Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆயுர்வேத மருந்துகளை சந்தைப்படுத்த ஒப்பந்தம்

Posted: 05 Mar 2015 01:49 PM PST

ஆயுர்வேத மருந்துகளை சந்தைப்படுத்துவது தொடர்பாக, தேசிய அறிவியல் மேம்பாட்டு நிறுவனம், தேசிய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்துடன் வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டது.

புதிய கண்டுபிடிப்புகளுக்கான விழா: குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை தொடக்கம்

Posted: 05 Mar 2015 01:49 PM PST

அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், "புதிய கண்டுபிடிப்புகளுக்கான விழா', குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை (மார்ச் 7) தொடங்குகின்றது.

நிலம் கையக மசோதா: பிரதமர் மீது காங்கிரஸ் தாக்கு

Posted: 05 Mar 2015 01:48 PM PST

நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பாக ஜனநாயக ரீதியிலான அதிருப்தியை ஒடுக்க மக்களவையில் தனது கட்சிக்குள்ள பெரும்பான்மை பலத்தை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகப் பயன்படுத்துகிறார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

ம.பி. உயர் நீதிமன்ற நீதிபதி மீது கண்டனத் தீர்மானம்

Posted: 05 Mar 2015 01:47 PM PST

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கங்கலேவை கண்டித்து மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வரக் கோரி 58 எம்.பி.க்கள் ஆதரவுடன் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

"இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது'

Posted: 05 Mar 2015 01:46 PM PST

இலங்கையில் இயல்புநிலை திரும்பும் வரை இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளை, மத்திய அரசு திருப்பி அனுப்பக் கூடாது என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ரபி பெர்னார்டு வேண்டுகோள் விடுத்தார்.

தேவசபைக்கு பிரவேசம் செய்த சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி

Posted: 05 Mar 2015 01:46 PM PST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருப்பணியை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி சித்சபையிலிருந்து வியாழக்கிழமை காலை தேவசபைக்கு பிரவேசம் செய்தார்.

"பணம் கொடுத்து பாதிரியார் அலெக்சிஸ் மீட்கப்பட்டிருக்கலாம்'

Posted: 05 Mar 2015 01:46 PM PST

ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்து பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் மீட்கப்பட்டிருக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறினார்.

பிளஸ்-2 தேர்வு : மாவட்டத்தில் 30,732 பேர் எழுதினர்

Posted: 05 Mar 2015 01:46 PM PST

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை, 191 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 80 தேர்வு மையங்களில் 30,732 பேர் எழுதினர்.

இலவச பொது மருத்துவ முகாம்

Posted: 05 Mar 2015 01:45 PM PST

வேப்பூர் சாய் அப்போலோ செவிலியர் கல்லூரி வளாகத்தில் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் நல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் எலும்பு முறிவு, சித்த மருத்துவம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 380 பேர்

நிதீஷ் அரசுக்கு எதிராக மார்ச் 9-இல் மாஞ்சி உண்ணாவிரதம்

Posted: 05 Mar 2015 01:45 PM PST

தனது அமைச்சரவை எடுத்த முடிவுகளை ரத்து செய்யும் நிதீஷ் குமார் அரசுக்கு எதிராக, பாட்னாவில் வரும் 9ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலை.யில் உதவிப் பேராசிரியர்களுக்கான பயிலரங்கம்

Posted: 05 Mar 2015 01:45 PM PST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விலங்கியல் துறையில் உதவிப் பேராசிரியர்களுக்கான இருநாள் பயிலரங்கம் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

திருவதிகை கோயிலில் பெளர்ணமி வழிபாடு

Posted: 05 Mar 2015 01:45 PM PST

மாசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு, பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: மகாராஷ்டிர அரசுக்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடி

Posted: 05 Mar 2015 01:45 PM PST

மகாராஷ்டிர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என முந்தைய அரசு வெளிட்ட அறிவிப்பை தற்போதைய பாஜக அரசு ரத்து செய்யவிருப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

குட்டிகளுடன் மர நாய் பிடிபட்டது

Posted: 05 Mar 2015 01:45 PM PST

சிதம்பரம் அருகே கல்லூரி விடுதியில் நான்கு குட்டிகளுடன் இருந்த மர நாயை வனத் துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

பாலியல் குற்றவாளி பேட்டி ஒளிபரப்பு : இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி: பாஜக

Posted: 05 Mar 2015 01:44 PM PST

பாலியல் குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்பும் பிபிசியின் முடிவு, இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி என்று பாஜக தெரிவித்துள்ளது.

"வள்ளலார் வாழ்ந்த புனித பூமியை புனித நகரமாக அறிவிக்க வேண்டும்'

Posted: 05 Mar 2015 01:44 PM PST

வள்ளலார் வாழ்ந்த புனித பூமியை, புனித நகரமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சமூகப் பணி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 05 Mar 2015 01:44 PM PST

இளைஞர் நீதிக் குழுமத்துக்கான சமூகப் பணி உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நெய்வேலி கல்லூரி ஆசிரியர்கள் வாயிற்கூட்டம்

Posted: 05 Mar 2015 01:44 PM PST

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வியாழக்கிழமை வாயிற்கூட்டத்தை நடத்தினர்.

பாலியல் புகாரில் சிக்கியவர் அடித்துக் கொலை

Posted: 05 Mar 2015 01:39 PM PST

நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, சிறையில் இருந்து வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

புதுச்சேரி

Posted: 05 Mar 2015 01:25 PM PST

பெங்களூரு

Posted: 05 Mar 2015 01:25 PM PST

ஈரோடு

Posted: 05 Mar 2015 01:24 PM PST

கோவை

Posted: 05 Mar 2015 01:24 PM PST

திருநெல்வேலி

Posted: 05 Mar 2015 01:24 PM PST

குடும்பப் பிரச்னையில்தொழிலாளி தூக்கிட்டு சாவு

Posted: 05 Mar 2015 01:24 PM PST

மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தியடைந்த நெசவுத் தொழிலாளி புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

18 பவுன் நகை கையாடல்: நகை மதிப்பீட்டாளர் கைது

Posted: 05 Mar 2015 01:24 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வங்கியில் இருந்து 18 பவுன் நகையை திருடிய நகை மதிப்பீட்டாளரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருவிடைமருதூர் கோயில் தேர் வெள்ளோட்டம்

Posted: 05 Mar 2015 01:24 PM PST

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் ரூ. 2 கோடியில் உருவான புதிய சுப்பிரமணிய சுவாமி திருத்தேரின் வெள்ளோட்டம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது

"ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழிலில் பெரிய நிறுவனங்களை ஈடுபடுத்தக்கூடாது

Posted: 05 Mar 2015 01:24 PM PST

ஆழ்கடல் மீன்பிடிப்பு தொழிலில் பெரிய நிறுவனங்களை ஈடுபடுத்தக்கூடாது என்றார் மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா.

தீபாவளிக்கு ஜூலையிலும், பொங்கலுக்கு ஆகஸ்டிலும் ரயில்களில் முன்பதிவு

Posted: 05 Mar 2015 01:08 PM PST

ரயில்வேயின் புதிய முன்பதிவு விதிமுறையின்படி, தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல ஜூலை மாதமும், பொங்கலுக்கு ஆகஸ்ட் மாதமும் பயணிகள் பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சில மின்சார ரயில்கள் ரத்து

Posted: 05 Mar 2015 01:08 PM PST

பராமரிப்புப் பணியின் காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சர்வதேச பெண்கள் தினம்: தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு நாரி சக்தி புரஸ்கர் விருது

Posted: 05 Mar 2015 01:07 PM PST

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி (மார்ச் 8) பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மத்திய அரசின் சார்பில் நாரி சக்தி புரஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது.

பிளஸ் 2 தேர்வு தொடங்கியது: தமிழ் முதல்தாள் எளிமை

Posted: 05 Mar 2015 12:57 PM PST

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது.

தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கு நோட்டீஸா? கருணாநிதி புகாருக்கு தமிழக அரசு மறுப்பு

Posted: 05 Mar 2015 12:56 PM PST

தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த புகாருக்கு தமிழக அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிளஸ் 2 தேர்வு தொடங்கியது: தமிழ் முதல்தாள் எளிமை

Posted: 05 Mar 2015 12:45 PM PST

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது.

சாலை விபத்தில் வெளிமாநில தொழிலாளி சாவு

Posted: 05 Mar 2015 12:21 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார்.

விராலிமலையில் 5067 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம்

Posted: 05 Mar 2015 12:20 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றிய அதிமுக சார்பில், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, 5067 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் வியாழக்கிழமை

கீரனூர் அருகே விவசாயி மர்மச் சாவு

Posted: 05 Mar 2015 12:20 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே புதன்கிழமை மர்மமான முறையில் விவசாயி இறந்துகிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 05 Mar 2015 12:19 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிகாடு பேரூராட்சி பகுதியில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, பெரம்பலூரில் உள்ள இண்டேன் எரிவாயு நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பெரம்பலூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் முகாம்

Posted: 05 Mar 2015 12:19 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ஆதார் அட்டைகான புகைப்படம் எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வென்றோருக்கு பாராட்டு

Posted: 05 Mar 2015 12:19 PM PST

முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, வியாழக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 05 Mar 2015 12:19 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

பணி வாய்ப்பு பெற தொழில் பழகுநர் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கலாம்

Posted: 05 Mar 2015 12:18 PM PST

அதிக ஊதியத்துடன், உள்நாடு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மவுன்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் பயிற்சி கருத்தரங்கு

Posted: 05 Mar 2015 12:18 PM PST

புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு மவுன்ட்சீயோன் பொறியியல் கல்லூரியும், இந்திய பொறியாளர்கள் நிறுவனமும் இணைந்து கட்டடக் கலையும், இயற்கைச் சீற்றமும், நிலஅதிர்வு பேரழிவுகளிலிருந்து சேதமடையாத கட்டடங்கள் கட்டுதல் குறித்த ஒருநாள் பயிற்சி கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.

திருவப்பூர் கோயில்தேரோட்டம்: மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை

Posted: 05 Mar 2015 12:18 PM PST

திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா தேரோட்டத்தையொட்டி, வரும் திங்கள்கிழமை (மார்ச் 9) புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை சாகுபடிக்கு உரங்கள் வருகை

Posted: 05 Mar 2015 12:18 PM PST

டெல்டா மாவட்டங்களின் கோடை நெல் சாகுபடிக்காக ரயில் மூலம் 1,167 டன் யூரியாவும், 60 டன் காம்ப்ளக்ஸ் உரமும் தஞ்சாவூருக்கு வந்தன.

தஞ்சாவூர் அருகே அரிய புத்தர் சிலை கண்டெடுப்பு

Posted: 05 Mar 2015 12:17 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள திருக்கோயில்பத்து கிராமத்தில் அரிய வகை புத்தர் சிலை அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.

மன்னர் சரபோஜி கல்லூரிக்கு மாணவியர் விடுதி வேண்டும்

Posted: 05 Mar 2015 12:17 PM PST

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரிக்கு மாணவியர் விடுதி கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

"ஜாதி, மத மோதல் தடுக்க கல்லூரிகளில் குழு தேவை

Posted: 05 Mar 2015 12:17 PM PST

பள்ளி, கல்லூரிகளில் ஜாதி, மத மோதல்களைத் தடுக்கக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனக் காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

குடந்தை அரசுக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Posted: 05 Mar 2015 12:16 PM PST

கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து தொல்காப்பியமும்

கொத்தனார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 05 Mar 2015 12:16 PM PST

கும்பகோணம் அருகே டிப்பர் லாரி மோதி இறந்த கொத்தனார் குடும்பத்துக்கு ரூ. 14,14,352 இழப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒட்டங்காட்டில் வரும் 14-ல் மக்கள் நேர்காணல் முகாம்

Posted: 05 Mar 2015 12:16 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஒட்டங்காடு கிராமத்தில் வரும் 14-ஆம் தேதி மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம்:அனைத்துக் கட்சியினர் கூட்டம்

Posted: 05 Mar 2015 12:15 PM PST

வாக்களார் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பாக நாகப்பட்டினத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சொத்துத் தகராறில்தந்தையை கொன்ற மகன் கைது

Posted: 05 Mar 2015 12:15 PM PST

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

அங்கன்வாடி பணிகளில் குறைபாடு: 2 பணியாளர்கள் தாற்காலிக நீக்கம்

Posted: 05 Mar 2015 12:15 PM PST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகளில் குறைபாடு காரணமாக அங்கன்வாடி பணியாளர்கள் இருவரை மாவட்ட ஆட்சியர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்

Posted: 05 Mar 2015 12:14 PM PST

திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 31-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

மார்ச் 07 மின் தடை

Posted: 05 Mar 2015 12:14 PM PST

மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால்,

கரூரில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 05 Mar 2015 12:14 PM PST

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம்

Posted: 05 Mar 2015 12:14 PM PST

கரூர் தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாசி மகத் தேரோட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 05 Mar 2015 12:13 PM PST

புலியூர் கேசிஆர் காலனியைச் சேர்ந்தவர் மார்கண்டேயன் (40). இவர் கரூர் பாரதியார் நகரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். வியாழக்கிழமை ஜவுளி நிறுவனத்தில்

மக்கள் நலனுக்காக செயல்படுபவர் ஜெயலலிதா

Posted: 05 Mar 2015 12:13 PM PST

மக்கள் நலனுக்காக செயல்படும் ஒரே தலைவி ஜெயலலிதாதான் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.

வெள்ளியணை பெரிய குளத்தில் மணல் அள்ள தடை கோரி மனு

Posted: 05 Mar 2015 12:12 PM PST

வெள்ளியணை தென்பாகம் பெரியகுளத்தில் கிராவல் மணல் அள்ள அனுமதியளிக்கக் கூடாது என தாந்தோணி வட்டார காங்கிரஸார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பிளஸ் 2 தேர்வு : மாவட்டத்தில் 10,894 மாணவர்கள் தேர்வெழுதினர்

Posted: 05 Mar 2015 12:12 PM PST

கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தேர்வை 10,894 மாணவ, மாணவிகள் எழுதினர். வரும் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தேர்வு 33 மையங்களில் நடக்கிறது. இவர்களை

அனுமதியின்றி மணல் அள்ளியதாக ஜேசிபி இயந்திரம், லாரி பறிமுதல்

Posted: 05 Mar 2015 12:12 PM PST

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியை கனிம வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

குடும்பத் தகராறு: மனைவியை தாக்கிய கணவர் கைது

Posted: 05 Mar 2015 12:12 PM PST

குடும்பத் தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கரூர் சின்ன ஆண்டாங்கோவில் திருப்பதி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (38). இவருக்கு

அலுவலக உதவியாளர் பணி:நேர்காணல் ஒத்திவைப்பு

Posted: 05 Mar 2015 12:11 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச். 6) நடைபெறுவதாக இருந்த நேர்காணல் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூரில் தொடர் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

Posted: 05 Mar 2015 12:11 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பெரம்பலூரில் பிளஸ்2 தேர்வு : ஆட்சியர் ஆய்வு

Posted: 05 Mar 2015 12:10 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆபத்தான சாலையோர கழிவுநீர் கால்வாய்கள்

Posted: 05 Mar 2015 12:10 PM PST

பெரம்பலூர் நகரின் பிரதான சாலைகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் ஆபத்தான நிலையில் இருப்பதனால் அடிக்கடி நிகழும் விபத்துக்களால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Posted: 05 Mar 2015 12:10 PM PST

திருமானூர் அருகே உள்ள கீழக்காவட்டங் குறிச்சியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடைபெற்ற இம்முகாம் கீழக்காவட்டங் குறிச்சி, மேலக்காவட்டங் குறிச்சி,தட்டான் சாவடி, உள்ளிட்ட கிராமங்களில் நடத்தப்பட்டது. ஊராட்சித் தலைவர் நளினி ராஜேந்திரன் தலைமையில், கால்நடைத் துறை

"சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் பங்கு அவசியம்'

Posted: 05 Mar 2015 12:09 PM PST

சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் மாணவர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார் அரியலூர் மாவட்டக் கல்வி அலுவலர் பெ. பவுன்.

அரியலூரில் இன்று 3 இடங்களில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 05 Mar 2015 12:09 PM PST

அரியலூர் மாவட்டத்தில் 3 வட்டங்களில் வெள்ளிக்கிழமை "அம்மா' திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆலங்குடி விவசாயிகளின் ஏற்றுமதி வெள்ளரி சாகுபடி

Posted: 05 Mar 2015 12:09 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

18,162 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்

Posted: 05 Mar 2015 12:09 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ் முதல்தாளில் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 18,162 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.

மார்ச் 18-ல் முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு

Posted: 05 Mar 2015 12:08 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

இறங்கும் போது தவறிவிழுந்த முதியவர்: பேருந்து சக்கரம் ஏறியதால் கால்கள் முறிந்தன

Posted: 05 Mar 2015 12:08 PM PST

ஆலங்குடி அருகே பேருந்தில் இருந்து இறங்கிய போது தவறி விழுந்ததால், பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில், முதியவரின் கால்கள் வியாழக்கிழமை முறிந்தன.

கீரனூர் அருகே விவசாயி மர்மச் சாவு

Posted: 05 Mar 2015 12:07 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே புதன்கிழமை மர்மமான முறையில் விவசாயி இறந்துகிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில்வெளிமாநில தொழிலாளி சாவு

Posted: 05 Mar 2015 12:07 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார்.

குன்றாண்டார்கோவிலில் பண்ணைப் பள்ளி பயிற்சி

Posted: 05 Mar 2015 12:07 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தரமான விதை உற்பத்தி தொடர்பான பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது

84 மையங்களில் பிளஸ் 2 தேர்வு

Posted: 05 Mar 2015 12:07 PM PST

தஞ்சாவூரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்ற அரசு பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவிடைமருதூர் கோயில் தேர் வெள்ளோட்டம்

Posted: 05 Mar 2015 12:06 PM PST

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் ரூ. 2 கோடியில் உருவான புதிய சுப்பிரமணிய சுவாமி திருத்தேரின் வெள்ளோட்டம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில்

காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் மார்ச் 9-இல்  வேலைநிறுத்தம்

Posted: 05 Mar 2015 12:04 PM PST

காப்பீட்டுச் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் பொதுத் துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் திங்கள்கிழமை (மார்ச் 9) ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

தொழிலாளருக்காக வாழ்ந்தவர்

Posted: 05 Mar 2015 12:02 PM PST

தமிழகத்தின் தொழிற்சங்க வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் ஆர். ராமநாதன்.

கிராம வங்கிகள்: சீர்திருத்தம் தேவை!

Posted: 05 Mar 2015 12:01 PM PST

ஏழைகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவே கிராம வங்கிகள் அரசால் உருவாக்கப்பட்டன.

நிதிநிலை அறிக்கை 2015 - V

Posted: 05 Mar 2015 12:00 PM PST

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதெல்லாம், மத்திய தர, மாத வருமானம் பெறுபவர்களின் முதல் எதிர்பார்ப்பு, வருமான வரியில் என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன, வருமான வரி வரம்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறதா, வரி குறைக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான்.

இலங்கை - தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை எப்போது? மத்திய அரசுத் துறை அதிகாரிகள் தகவல்

Posted: 05 Mar 2015 11:56 AM PST

இலங்கை-தமிழக மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்கிற விவரங்களை மத்திய அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுவிப்பு

Posted: 05 Mar 2015 11:56 AM PST

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்களால் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டதாக வியாழக்கிழமை தகவல் வெளியானது.

செளதாலாவுக்கு 10 ஆண்டு சிறை: உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

Posted: 05 Mar 2015 11:54 AM PST

ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா, அவரது மகன் அஜய் செளதாலா உள்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கை: ஆம் ஆத்மி மூத்த தலைவர் தாக்கு

Posted: 05 Mar 2015 11:51 AM PST

ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவாகரங்கள் குழுவில் இருந்து யோகேந்திர யாதவையும், பிரசாந்த் பூஷணையும் மேலிடம் நீக்கிய நடவடிக்கை, தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மயங்க் காந்தி தெரிவித்தார்.

நிலக்கரித் தேவைக்காக 2 சுரங்கங்களைக் கோருகிறது தமிழக மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனம்

Posted: 05 Mar 2015 11:50 AM PST

தமிழக அனல் மின் நிலையங்களின் நிலக்கரித் தேவைக்காக 2 சுரங்கங்களைக் கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனம் ஏலத்தில் பங்கேற்றுள்ளது.

5 நாள்களில் அரசியலுக்குத் திரும்புவார் ராகுல்

Posted: 05 Mar 2015 11:50 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துவதற்காக, பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்காமல் விடுப்பில் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 5 நாள்களில் தீவிர அரசியலுக்குத் திரும்புவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கமல் நாத் கூறினார்.

ரயில் நிலையங்களில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்க புதிய நடைமுறைகள்: மேனகா காந்தி தொடக்கி வைத்தார்

Posted: 05 Mar 2015 11:49 AM PST

ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு, உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான புதிய நடைமுறைகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி தொடக்கி வைத்தார்.

விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்: வருமான உச்ச வரம்பு உயர்வு

Posted: 05 Mar 2015 11:47 AM PST

இயற்கைச் சீற்றங்கள் உள்பட பல்வேறு சம்பவங்களில் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண நிதி பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

தென்னை உற்பத்தி நிறுவனம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 05 Mar 2015 11:34 AM PST

தஞ்சாவூரில் தென்னை உற்பத்தி நிறுவனம் அமைக்க வேண்டும் என மக்களவையில் தஞ்சாவூர் தொகுதி உறுப்பினர் கு. பரசுராமன் வலியுறுத்தினார்.

ஆதனூரில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 05 Mar 2015 11:34 AM PST

பேராவூரணியை அடுத்த ஆதனூரில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (மார்ச் 7) நடைபெறுகிறது.

அதிக விலைக்கு பொருள் விற்ற 20 கடைகளுக்கு அபராதம்

Posted: 05 Mar 2015 11:34 AM PST

 தஞ்சாவூர் நகரில் அதிக விலைக்கு பொருட்களை விற்ற கடைகள் மற்றும் பொட்டலப் பொருள் அறிவிப்புகள் இல்லாமல் விற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

காசோலை மோசடி: முன்னாள் ராணுவ வீரருக்கு 6 மாதம் சிறை

Posted: 05 Mar 2015 11:33 AM PST

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அழுக்கு ரூபாய்களை ஐஓபி கிளைகளில் இன்று மாற்றலாம்

Posted: 05 Mar 2015 11:33 AM PST

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கிளைகளில் அழுக்கடைந்த நோட்டுகளை மாற்றும் முகாம் வெள்ளிக்கிழமை (6-ஆம் தேதி) நடைபெறுகிறது.

பிளஸ் 2 தேர்வு14,722பேர் எழுதினர்

Posted: 05 Mar 2015 11:33 AM PST

திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகள் 14,722 பேர் பிளஸ் 2 தேர்வை எழுதினர். பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 31-ம் தே தி வரை நடைபெறுகிறது.

மாசி மகம்: நாகப்பட்டினத்தில் தீர்த்தவாரி

Posted: 05 Mar 2015 11:32 AM PST

நாகப்பட்டினத்தில் மாசிமகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. பெüர்ணமியில் வரும் மக நட்சத்திரத்தில் கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடுவதும், அந்நாளில்

"பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பாகிஸ்தானே'

Posted: 05 Mar 2015 11:32 AM PST

பயங்கரவாதத் தாக்குதல்களில் அதிகம் பாதிப்புக்குள்ளானது பாகிஸ்தான் நாடு தான் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™