 Apr 2015 12:13 PM PDT சென்னையில் நேற்று இரவில், இரண்டு இடங்களில் கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு, தாக்கப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் நேற்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிள்களில் வந்த சிலர், திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகிறது. 76 வயதாகும் விஸ்வநாதன் காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்துவருகிறார். மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காரணீஸ்வரர் ... |
| செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! Posted: 21 Apr 2015 12:12 PM PDT சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதில் தமிழக மற்றும் ஆந்திர முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகக் கூறி சமீபத்தில் 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் சுட்டுக் கொன்றனர்.நாட்டையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் பெருகி வருகின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த ... |
| Posted: 21 Apr 2015 12:01 PM PDT மானுட மனத்தில் அறிவுக்கூறு, உணர்ச்சிக்கூறு, முயற்சிக்கூறு என்ற மூக்கூறுகளும் ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன. தமிழ்மொழி சங்க காலத்தில் மூன்று வகைகளில் நிலைபெற்றிருந்தது. ஒன்று இயல், மற்றொன்று இசை, பிறிதொன்று நாடகம். தமிழ் மொழி, "இயல்" வழியாக மானுடத்தின் அறிவுக்கூறையும் "இசை" வழியாக உணர்ச்சிக் கூறையும் இயலும் இசையும் இணைந்த "நாடக"த்தின் வழியாக முயற்சிக்கூறையும் வளர்த்தது. இயலையும் நாடகத்தினையும் இணைக்கும் கயிறுதான் இசை. முத்தமிழின் மையமும் அதுதான். கூத்தும் நாடகமும் ஒரு பொருள் குறித்த சொற்கள்தான். ... |
| கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Posted: 21 Apr 2015 12:00 PM PDT அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும். |
| அட்சய திருதியையும் அட்டகாச ட்வீட்களூம்! Posted: 21 Apr 2015 11:50 AM PDT அட்சய என்றால் வளர்தல் என்று பொருள். அள்ள அள்ளக் குறையாத செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். தங்கம், வெள்ளி போன்ற பொருளாதார வளத்தைக் குறிக்கும் பொருட்கள் சேர வேண்டும் என்றால் அட்சய திருதியை நாளில் வாங்கினால் வளமுடைய வாழ்வைப் பெறலாம் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தையும் விடவில்லை நம் ட்விட்டர் சமூகம். இன்று ஒரு ட்வீட் போட்டால் ரீ-டீவீட் பெருகும் என்று ஐதீகத்தில் புதிய கோட்பாடுகளைப் புகுத்தி, தங்களுக்கே உரிய மொழிநடையில் இட்ட பதிவுகளின் தொகுப்பு ஃபீனிக்ஸ் तिरु @fanatic_twitt - அட்சய திரிதியை ... |
| Posted: 21 Apr 2015 11:38 AM PDT பழங்கால வாணிபத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவந்த "பண்டமாற்று" முறையின் அடுத்த கட்ட வளர்ச்சிநிலையாகக் குறிப்பிட்ட அளவு பொன்னைக் கொடுத்து எப்பொருளினையும் பெறும்நிலை ஏற்பட்டது. இங்குப் பொன் ஒரு "பொதுப்பொருள்" என்ற நிலையில் அது கையாளப்பெற்றது. அதன் பின்னர் இந்தியாவின் நிலையான அரசுகள் பிற நாட்டினரின் நாணயப் பயன்பாட்டினைப் பார்த்துத் தாங்களும் நாணய சாலைகளை அமைத்து, காசுகளை உருவாக்கி, தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகப் புழக்கத்திற்காக அவற்றைப் பொதுமக்கள் மத்தியில் பரப்பினர். இக்காசுகள் பொன், ... |
| தியானென்மென் சதுக்கப் போராட்டம் - 1989 ஏப்ரல் 21 Posted: 21 Apr 2015 11:23 AM PDT 26 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் பெய்ஜிங் நகர தியானென்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் இன்றளவும் பேசப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலரின் ஊழல்கள், அரசின் கெடுபிடிகள், பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களால் மனக் கசப்புடன் இருந்த சீன மக்கள், 1989 ஏப்ரல் மாதம் போராட்டத்தில் இறங்கினர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும் சீர்திருத்தவாதியுமான ஹு யாவோபாங்கும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார். இதனால், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். சில நாட்களில் மாரடைப்பால் ... |
| Posted: 21 Apr 2015 11:20 AM PDT உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. சனாவை கைப்பற்றினர் அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் ... |
| கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு Posted: 21 Apr 2015 11:15 AM PDT இரண்டாம் உலக போரின்போது, தெற்கு அட்லாண்டிக் கடலில் கவிழ்க்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்து 100 டன் எடையுள்ள ஒரு ரூபாய் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.சிட்டி என்ற அந்த சரக்கு கப்பலில் இந்த நாணயங்கள் ஏற்றப்பட்டு, இரண்டாம் உலக போரில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து படைகளுக்கு நிதி உதவி செய்யும் நோக்கத்தில் அனுப்பிவைக்கப்பட்டன. 1942–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மும்பையில் இருந்து 296 பேருடன் இக்கப்பல், இங்கிலாந்துக்கு புறப்பட்டது. ஆனால், தெற்கு அட்லாண்டிக் கடலில், ஜெர்மன் நீர்மூழ்கி ... |
| புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள் Posted: 21 Apr 2015 11:13 AM PDT புதிர் -20 வினாடிக்குள் விடை கொடுங்கள் முதல் வகுப்பு ,நுழைவு தேர்வுக்கு , ஹாங்காங் குழந்தைகளுக்கு . நீங்களும் முயற்சி செய்யுங்கள் . எந்த எண்ணில் கார் நிறுத்திவைக்கபட்டுள்ளது ? ரமணியன் |
| சினிமாத் துறையில் இந்தியா முதலிடம் Posted: 21 Apr 2015 11:10 AM PDT இந்தியாவையும், சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. உலகிலேயே சினிமா தயாரிப்பில் முதலிடம் வகிப்பது இந்தியா தான். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 1,400 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுவே அமெரிக்காவில் 600 என்றும், ஜப்பானில் 500 என்றும், சீனாவில் 450 என்றும் இருக்கிறது. சினிமாவில் இந்தியா முதலிடம் பெற என்ன காரணம்? இங்கு சினிமா என்பது தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு. மற்ற நாடுகளை விட இந்தியாவில் டிக்கெட் விலையும் குறைவு. இந்தியாவில் சினிமா மூலம் மட்டும் வருடத்திற்கு ரூ.1,500 ... |
| ரூ.157 கோடிக்கு விலை போகும் 100 காரட் வைரம் Posted: 21 Apr 2015 11:01 AM PDT 100-காரட் தூய்மையான வைரம் ஒன்று ஏலத்தில் ரூ.119 கோடி முதல் ரூ.157 கோடி வரை விலை போகவுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 100.20 காரட் துல்லிய அளவுள்ள இந்த வைரம் கண்ணாடி போல நிறமற்று காணப்படுகிறது. பிரமாதமான கலர் கிளாரிட்டியுடன் இந்த வைரம் நியூயார்க்கிலுள்ள சோதிபை ஆக்ஷன் ஹவுஸில் ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த வைரம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. கட் செய்யப்பட்டு பாலிஷ் ஆவதற்கு முன் இந்த வைரம் 200 காரட்டுக்கும் மேல் ... |
| உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red Posted: 21 Apr 2015 09:27 AM PDT எட்டு நாள் வளர்ந்த தாடி ,ஒரு பக்கம் ஏறி இறங்கியிருந்த சட்டையின் கை மடிப்புகள், கலைத்து சீவப்படாத தலை மயிர், மாற்றி அணிந்திருந்த செருப்புடன் புலம்பிக் கொண்டே தள்ளாடி வந்து கொண்டிருந்தான் குமார்.!! (தண்ணி அடிச்சுருந்தா தள்ளாட தானே செய்வான்).. அம்மா பெயர் காவேரி ..கணவனை இழந்து விட்டு கட்டிட வேலை செய்து மகன் குமாரை வளர்த்து ஆளாக்கியவள்..!! படிக்குற காலத்தில் அவனும் ஊர் சுற்றியவன் தான் ...ஆனால் படித்து முடித்த பின்பும் ஊர் தான் சுற்றுவான் என்று முன்னமே காவேரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ... |
| Posted: 21 Apr 2015 06:35 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| ஈகரை உறவுகளில் யாராவது இலங்கை கொழும்புவில் வசிக்கிறீர்களா? Posted: 21 Apr 2015 05:25 AM PDT ஈகரை உறவுகளில் யாராவது இலங்கை கொழும்புவில் வசிக்கிறீர்களா? |
| ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது? Posted: 21 Apr 2015 05:23 AM PDT 1) ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது? - 2) உலகிலேயே பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது? - 3) நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார்? - 4) திறந்தவெளிப் பல்கலைக் கழகம் முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட நாடு எது? - 5) காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது? - ============== |
| சென்னை உயர் நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் கைது Posted: 21 Apr 2015 04:26 AM PDT உயர் நீதிமன்ற வளாகத்தில் போலி வழக்கறிஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பவர் முகுந்தன். இவரது சொந்த பிரச்சினை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. இந்நிலை யில் எஸ்.எஸ்.செந்தில் என்பவ ரின் அறிமுகம் முகுந்தனுக்கு கிடைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட செந்தில், முகுந்தனின் வழக்கை எடுத்து நடத்துவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி யிருக்கிறார். இந்நிலையில், செந்திலின் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 21 Apr 2015 03:44 AM PDT ![]() |
| சாதனை வேகத்தை கடந்த ஜப்பான் அதி நவீன புல்லட் ரயில் Posted: 21 Apr 2015 03:10 AM PDT உலகின் அதிவேக பயணிகள் புல்லட் ரயில் ஜப்பானில் சோதனை ஓட்டத்தின் போது தனது முந்தைய வேகத்தையும் கடந்து அதிவேக சாதனை புரிந்துள்ளது. - யமனாஷியில், பரிசோதனைக்கான டிராக்கில் அதிவேக புல்லட் ரயில் சோதனை ஓட்டம் கண்டது. | படம்: ராய்ட்டர்ஸ். = சோதனை ஓட்டத்தின் போது முன்னதாக மணிக்கு 581 கிமீ வேகம் சென்ற இந்த ரயில், தற்போது மணிக்கு 603 கிமீ வேகம் சென்று தனது முந்தைய வேகத்திறனையும் கடந்தது. ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில்கள் உலகிலேயே உயர் தொழில்நுட்பத் திறனுடன் தயாரிக்கப்படுபவை. டோக்கியோவுக்கும் ஒசாகாவுக்கும் ... |
| கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Posted: 21 Apr 2015 03:06 AM PDT ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோக-கோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவில் சிப்காட் நிர்வாக இயக்குநர் ஆர்.செல்வராஜ் கையொப்பமிட்டார். முன்னதாக, கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக கோக-கோலா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அந்நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. நிலம் ஒதுக்கியும் ஆலை தொடங்காததால் நிலத்தை ஏன் திரும்பப் பெறக்கூடாது என அந்த நோட்டீஸில் விளக்கம் கோரப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில், ... |
| Posted: 21 Apr 2015 02:55 AM PDT இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றல்லாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா? அதற்க்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பல்ருக்கும் உதவும் |
| மாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாபம் ! Posted: 21 Apr 2015 01:49 AM PDT கொல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிப்பதில் சக வீரருடன் மோதி உயிரை விட்ட அங்கித் கேஷ்ரி மாற்று வீரராக பீல்டிங் செய்ய இறக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் பெங்கால் மற்றும் பவானிபூர் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிக்கும் முயற்சியில் பெங்கால் அணியை சேர்ந்த அங்கித் கேஷ்ரி மற்றும் சௌரப் மாண்டல் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.. இதில் அங்கித் கேஷ்ரியின் இதயம் செயலிழந்து துடிப்பதை நிறுத்திக் கொண்டது. சக வீரரான சிவ் சாகர் சிங் என்பவர் ... |
| Posted: 21 Apr 2015 12:20 AM PDT - தும்மலும் விக்கலும் எப்போ எப்படி வரும்னு சொல்ல முடியாது பாஸ். ஆனால் தமிழ் சினிமாவுல எது எதுக்கெல்லாம் காதல் வரும்னு கரெக்ட்டா சொல்ல முடியும். எப்படினு கேட்கிறீங்களா? - - - சேலை கட்டத் தெரியலைனு ஹீரோ நம்ம ஹீரோயினை சபையில வெச்சு அசிங்கப்படுத்திட்டா, வீட்டுக்குப் போய் மெத்தையில குப்புறப்படுத்துக் காதலை ஸ்டார்ட் பண்ணுமே சாமி! எத்தனை வாட்டி? 'பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?'னு நாலு அன்ரூல்டு பேப்பர்ல இருக்கிற டயலாக்கைப் பேசினா, பச்சக்னு காதல் ஒட்டிக்குமே மக்கா! துப்பட்டா ... |
| இரு கை இல்லாதோரும் ஓட்ட 'ஸ்பெஷல் பைக்': திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு Posted: 21 Apr 2015 12:08 AM PDT - திண்டுக்கல்: இரு கைகள் இல்லாத மாற்றுத் திறனாளிகளும் ஓட்டுவதற்கான 'பைக்கை' திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கால் இல்லாத மாற்றுத் திறனாளிகள் ஓட்ட பைக்' தயாரிக்கப்படுகிறது. இரு கைகள் இல்லாத மாற்றுத் திறனாளிகள் கைப்பிடியை பிடிக்க முடியாது என்பதால், இதுவரை அவர்களுக்கு 'பைக்' தயாரிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பயணத்திற்கு மற்றவர்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கான 'பைக்கை' திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கண்டுபிடித்தது. ... |
| சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு Posted: 20 Apr 2015 11:35 PM PDT புதுடில்லி: சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க, வெளியுறவுத் துறைக்கு, இந்திய உளவு அமைப்பு கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சுற்றுலா அல்லது வேலைக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு, 'விசா' வழங்கப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவிலிருந்து, ரஷ்யா செல்ல விரும்புகிறவர்களுக்கு, ரஷ்யா, விசா வழங்குகிறது.இதன் மூலம், யார், யார் தன் நாட்டிற்கு வந்துள்ளனர்; அவர்கள் எண்ணிக்கை, விவரம் போன்றவற்றை, சம்பந்தப்பட்ட நாடுகள் பராமரிக்க முடியும்.அன்னியச் செலாவணியை அதிகரிக்கவும், ... |
| இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் Posted: 20 Apr 2015 10:48 PM PDT நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடாத மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள அந்நிறுவன ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதுகுறித்து, பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் வி.ஏ.என். நம்பூதிரி தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: கடந்த 2000-ஆம் ஆண்டில், பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ரூ.40,000 கோடி கையிருப்பு இருந்தது. ஆனால், அந்தப் பணம் முழுவதும் கடன்களுக்கான ... |
| ரத்தத்தைத் தூய்மை செய்யும் புளிச்சக்கீரை! Posted: 20 Apr 2015 08:48 PM PDT புளிச்சக்கீரை… புளிப்புச்சுவை நிறைந்தது என்பதால், இந்தக் கீரை புளிச்சக்கீரையானது. புளிச்சக்கீரைக்கு காசினிக்கீரை என்ற பெயரும் உண்டு. இது ஆந்திரா பகுதியில் 'கோங்குரா' என்ற பெயரில் பிரசித்தி பெற்றது. கோங்குரா சட்னி, கோங்குரா துவையல், கோங்குரா தொக்கு போன்றவை சுவைக்கு பெயர் பெற்றவை. இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த இந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மை பெறுவதோடு மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. உடல் குளிர்ச்சி பெறுவதோடு மந்தம் நீங்கி விந்து கெட்டிப்படும். பொதுவாக ... |
| கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு… கார்ட்டூனிஸ்ட்! Posted: 20 Apr 2015 07:32 PM PDT படித்த படிப்பும், பணிபுரியும் துறையும் வேறுபடுவது இங்கு வாடிக்கை. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கதிர் என்ற கதிரவன், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, இப்போது கார்ட்டூன்கள் வரைந்துகொண்டிருக்கிறார், சந்தோஷமாக! - - ''அப்பாவுக்கு தச்சு வேலை. பல வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பம் சென்னைக்கு வந்துடுச்சு. பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு, சென்னை வேப்பேரியில உள்ள செங்கல்வராய பாலிடெக்னிக் கல்லூரியில கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ படிச்சேன். கால்சென்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்னு வேலை பார்த்துட்டு இருந்தேன். ... |
| பிரான்ஸ் பெண்கள் வாக்குரிமைபெற்று 70 வருடங்கள்! Posted: 20 Apr 2015 07:23 PM PDT - பிரான்சில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டு 70 வருட ங்கள் கடந்து விட்டன. ஆனால் பெண்களுக்கு அரசியல் தளத்திலும் சரி பொதுத்தளத்திலும் சரி சம உரிமைகள் கிடைப்பதற்கு இன்னமும் நீண்ட காலப் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம் என, பெண் உரிமைகள் சார் அமைச்சர் Najat Vallaud-Belkacem கவலை தெரிவித்துள்ளார். ஆண்கள் வாக்குரிமை பெற்று (1848) ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே பெண்கள் வாக்குரிமையை (21 ஏப்ரல் 1944) பெற்றுக்கொண்டார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண் உரிமைகள் சரியாகப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
