Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மதன் கார்க்ி தொடர்பான கணினி செய்திகள்

Posted: 05 Mar 2015 10:41 AM PST

சிங்கப்பூரில் நடக்கும் இணைய மாநாட்டில் கட்டுரை அளிக்கப்போவதாக வந்துள்ள செய்தியினை ஏற்க மறுத்து நேற்று இன்ஃபிட்டில் செய்தி வந்துள்ளது. தமிழ் எழுத்துகளுக்கு மாற்றெழுத்து அளிப்பதை யாரும் ஏற்கவில்லை.அவர்களாக அவர்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும்முறை.கணினி வல்லுநர் பலர் ஈகரையில் உள்ளாரே! விடை சொல்வார்களா! அவர்களுக்கு 247 எழுத்து-குறியீடு கற்பது கஷ்டம்போலத் தெரிகிறது.அவ்வளவுதான் சொல்ல இயலும்.அழகாக கணினியிலும்,ஃபோனிலும் தமிழ் வரவில்லையா?வராதவர்கள் எப்படி வரவில்லை எனச் சொல்லலாம் இல்லையா?இதோ கிருஷ்ணம்மா ...

வரலாற்றில் இன்று - மார்ச்

Posted: 05 Mar 2015 10:32 AM PST

கணினியில் வைரஸ் தங்கும் இடங்கள்

Posted: 05 Mar 2015 09:35 AM PST

பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கணினியில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்குள்ளாகவே சென்று, அங்கிருந்தே இயங்க ஆரம்பிக்கும். அதன் இயக்கத்தையும் முடக்கி வைக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸ் புரோகிராம்கள் தங்கும் இடங்களை நம்மால், நாமாகவே தேடி அறிய முடியும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தேடுவதைக் காட்டிலும் நாமும் தேடி அவற்றை அறிந்து நீக்க முடியும். வாரம் ஒரு முறை இந்த தேடும் வேலையை மேற்கொண்டால், திடீரென ...

மின்னல்

Posted: 05 Mar 2015 09:34 AM PST

மதியும் அழகு புஷ்பமும் அழகு ஏழ வர்ண வானவில்லும் அழகு காதல் வரும் முன்னே! சருகுகள் அசையும் சத்தம் பறவைகளுக்கு சங்கிதம், அவள் புன்னகை சப்தஸ்வரங்கள் . என் மனதை பறித்த விழியழகி சொப்பனங்களில் தூக்கு கயிறு இடுகிறாள். நான் கவிதை எழதும் போது உன் பெயரை அழுத்தி எழுதினால் வலிக்குமென்று இறகால் தடவுகிறேன். மண் நிலவை நினைக்க விண் நிலவு மின்னல் வெட்டுகிறது. அவள் எண்ணங்களும் மின்னல்தான்.

ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம்

Posted: 05 Mar 2015 08:59 AM PST

ஷீரடியில் ஒருநாள் கூட்டத்தோடு நின்றிருந்த கோயில் பூஜாரிமேல் அருளாவேசம் வந்தது. மக்கள் படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டே பூஜாரியைப் பார்த்தார்கள். பூஜாரி முழங்கினார். இந்த இளைஞன் யார் என்று தெரிந்துகொள்ள, இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டிப் பாருங்கள்! இதைக் கேட்ட இளைஞன் கலகலவென்று நகைத்தான். அப்படியே ஆகட்டும். தோண்டுங்கள்! என்றவாறே வேப்பமரத்தை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். சிலர் ஓடோடிப்போய் கடப்பாரையை எடுத்துவந்து வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்ட ...

பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்

Posted: 05 Mar 2015 08:50 AM PST

இந்துஜா, பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள், பெங்களூருவை சேர்ந்த இந்துஜா என்ற தமிழ் பெண் தனது திருமணத்துக்காக இணையதளம் தொடங்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள `புரட்சிகர' நிபந்தனைகள் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத் தீயாக பரவியுள்ளது. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இந்துஜாவின் பெற்றோர், தங்கள் மகளுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்து வைக்க திட்ட மிட்டுள்ளனர். எனவே தமிழகத் தில் உள்ள தங்களது உறவினர் கள் மத்தியில் மணமகனை தேடி யுள்ளனர். நல்ல வரன் அமையாத தால் செய்தித்தாள்களிலும், திருமணத்துக்கான ...

நீ அழகுதான், ஆனா முட்டாளாக இருக்கியே…!

Posted: 05 Mar 2015 08:47 AM PST

- நீ அழகுதான், ஆனா முட்டாளாக இருக்கியே…! – அழகா இருக்கறதாலதான் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிட்டீங்க… முட்டாளா இருக்கிறதாலதான் நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..!! – -விஜயலட்சுமி – —————————————— – பைக்கை ஸ்பீடா ஓட்டாதீங்க…எனக்குப் பயமா இருக்கு…! – பயமாயிருந்தா என்னைப்போல் கண்ணை மூடிக்க…!! – ச.ஆ.கேசவன் – ——————————————– – உங்க டூத்பேஸ்ட்ல உப்பும் எலுமிச்சையும் இருக்கா..? – ஏன் லெமன் சாதம் கட்டித்தரப் போறீங்களா..?? – எம்.ஏ.நிவேதா – ——————————————- – ஊழலுக்கு ...

நல்லது செய்யமாட்டான் ,கங்கண்ணா

Posted: 05 Mar 2015 08:46 AM PST

நல்லது செய்யமாட்டான் ,கங்கண்ணா கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் நாகப்பா. முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது பெங்களூரு சதாசிவநகரில் தனியார் நிறுவன பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது காவேரி திரையரங்கம் எதிரே ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி கிடைக்காமல் திணறியது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பசவராஜ், நாகப்பாவை சாலையில் குறுக்கே இருக்கும் தடுப்பை தள்ளி வைக்குமாறு கேட்டுள்ளார். ...

அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை

Posted: 05 Mar 2015 06:45 AM PST

இந்தியாவில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் ...

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Posted: 05 Mar 2015 05:51 AM PST

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்



மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

கொடியவன் முகேஷ் சிங் - இப்படி ஒரு மன உணர்வா?

Posted: 05 Mar 2015 03:40 AM PST

கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி டெல்லியில் நடந்த 23 வயது மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் கற்பழித்து, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட துடிதுடிப்பு இன்னும் மாறவில்லை. அதன் எதிரொலியாகத்தான் நாடு முழுவதும் இன்று பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2013–ம் ஆண்டு பெண்கள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதன்தொடர்ச்சியாக இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ...

குழந்தைகளுக்கான கூகுள் சேவை YouTube Kids

Posted: 05 Mar 2015 02:30 AM PST

அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில், சென்ற திங்கள் கிழமை, குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தவென, யு ட்யூப் கிட்ஸ் (YouTube Kids) என்ற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இயங்குவதற்கென தயாரித்து வழங்கியுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், ...

கடும் எதிர்ப்பையும் மீறி, பாலியல் பலாத்காரம் தொடர்பான ஆவணப்படத்தை ஒளிபரப்பியது பி.பி.சி.

Posted: 05 Mar 2015 01:57 AM PST

டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் பின்னர் சீர்திருத்த பள்ளியில் ...

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Posted: 05 Mar 2015 01:52 AM PST

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ...

2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் கண்டுபிடிப்பு

Posted: 05 Mar 2015 01:49 AM PST

'2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் முசாஷி கண்டுபிடிக்கப்பட்டது' மைக்ரோசாப்ட் இணைநிறுவனர்  பால் ஆலன் அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அருகே உள்ள சிபுயான் கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் (3,280ft)  மேற்பட்ட ஆழத்தில், 70 ஆண்டுகளுக்கு முன்பாக 2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் முசாஷி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பால் ஆலன் அறிவித்துள்ளார். கப்பலின் உதிறி பாகங்கள் அடங்கிய போட்டோவுடன் தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். ...

காகிதப் பூனைகள்…!! -Mano Red

Posted: 05 Mar 2015 01:12 AM PST

தாளில் வரையப்பட்ட பூனை, வெள்ளைத்தாளை பாலாய் நினைத்து குடித்ததை ஒத்திருந்தது அறிவிலி மனம்…!! இல்லாத ஒன்றை இருப்பதாய் நினைத்து, வீதியில் சென்ற விதியை பாதியில் இடைமறித்து ஊதியே பெரிதாக்கியிருந்தது..!! தடங்கலின்றி பாய்வதற்கான தட்பவெப்ப நுட்பமெல்லாம் மாறிப் போயிருந்தது, விட்டத்தை பார்த்ததில் தொட்டதும் கைவிட்டிருந்தது..!! வெற்றி பெறா நிலையின் வெறுமையைக் குறிக்கும் வெற்றிடமும், அதன் பெயரை தக்கவைக்க வெற்றிடமாகவே வெற்றி பெற்றிருந்தது…!! முன்னேற விடாத செயல் தடுப்புகள் எல்லாம் விடுப்பில் ...

நட்புடன்....

Posted: 05 Mar 2015 01:11 AM PST

நித்தம் சிலநேரம் எங்கள் கூட்டம் கலையாது !
நட்பைவிடவொன்று பெரிதும் எங்கள் வாழ்வில் கிடையாது !
சிறகுகள் இல்லா பறவைகள் !
எங்கள் வானம் கல்லூரி !
இரவுகள் கூட வெளிச்சங்களாகும்
எங்கள் உலகத்தில்...!

பாடிய முதல் பாட்டு

Posted: 04 Mar 2015 09:58 PM PST

- -  பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா. -  டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. -  பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்: "ஜாதகம்' -  ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 04 Mar 2015 08:50 PM PST

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 04 Mar 2015 08:48 PM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்

Posted: 04 Mar 2015 08:42 PM PST

கற்பையே இழந்திருக்கலாம்!

அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™