ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஹெச்.ஐ.வி. கிருமியின் இரண்டு உட்பிரிவுகளுடைய ஊற்றுக்கண் கேமரூன் கொரில்லாக்கள்
- 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால தடயங்கள் கண்டெடுப்பு
- ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
- காப்பி அருந்துவதால் இரத்தக் குழாய் அடைப்பை தவிர்க்க முடியும்
- பக்தி - கவிதை
- ஆட்டுக்குட்டி கழுத்திலும் அம்மாவின் படம்!
- ஜோசப் ஸ்டாலின் இறந்த தினம்: மார்ச் 5- 1953
- அமெரிக்க பள்ளியில் இனவெறி!!!
- வஜ்ரம் - திரை விமர்சனம்
- தமிழை எளிமையாக கற்க 'ஐ' தமிழ்: மதன் கார்க்கியின் புது கான்சப்ட்!
- ஆன்டிபயாடிக் ஆபத்துக்கு அணைபோடும் பப்பாளி!
- சரியாக உட்காருங்கள்
- மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்றால் சிறை
- வருங்கால குளியல் இப்பிடிதான் .
- இனி ஸ்மார்ட்போனை சார்ஜரே இல்லாமல் சார்ஜ் செய்யலாம்!
- சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்
- பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம்
- "தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்?
- வண்ணத்துப் பூச்சி: நீண்ட தூரப் பயணம்!
- பிறவிக் குருடனும் புத்தரும்
- அவரை நக்கலா நடப்பு சாம்பியன்-னு சொல்றாங்களாம்...!
- தயிர் சாதம் கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம்
- மூலநோய் - Piles - Hemorrhoids
- `கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும்
- அணிகலன் அணிவதால் பெண் அழகாவதில்லை..!
- கலைகளும் களைகளும்
- வெள்ளித் திரையில் விரைவில் உங்கள் கிரிக்கெட் ஹீரோ…!
| ஹெச்.ஐ.வி. கிருமியின் இரண்டு உட்பிரிவுகளுடைய ஊற்றுக்கண் கேமரூன் கொரில்லாக்கள் Posted: 04 Mar 2015 01:41 PM PST எய்ட்ஸ் நோயை விளைவிக்கும் ஹெச் ஐ வி வைரஸின் இரண்டு உட்பிரிவுகள் தென்மேற்கு கேமரூனில் உள்ள கொரில்லாக்களிடமிருந்து வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரில்லா குரங்கு அந்த வைரஸின் மற்ற இரண்டு உட்பிரிவுகள் அதே நாட்டை சேர்ந்த சிம்பான்ஸிகளிடமிருந்து வந்திருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே தற்போதைய கண்டுபிடிப்பால், ஏய்ட்ஸை விளைவிக்கும் வைரஸின் அனைத்து உட்பிரிவுகளுமே எங்கிருந்து வந்தது என்பது தெரிவியவந்துள்ளது. மனிதர்களிடையே பெரிய அளவில் நோய்களை பறப்பும் திறனுள்ள ஹெச் ... |
| 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால தடயங்கள் கண்டெடுப்பு Posted: 04 Mar 2015 01:28 PM PST கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வரலாற்றுத் தடயங்கள், கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் வாழ்விடப் பகுதி ஆகியவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விருத்தாசலத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முதனை கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள செம்பையனார் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள சின்ன ஓடையில் சிலர் மண் தோண்டும் போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதை அறிந்த இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் ... |
| Posted: 04 Mar 2015 01:27 PM PST ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ... |
| காப்பி அருந்துவதால் இரத்தக் குழாய் அடைப்பை தவிர்க்க முடியும் Posted: 04 Mar 2015 01:25 PM PST இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 காப்பிகள் வரை அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்று தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான ஆட்களை ஸ்கான் செய்து ஆராய்ந்த இந்த விஞ்ஞானிகள்,தினமும் மிதமான அளவு காப்பியை அருந்தி வருபவர்களுக்கு இரத்த குழாய்களில் கொழுப்பு பொருட்கள் படிவதற்கான ஆரம்பமான, ''கல்சியம் படிதல்'' குறைவாகக் காணப்பட்டதாக கூறியுள்ளனர். காப்பி அருந்துவதற்கும் இதய நோய்களுக்குமான ... |
| Posted: 04 Mar 2015 01:24 PM PST ஆட்டைக் கும்பிடு மாட்டைக் கும்பிடு நாயைக் கும்பிடு நரியைக் கும்பிடு பாம்பைக் கும்பிடு பருந்தைக் கும்பிடு எலியைக் கும்பிடு யானையைக் கும்பிடு குரங்கைக் கும்பிடு கோட்டானைக் கும்பிடு விடாதே.. பிடி வெட்டு, குத்து அதோ... ஒரு "மனுஷன்...!" - கரடிகுளம் ஜெயா பாரதிப்ரியா |
| ஆட்டுக்குட்டி கழுத்திலும் அம்மாவின் படம்! Posted: 04 Mar 2015 01:23 PM PST ஆட்டுக்குட்டி கழுத்திலும் அம்மாவின் படம்! தேனியில் திருமணம் நடந்த அதே நேரத்தில் திண்டுக்கல்லில் 67 ஜோடிகளுக்கு இலவசத் திருமணத்தை நடத்தினார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். திருமணம் முடிந்த ஜோடிகளுக்கு கட்டில், பீரோ என்று சீர்வரிசைப் பொருட்களும் தயாராக இருந்தன. அத்துடன் ஒரு ஜோடி ஆட்டுக் குட்டிகளும் கொடுக்கப்பட்டன. எல்லா ஆடுகளின் கழுத்திலும் ஜெயலலிதா படத்தையும் கட்டித் தொங்கவிட்டிருந்தனர். கல்யாணத்துக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார் ஜெயலலிதா. நேரில் வந்து வாழ்த்தினார் ... |
| ஜோசப் ஸ்டாலின் இறந்த தினம்: மார்ச் 5- 1953 Posted: 04 Mar 2015 12:44 PM PST லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது. அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. ... |
| Posted: 04 Mar 2015 10:32 AM PST அமெரிக்க பள்ளியில் இனவெறி: சீக்கிய சிறுவனை தீவிரவாதி என கேலி செய்யும் சக மாணவர்கள் - இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு அமெரிக்க பள்ளி ஒன்றில் சீக்கிய சிறுவனை சக மாணவர்கள் ஆப்கானிஸ்தான் தீவிரவாதி என்று கூறி கேலி செய்யும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இணையத்தில் வெளியாகி யுள்ள அந்த வீடியோவை இது வரை ஒன்றரை லட்சம் பேர் பார்த்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் மனதில் இனவெறி எனும் நஞ்சை விதைக்கும் இது போன்ற இனவெறி செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ... |
| Posted: 04 Mar 2015 10:18 AM PST பொய்யான குற்றச் சாட்டுடன் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் படுகிறார்கள் நான்கு சிறுவர் கள். நால்வருமே நண்பர்கள். சிறுவர்களைக் கொடுமைப் படுத்தும் இரண்டு சிறைக் காவலர் களை, இந்த நால்வரும் நையப் புடைக்கிறார்கள். இவர்களது திறன் அறிந்த மாவட்டக் காவல் அதிகாரி, இந்தச் சிறுவர்களைத் தப்பிக்க வைக்கிறார். அதற்குக் கைமாறாக மாநிலக் கல்வி அமைச்சரைக் கடத்தச் சொல்கிறார். ஆனால் அமைச்சருக்குப் பதிலாக அவரது மகளைக் கடத்திவிடுகிறார்கள். காவல் அதிகாரி ஏன் அமைச் சரைக் கடத்தச் சொன்னார்? அமைச்சரைக் கடத்தாமல் அவர்கள் ... |
| தமிழை எளிமையாக கற்க 'ஐ' தமிழ்: மதன் கார்க்கியின் புது கான்சப்ட்! Posted: 04 Mar 2015 09:44 AM PST இப்பொழுது நாம் எழுதி படித்துக் கொண்டிருக்கும் தமிழ் வடிவ மானது பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தது. மொழியின் ஒலி மாறுவதில்லை. ஆனால் காலத்திற்கேற்ப எழுத்தின் வடிவம் மாறி வந்துகொண்டிருக்கிறது. கல்வெட்டில் இருந்த தமிழும், ஓலைச் சுவடிகளில் இருந்த தமி ழும், அச்சகங்கள் வந்தபோது அதற்காக மாறிய தமிழ் எழுத்துக் களையும் நாம் அறிவோம். கடைசியாக எழுத்துக்களை சீரமைத்து கொடுத்தவர் பெரியார். சில காலமாகவே வா. செ. குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் எழுத்துச் சீரமைப்பை பற்றி பேசி வந்திருக்கிறார்கள். ... |
| ஆன்டிபயாடிக் ஆபத்துக்கு அணைபோடும் பப்பாளி! Posted: 04 Mar 2015 08:18 AM PST எங்கெங்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பழமான பப்பாளி, அள்ளி அள்ளித் தரும் பலன்கள் எண்ணிலடங்காதது! *பொதுவாக, மலம் சிக்கல் இன்றி வெளியேறினாலே, பெரும்பாலான நோய்களைத் தள்ளி வைக்க முடியும். இதற்கு கைகொடுக்கிறது... பப்பாளி. இது மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும். * பப்பாளி, ... |
| Posted: 04 Mar 2015 05:00 AM PST முதுகுவலி என்பது நம் மூதாதையர்களுக்கு என்ன என்றே தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் இப்போதுள்ள இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்துள்ள நோயாக இருப்பது முதுகுவலிதான். தவறான உட்காரும் முறை, பல மணி நேரங்கள் ஒரே நிலையில் உட்கார்ந்து கிடப்பது போன்றவைதான் முதுகுவலிக்குக் காரணங்களாகின்றன. இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதுமானதாகும். உட்காரும் போது உங்கள் முதுகை வளைக்காமல் நேராக அமருங்கள். உங்கள் தோள்பட்டைகள் பின்புறம் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். புட்டங்கள் ... |
| மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்றால் சிறை Posted: 04 Mar 2015 04:28 AM PST மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யும், அம்மாநில விலங்குகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், மாட்டிறைச்சி விற்போருக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சி செய்தபோது, 1995ம் ஆண்டு, அம்மாநில சட்டமன்றத்தில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, ... |
| வருங்கால குளியல் இப்பிடிதான் . Posted: 04 Mar 2015 03:45 AM PST [b]வருங்கால குளியல் இப்பிடிதான் .[/b] ரமணியன் |
| இனி ஸ்மார்ட்போனை சார்ஜரே இல்லாமல் சார்ஜ் செய்யலாம்! Posted: 04 Mar 2015 03:30 AM PST ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்னை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. எப்போது போனில் சார்ஜ் இல்லாமல் போனாலும் இருந்த இடத்திலேயே சார்ஜ் செய்து கொண்டு விடலாம். இதற்கு சார்ஜரே தேவை இருக்காது. அதெப்படி? என்று ஆர்வத்தோடு கேட்டீர்கள் என்றால், எல்லாம் வயர்லெஸ் செய்யும் மாயம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், ஸ்மார்ட்போன் ... |
| சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் Posted: 04 Mar 2015 03:16 AM PST - ஓவியம்- மனோ சாமிநாதன் - ஷார்ஜா ================================================================== - சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் – காந்தியடிகள் பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.- சைரஸ் காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்-ஷேக்ஸ்பியர். அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது- டேவிட்ஹ்யூம் பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபிட்சம் அடையாது -நேரு. பெண்களின் கண்ணீரே உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் ... |
| பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம் Posted: 04 Mar 2015 03:05 AM PST தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் இத்தேர்வில், முறைகேடுகளைத் தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்கி, வரும் 31ம் தேதி முடிகிறது. * நாளை, தமிழ் முதல் தாள், நாளை மறுநாள், தமிழ் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடக்கிறது. * மொத்தம், 6,256 பள்ளிகளில், 2,377 மையங்களில், 3.91 லட்சம் மாணவர்களும், 4.52 லட்சம் மாணவியரும் ... |
| "தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Posted: 04 Mar 2015 03:01 AM PST சென்னை: தி.மு.க.,வினரால் "தளபதி' என்று அன்புடன் அழைக்கப்படும் தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினுக்கு, இன்று நடக்கும் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் தலைவர் என்ற "கிரீடம்' சூட்டப்படும். தளபதி, "தல'பதி ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.,வில் பல ஆண்டுகளாக கருணாநிதியே தலைவராக இருந்து வருகிறார். கட்சியில் அவரது வாரிசாக ஸ்டாலின் வளர்க்கப்பட்டாலும், தலைவர் பதவி மட்டும் அவருக்கு கிடைத்தபாடில்லை. இப்பதவிக்காக தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கூட கூறப்பட்டதுண்டு. பின்னாளில் ... |
| வண்ணத்துப் பூச்சி: நீண்ட தூரப் பயணம்! Posted: 04 Mar 2015 02:07 AM PST - - * வண்ணத்துப் பூச்சிகள் பூச்சி வகையைச் சேர்ந்தவை. * வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை நான்கு பருவங்களைக் கொண்டது. முட்டைப் பருவம், இளம் புழு பருவம், கூட்டுப்புழு பருவம், வண்ணத்துப் பூச்சி பருவம். * வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் முட்டைகளை உடலில் இருந்து வெளிவரும் பசையால் செடிகளில் ஒட்டச் செய்யும். * புழுவாக இருக்கும் பருவத்தில் தாவரங்களைச் சாப்பிடும். * முழுமையாக வளர்ந்த புழு, தனது மேல் தோலை உரிக்கும் முன்பு மரக்கிளை அல்லது இலையில் ஒட்டி வாழும். மேல் தோல் உரிந்த ... |
| Posted: 04 Mar 2015 02:00 AM PST புத்தர் ஒரு மாபெரும் தர்க்க வாதியாக இருந்தார். அவரை தர்க்கத்தில் யாராலும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்து சாமியார்களால் அவரது கருத்துக்களை பொய் என்று நிரூபிக்க முடியவில்லை. புத்தர் தன் பிரச்சாரத்தை மேற்கொண்ட வழியில் ஒரு கிராமத்தில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவன் வெளிச்சமே இல்லை என்று வாதம் செய்தான். அவனை அந்த ஊரில் யாராலும் வெல்ல இயலவில்லை. வெளிச்சத்தை என் கையில் கொடுங்கள், அதை நான் சுவைத்துப் பார்க்கிறேன் என்று சொன்னான். இதனால் யாரும் அவனை ஜெயிக்க முடியவில்லை. புத்தர் ... |
| அவரை நக்கலா நடப்பு சாம்பியன்-னு சொல்றாங்களாம்...! Posted: 04 Mar 2015 01:47 AM PST - - தலைவர் ஏன் வெளிநடப்பு செய்யறதை குறைச்சுட்டார்...? - அவரை நக்கலா நடப்பு சாம்பியன்-னு சொல்றாங்களாம்...! - வீ.விஷ்ணுகுமார் - -------------------------------------------- - இது கண்டிப்பா உங்களுக்கு வந்த லெட்டரா இருக்காது தலைவரே...1! - எப்படிச் சொல்றே..? - முதல் வரியில, மரியாதைக்குரிய-ன்னு எழுதியிருக்கே...! - சிக்ஸ்முகம் - ---------------------------------------- - என்னதான் ஒரு பொண்ணு குடும்ப குத்துவிளக்கா இருந்தாலும், அவ தலையில திரி போட்டு விளக்கெல்லாம் ஏத்த முடியாது..! - தத்துவ ... |
| தயிர் சாதம் கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம் Posted: 04 Mar 2015 01:34 AM PST - - உங்க பொண்ணை ஒருத்தன் கூட்டிட்டு பார்க், பீச் தியேட்டர்னு சுத்தறான். நீங்க கவலைப்பட்ட மாதிரி தெரியலையே...! - நான் ஏன் கவலைப்படணும், காசை கரியாக்குற அவன் இல்ல கவலைப்படணும்... - -வி.சகிதாமுருகன் - --------------------------------------------- - என்னதான் அஞ்சல் தலை-ன்னாலும்,அதுக்கு யாரும் எண்ணெய் வச்சு தலை வாரி விட முடியாது...! - --விக் வைத்து வாழ்வோர் சங்கம் - பெ,பாண்டியன் - ------------------------------------------ - தனக்கு எதிரா சதி நடக்குதுன்னு தலைவர் எதை வச்சு ... |
| Posted: 03 Mar 2015 11:37 PM PST நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். எது மூலநோய்? சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்குச் செலுத்துகின்றன; ரத்தம் தேவையில்லாமல் ... |
| `கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் Posted: 03 Mar 2015 11:26 PM PST ன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் கூடிய மருந்து சித்த மருத்துவத்தில் உள்ளது. அதற்கு `கபசுர' குடிநீர் என்று பெயர்' என பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் தெரிவித்தனர். அக்கல்லூரி மாணவர்கள் பி.கே.ரமேஷ், ஆர். கனியமுதன், ஜானகிராம் ஆகியோர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: உலகில் தோன்றிய, தோன்றக் கூடிய அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவம் தீர்வு சொல்கிறது. தற்போது பரவிக்கொண்டிருக்கும் பல்வேறுவித காய்ச்சல்களுக்கு ... |
| அணிகலன் அணிவதால் பெண் அழகாவதில்லை..! Posted: 03 Mar 2015 11:23 PM PST - பெண்ணின் அழகு அவர்களின் நிர்மலமான நடத்தையில்தான் இருக்கிறது. அணிகலன் அணிவதால் பெண் அழகாவதில்லை..! - மகாத்மா காந்தி - ------------------------------------- - ஆதாமுக்குப் பிள்ளைகள் பிறக்கும் வரை ஆதாம்தான் உலக அழகன். ஏவாளுக்குப் பிள்ளைகள் பிறக்கும் வரை உலக அழகி ஏவாள்தான் - மில்டன் - ---------------------------------------- - பெண் இல்லாமல் ஆண் வாழ இயலாது. தாய் இல்லாமல், மனைவி இல்லாமல், சகோதரி இல்லாமல், சிநேகிதிகள் இல்லாமல் போனால் நமது வாழ்வே சூன்யமாகி விடும் - லியோ ... |
| Posted: 03 Mar 2015 09:38 PM PST அண்மையில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்கள் நமது நீதிமன்றங்களுக்குக் கூடுதல் சுமைகளாக மாறியுள்ளன. அதற்குக் காரணம், சமூக நோக்கில் எத்தகையக் காட்சிகள் தேவையானவை? எத்தகையக் காட்சிகள் தேவையற்றவை? எத்தகையக் காட்சிகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை? விதி விலக்குகளையெல்லாம் விதிகளாக்கி வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கலாமா? குறிப்பிட்ட ஒரு செய்தி அவ்வளவு பெரிய ஊடகத்தில் பொதுமைப்படுத்தப்படுவதற்கு உகந்த செய்திதானா? எது கருத்து? எது கருத்துச் சுதந்திரம்? கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எதுவரை ... |
| வெள்ளித் திரையில் விரைவில் உங்கள் கிரிக்கெட் ஹீரோ…! Posted: 03 Mar 2015 05:10 PM PST - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாராகவுள்ள 'தோனி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் ஏராளமான இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நடிக்க உள்ளனர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக வலம் வரும் இந்திய அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு, சினிமாவாக வெளிவர உள்ளது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தில், தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். தோனியின் கிரிக்கெட் சாதனைகள், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |