Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் மோதல் வெடித்தது: உயர்மட்ட குழுவில் இருந்து அதிருப்தியாளர்கள் நீக்கம்

Posted:

புதுடில்லி: சில நாட்களுக்கு முன், டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சியில், பயங்கர மோதல் வெடித்துள்ளது. கட்சியின் ஆரம்ப கால தலைவர்கள் இருவர், கெஜ்ரிவாலுக்கு எதிராகச் செயல்பட்டதால், உயர்மட்டக் குழுவில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர். இதனால், அக்கட்சியும், பிற தேசியக் கட்சிகள் போல, 'ஒரு தலைவர்புகழ் பாடும் கட்சியாக மாறிவிட்டது' என, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயுடன் துவக்கத்தில் சேர்ந்திருந்த கெஜ்ரிவால், 2012ல் தனிக்கட்சி துவக்கியதும், அவருடன் சேர்ந்து, கட்சி வளர்ச்சிப் ...

விவசாயிகள் கடன் தள்ளுபடியை திரும்ப கேட்க கூடாது: கருணாநிதி கோரிக்கை

Posted:

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட விவசாயிகளின் கடனை திரும்ப கேட்கக் கூடாது' என, தமிழக அரசுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., அரசு தள்ளுபடி செய்த விவசாய கடனை, ஒன்பதாண்டுகள் கழித்து, திடீரென, இப்போது அசல் மற்றும் வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள, சில கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமேயானால், தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த சுசீலா என்பவர், நடுக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் ...

ஆட்டம் போடும் அமைச்சர்களின் பி.ஏ.,க்கள்: தூக்கி எறிய ஜெ., உத்தரவு

Posted:

அமைச்சர்களின் செயல்பாடுகளில், அதிருப்தி அடைந்துள்ள ஜெயலலிதா, அவர்களிடம் கோப முகம் காட்டியதோடு, சில அமைச்சர்களின் பி.ஏ.,க்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அனைத்து அமைச்சர்களும், தவறாமல் தலைமைச் செயலகம் வந்தனர். ஜெயலலிதா வரும்போது, அவரை வரவேற்கவும், அவர் புறப்படும்போது வழியனுப்பவும், தவறாமல் ஆஜராவர். தங்களை சந்திக்க வருவோரிடம், மிகவும் பணிவுடன் நடந்தனர். அவர்களின் பி.ஏ.,க் களும் அடக்கி வாசித்தனர். இந்நிலைமை, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்த பிறகு, தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலான ...

ரிசர்வ் வங்கியின் 'ரெப்போ' வட்டி வீதம் திடீர் குறைப்பு: தனி நபர், வாகனம், வீட்டு கடனுக்கு வட்டி குறையும்

Posted:

புதுடில்லி: ரிசர்வ் வங்கி, நேற்று, திடீரென வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டி வீதத்தை, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், இரு முறை வட்டி குறைக்கப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால், தனிநபர், வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் வட்டி வீதங்கள் குறையும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்த திட்டங்கள், பணவீக்க குறைவு போன்றவற்றால், ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே கடன் வாங்கியவர்களின், மாதாந்திர தவணை (இ.எம்.ஐ.,) சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைப்பு:
ரிசர்வ் வங்கி கவர்னர் ...

பி.பி.சி., பேட்டியை ஒளிபரப்ப அரசு தடை! பேட்டிக்கு அனுமதி அளித்தது சுஷில்குமார்?

Posted:

புதுடில்லி: தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள, டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு குற்றவாளியிடம், டில்லி திகார் சிறைக்கு சென்று பேட்டி எடுத்த, பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் பேட்டியை ஒளிபரப்ப, மத்திய அரசு நேற்று தடை விதித்தது. திகார் சிறைக்குள் சென்று, பேட்டி எடுத்த விவகாரம், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்று பலத்த விவாதத்தை ஏற்படுத்தியது. விவாதங்களுக்கு பதில்அளித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: அந்த தகவல் கிடைத்த உடனேயே நான் அதிர்ச்சி அடைந்தேன். இது எவ்வாறு சாத்தியமாயிற்று என குழப்பம் அடைந்தேன். உடனடியாக., சிறைத்துறை ஐ.ஜி.,யை ...

8 மாநில காங்., தலைவர்கள் பதவி ஆட்டம்: துணை தலைவர் ராகுல் அதிரடி முடிவு

Posted:

புதுடில்லி: கேரளா, ம.பி., உள்ளிட்ட எட்டு மாநில காங்., தலைவர்களின் செயல்பாடுகள் மீது, துணைத் தலைவர் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார். இவர்களில் சிலரின் பதவி, விரைவில் பறிக்கப்படும் என, தகவல் வெளியாகிஉள்ளது.நடவடிக்கை: லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, காங்., மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், இரண்டு வார விடுமுறையில் இருப்பதாக கூறப்பட்டாலும், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதன் அடையாளமாகவே, சமீபத்தில் குஜராத் உட்பட, ஐந்து மாநில காங்., ...

கறுப்பு பணத்தை ஊக்குவிக்கும் வங்கிகளுக்கு வருகிறது 'ஆப்பு'

Posted:

புதுடில்லி: ''தனிநபர்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, கறுப்புப் பணமாக மாற்றும் முயற்சிக்கு ஒத்துழைக்கும், வங்கிகள், நிதி நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்,'' என, மத்திய நிதித் துறை செயலர், சக்திகந்ததாஸ் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் சமீபத்தில் சமர்ப்பித்த பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ள படி, கறுப்புப் பணத்தை கண்டறியவும், கறுப்புப் பணம் உருவாகாமல் தடுக்கவும், கடும் சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. பார்லிமென்டின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அந்த மசோதாக்கள் ...

ஸ்ரீரங்கம் வாக்காளர் நடவடிக்கை: சர்ச்சையானது ஆளுங்கட்சி வெற்றி

Posted:

ஸ்ரீரங்கம் வாக்காளர், அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு கொடுத்த பணத்தை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியதன் மூலம், இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதை உறுதிபடுத்தி உள்ளார். இதனால், ஆளுங்கட்சியின் வெற்றி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், அவரது எம்.எல்.ஏ., பதவி பறிபோனது.இதனால் காலியான, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு, கடந்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இத்தேர்தலில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பணத்தை வாரி இறைத்தனர்.அதேபோல், தி.மு.க.,வினரும் பணம் ...

முக்கிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி இல்லை: தமிழக அதிகாரிகள் ஏமாற்றம்

Posted:

தமிழக ஆறுகளை இணைக்கவும், கடல் நீரை குடிநீராக்கவும், மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது, தமிழக அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். தமிழகத்திற்கு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தினார்.* தமிழகத்தில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், நென்மேலி மற்றும் மீஞ்சூரில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, சென்னையில், ...

எங்கே உள்ளது ஜெ.,வுக்கு ரூ.66 கோடி சொத்து: அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி

Posted:

பெங்களூரு: ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 66 கோடி ரூபாய் சொத்து, எங்கே உள்ளது,'' என, அரசு வழக்கறிஞரிடம், நீதிபதிகுமாரசாமி கேள்வி எழுப்பினார்.கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங், 'மெடோ அக்ரோ பார்ம்' நிறுவன வழக்கில், தமிழக கூடுதல் வேளாண் துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் சாட்சியத்தில் கூறியதை படித்தார்.மெடோ அக்ரோ பார்ம் நிறுவனத்துக்காக, சிவா, ஜெயராமன் ஆகியோர், திருநெல்வேலி மாவட்டம், வீராங்குளம், சேரகுளம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™