Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஊழல் வழக்கில் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை உறுதி: கீழ்கோர்ட் தீர்ப்பை ஏற்றது டில்லி உயர் நீதிமன்றம்

Posted:

புதுடில்லி: அரியானா முன்னாள் முதல்வரும், வட மாநில அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும், 'ஜாட்' இனத்தின் தலைவர்களில் ஒருவருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவர் மகன் அஜய் சவுதாலாவுக்கு, டில்லி, சி.பி.ஐ., கோர்ட், 2013ல் வழங்கிய, 10 ஆண்டு சிறை தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றம், நேற்று உறுதி செய்தது.தீர்ப்பு வழங்கிய நீதிபதி சித்தார்த் மிருதுள், ''சவுதாலாவுக்கு, 80 வயதாகும் நிலையிலும், அவர் மீது கருணை காட்ட முடியாது,'' என உத்தரவிட்டு, 'ஊழல் முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், ...

இந்திய பெருங்கடலில் சீன ஆதிக்கத்தை தடுக்க வியூகம்: நான்கு நாடுகளுக்கு பிரதமர் மோடி 10ல் சுற்றுப்பயணம்

Posted:

புதுடில்லி: இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கப் பரவலை தடுக்கும் நோக்கில், இலங்கை, மாலத்தீவு, செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு, ராணுவம் மற்றும் சிவில் உதவிகளை வழங்க, இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக, பிரதமர் மோடி, வரும் 10ம் தேதி, நான்கு நாடுகளுக்கு, அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.முதலீடு: இலங்கை உள்ளிட்ட நான்கு தீவு நாடுகளில், துறைமுகம், மின் நிலையம், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், சீனா, ஆயிரக்கணக்கான டாலர் முதலீடு செய்து வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் மூலம், அந்நாடுகளில் சீனா, மெல்ல தனது ஆதிக்கத்தை ...

அசிங்கம் அம்பலமாகிவிடும் என பயந்த அரசு: டில்லி மருத்துவ மாணவியின் தந்தை பகிரங்க பேட்டி

Posted:

புதுடில்லி: ''டாட்டர் ஆப் இந்தியா' என்ற அந்த டாக்குமென்டரி படத்தில், நிறைய வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், சமூக அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ''அந்த படம் வெளியானால், சமூகத்தின் உண்மை நிலை துளியும் மாறவில்லை என்பது அம்பலமாகும் என்பதால் தான், அதை அரசு தடை செய்து விட்டது,'' என, கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட, டில்லி மருத்துவ மாணவியின் தந்தை பத்ரிநாத் கூறினார்.டில்லியில், 2012 டிசம்பர், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, 23 வயது மருத்துவ மாணவியின் தந்தை, பத்ரிநாத் சிங்கின் பேட்டி: என் மகளை கெடுத்த கயவன் முகேஷ் சிங்கின் ...

முஸ்லிம்களுக்கு 5 சதவீத ஒதுக்கீடு ரத்து

Posted:

மும்பை: மகாராஷ்டிராவில், முந்தைய காங்., - தேசியவாத காங்., அரசால் அறிவிக்கப்பட்ட, முஸ்லிம் களுக்கான, 5 சதவீத ஒதுக்கீட்டை, தற்போதைய பா.ஜ., கூட்டணி அரசு ரத்து செய்துள்ளது.மகாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமயிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், முஸ்லிம்களுக்கு, 5 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின், மராட்டியர்களுக்கு, 16 சதவீத ஒதுக்கீடு அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, பல்வேறு ...

தேர்தலுக்குள் 10 ஆயிரம் பொதுக் கூட்டங்கள்: செயற்குழுவில் கட்சியினரை உசுப்பிய ஸ்டாலின்

Posted:

'மூன்று மாதங்களுக்குள் 10 ஆயிரம் பொதுக்கூட்டங்களை நடத்தி, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும்; ஆறாவது முறையாக, தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பதவி ஏற்பார்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கட்சி செயற்குழுவில் பரபரப்பாக பேசினார்.தி.மு.க.,வில் புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் நியமனத்திற்கு பின், முதல் செயற்குழுக் கூட்டம், நேற்று அறிவாலயத்தில், கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது. கூட்டம் ஆரம்பித்ததும், புதிய மாவட்ட செயலர்கள், 10 பேர் பேச அனுமதிக்கப்பட்டதால், அவர்கள் தங்களுடைய கன்னிப் பேச்சை, அக்கூட்டத்தில் பதிவு செய்தனர். ...

அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கட்சி பதவி பறிப்பு: வேளாண் அதிகாரி தற்கொலை காரணம்?

Posted:

சென்னை: வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து, அ.தி.மு.க., மாவட்டச் செயலர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலியில் பணியாற்றிய வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரத்தை தொடர்ந்து, அவரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலராக இருந்தவர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி. கடந்த 2011ல், கலசப்பாக்கம் சட்டசபைத் தொகுதியில் இருந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., ஆட்சி அமைந்த தும், அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உணவுத் துறை, வணிகவரித் துறை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக ...

விவசாயிகளுக்கு எதிரானவனா நான்? மோடி ஆவேசம்

Posted:

புதுடில்லி: ''என்னை விவசாயிகளுக்கு எதிரானவனைப் போல் எதிர்க்கட்சிகள் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது; நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவது வருத்தம் அளிக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.மத்திய பிரதேச மாநிலம், கந்த்வாவில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனல் மின்சார நிலையங்களை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.அப்போது, அவர் பேசியதாவது: நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக, முந்தைய காங்., அரசு நிறைவேற்றிய மசோதாவில், பள்ளி, மருத்துவமனை, வீடு ...

இருமும் கெஜ்ரிவாலுக்கு 10 நாள் சிகிச்சை

Posted:

பெங்களூரு: விடாமல் இருமிக் கொண்டிருக்கும், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், 46, அந்த பிரச்னையை குணப்படுத்த, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டு உள்ளார்.இதற்காக, நேற்று காலை, டில்லியிலிருந்து தன் பெற்றோருடன் பெங்களூரு வந்த கெஜ்ரிவால், தும்கூரு நகரில் உள்ள, 'ஜிண்டால் நேச்சர் க்யூர்' மருத்துவ மையத்தில், 10 நாள் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன், 2012ல், சமூக சேவகர் அன்னா ஹசாரேயுடன் இந்த மருத்துவ மையத்தில் தங்கி, சர்க்கரை நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட கெஜ்ரிவால், இந்த ...

பயப்படாதீங்க... தைரியமா வேலை செய்யுங்க: தொண்டர்களுக்கு அமித் ஷா 'டானிக்'

Posted:

கோவை: ''யாருக்கும் பயப்பட வேண்டாம்; நமது கட்சி தான், நாட்டின் பெரிய கட்சி; அதனால், தைரியமாக கட்சி பணி செய்யுங்கள்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.தமிழகத்தில், பா.ஜ.,வை பலப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம், கோவையில், அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று நடந்தது. கட்சி நிர்வாகிகள், தீவிரத் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். காலையில் கூட்டம் துவங்கியதும் பேசிய அமித்ஷா, 'தேர்தல் ஊழலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது; தேர்தல் கமிஷன், இங்கு மிகவும் பலவீனமாகவுள்ளது' என்று கூறினார். ஆனால், எந்தக்கட்சியையும் அவர் தனியாக ...

'ஆப்சென்ட்' எம்.பி.,க்களுக்குபிரதமர் மோடி கண்டிப்பு

Posted:

புதுடில்லி: கடந்த செவ்வாய் கிழமை, ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தம், நிறைவேற்றப்பட்டதால் கோபம் அடைந்துள்ள பிரதமர் மோடி, 'சபைக்கு வராதது ஏன்' என, ஆப்சென்ட் ஆன, எம்.பி.,க்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., சீத்தாராம் யெச்சூரி மற்றும் ராஜீவ் கொண்டு வந்த திருத்தம், டிவிஷன் ஓட்டுக்கு விடப்பட்டது. அதில், கம்யூனிஸ்ட் கொண்டு வந்த திருத்தத்திற்கு அதிக ஓட்டுகள் கிடைத்து, அது நிறைவேறியது.திருத்த தீர்மானத்திற்கு ஆதரவாக, 118 ஓட்டுகளும், எதிராக, 57 ஓட்டுகளும் ...

எல்லையில் 'ஸ்மார்ட்' தடுப்பு வேலி

Posted:

புதுடில்லி: இந்தியா - பாக்., எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி, ஒவ்வொரு ஆண்டும், கடுமையான பனிப்பொழிவால் சேதமடைவதை அடுத்து, பனிப்பொழிவை தாங்கக் கூடிய வகையில், 'ஸ்மார்ட் 'தடுப்பு வேலிகளை அமைக்க, இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இந்தியா - பாக்., எல்லையில், ஊடுருவல்களை தடுப்பதற்காக இந்திய ராணுவம் தடுப்பு வேலியை அமைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக, இந்த வேலி சேதமடைவதும், பின், அவற்றை சீரமைப்பதும் பெரிய வேலையாக உள்ளது. இதையடுத்து, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, 'ஸ்மார்ட்' தடுப்பு வேலியை அமைக்க, ராணுவம் திட்டமிட்டு உள்ளது. ...

குழந்தைகளை கண்டுகொள்ளாத பட்ஜெட்

Posted:

மும்பை: வரும், 2015 - 16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், 'கிரை' எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த, 2011 - 12ம் நிதியாண்டிலிருந்தே, மத்திய பட்ஜெட்டில், குழந்தைகள் நலன் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இதுவரை இல்லாமல், இந்த பட்ஜெட்டில் தான் மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™