Tamil News | Online Tamil News |
- தனியார் துறை - பொது துறை பங்களிப்பு: நவீனமயமாகும் 100 ரயில் நிலையங்கள்
- ஒரு வழியாக நாடு திரும்பினார் ராகுல்
- நிலக்கரி கையிருப்பால் கோடையில் மின் வெட்டு இருக்காது: பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாராட்டு
- குழப்பம் ஏற்படுத்தியவர்கள் போய்விட்டனர்: கனடாவில், மோடி அரசியல் 'பஞ்ச்!'
- ஜெயலலிதாவுக்கு ஜாமின் நீடிப்பு கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
- தலையாட்டி பொம்மை கூட தலையாட்டும்; பன்னீரிடம் அதுவும் இல்லை: ஸ்டாலின்
- அதிகாரி மரணத்திற்கு காரணமானவர்கள் யார்? 'அக்ரி' தெரியப்படுத்த கருணாநிதி யோசனை
- கோவை சிறையில் அரை நிர்வாண சித்ரவதை: 'வாட்ஸ் அப்'பில் வீடியோ அனுப்பிய கைதிகள்
- 2 ஆண்டுகளில் தமிழகம் மின்மிகை மாநிலம்: மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல் நம்பிக்கை
| தனியார் துறை - பொது துறை பங்களிப்பு: நவீனமயமாகும் 100 ரயில் நிலையங்கள் Posted: புதுடில்லி: நாடு முழுவதும், 100 ரயில் நிலையங்களை, தனியார் துறை - பொதுத் துறை பங்களிப்பின் மூலம் மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டங்கள், மின்னணு ஏல முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியைச் சந்திப்பதால், 100 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம், தனியார் துறை மற்றும் பொதுத் துறை பங்களிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேநேரத்தில், திட்டங்களை மேற்கொள்ளும் போது, துறை ரீதியான பல பிரச்னைகளை, தனியார் நிறுவனங்கள் எதிர்கொள்ள ... |
| ஒரு வழியாக நாடு திரும்பினார் ராகுல் Posted: புதுடில்லி: தொடர்ந்து, 57 நாட்களாக வெளிநாட்டில் ஓய்வில் இருந்த, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், 44, நேற்று நாடு திரும்பினார்.பார்லிமென்டின் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை. அவர் இரண்டு வார காலம் ஓய்வில் இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியை புனரமைப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், 50 நாட்களுக்கும் மேலாக, ராகுல் ஓய்வில் இருந்ததால், அவர் எங்கே போனார், எப்போது திரும்புவார் என்ற பரபரப்பு உருவானது. இந்நிலையில், தன், 57 நாள் ஓய்வை முடித்து, நேற்று காலை, 11:15 ... |
| Posted: புதுடில்லி: 'நிலக்கரி சுரங்கங்களில் இருந்து, நிலக்கரி அதிகளவில் வெட்டி எடுக்க, இந்திய நிலக்கரி நிறுவனமான, சி.ஐ.எல்., மேற்கொண்ட நடவடிக்கையால், இந்த கோடையில் அதிக அளவில் மின் வெட்டு இருக்காது; இது, பிரதமர் மோடி அரசின் சாதனை' என, அமெரிக்காவின், 'ராய்ட்டர்' செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.உலகம் முழுவதும் வியாபித்திருக்கும், அந்த பிரபல செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி: மத்தியில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, மின் பற்றாக்குறையை போக்கி, தடையில்லா மின்சாரம் வழங்குவேன் என, உறுதியளித்த மோடி, பிரதமரானதும் அதற்கான முயற்சியில் ... |
| குழப்பம் ஏற்படுத்தியவர்கள் போய்விட்டனர்: கனடாவில், மோடி அரசியல் 'பஞ்ச்!' Posted: டொரண்டோ: ''குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள் போய்விட்டனர்; அவர்கள் செய்த குழப்பங்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அதை சரி செய்ய, சற்று காலம் பிடிக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். டொரண்டோ நகரில், ஆயிரக்கணக்கான இந்தியர்களுடன், அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் அவர் மனைவியும் கலந்து கொண்ட கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்த, 10 மாதங்களில், மக்களின் மனநிலையும் மாறியுள்ளது; மக்களுக்கு நம்பிக்கை ... |
| ஜெயலலிதாவுக்கு ஜாமின் நீடிப்பு கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Posted: சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரின் ஜாமின் மனுக்கள், தலைமை நீதிபதி, 'பெஞ்ச்' முன், இன்று விசாரணைக்கு வருகின்றன. இவர்களுக்கு, ஜாமின் நீடிப்பு கிடைக்குமா என்பது இன்று தெரியும்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, பெங்களூரு தனி நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நான்கு ... |
| தலையாட்டி பொம்மை கூட தலையாட்டும்; பன்னீரிடம் அதுவும் இல்லை: ஸ்டாலின் Posted: சென்னை: 'தலையாட்டி பொம்மை கூட தலையை ஆட்டும்; முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அதுவும் இல்லை' என, சென்னையில் நடந்த, கட்சியின் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர் மா.சுப்ரமணியன் தலைமையில், கொட்டிவாக்கத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. பல கட்சிகளைச் சேர்ந்த, 5,000 பேர் தி.மு.க.,வில் ஸ்டாலின் முன்னிலையில் சேர்ந்தனர். அப்போது அவர் பேசியதாவது: இன்று தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல; காட்சி. முதல்வர் எப்படி இருக்கிறார் என்பது, எல்லோருக்கும் ... |
| அதிகாரி மரணத்திற்கு காரணமானவர்கள் யார்? 'அக்ரி' தெரியப்படுத்த கருணாநிதி யோசனை Posted: சென்னை: 'அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் வாக்குமூலம் கொடுத்தால், முத்துக்குமாரசாமியின் மரணத்திற்கு உண்மையான காரணமானவர்கள், உலகத்திற்கு தெரிய வரும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அதிகார வேட்டை: அவரது அறிக்கை: அ.தி.மு.க., அமைச்சரவையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போல, இன்னும் அவரை விட கூடுதலாக, அதிகார வேட்கையோடு நடந்து கொள்ளும் அமைச்சர்கள் பலர் உண்டு. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என்றும் பாராமல், அரசு அதிகாரிகள் என்றும் மதிக்காமல், நேர்மையான மனிதர்களை நித்தமும், இவர்கள் துன்புறுத்திக் கொண்டு தான் ... |
| கோவை சிறையில் அரை நிர்வாண சித்ரவதை: 'வாட்ஸ் அப்'பில் வீடியோ அனுப்பிய கைதிகள் Posted: கோவை: கோவை மத்திய சிறையில், அரை நிர்வாண நிலையில், கைதிகள் சித்ரவதை செய்யப்படும் வீடியோ காட்சிகள், 'வாட்ஸ் அப்'பில் வெளியாகி, அதிகாரிகள் மத்தி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனிமை சிறை: கோவை சிறையில், குண்டுவெடிப்பு கைதிகள், கொலை, கொள்ளை மற்றும் தடுப்புக்காவல் கைதிகள், விசாரணைக் கைதிகள் உட்பட, 2,000 பேர் உள்ளனர். கைதிகளில், தகராறு செய்வோரை தனியாக பிரித்து, பிரத்யேக 'செல்'களில் அடைத்து, கண்காணிப்பது வழக்கம். இவ்வாறான, தனிமைச் சிறையில், மூன்று கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும், 'வீடியோ' காட்சிகள், நேற்று வாட்ஸ் அப்பில் வெளியாகி, ... |
| 2 ஆண்டுகளில் தமிழகம் மின்மிகை மாநிலம்: மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல் நம்பிக்கை Posted: சென்னை: ''தமிழகம் இன்னும், இரண்டு ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாகத் திகழும்,'' என, மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல், நேற்று காலை, டில்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும், அதிக அக்கறை எடுத்து வருகிறார். மே மாதம், கடைசி வாரத்தில், ஐந்து துறைகளின் மத்திய அமைச்சர்கள், தமிழகம் வர உள்ளனர். அவர்கள், மீனவர், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை கண்டறிய, ஆலோசனைக் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 17,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |