Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அன்பழகன் மனு மீது வழக்கறிஞர்கள் காரசாரம்: மூன்று நீதிபதிகள் விசாரணை துவங்கியது

Posted:

புதுடில்லி: ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞராக, பவானி சிங் ஆஜரானதை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தொடர்ந்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில், மூன்று நீதிபதிகள் அமர்வு முன், நேற்று துவங்கியது. அன்பழகன் மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், காரசாரமாக வாதிட்டனர்; இன்றும் விசாரணை தொடர்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார். இவ்வழக்கில், ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டு சிறை ...

நேரு 77; இந்திரா 77; ராஜிவ் 35; ஐ.மு.,வில் 77: 'எங்கள் ஒரு சட்டத்துக்கு இவ்வளவு எதிர்ப்பா?'

Posted:

புதுடில்லி: ''நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசர சட்டத்தை, காங்கிரஸ் விமர்சிப்பது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல உள்ளது,'' என, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

அவசர சட்டங்கள்:
டில்லியில் நேற்று நடந்த பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி, 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அவர்களின் ஆட்சிக் காலத்தில், 456 அவசர சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அப்படிப்பட்ட நிலை யில், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, பா.ஜ., அவசர சட்டமாக அமல்படுத்தியதை, காங்கிரஸ் ...

பிரதமர் 'டோஸ்:' அமைச்சர் அழுதார்?

Posted:

சோனியா குறித்து அவதூறாக பேசியதற்காக, அமைச்சர் கிரிராஜ்சிங், ஏற்கனவே, லோக்சபாவில் வருத்தம் தெரிவித்துவிட்ட நிலை யில், அவரை நேரடியாக அழைத்து, பிரதமர் கண்டித்ததாக தெரிகிறது. இதன்மூலம், தேவையற்ற வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தும் சில அமைச்சர்கள், எம்.பி.,க்களுக்கு, மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீவிரம்:
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி துவங்கிய நிலையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்ற தீவிரத்தில், பா.ஜ., உள்ளது. இதுகுறித்து, ஆலோசனை நடத்த, நேற்று காலையில் பா.ஜ., ...

கனிமொழி பிரசாரம்: கருணாநிதி திட்டம் பலிக்கும்?

Posted:

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் பிரதானமாக இருக்கும் இரண்டு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து, அ.தி.மு.க.,வை ஆதரித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதிகளில் அ.தி.மு.க., தொடர் வெற்றி பெற்று வருகிறது. இதனால், வட மாவட்டங்களில் பிரதானமாக இருக்கும் வன்னிய இனத்தவரையும் டெல்டா மாவட்டங்களில் பிரதானமாக இருக்கும் முத்தரையர் இனத்தவரையும் தி.மு.க., பக்கம் திருப்புவதற்கு, கருணாநிதி திட்டமிடுகிறார். இதற்கு பின்புலமாக இருந்து, புள்ளி விவரங்களை கட்சியின் மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி திரட்டிக் கொடுப்பதால், அவரை, அப்பகுதிகளில் தீவிர ...

கே.வி., பள்ளியில் 'சீட்' வாங்கிய மன்மோகன் சிங்: அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் 6 பேருக்கு தலா 6 'சீட்'

Posted:

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா எனப்படும், கே.வி., பள்ளிகளில், 30 எம்.பி.,க்கள், தங்களுக்குரிய சிறப்பு கோட்டாவில், 'சீட்' வாங்கியுள்ளனர். இதில் தமிழகத்தில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆறு பேர் மட்டும், 'சீட்' வாங்கி உள்ளனர்.
மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன. தமிழகத்தில், 43 கே.வி., பள்ளிகள் உள்ளன.
குறைந்த கல்வி கட்டணம்:
இப்பள்ளிகள், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் செயல்படுகின்றன. மிகக்குறைந்த கல்வி கட்டணம் என்பதால், இப்பள்ளிகளில், 'சீட்' வாங்க, பலரும் போட்டி போடுவது ...

அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்: இன்று முதல் நாடு முழுவதும் அறிமுகம்

Posted:

புதுடில்லி: முன்பதிவு செய்யாமல், சாதாரண டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க, பேப்பர் இல்லாத டிக்கெட் முறை, இன்று முதல் அறிமுகமாகிறது.
சாதாரணமாக, ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ய, ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுன்டர்களில் வரிசையில் நின்று, டிக்கெட் பெற வேண்டும். இன்று முதல், டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்க தேவையில்லை. 'ஆண்ட்ராய்டு' தொழில்நுட்பம் கொண்ட, ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யப்படும், அப்ளிகேஷன்கள் எனப்படும் செயலிகள் மூலம், டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ரயிலில் பயணிக்கும் போது, அலைபேசியில் உள்ள டிக்கெட்டின், ...

விருதுகளில் இந்திரா ராஜிவ் பெயர்கள் நீக்கம்

Posted:

புதுடில்லி: ஆட்சி மொழியான இந்தியில், சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் விருதுகளில் உள்ள, முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் பெயர்களை நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும், செப்டம்பர் 14ம் தேதி, 'இந்தி தினம்' (இந்தி திவஸ்) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், ஆட்சிமொழியான இந்தியை, முற்போக்கான வழிமுறையில் பயன்படுத்துபவர்களுக்கு, கடந்த 1986 முதல், 'இந்திரா காந்தி ராஜ்பாஷா புரஸ்கார்' மற்றும் 'ராஜிவ்காந்தி ராஷ்ட்ரிய க்யான்-விக்யான் மவுலிக் புஸ்தக் லேகன் ...

வி.வி.ஐ.பி., வீடுகள் பாதுகாப்பு: ஓய்வின்றி தவிக்கும் போலீசார்

Posted:

வி.வி.ஐ.பி., வீடுகளில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஓய்வு நேரம் இல்லாமல், பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னையில், அமைச்சர்கள், நீதிபதிகள், மதத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட, 500 பேரின் வீடுகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், ஒரு ஏட்டு தலைமையில், ஆயுதப்படை காவலர்கள், மூன்று பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த, 30 ஆண்டுகளாக, இரவு, 10:00 மணியில் இருந்து, மறுநாள் காலை, 10:00 மணி வரை, ஓய்வு கிடைத்து வந்தது.
மன உளைச்சல்:
ஆனால், கடந்த, 20 நாட்களாக, வி.வி.ஐ.பி., ...

செம்மர கட்டை கடத்தலில் தமிழக 'மாஜி' மந்திரி: ஆந்திர மாநில போலீசார் அம்பலம்

Posted:

ஆந்திராவில் இருந்து, மேற்குவங்கம் வழியாக, மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, செம்மரக் கட்டைகள் கடத்திய விவகாரத்தில், தமிழக முன்னாள் அமைச்சர் ஒருவர் ஈடுபட்டு இருப்பது, அம்பலமாகி உள்ளது.
கடந்த 7ம் தேதி, ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப்பகுதி யில், செம்மரக் கட்டைகள் கடத்திய, தமிழகத்தைச் சேர்ந்த, 20 பேர், அம்மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, தப்பி ஓடியவர்கள் விட்டுச் சென்ற, மொபைல் போன்கள், சட்டைப் பையில் இருந்த கையடக்க டைரியை, போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அப்போது, சென்னை, ஆவடியைச் சேர்ந்த, சவுந்தர்ராஜன், சரவணன் உள்ளிட்டோர், பெரிய ...

பெருந்துறையில் கோக கோலா நிறுவன அனுமதி ரத்து: பணத்தை திருப்பி கேட்கும் குளிர்பான நிறுவனம்

Posted:

சென்னை: பொதுமக்களின் கடும் எதிர்ப்பால், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வளாகத்தில், கோக கோலா குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்த அனுமதியை, 'சிப்காட்' நிர்வாகம் ரத்து செய்து உள்ளது. இதை தொடர்ந்து, குளிர்பான ஆலை அமைக்க, அரசுக்கு செலுத்திய தொகையை, உடனடியாக திருப்பி தருமாறு, கோக கோலா நிறுவனம் கேட்டு உள்ளது.

எதிர்ப்பு:
பெருந்துறை, 'சிப்காட்' வளாகத்தில், கோக கோலா குளிர்பானம் தயாரிப்பு நிறுவனம் அமைக்க, 72 ஏக்கரை, 'சிப்காட்' நிர்வாகம் ஒதுக்கியது. புது திருப்பூர் பகுதி மேம்பாட்டு நிறுவனத்திடம், தினமும், 20 லட்சம் லிட்டர் தண்ணீரை, ...

அட்சய திருதியைக்கு 3,200 கிலோ தங்கம் விற்பனை: தமிழகம் முழுவதும் நகை கடைகளில் அலைமோதிய மக்கள்

Posted:

தமிழகம் முழுவதும், அட்சய திருதியையை முன்னிட்டு, நகைக் கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதியதால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 3,200 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. சித்திரை மாதம், வளர்பிறையில் வரும் திரிதியை நாள், அட்சய திரிதியை. இந்த நாளில், தங்கம் வாங்கினால், வீட்டில் உள்ள செல்வம், மேலும் பெருகும் என்ற நம்பிக் கை மக்களிடம் உள்ளது. இதனால், தமிழகம் உட்பட, நாடு முழுவதும், அட்சய திருதியை தினத்தன்று, பலர், தங்கம் வாங்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு:
கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தை விட, நேற்று, தங்கம் விலை, கிராமுக்கு, 274 ரூபாய்; சவரனுக்கு, 2,197 ...

நில எடுப்பு மசோதா: இன்று ஜந்தர் மந்தரில் கெஜ்ரிவால் தர்ணா

Posted:

புதுடில்லி:நில எடுப்பு மசோதாவிற்கு எதிராக விவசாயிகளை திரட்டி இன்று மெகா ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.நில எடுப்பு மசோதாவினை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றிட மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட உள்ளது.நேற்று முன்தினம் காங். துணை தலைவர் ராகுல் , நில எடுப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் பொதுக்கூட்டம் நடத்தினார். பின்னர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™