Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வன்முறையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
- டி.ஆலங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
- "ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கை விரைவில் வகுக்கப்படும்'
- ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
- கர்நாடகத்தில் கட்டாய கன்னட பயிற்று மொழிக்கு எதிர்ப்பு
- பெண் பாலியல் பலாத்கார வழக்கு: 2 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
- "அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்கள்'
- கங்கை நதி தூய்மைப் பணி: தொழில்நுட்ப உதவிக்கு ஆஸ்திரேலியா உறுதி
- ரூ.50.82 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள்
- ஜார்க்கண்ட்: உணவுப் பாதுகாப்பு சட்டம் ஜூலை 1-இல் அமல்
- புவனேசுவரம்: 67வது நிறுவன நாள் விழா
- கோயிலில் பாலாலயம் நடத்த தடைகோரி மனு
- கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி மர்மச் சாவு: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்
- தமிழக மின் கட்டண உயர்வுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்
- பாதுகாப்பு அச்சுறுத்துதல்களை சமாளிக்க உயர்நிலைக் குழு
- மூங்கில்ஊருணி அரசு பள்ளிக்கு தேர்வு செய்த இடத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட கோரிக்கை
- செம்மரக் கடத்தல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கைது
- ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழை
- மனைவிக்கு வரதட்சிணை கொடுமை: கணவர் மீது போலீஸார் வழக்கு
- பாலிஸித் தொகை கிடைக்காத பெண்ணுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
- "ஹர்பஜன் பாராட்டுக்குரியவர்; நாங்கள் தகுதியுடையவர்கள்'
- செங்கமலநாச்சியார்புரம் - கண்ணகி காலனிக்கு ரூ.70 லட்சத்தில் இணைப்புச் சாலை
- திருத்தங்கலில் கடைக்கு தீவைப்பு
- கிணற்றில் சிறுவன் சடலம் மீட்பு
- விருதுநகரில் அணுகுசாலை அமைத்த பின் மேம்பாலம் கட்டக் கோரிக்கை
- கல் உடைக்க அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகத்தை மகளிர் குழுவினர் முற்றுகை
- காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு
- அச்சுத்தொழிலாளி உறவினர்கள் மறியல்
- மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- பட்டாசு ஆலை பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போலீஸார் மீது புகார்
- விருதுநகர்: 12,652 குடும்பத்தினருக்கு விலையில்லா ஆடுகள்
- அரசு பேருந்து மோதி போலீஸ்காரர் சாவு
- மல்லாங்கிணறு அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்
- வரலொட்டியில் பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்
- போல்ட் மிரட்டல்: பெங்களூரு 166 ரன்னில் சுருண்டது
- மதுபானக் கடையை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை மகளிர் குழுவினர் முற்றுகை
- வைரம் பதித்த வேலுக்கு பூஜை
- மாற்று கோல்கீப்பர்கள் அனுபவம் இல்லாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும்: ஸ்ரீஜேஷ்
- ஆந்திர முதல்வரின் மனைவிக்கு சொந்தமான ஆலை முற்றுகை
- முதலிடம் பிடித்தது கனவு போல உள்ளது: சானியா மிர்ஸா
- தேனியில் ஏப்ரல் 15 மின் தடை
- கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் தொடர் மழை
- புதுப்பட சி.டி.க்கள் வைத்திருந்தவர் கைது
- மணல் கடத்தல்: டிராக்டர்கள் பறிமுதல்
- தானிய உலர் களங்களாகும் சாலைகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ஆசிரியைகளுக்கான உடை அமைப்பு: சீர்படுத்த கோரிக்கை
- குச்சனூர் கோயில் முன் பாஜகவினர் முற்றுகை
- புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
- ஜாகீர் கான், முகமது ஷமி உடற்தகுதியுடன் இல்லை
- தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: கோடை வெப்பம் தணிந்தது
- காப்பீட்டுக் கட்டண உயர்வை கண்டித்து கம்பத்தில் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம்
- ஒட்டன்சத்திரத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
- ராஜஸ்தான் - மும்பை இன்று மோதல்
- போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கக் கோரி தீர்மானம்
- லட்சம் பழங்களைக் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
- பழனி மலைக்கோயிலில் பங்குனி உத்திரம் உற்சவ சாந்தி விழா
- சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பாதிப்பை சமாளிக்க முன்னேற்பாடு
- கார் மோதி விபத்து: இளைஞர் சாவு
- இந்தியாவை வழிநடத்த தன்னலமற்ற இளைய சமுதாயம் தேவை
- கூட்டுறவு சங்க இரவு காவலர் கைது
- வாகரை பகுதிகளில் ஏப்ரல் 15 மின்தடை
- வீரப்பஅய்யனார் கோயில் சித்திரை திருவிழா: மலைக் கோயிலுக்கு சுவாமி புறப்பாடு
- ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா நாளை தொடக்கம்
- விஷ் யூ வெரி ஹேப்பி டமில் நியூ இயர் !
- சோம வாரத்தையொட்டி சோளீஸ்வரர் கோயிலில் குவியும் பக்தர்கள்
- பாதுகாப்பற்ற நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்கூடம்
- பலத்த மழையில் குளிர்ந்தது வேலூர்
- சமயபுரத்தில் இன்று சித்திரை தேரோட்டம்: போக்குவரத்து வழித்தடம் மாற்றம்
- முசிறியில் ஏப். 18-ல் வேலைவாய்ப்பு முகாம்
- தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து
- போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து மலேசியா சென்று வந்தவர் கைது
- மக்கள் குறைகேட்பில் மாவட்ட ஆட்சியரிடம் 477 மனுக்கள்
- திருச்சி மாவட்டத்தில் ஏப். 17-ல் அம்மா திட்ட முகாம்
- புத்துயிர் பெறும் ராணிப்பேட்டை சிப்காட்
- ஊதியம் தாமதம்; தவிக்கும் ஊழியர்கள்
- பலத்த மழையில் குளிர்ந்தது வேலூர்
- குடிநீர் கோரி பேருந்து சிறைபிடிப்பு
- குறைதீர்க் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை
- ஆந்திர அரசைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள்
- மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சுகாதாரப் பணியாளர்கள்
- ராபின்சன் குளத்தின் சீரமைப்புப் பணி: அதிகாரி ஆய்வு
- செவிலியர்களைக் கணக்கெடுக்கத் திட்டம்
- ஆம்பூரில் பத்திரப் பதிவுஅலுவலகத்தை உடனடியாகத் திறக்க வலியுறுத்தல்
- தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நீர்
- ஒரு டன் செம்மரங்கள் பறிமுதல்
- சாலை விபத்தில் முதியவர் சாவு
- மகன் சாவு: தொலைக்காட்சியில் கண்டு கதறி அழுத தந்தை
- குடியாத்தத்தில் இன்று சதுரங்கப் போட்டி
- இணையதள சேவையில் தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை: மு.க.ஸ்டாலின் கண்டனம்
- திருச்செந்தூர்
- நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
- இலவசத் தையல் இயந்திரங்கள் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
- நாகர்கோவில்
- ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி
- "பன்றிக் காய்ச்சல் பீதி தேவையில்லை'
- ஆரணியில் அதிகபட்ச மழை
- மொழி மாற்றுத் தொடர்களால் பாதிப்பு: சின்னத்திரை கலைஞர்கள் நாளை வேலைநிறுத்தம்
- ஏப்ரல் 15 மின் தடை
- கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை
- 17-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
| வன்முறையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது Posted: 13 Apr 2015 01:31 PM PDT வன்முறையில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| டி.ஆலங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை Posted: 13 Apr 2015 01:30 PM PDT கடலாடி அருகேயுள்ள டி.ஆலங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு அக்கிராம பொதுமக்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர். |
| "ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கை விரைவில் வகுக்கப்படும்' Posted: 13 Apr 2015 01:30 PM PDT அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கருத்தில்கொண்டு, ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கை விரைவில் வகுக்கப்படும் என்று மத்திய கொள்கைக் |
| ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் Posted: 13 Apr 2015 01:29 PM PDT ராமேசுவரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| கர்நாடகத்தில் கட்டாய கன்னட பயிற்று மொழிக்கு எதிர்ப்பு Posted: 13 Apr 2015 01:29 PM PDT கர்நாடகத்தில் கட்டாய கன்னட பயிற்று மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் தனியார் ஆங்கிலப் பயிற்று |
| பெண் பாலியல் பலாத்கார வழக்கு: 2 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு Posted: 13 Apr 2015 01:28 PM PDT காரைக்குடி அருகே பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து காரைக்குடி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| "அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்கள்' Posted: 13 Apr 2015 01:27 PM PDT பெண்களுக்கான பாதுகாப்பை அதிகப் படுத்துவதற்கு, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைப்பதை விட, அனைத்து காவல் நிலையங்களிலும் |
| கங்கை நதி தூய்மைப் பணி: தொழில்நுட்ப உதவிக்கு ஆஸ்திரேலியா உறுதி Posted: 13 Apr 2015 01:26 PM PDT இந்தியாவில், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவைப்படும் அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும் என்று |
| ரூ.50.82 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள் Posted: 13 Apr 2015 01:26 PM PDT சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஆரம்பக் கட்ட பணிகளை முடிப்பதற்காக 140 ஊராட்சிகளுக்கு ரூ.41.06 லட்சம், இலக்கு மக்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.6.4 லட்சம், நலிவுற்ற 50 நபர்களுக்கு தொழிற்கடனாக ரூ.3.36 லட்சம் என மொத்தம் ரூ.50.82 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வழங்கினார். |
| ஜார்க்கண்ட்: உணவுப் பாதுகாப்பு சட்டம் ஜூலை 1-இல் அமல் Posted: 13 Apr 2015 01:25 PM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஜுலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலாக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. |
| புவனேசுவரம்: 67வது நிறுவன நாள் விழா Posted: 13 Apr 2015 01:25 PM PDT ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தின் 67-வது நிறுவன நாள் திங்கள்கிழமை கொண்டாட்டப்பட்டது. |
| கோயிலில் பாலாலயம் நடத்த தடைகோரி மனு Posted: 13 Apr 2015 01:24 PM PDT ராமேசுவரம் கோயிலில் பாலாலயம் நடத்த தடை கோரும் மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி மர்மச் சாவு: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல் Posted: 13 Apr 2015 01:24 PM PDT கர்நாடக மாநில ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. |
| தமிழக மின் கட்டண உயர்வுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் Posted: 13 Apr 2015 01:24 PM PDT தமிழக மின் கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் |
| பாதுகாப்பு அச்சுறுத்துதல்களை சமாளிக்க உயர்நிலைக் குழு Posted: 13 Apr 2015 01:23 PM PDT தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவை உச்ச நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான |
| மூங்கில்ஊருணி அரசு பள்ளிக்கு தேர்வு செய்த இடத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட கோரிக்கை Posted: 13 Apr 2015 01:23 PM PDT மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்த இடத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற தியாகி இமானுவேல் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| செம்மரக் கடத்தல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கைது Posted: 13 Apr 2015 01:23 PM PDT ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த |
| ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழை Posted: 13 Apr 2015 01:22 PM PDT ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை காலையிலும் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. |
| மனைவிக்கு வரதட்சிணை கொடுமை: கணவர் மீது போலீஸார் வழக்கு Posted: 13 Apr 2015 01:21 PM PDT ராஜபாளையம் லடச்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த அமுதா(26)வுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பரமசிவமும், இவரது உறவினர்களும் அமுதாவிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினராம். இது தொடர்பாக பரமசிவம், பழனிக்குமார், சீதாலட்சுமி, முத்தம்மாள் ஆகியோர் மீது ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். |
| பாலிஸித் தொகை கிடைக்காத பெண்ணுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 13 Apr 2015 01:20 PM PDT விருதுநகரில் இறந்தவரின் எல்ஐசி பாலிஸித் தொகையை தாயாருக்கு மட்டும் வழங்கி, இரு வாரிசுதாரர்களைப் புறக்கணித்த எல்ஐசி அதிகாரிகள், இறந்தவரின் மனைவிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க, விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| "ஹர்பஜன் பாராட்டுக்குரியவர்; நாங்கள் தகுதியுடையவர்கள்' Posted: 13 Apr 2015 01:20 PM PDT ஹர்பஜன் சிங் அதிரடியாக அரை சதம் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினாலும், வெற்றிக்கு நாங்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்று பஞ்சாப் கேப்டன் |
| செங்கமலநாச்சியார்புரம் - கண்ணகி காலனிக்கு ரூ.70 லட்சத்தில் இணைப்புச் சாலை Posted: 13 Apr 2015 01:19 PM PDT சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் சாலையிலிருந்து கண்ணகி காலனி மற்றும் எம்.ஜி.ஆர். காலனிக்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சாலை அமைக்கப்பட உள்ளதாக, செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| திருத்தங்கலில் கடைக்கு தீவைப்பு Posted: 13 Apr 2015 01:18 PM PDT திருத்தங்கலில் முன்பகை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரும்புக் கடைக்கு தீவைத்து விட்டு தலைமறைவான இரு பெண்கள் உள்பட மூவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கிணற்றில் சிறுவன் சடலம் மீட்பு Posted: 13 Apr 2015 01:17 PM PDT அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்று தண்ணீரில் மிதந்த சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| விருதுநகரில் அணுகுசாலை அமைத்த பின் மேம்பாலம் கட்டக் கோரிக்கை Posted: 13 Apr 2015 01:16 PM PDT விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அணுகுசாலை அமைத்த பின்னரே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நகராட்சி உறுப்பினர் பாட்சா ஆறுமுகம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுக் கொடுத்துள்ளார். |
| கல் உடைக்க அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகத்தை மகளிர் குழுவினர் முற்றுகை Posted: 13 Apr 2015 01:15 PM PDT வத்திராயிருப்பு அருகே கல்குவாரியில் குத்தகை காலம் முடியும் வரை கல் உடைக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி மகளிர் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு Posted: 13 Apr 2015 01:14 PM PDT மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| அச்சுத்தொழிலாளி உறவினர்கள் மறியல் Posted: 13 Apr 2015 01:13 PM PDT திருத்தங்கல் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த அச்சுத்தொழிலாளி ஜெயப்பன்(60). ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இவர் மீது தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்தார். |
| மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 13 Apr 2015 01:12 PM PDT விருதுநகர் அருகே கல்போது கிராமத்தில் அடிப்படை வசதி செய்துதர மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பட்டாசு ஆலை பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போலீஸார் மீது புகார் Posted: 13 Apr 2015 01:11 PM PDT சிவகாசியில் பட்டாசு ஆலைப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போலீஸார் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விருதுநகர்: 12,652 குடும்பத்தினருக்கு விலையில்லா ஆடுகள் Posted: 13 Apr 2015 01:10 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 652 குடும்பத்தினருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். |
| அரசு பேருந்து மோதி போலீஸ்காரர் சாவு Posted: 13 Apr 2015 01:10 PM PDT ராஜபாளையம் அருகே, அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற போலீஸ்காரர் திங்கள்கிழமை இறந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். |
| மல்லாங்கிணறு அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல் Posted: 13 Apr 2015 01:07 PM PDT மல்லாங்கிணறு அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். |
| வரலொட்டியில் பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல் Posted: 13 Apr 2015 01:06 PM PDT மல்லாங்கிணறு அருகேயுள்ள வரலொட்டியில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| போல்ட் மிரட்டல்: பெங்களூரு 166 ரன்னில் சுருண்டது Posted: 13 Apr 2015 01:06 PM PDT பெங்களூருவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 166 ரன்கள் எடுத்தது. |
| மதுபானக் கடையை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை மகளிர் குழுவினர் முற்றுகை Posted: 13 Apr 2015 01:05 PM PDT அருப்புக்கோட்டை அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி மகளிர் குழுவினர் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 13 Apr 2015 01:04 PM PDT பழனி வாசவி மஹாலில் திங்கள்கிழமை பனிரெண்டார் பக்த திருக்கூட்டத்தார் சார்பில் வைரம் பதிக்கப்பட்ட வேல் வைத்து ராஜ அலங்காரம் செய்யப்பட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. |
| மாற்று கோல்கீப்பர்கள் அனுபவம் இல்லாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும்: ஸ்ரீஜேஷ் Posted: 13 Apr 2015 01:04 PM PDT அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், மாற்று கோல்கீப்பர்கள் போதிய அனுபவம் இல்லாமல் |
| ஆந்திர முதல்வரின் மனைவிக்கு சொந்தமான ஆலை முற்றுகை Posted: 13 Apr 2015 01:02 PM PDT தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து, வடமதுரை அருகே ஆந்திர முதல்வரின் மனைவிக்கு சொந்தமான பால் பொருள் தயாரிப்பு ஆலை திங்கள்கிழமை முற்றுகையிடப்பட்டது. |
| முதலிடம் பிடித்தது கனவு போல உள்ளது: சானியா மிர்ஸா Posted: 13 Apr 2015 01:02 PM PDT மகளிருக்கான இரட்டையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தது ஒரு கனவு போல உள்ளது என்று இந்திய டென்னிஸ் |
| Posted: 13 Apr 2015 01:01 PM PDT |
| கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் தொடர் மழை Posted: 13 Apr 2015 01:00 PM PDT கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. |
| புதுப்பட சி.டி.க்கள் வைத்திருந்தவர் கைது Posted: 13 Apr 2015 12:56 PM PDT போடியில் புதிய திரைப்படங்களின் சி.டி.க்கள் வைத்திருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| மணல் கடத்தல்: டிராக்டர்கள் பறிமுதல் Posted: 13 Apr 2015 12:55 PM PDT கடமலைக்குண்டு போலீஸார் திங்கள்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது செங்குளம் கண்மாய் பகுதியில் டிராக்டர்கள் மூலமாக மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது தங்கம்மாள்புரத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் முருகன் ஆகியோரின் டிராக்டர்கள் மூலமாக மணல் கடத்துவது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் இரு டிராக்டர்களையும் பறிமுதல் செய்து, ஆண்டிபட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். |
| தானிய உலர் களங்களாகும் சாலைகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 13 Apr 2015 12:55 PM PDT |
| ஆசிரியைகளுக்கான உடை அமைப்பு: சீர்படுத்த கோரிக்கை Posted: 13 Apr 2015 12:54 PM PDT ஆசிரியைகளுக்கான உடை அமைப்பை சீர்படுத்தக் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. |
| குச்சனூர் கோயில் முன் பாஜகவினர் முற்றுகை Posted: 13 Apr 2015 12:53 PM PDT உத்தமபாளையம் குச்சனூர் சனீஸ்வரர் திருக்கோயில் முன்பாக பாஜவினர் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். |
| Posted: 13 Apr 2015 12:51 PM PDT ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பழனி தாலுகா அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். நகர செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலர் காளிதாஸ் வரவேற்றார். தொழிலாளர்கள் படுகொலை சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரியும், இறந்த கூலித் தொழிலாளர்களுக்கு கூடுதலான இழப்பீட்டுத் தொகை வழங்கவும் கோரிக்கை எழுப்பப்பட்டது. |
| ஜாகீர் கான், முகமது ஷமி உடற்தகுதியுடன் இல்லை Posted: 13 Apr 2015 12:51 PM PDT வேகப் பந்துவீச்சாளர்களான ஜாகீர் கான், முகமது ஷமி ஆகிய இருவரும் இன்னும் உடற் தகுதியுடன் இல்லை |
| தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: கோடை வெப்பம் தணிந்தது Posted: 13 Apr 2015 12:50 PM PDT தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக பெய்த சாரல் மழையால் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். |
| காப்பீட்டுக் கட்டண உயர்வை கண்டித்து கம்பத்தில் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் Posted: 13 Apr 2015 12:50 PM PDT ஆட்டோ காப்பீட்டு கட்டண உயர்வைக் கண்டித்து கம்பத்தில் திங்கள்கிழமை அனைத்து ஆட்டோ சங்கங்கள் சார்பாக வேலை நிறுத்தம் நடைபெற்றது. |
| ஒட்டன்சத்திரத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் Posted: 13 Apr 2015 12:49 PM PDT ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ராஜஸ்தான் - மும்பை இன்று மோதல் Posted: 13 Apr 2015 12:47 PM PDT தில்லிக்கு எதிராக கடைசி பந்தில் "த்ரில்' வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, ஐபிஎல் தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில், |
| போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கக் கோரி தீர்மானம் Posted: 13 Apr 2015 12:46 PM PDT போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என சிறப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| லட்சம் பழங்களைக் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் Posted: 13 Apr 2015 12:45 PM PDT தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சின்னாளபட்டி அருள்மிகு ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேய சுவாமிக்கு 1 லட்சத்து 8 பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. |
| பழனி மலைக்கோயிலில் பங்குனி உத்திரம் உற்சவ சாந்தி விழா Posted: 13 Apr 2015 12:44 PM PDT பழனி மலைக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உற்சவ சாந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பாதிப்பை சமாளிக்க முன்னேற்பாடு Posted: 13 Apr 2015 12:43 PM PDT தேனி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதில் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| கார் மோதி விபத்து: இளைஞர் சாவு Posted: 13 Apr 2015 12:42 PM PDT பழனி அருகே வீரலப்பட்டி வண்ணாம்பாறையை சேர்ந்தவர் சிவராஜ்(32). இவரது நண்பர் நெய்க்காரபட்டியை சேர்ந்த பால்பாண்டி(21). இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மோட்டார்சைக்கிளில் பழனி-திண்டுக்கல் சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். |
| இந்தியாவை வழிநடத்த தன்னலமற்ற இளைய சமுதாயம் தேவை Posted: 13 Apr 2015 12:41 PM PDT இளைஞர் சக்தி அதிகம் கொண்ட இந்தியாவை வழிநடத்திச் செல்வதற்கு, தன்னலமற்ற இளைய சமுதாயம் உருவாக வேண்டும் என நடிகர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். |
| கூட்டுறவு சங்க இரவு காவலர் கைது Posted: 13 Apr 2015 12:41 PM PDT உத்தமபாளையம் அருகே கூட்டுறவு சங்க செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இரவு காவலாளியை போலீஸார் கைது செய்தனர். |
| வாகரை பகுதிகளில் ஏப்ரல் 15 மின்தடை Posted: 13 Apr 2015 12:40 PM PDT |
| வீரப்பஅய்யனார் கோயில் சித்திரை திருவிழா: மலைக் கோயிலுக்கு சுவாமி புறப்பாடு Posted: 13 Apr 2015 12:38 PM PDT தேனி வீரப்பஅய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சித்திரை முதல் நாளான செவ்வாய்க்கிழமை(ஏப்.14) மலைக்கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. |
| ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா நாளை தொடக்கம் Posted: 13 Apr 2015 12:29 PM PDT ஸ்ரீ ராமனுஜர் அவதார உற்சவம், ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா புதன்கிழமை தொடங்குகிறது. |
| விஷ் யூ வெரி ஹேப்பி டமில் நியூ இயர் ! Posted: 13 Apr 2015 12:27 PM PDT |
| சோம வாரத்தையொட்டி சோளீஸ்வரர் கோயிலில் குவியும் பக்தர்கள் Posted: 13 Apr 2015 12:26 PM PDT பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயிலில் சோம வாரத்தையொட்டி, திங்கள்கிழமை திரளான பக்தர்கள் பங்கேற்று பரிகார பூஜை செய்தனர். |
| பாதுகாப்பற்ற நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்கூடம் Posted: 13 Apr 2015 12:23 PM PDT காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்கூடமானது, சுற்றுச்சுவர் இடிந்தநிலையில் பாதுகாப்பற்று காணப்படுகிறது. |
| பலத்த மழையில் குளிர்ந்தது வேலூர் Posted: 13 Apr 2015 12:20 PM PDT வேலூர் மாநகரில் திங்கள்கிழமை மாலை கருமேகம் சூழ்ந்து பலத்த மழை கொட்டியது. இதனால் நகரின் பல இடங்களில் |
| சமயபுரத்தில் இன்று சித்திரை தேரோட்டம்: போக்குவரத்து வழித்தடம் மாற்றம் Posted: 13 Apr 2015 12:17 PM PDT திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தோரோட்டம் இன்று காலை நடைபெறகிறது. இதையொட்டி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| முசிறியில் ஏப். 18-ல் வேலைவாய்ப்பு முகாம் Posted: 13 Apr 2015 12:17 PM PDT தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டம், முசிறியில் ஏப். 18-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
| தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து Posted: 13 Apr 2015 12:17 PM PDT தமிழ்ப் புத்தாண்டு தினம் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) கொண்டாடப் படுவதற்கு பல்வேறு கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். |
| போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து மலேசியா சென்று வந்தவர் கைது Posted: 13 Apr 2015 12:17 PM PDT போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து மலேசியாவுக்கு சென்று வந்த புதுக்கோட்டை நபரை திருச்சி விமான நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| மக்கள் குறைகேட்பில் மாவட்ட ஆட்சியரிடம் 477 மனுக்கள் Posted: 13 Apr 2015 12:17 PM PDT திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட 477 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி அறிவுறுத்தினார். |
| திருச்சி மாவட்டத்தில் ஏப். 17-ல் அம்மா திட்ட முகாம் Posted: 13 Apr 2015 12:16 PM PDT : திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் ஏப். 13-ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
| புத்துயிர் பெறும் ராணிப்பேட்டை சிப்காட் Posted: 13 Apr 2015 12:16 PM PDT ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 40 ஆண்டுகளாகச் செப்பனிப்படாமல் இருந்த சாலைகள், கழிவுநீர்க் கால்வாய்கள் மேம்படுத்தப்பட்டு |
| ஊதியம் தாமதம்; தவிக்கும் ஊழியர்கள் Posted: 13 Apr 2015 12:15 PM PDT திருப்பத்தூர் வனக் கோட்டத்தைச் சேர்ந்த சுமார் 300 வனப் பணியாளர்களுக்கு இதுவரை ஊதியம் கிடைக்கவில்லை. |
| பலத்த மழையில் குளிர்ந்தது வேலூர் Posted: 13 Apr 2015 12:15 PM PDT வேலூர் மாநகரில் திங்கள்கிழமை மாலை கருமேகம் சூழ்ந்து பலத்த மழை கொட்டியது. இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. |
| குடிநீர் கோரி பேருந்து சிறைபிடிப்பு Posted: 13 Apr 2015 12:15 PM PDT குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, காட்பாடியை அடுத்த வண்டரந்தாங்கல் கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர். |
| குறைதீர்க் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை Posted: 13 Apr 2015 12:14 PM PDT பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது இரு வாரக் காலத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் துறையினரை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கேட்டுக் கொண்டார். |
| ஆந்திர அரசைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள் Posted: 13 Apr 2015 12:14 PM PDT தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசைக் கண்டித்து, வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. |
| மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சுகாதாரப் பணியாளர்கள் Posted: 13 Apr 2015 12:14 PM PDT காலதாமதம் இன்றி மாதம்தோறும் ஊதியம் வழங்க வலியுறுத்தி, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| ராபின்சன் குளத்தின் சீரமைப்புப் பணி: அதிகாரி ஆய்வு Posted: 13 Apr 2015 12:13 PM PDT குடியாத்தம் ராபின்சன் குளம் சீரமைக்கும் பணியை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ஜி.பிரகாஷ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். |
| செவிலியர்களைக் கணக்கெடுக்கத் திட்டம் Posted: 13 Apr 2015 12:13 PM PDT நாட்டில் தகுதி வாய்ந்த செவிலியர்களின் கணக்கெடுப்பை நடத்த இந்திய செவிலியர் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அதன் தலைவர் திலீப் குமார் கூறினார். |
| ஆம்பூரில் பத்திரப் பதிவுஅலுவலகத்தை உடனடியாகத் திறக்க வலியுறுத்தல் Posted: 13 Apr 2015 12:13 PM PDT ஆம்பூரில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பத்திரப் பதிவு சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நீர் Posted: 13 Apr 2015 12:13 PM PDT ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே |
| Posted: 13 Apr 2015 12:12 PM PDT காட்பாடி, வள்ளிமலை சாலையில் அசோக் நகர் அருகே ஒரு டன் செம்மரங்கள் மினி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 13 Apr 2015 12:12 PM PDT ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் சடலம் ஞாயிற்றுக்கிழமை இரவு கிடந்தது. |
| மகன் சாவு: தொலைக்காட்சியில் கண்டு கதறி அழுத தந்தை Posted: 13 Apr 2015 12:11 PM PDT ஆற்காடு அருகே கூரம்பாடி கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சிறுவனின் உடல் அடக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. |
| குடியாத்தத்தில் இன்று சதுரங்கப் போட்டி Posted: 13 Apr 2015 12:11 PM PDT வேலூர் மாவட்ட சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. |
| இணையதள சேவையில் தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை: மு.க.ஸ்டாலின் கண்டனம் Posted: 13 Apr 2015 12:10 PM PDT இணையதள சேவையில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க "ட்ராய்' அமைப்பு முன்வந்துள்ளதற்கு திமுக பொருளாளர் |
| Posted: 13 Apr 2015 12:10 PM PDT |
| நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் Posted: 13 Apr 2015 12:10 PM PDT தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி, ஆரணி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| இலவசத் தையல் இயந்திரங்கள் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 13 Apr 2015 12:10 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Apr 2015 12:09 PM PDT |
| ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி Posted: 13 Apr 2015 12:09 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். செங்கம் தாலுகா, தாதர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (40). இவரது மனைவி |
| "பன்றிக் காய்ச்சல் பீதி தேவையில்லை' Posted: 13 Apr 2015 12:09 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் பன்றிக் காய்ச்சல் குறித்து பீதியடையத் தேவையில்லை. மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Apr 2015 12:09 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக ஆரணியில் 68.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. |
| மொழி மாற்றுத் தொடர்களால் பாதிப்பு: சின்னத்திரை கலைஞர்கள் நாளை வேலைநிறுத்தம் Posted: 13 Apr 2015 12:09 PM PDT மொழி மாற்றுத் தொடர்களின் அதிகரிப்பை நிறுத்தக் கோரி தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் புதன்கிழமை (ஏப்.15) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். |
| Posted: 13 Apr 2015 12:09 PM PDT |
| கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை Posted: 13 Apr 2015 12:08 PM PDT குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டார். |
| 17-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 13 Apr 2015 12:08 PM PDT திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |