மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தலைமை நீதிபதிகள், முதல்–மந்திரிகள் மாநாடு: ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்
- புகழ் பெற்ற இந்திய மலையேற்ற வீரர் மாலி மஸ்தான் பாபு உடல் கண்டுபிடிப்பு: மலைகளின் காதலனுக்கு நேர்ந்த சோகம்
- தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த மகள் அடித்துக்கொலை: சகோதரர் வெறிச்செயல்
- காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல்: 3 பேர் பலி
- உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயல் தாக்குதலில் 14 பேர் பலி
- கேரளாவில் போலி பாஸ்போர்ட்டு தயாரித்தவர் கைது
- தெலுங்கானாவில் போலீஸ் என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக்கொலை - ஒரு போலீஸ் பலி
- இன்று சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் நடைமூடப்பட்டது - கட்டண சேவைகள் ரத்து
- பெங்களூருவில் மாணவியை சுட்டுக் கொன்றவருக்கு 10-ந்தேதி வரை போலீஸ் காவல்
- நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை விளக்கி பா.ஜனதா சார்பில் நாடு முழுவதும் பிரசார கூட்டங்கள்: அமித்ஷா பேச்சு
- 8-ந்தேதி மந்திரிசபை விரிவாக்கம்: மெகபூபா, அனில் தேசாய் மத்திய மந்திரி ஆகிறார்கள்
- பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வில் 2வது முறையாக பெயில் ஆன 3000 பேர்: பணி நீக்கம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
- பணியிட மாற்றம் செய்யப்பட்ட நேர்மையான அதிகாரி அசோக் கெம்கா அரியானா ஆளுநரை சந்தித்தார்
- பெற்ற மகளின் உயிரை காப்பாற்ற முதலையுடன் மோதிய குஜராத்தின் வீரத்தாய்
- ஏமன் நாட்டில் சிக்கி தவித்த மேலும் 664 பேர் விமானங்கள் மூலம் மீட்பு: பாதுகாப்பாக இந்தியா திரும்பினர்
- நவீன் பட்நாயக் மீது முட்டை வீசிய மாணவர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு
- மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: 4 பேரை கைது செய்தது கோவா போலீஸ்
- பன்றிக்காய்ச்சல் பலி 2,108 ஆக உயர்ந்தது - நாடு முழுவதும் 34,447 பேருக்கு நோய் தாக்கம்
- ஓடும் பஸ் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 3 பெண்கள் பலி
- கருப்பு பணத்தை மீட்க காங்கிரஸ் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை: மோடி குற்றச்சாட்டு
| தலைமை நீதிபதிகள், முதல்–மந்திரிகள் மாநாடு: ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம் Posted: 03 Apr 2015 10:57 PM PDT சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் கலந்து கொள்ளும் 3 நாள் மாநாடு நேற்று டெல்லியில் உள்ள சுப்ரீம்கோர்ட்டு கட்டிடத்தில் தொடங்கியது. மாநாட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து பங்கேற்று பேசினார். கோர்ட்டுகளில் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றியும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது உள்பட |
| Posted: 03 Apr 2015 10:44 PM PDT இந்தியாவின் புகழ் பெற்ற மலையேற்ற வீரர் மாலி மஸ்தான் பாபு உடல் அர்ஜெண்டினாவின் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மலையேற்ற வீரர் மாலி மஸ்தான் பாபு. கடந்த டிசம்பர் மாதம் 16-ம்தேதி அர்ஜென்டினா மற்றும் சிலி எல்லையில் அமைந்துள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் மலையேற்றம் |
| தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த மகள் அடித்துக்கொலை: சகோதரர் வெறிச்செயல் Posted: 03 Apr 2015 10:42 PM PDT ஜார்க்கண்ட் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மோக்தா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பிரகலாத். இவர் ஊர் பஞ்சாயத்து தலைவியாக இருந்து வந்தார். இவரது தாய் சுர்ஜூபாய். இவருக்கு கீதா தவிர சந்தோஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். அவர் திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் தனியாக சென்று விட்டார். இதனால் தாயை கீதா கவனித்து வந்தார். |
| காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல்: 3 பேர் பலி Posted: 03 Apr 2015 10:39 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் படைகள் அத்து மீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் எல்லைப் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அவற்றுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தனர். |
| உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயல் தாக்குதலில் 14 பேர் பலி Posted: 03 Apr 2015 10:33 PM PDT உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வீசிய புழுதி புயலில் 14 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தின் பல பகுதியில் நேற்று திடீரென புழுதிப் புயல் ஏற்பட்டது. இந்த புயல் பூமியில் கிடந்த மண், கல் போன்றவற்றை சுருட்டி |
| கேரளாவில் போலி பாஸ்போர்ட்டு தயாரித்தவர் கைது Posted: 03 Apr 2015 09:52 PM PDT கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் வினோத். இவர் வெளிநாடு செல்ல விசா எடுக்க திருவனந்தபுரத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தனது பாஸ்போர்ட்டை கொடுத்து விசா கேட்டார். அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த அதிகாரிகள் அது போலி பாஸ்போர்ட்டு என்பதை கண்டறிந்தனர். |
| தெலுங்கானாவில் போலீஸ் என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக்கொலை - ஒரு போலீஸ் பலி Posted: 03 Apr 2015 09:47 PM PDT தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் இரண்டு போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று |
| இன்று சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் நடைமூடப்பட்டது - கட்டண சேவைகள் ரத்து Posted: 03 Apr 2015 09:36 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று சந்திர கிரணகத்தால் வசந்த உற்சவம் அதிகாலை 5 மணிக்கே தொடங்கப்பட்டது. உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி, சத்தியபாமா, |
| பெங்களூருவில் மாணவியை சுட்டுக் கொன்றவருக்கு 10-ந்தேதி வரை போலீஸ் காவல் Posted: 03 Apr 2015 08:27 PM PDT துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் கவுதமி (வயது 18). இவர், பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி படித்து முடித்து விட்டு, விடுதியில் தங்கி இருந்து பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். |
| Posted: 03 Apr 2015 08:10 PM PDT தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா, நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது என்பதை விளக்கி பாரதீய ஜனதா சார்பில் நாடு முழுவதும் பிரசார கூட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. |
| 8-ந்தேதி மந்திரிசபை விரிவாக்கம்: மெகபூபா, அனில் தேசாய் மத்திய மந்திரி ஆகிறார்கள் Posted: 03 Apr 2015 07:46 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை 2014-ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றுக்கொண்டது. அதன்பின்னர் அதே ஆண்டில் நவம்பர் மாதம் முதல்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது கோவா முதல்-மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர், முன்னர் |
| Posted: 03 Apr 2015 04:56 PM PDT பீகார் மாநிலம் கல்வியில் மிகவும் பின் தங்கிய மாநிலம் என்பதை நிரூபிக்கும் வகையில் பெற்றோர்களே மாணவர்களுக்கு பிட் எடுத்துக்கொண்டு வந்து தந்ததை பார்த்தோம். தற்போது அம்மாநிலத்தில் ஆசிரியர்களின் அறிவுத்தகுதியும் வெளியாகியுள்ளது. |
| பணியிட மாற்றம் செய்யப்பட்ட நேர்மையான அதிகாரி அசோக் கெம்கா அரியானா ஆளுநரை சந்தித்தார் Posted: 03 Apr 2015 04:10 PM PDT அரியானா மாநிலத்தில் நிலம் அபகரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த அதிகாரியான அசோக் கெம்கா, கடந்த சில தினங்களுக்கு முன் 45வது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன் தான் போக்குவரத்து துறை ஆணையாளராக கெம்கா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இரு தினங்களுக்கு |
| பெற்ற மகளின் உயிரை காப்பாற்ற முதலையுடன் மோதிய குஜராத்தின் வீரத்தாய் Posted: 03 Apr 2015 03:10 PM PDT குஜராத் மாநிலத்தின் பட்ரா நகர் அருகே உள்ள திகரியமுபாரக் கிராமத்தில் வசிப்பவர் திவாலி. அவருக்கு காந்தா வாங்கர் என்ற மகள் உள்ளார். நேற்று காலை 9.30 மணியளவில் தங்கள் வீட்டிற்கு அருகே பாயும் விஷ்வமித்ரி ஆற்றில் காந்தா துணி துவைத்து கொண்டிருந்தார். அவருக்கு |
| ஏமன் நாட்டில் சிக்கி தவித்த மேலும் 664 பேர் விமானங்கள் மூலம் மீட்பு: பாதுகாப்பாக இந்தியா திரும்பினர் Posted: 03 Apr 2015 01:17 PM PDT ஏமனில் அரசுக்கு ஆதரவாக உள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கம் இடையே உச்சகட்ட போர் நிலவி வரும் நிலையில், அங்கிருந்து 664 இந்தியர்கள் ஏற்றிக்கொண்டு வந்த இரு விமானங்களும் வெற்றிகரமாக மும்பை மற்றும் கொச்சிக்கு வந்து |
| நவீன் பட்நாயக் மீது முட்டை வீசிய மாணவர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு Posted: 03 Apr 2015 12:58 PM PDT ஓடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி அம்மாநிலத்தில் நடைபற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் மீது முட்டை வீசப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த அம்மாநில போலீசார், நேற்று மாலை ஒடிசா காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவரான சத்யஜித் பட்நாயக் |
| மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: 4 பேரை கைது செய்தது கோவா போலீஸ் Posted: 03 Apr 2015 11:06 AM PDT கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி தந்த புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தின் காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடையில் ஸ்மிரிதி சில துணிகளை வாங்கினார். பின்னர் அந்த உடை |
| பன்றிக்காய்ச்சல் பலி 2,108 ஆக உயர்ந்தது - நாடு முழுவதும் 34,447 பேருக்கு நோய் தாக்கம் Posted: 03 Apr 2015 09:07 AM PDT காலனின் வடிவில் வந்து இந்திய மக்களை கொன்று குவித்துவரும் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,108 ஆக உயர்ந்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது. |
| ஓடும் பஸ் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 3 பெண்கள் பலி Posted: 03 Apr 2015 08:40 AM PDT மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஓடும் பஸ்சின் மீது உயிர்ப்புள்ள உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 3 பெண்கள் பலியாகினர். இங்குள்ள சாடோல் மாவட்டத்தின் சியோனி என்ற இடத்தில் இருந்து அனுப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு பஸ், உமரியா கிராமத்தை நெருங்கியபோது, அப்பகுதி வழியாக தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் கடத்தி செல்லும் உயரழுத்த மின்சார கம்பி திடீரென்று அந்த பஸ்சின் மீது அறுந்து விழுந்தது. |
| கருப்பு பணத்தை மீட்க காங்கிரஸ் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை: மோடி குற்றச்சாட்டு Posted: 03 Apr 2015 08:15 AM PDT மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டதாகவும், கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பெங்களூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:- நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு ஏமாற்றமான சூழல் நிலவியது. கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் மனதில் இந்த எண்ணம் இருந்தது. நம்பிக்கையுடன் நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்தீர்கள். நாங்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணங்களையும் நிறைவேற்றுவோம். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |