Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கேரளா,ஆந்திரா கர்நாடகத்தில் நல்ல மழை பொழிய அருள்புரி

Posted: 16 Apr 2015 03:14 PM PDT

- - - – மழை – கேரளா,ஆந்திரா கர்நாடகத்தில் நல்ல மழை பொழிய அருள்புரி இறைவா! வேண்டுகிறது தமிழகம் – விஷ்ணுகுமார்

மென்மையாகச் சிரித்தாள்…!

Posted: 16 Apr 2015 03:13 PM PDT


காதல் காட்சி நிறைந்த
பாடல் ஒன்றினைப்
பார்த்துக் கொண்டிருந்தாய்
நான் பார்ப்பதறிந்து
மாற்றிவிட்டாய்
–
பின் நாட்களில்
காதலரான பிறகு
இப்பாடல்
ஒளிபரப்பும் போதெல்லாம்
மென்மையாகச்
சிரித்துக் கொள்கிறோம்
நாம்
—

————————–
நலங்கிள்ளி
பெண்ணாகப் பிறப்பதே பெருமை-
கவிதை தொகுப்பிலிருந்து

பெண்ணாகப் பிறப்பதே பெருமை-

Posted: 16 Apr 2015 03:06 PM PDT


—

என் ஊரில்
அவள், இவளென
எந்தப் பெண்ணையாவது
சிலாகித்துப்
பேசுகிறார்கள்
–
ஒவ்வொரு
ஊரிலும் உள்ள
பெண்களைப்
பெருமையாய்ப்
பேசுவதற்கேனும்
பிறக்க வேண்டும் பெண்ணாக.
————————–

நலங்கிள்ளி
பெண்ணாகப் பிறப்பதே பெருமை-
கவிதை தொகுப்பிலிருந்து

அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய அலைமகள் துதி!

Posted: 16 Apr 2015 03:04 PM PDT

மகாலட்சியின் திருப்பார்வை ஒருமுறை நம்மீது பட்டாலே, வாழ்வு வளமாகும், நன்மைகள் நிலையாகும். அதே பலநூறு முறை படந்தால்? எவ்வளவு நன்மை கிடைக்கும்? - அப்படித் திருமகளின் கடாட்சம் பலமடங்கு கிடைக்க வேண்டுமானால், அதற்கு சலபமான வழி, அட்சய திருதியை தினத்தில் அவளை வணங்குவது தான் என்கின்றன புராணங்கள். - பொன் மகளுக்கு உரிய அந்தப் புனித தினத்தில் போற்றித் துதித்து வணங்கிட ஓர் எளிய பாடல் இதோ இங்கே தரப்பட்டிருக்கிறது. - துதியைச் சொல்லுங்கள், சுபலட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் எல்லா ...

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Posted: 16 Apr 2015 03:03 PM PDT

 வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் ;அட்டையையும் இணைக்கும் பணி தற்போது நடந்துவருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைத்துள்ளார்கள். இதுதவிர ஒவ்வொரு வீடாக சென்றும் ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டை எண்ணையும் இணைத்துவருகின்றார்கள். இணையத்திலும் நாம் சுலபமாக இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் அவர்கள்இணையதளமான http://velang.blogspot.com/2015/04/blog-post_15.html என்கின்ற இணையதளத்தினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அவ்வாறு வரும் விண்டோவில் கீழ்கண்ட ...

அக்ஷய திருதியை !

Posted: 16 Apr 2015 02:57 PM PDT

அக்ஷய திருதியை கொண்டாடுவது எப்படி என்பதை இங்கு காண்போம். சில வருடங்களாக தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லி சொல்லி தங்கம் விற்பனையை பெருக்கி விட்டனர். இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறபென்று ஒரு ஐதிகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று கூறுவது பேதமை. (மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளை நிற உலோகம் வாங்கினால் நல்லது என்று சொல்லி பிளாட்டினம் வாங்க சொல்லுகிறார்கள். ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளி வாங்கினால் ...

தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?

Posted: 16 Apr 2015 11:58 AM PDT

தாலியும் தமிழரும்! - "செந்தமிழ் வேள்விச் சதுரர்" திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை 'மக்கள் மேடை' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு எறிந்து அது வெடித்தது என்றும், நல்ல வேளையாக எந்த நபரும் ...

வரலாற்றில் இன்று - ஏப்ரல்

Posted: 16 Apr 2015 11:08 AM PDT

பயன் தரும் இனிய சொற்களைப் பேசுங்கள்.

Posted: 16 Apr 2015 10:24 AM PDT

* அளவாக உண்ணுங்கள். பயன் தரும் இனிய சொற்களைப் பேசுங்கள். – * மனக்கட்டுப்பாடும், நல்ல ஒழுக்கமும் சொர்க்கத்துக்கு நிகரான வாழ்வு தரும். * யாரையும் வெறுப்பது கூடாது. பிடிக்கா விட்டால் பழகாமல் இருப்பது நல்லது. * உலகிலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று அன்றாட வழிபாட்டில் வேண்டுங்கள். * பயப்படுவதும், பிறரைப் பயமுறுத்துவதும் மிருகப்பண்பு. அன்புடன் அனைவரையும் ஆதரியுங்கள். * மனிதப்பிறவி மீண்டும் கிடைக்காமல் போகலாம். அதனால் வாழ்வைப் பயனுள்ளதாக்குங்கள். – -சாய்பாபா

ஒரு பிடி மண்..!! -Mano Red

Posted: 16 Apr 2015 10:24 AM PDT

விவசாயம் இது தொழில் மட்டுமல்ல, உலகின் உயிர்..!! நம் விவசாய வரலாறு வெறும் புராணமோ பொய் புரட்டோ இல்லை, அதையெல்லாம் கடந்ததென நமக்குத்தான் புரியவில்லை ..!! விவசாயத்தில் முன்னோர் கொடுத்த கொடையின் நீட்சியையே இன்று நாம் அனுபவிக்கிறோம், ஆனாலும் இதை அடுத்த தலைமுறைக்கு அனுப்ப மறுக்கிறோம்..!! தற்போதைய விவசாயி தன் பிள்ளைக்கு விவசாயம் வேண்டாமென மறுத்துக் கைவிடும் போது, அவன் மட்டும் போகவில்லை, ஆயிரமாண்டு விவசாய நீட்சியும் அத்தோடு அறுபட்டு போகிறது..!! மெய்ஞ்ஞானம் கொண்டவர்கள் விவசாயத்தின் விஞ்ஞானக் ...

" நீ "

Posted: 16 Apr 2015 10:21 AM PDT

ஒத்துக்கொள்கிறேன்
நான் இன்னும் முழுதாய்
உன்னை மறக்கவில்லை என....

என் இப்போதைய கவிதைகளிலும்
எங்கேனும் ஒழிந்து கொண்டு
எட்டிப்பார்க்கிறாய்
" நீ "

ராஜ ராஜேஸ்வரி-- நியூயார்க் நீதிமன்ற நீதிபதி

Posted: 16 Apr 2015 08:29 AM PDT

திருமதி ராஜ ராஜேஸ்வரி --- நியூயார்க் நீதிமன்ற நீதிபதி   வாஷிங்டன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி என்பவர் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். சென்னையில் பிறந்து தனது 16வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவர் ராஜ ராஜேஸ்வரி. தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி, கடந்த 16 வருடங்களாக ரிச்மாண்ட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜ ராஜேஸ்வரியை ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(366)

Posted: 16 Apr 2015 08:13 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கோடைக்கு முன் பரவும் அம்மை!

Posted: 16 Apr 2015 07:43 AM PDT

கோடைக்கு முன் பரவும் அம்மை: பாதுகாப்பு வழிகள் ! குளிர்காலம் முடிந்து கோடை தொடங்கப் போகிறது. பொதுவாகவே தட்பவெப்பநிலை மாறும்போது வைரஸ்கள் வேகமாக வேலையைக் காட்டத் தொடங்கும். சளி, காய்ச்சல் தொடங்கி அம்மைவரை பல நோய்கள் தாக்கும். குறிப்பாக அம்மை நோயின் தாக்கம், இந்தப் பருவத்தில் அதிகமாக இருக்கும். தெய்வ நம்பிக்கையுடன் இணைத்துப் பார்க்கப்படும் அம்மை நோயிடம் இருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது? அது வராமல் தடுக்க வழி இருக்கிறதா? வெப்பம் தாங்கும் வைரஸ் பொதுவாகவே வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ், ...

நேபாளிப் பெண்ணாக நடிக்கிறார் சமந்தா…

Posted: 16 Apr 2015 04:45 AM PDT


-

-–
பிசாசு ஹீரோயின் பிரயோகா, இப்போது
ஆர்.கண்ணன் டைரக்ஷனில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தின் ஒரு பகுதியை
கனடாவில் ஷூட் செய்ய உள்ளனர்.
–
————————————-

பதியம் போட வந்த காதலி! –

Posted: 16 Apr 2015 04:40 AM PDT

- – விழி உன் வழி நோக்க – சுடர்முகம் புன்னகை வீசி – மல்லிகை சூடி மணம் கமழ – வளையல் ஒலி இசையோடு – நெற்றியில் குட்டி நிலவைப் பொட்டாக ஒட்டி – பாவப்பட்டுக் கிடந்த பருவத்திற்குப் பதியம் போட்ட வந்தவளே என் காதலி! – —————————- நலங்கிள்ளி பெண்ணாகப் பிறப்பதே பெருமை- கவிதை தொகுப்பிலிருந்து

எனக்குப் பொருத்தமானவள் நீதான்

Posted: 16 Apr 2015 04:39 AM PDT

- விடியற்காலையில் எழுந்து விட்டால் வா வாக்கிங் போகலாம் என அடம் பிடிப்பேன் – சோம்பல் முறித்து அலுத்துக் கொண்டு திட்டியவாறு வந்து சாலையோர மைல்கல்லில் அமர்ந்து குட்டித் தூக்கம் நீ போடும்போது அவ்வழியே சென்ற பேருந்தின் ஹாரன் சப்தத்திற்குப் பயந்து என்னை கட்டிப்பிடித்துக் கொள்வாய் – அக்கணத்தில் நீதான் எனக்குப் பொருத்தமானவள் என்று தோன்றும் – ——————— நலங்கிள்ளி பெண்ணாகப் பிறப்பதே பெருமை- கவிதை தொகுப்பிலிருந்து

அழிக்க முடியாத நினைவுகள்…

Posted: 16 Apr 2015 04:39 AM PDT


-

ஒவ்வொரு வருடமும்
படித்துக் கிழித்த
பழைய புத்தக நோட்டுகளை
எடைக்குப் போடுவது
வழக்கம்
–
இந்த வருடமும்
அவ்வாறே…
–
எந்த வருடமும்
அழிக்க முடிவதில்லை
மனதில் நின்றிருக்கும்
உன்னை..!

–
—————-
நலங்கிள்ளி
பெண்ணாகப் பிறப்பதே பெருமை-
கவிதை தொகுப்பிலிருந்து

சினிமினி செய்திகள்

Posted: 16 Apr 2015 04:31 AM PDT

- - - மிஷ்கின், சரத்குமார் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்டை முடித்து விட்டார். அடுத்து அவரின் அசோசியேட் ஆதித்யா ஒரு படத்தை டைரக்ட் செய்ய, மிஷ்கினே அதற்குக் கதையும் எழுதுகிறார். – இயக்குநர் ராம் மறுபடியும் அதில் நடிக்கிறார். ப்ரியாமணி ரீ-என்ட்ரியும் அதில் நடக்கிறது. மிஷ்கின்தான் வில்லன். ஒருத் தருக்கு இத்தனை பரிமாணமா! – ———————————– –

இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம்

Posted: 16 Apr 2015 04:28 AM PDT

- இந்தியாவுக்கு கனடா 3,000 டன் யுரேனியத்தை வழங்குவதற்கான ஒப்பந்தம் அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் புதன்கிழமை கையெழுத்தானது. தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதிக் கட்டமாக, கனடா நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சென்றடைந்தார். இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். கனடா தலைநகர் ஒட்டாவாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரை ...

விழுப்புரம் மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் சாவு

Posted: 16 Apr 2015 04:22 AM PDT

- விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 7 குழந்தைகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தன. சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் அடுத்தடுத்து புதன்கிழமை உயிரிழந்தன - எடை குறைவே காரணம் - டீன் - இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உஷா சதாசிவத்திடம் கேட்டபோது, குழந்தைகள் எடை குறைவாக பிறந்திருந்தன. அந்தக் ...

இந்தியச் சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 16 Apr 2015 03:47 AM PDT

நியூயார்க் - நிதி மோசடி, கருப்புப் பண முறைகேடு உள்ளிட்ட குற்றங்களுக்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாமியார் அண்ணாமலைக்கு, அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்ட நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. "ஒரு மதத்தின் புனிதமான நிலையத்தை தனது சொந்த லாபங்களுக்காக அண்ணாமலை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்' என்று அமெரிக்க அரசு வழக்குரைஞர் ஜான் ஏ ஹார்ன் தெரிவித்தார். யார் இந்த அண்ணாமலை?: "சுவாமிஜி ஸ்ரீ செல்வம் சித்தர்' என்று அழைக்கப்படும் அண்ணாமலைக்கு வயது 49. இவர் அமெரிக்காவின் ...

ஏப்ரல் 16 மிரட்ட வருகிறது காஞ்சனா பேய்

Posted: 16 Apr 2015 03:14 AM PDT

தமிழிலும், தெலுங்கிலும் லாரன்சின் பெயரை அழுத்தமாக பதிய வைத்த படம், காஞ்சனா. – இன்று தமிழ் சினிமாவை பிடித்தாட்டும் காமெடி பேய் கலாச்சாரத்துக்கு வித்திட்டது காஞ்சனா படம்தான். – அதன் இரண்டாம் பாகம்தான் தற்போது தயாராகியிருக்கிறது. – தாப்ஸி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஏப்ரல் 16 படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாவதாக அறிவித்துள்ளனர். – நித்யா மேனன் இந்தப் படத்தில் சின்ன, ஆனால் திருப்புமுனை வேடம் ஒன்றை ...

மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Posted: 16 Apr 2015 02:34 AM PDT

மனிதர்களின் உயிரியல் பெயர் ஹேமோ சேப்பியன்ஸ் (Homo sapiens). பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வினின் கொள்கை. அவ்வாறாக 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்போதைய மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் உருவானது என்கிறது பரிணாம விதி எனப்படும் evolution theory. ஆனால், அப்போது ஹேமோ சேப்பியன்ஸ் மட்டுமல்ல, மேலும் ஒரு மனித இனமும் இருந்தது என்பதை இப்போது கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். கென்யா நாட்டின் துர்கானா ஏரியின் படுகையில் ...

மூத்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 ஓய்வூதியம்

Posted: 16 Apr 2015 02:13 AM PDT

பாட்னா - நாட்டில் உள்ள வயது மூத்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார். பாட்னாவில் நடைபெற்ற பாஜக பேரணி நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட ...

55 நாட்கள் லீவ் முடிந்தது.. நாடு திரும்பினார் காந்தி

Posted: 16 Apr 2015 02:03 AM PDT

டெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த 55 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று டெல்லி திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் நாடு திரும்பியுள்ளதை அடுத்து அவரது தாயார் சோனியாகாந்தியும், சகோதரி பிரியங்கா காந்தியும் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். - லோக்சபா மற்றும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பின் கடந்த பிப்ரவரி 20ம் தேதி முதல் ராகுல்காந்தி ஓய்வில் இருந்து வந்தார் ராகுல் காந்தி. அவர் திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்-தியது. ராகுல்காந்தி எங்கு இருக்கிறார்? எப்படி ...

எக்காலத்திற்குமான கலைஞன் !

Posted: 16 Apr 2015 01:56 AM PDT

இந்த கலைஞனைப் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உலகெங்கும் இன்றும் எழுதப்படுகின்றன. தொடர்ந்து அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன ,புத்தகங்கள் எழுதப்படுகின்றன .திரைப்படம் எடுக்க கற்றுத்தரும் அனைத்து இடங்களிலும் இந்த கலைஞனின் படைப்புகள் விவாதிக்கப்படுகின்றன .எங்கெல்லாம் திரைப்படம் எடுக்கப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த கலைஞனைக் கொண்டாடுகிறார்கள்.பெரியாரையும் ,பாரதியையும் பெற்றதற்கு தமிழ்நாடு பெருமைப்படலாம், காந்தியையும் , அம்பேத்கரையும் பெற்றதற்காக இந்தியா பெருமைப்படலாம். ...

தீரா காதல் !

Posted: 15 Apr 2015 11:23 PM PDT

தீரா காதலில்
திளைக்கிறது
மனம்
யார் மீதோ!?

கவிதை

Posted: 15 Apr 2015 11:23 PM PDT

அழகு வார்த்தை கோர்த்து
வார்த்தை அழகு சேர்த்து
சொற்சுவை பொருட்சுவை கூட்டி
சொல்லாத சொல் சொல்லி
அள்ளாத பொருள் அள்ளி
அவைமுன்னே சுவையோடு சமைத் தேன்தமிழை ! - கவிதை!!!

நாட்டு நடப்பு - -

Posted: 15 Apr 2015 11:08 PM PDT


பிரதமர் நரேந்திர மோடி பெயரில் ஒரு மாம்பழ
ரகத்தை உருவாக்கியுள்ளார், உத்தரப் பிரதேசத்தின்
மலிகாபாத் பகுதியைச் சேர்ந்த ஹாலி கலிமுல்லா.
-
இவர் இதுவரை இப்படி 300 ரகங்களை அறிமுகம்
செய்தவர். கொல்கத்தா மற்றும் லக்னோவில்
பிரபலமான இரண்டு ரகங்களை இணைத்து மோடி
மாம்பழத்தை உருவாக்கினார் கலிமுல்லா.
–

————————————


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™