Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஊழல் வழக்குகளில் மேல்முறையீடுகளே இல்லாத வகையில் சட்டங்களைத் திருத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி செல்மேஸ்வர்
- பாஜக ஆட்சியில் மத நல்லிணக்கம் சீர்குலைந்துவிட்டது: ஜி.ராமகிருஷ்ணன்
- வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க இணையதளம்: அமைச்சர் ப.மோகன் தொடக்கிவைத்தார்
- குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை
- பன்றிக் காய்ச்சல்: பாதிக்கப்பட்ட பள்ளியில் கல்வி அதிகாரி ஆய்வு
- மாமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு
- சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டும்: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் தீர்மானம்
- சிபிஐ விசாரணை கோரிய அச்சுதானந்தனின் மனு தள்ளுபடி
- நவீன நகரங்களை உருவாக்க நிபுணர் குழுக்கள் அமைப்பு
- வேலைநிறுத்தம் காரணமாக இழப்பு: தமிழகம் முதலிடம்
- சொத்துக் குவிப்பு வழக்கு: தனி நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி கேள்வி
- கருப்புப் பணத்தை பதுக்க உதவும் வங்கிகள் மீதும் நடவடிக்கை
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம்
- சிறைவாசிகளுக்கு கேபிள் டிவி சேவை: குவாஹாட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு
- அரசின் செல்லிடப்பேசி பயனுரு ஆலோசனைகள்: மக்களுக்குப் போட்டி
- அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லை: மகாராஷ்டிரம் அறிவிப்பு
- எரிவாயு உருளை நேரடி மானிய திட்டத்தில் 81% வாடிக்கையாளர்கள்
- குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
- காஷ்மீர்: அமைச்சர் பொறுப்பை ஏற்க சஜ்ஜத் லோன் மறுப்பு
- ஆப்கனில் வெளியுறவுச் செயலர்
- ஐ.நா. பொதுச் செயலர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: இந்தியா வலியுறுத்தல்
- 1,600 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறை: மத்திய அரசு தகவல்
- நாகாலாந்து பயங்கரவாதிகளால் அஸ்ஸாமில் 161 பேர் பலி
- இலங்கைக்கு கூடுதல் கடன்: பன்னாட்டு நிதியம் நிராகரிப்பு
- 2014-இல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 7,086 பேருக்கு பாதிப்பு: மத்திய அரசு
- சேவை வரி விலக்கு கோரிய நடிகர் சித்தார்த் மனு தள்ளுபடி
- உலகத் தரத்திலான அங்கீகாரத்தை தமிழ் சினிமா அடையும்: இயக்குநர் மகேந்திரன்
- கல்லணையைப் புனரமைக்க விரிவான திட்ட அறிக்கை: தனியார் நிறுவனத்துக்கு ஒப்புதல்
- மாவட்ட அளவிலான முட்டை கொள்முதலுக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
- கல்லூரிகளில் அழகுப் போட்டி நடத்தத் தடை: இயக்குநர் அலுவலகம் உத்தரவு
- சமையல் எரிவாயு உருளை முன்பதிவை விநியோகஸ்தர்கள் ரத்து செய்யக் கூடாது
- ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.24 குறைவு
- சேலம் அருகே ஆட்டோ - பேருந்து மோதல்: 5 பேர் பலி
- புதுகை வந்த அமைப்புசாராத் தொழிலாளர் கூட்டமைப்பின் ஊர்திப் பிரசாரப் பயணக்குழு
- திருவரங்குளம் சிவன் கோயிலில் மாசிமகத் திருவிழா
- காவிரிப் பிரச்னை: திமுகவும் அதிமுகவும் அறிக்கைகள் மட்டுமே விடுக்கின்றன: வைகோ
- திருவையாறில் நாளை புனித இசைத் திருவிழா
- குழந்தைகள் உயர்கல்விக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
- "உடற்பயிற்சியால் தன்னம்பிக்கை வரும்'
- சி.ஐ.டி.யு. அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- தாய், சேய் நல மருத்துவ முகாம்
- ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் தற்கொலை
- ஆலங்குடி கோயிலில் இன்று மாசி மகா குரு வார விழா
- கடன் தொல்லை:ஒருவர் தற்கொலை
- டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- மார்ச் 8-ல் ஸ்கந்த சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்
- திருவாரூரில் நாளை மார்பக புற்றுநோய் சிகிச்சை முகாம்
- மதுக்கடையை அகற்றக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- 249 பேருக்கு ரூ. 59.46 லட்சம் நலத் திட்ட உதவி
- 48 விவசாயிகளுக்கு நடவு துவரை இடுபொருட்கள்
- திருமானூர் அருகேதொழிலாளி தீக்குளித்து தற்கொலை
- "மாணவர்கள் தொழில்முனைவோராக மாறவேண்டும்'
- போலி ஆவணம் மூலம் அமெரிக்க விசா பெற முயற்சி: இருவர் கைது
- அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி
- "ஜயங்கொண்டம் பகுதியில் குற்றச்செயல் புரிவோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
- ரோவர் பாலிடெக்னிக் வளாக நேர்காணல்: 60 பேர் பணி நியமனம்
- மலையாளம், ஒடிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை எதிர்த்து வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
- பிளஸ் 2 தேர்வு: புதுகையில் 18,164 பேர் எழுதுகின்றனர்
- அவதூறு வழக்கு: விஜயகாந்த், பிரேமலதா ஆஜராக உத்தரவு
- "நிச்சயமற்ற நீர்ப்பாசனத்தால் விவசாயம் பாதிக்கப்படும் நிலையை மாற்ற வேண்டும்'
- மின்னல் பாய்ந்து இருவர் பலி: 7 பேர் காயம்
- குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா
- கிங்கிணிப்பட்டியில் முதல்வரின் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
- தாக்குதலில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்: ஜெயலலிதா அறிவிப்பு
- திண்டுக்கல்லில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளியில் சிறைவைப்பு: கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை
- பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் திறந்த நிலைப் பல்கலை. வகுப்பு தொடக்கம்
- நல்லூரில் டெங்கு தடுப்பு பணிகள்
- பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் அரசின் சிறப்பு மருத்துவ முகாம்
- "ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தை ஆசிரியர்கள் தூண்ட வேண்டும்'
- வழக்கில் ஆஜராகாத ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்
- கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை தொடக்கம்
- மகாமகத்தை தேசிய திருவிழாவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்
- நாகரசம்பேட்டையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்
- இன்று மின்வாரிய குறைதீர் கூட்டம்
- பெண் தீக்குளித்து சாவு : கோட்டாட்சியர் விசாரணை
- மகளிர் வாழ்வில் மறுமலர்ச்சி
- புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
- நகைக் கடையில் சுரங்கம் அமைத்து திருட்டு
- பொதுத் தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
- ஊழலினால் ஆயபயன் என்கொல்...
- குடந்தையில் நகர திமுக செயலர்கள் கூட்டம்
- தமிழ்ப் பல்கலை.யில் மே 20-ல் தேர்வு தொடக்கம்
- நிதிநிலை அறிக்கை 2015 - IV
- "மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் 16,165 பேர் பயனடைந்துள்ளனர்'
- சோதனைச் சாவடியில் வாக்கி டாக்கி மாயம்
- விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி காருக்கு தீ வைப்பு
- வயலில் ஆடு மேய்ந்த தகராறில் பெண் அடித்துக் கொலை
- ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
- காப்பீடு, நிலக்கரிச் சுரங்க மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்
- "மனித உரிமை' பெயரில் அமைப்பு நடத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்
- பான்சரே கொலை: சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க மும்பை உயர் நீதிமன்ற இரு அமர்வுகள் மறுப்பு
- திமுக செயற்குழு இன்று கூடுகிறது
- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறுவதில் தாமதம்
- தமிழகத்தில் 3 லட்சம் செயலற்ற எரிவாயு இணைப்புகள்: 6 மாதம் பயன்படுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு
- 2ஜி, 3ஜி அலைக்கற்றை: முதல் நாளில் ரூ.60,000 கோடி ஏலம்
- நவீன நகரம் திட்டம்: தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிக்க உறுதி
- புதுக்கோட்டை
- பெண் சாதனையாளர்கள் விருது பெற அழைப்பு
- பாஸ்போர்ட்டில் முறைகேடு சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது
| Posted: 04 Mar 2015 01:40 PM PST ஊழல் வழக்குகளில் மேல்முறையீடுகளே இல்லாத வகையில் சட்டங்களைத் திருத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி செல்மேஸ்வர் கூறினார். |
| பாஜக ஆட்சியில் மத நல்லிணக்கம் சீர்குலைந்துவிட்டது: ஜி.ராமகிருஷ்ணன் Posted: 04 Mar 2015 01:39 PM PST பாஜகவின் 9 மாத கால ஆட்சியில் மத நல்லிணக்கம் சீர்குலைந்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். |
| Posted: 04 Mar 2015 01:39 PM PST பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே போலீஸாரை கண்டித்து வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க இணையதளம்: அமைச்சர் ப.மோகன் தொடக்கிவைத்தார் Posted: 04 Mar 2015 01:39 PM PST தொழிற்சாலை உரிமங்களைப் புதுப்பித்தல், தொழிலாளர் பாதுகாப்பு குறித்த இணையதளத்தை அமைச்சர் ப.மோகன் தொடக்கிவைத்தார். |
| குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை Posted: 04 Mar 2015 01:38 PM PST குரூப் 2 தேர்வு மூலம் நேரடி நியமன உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிவோருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. |
| பன்றிக் காய்ச்சல்: பாதிக்கப்பட்ட பள்ளியில் கல்வி அதிகாரி ஆய்வு Posted: 04 Mar 2015 01:37 PM PST சென்னை வேளச்சேரியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் படிக்கும் பள்ளியில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் (பொறுப்பு) ஜோஷ்வா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| மாமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 04 Mar 2015 01:36 PM PST சென்னை மாநகராட்சி 38-வது வார்டு உறுப்பினர் எஸ்.சந்தானம், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டும்: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் தீர்மானம் Posted: 04 Mar 2015 01:24 PM PST அஸ்ஸாம் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, அந்த மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| சிபிஐ விசாரணை கோரிய அச்சுதானந்தனின் மனு தள்ளுபடி Posted: 04 Mar 2015 01:23 PM PST சூரிய மின் தகடு ஊழல் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, கேரள சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரான அச்சுதானந்தன் தாக்கல் செய்த பொது நல மனுவை, அந்த மாநில உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. |
| நவீன நகரங்களை உருவாக்க நிபுணர் குழுக்கள் அமைப்பு Posted: 04 Mar 2015 01:23 PM PST அஜ்மீர், அலகாபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக உருவாக்குவதற்கான செயல் திட்டங்களை உருவாக்கும் வகையில் நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சக வட்டராங்கள் தெரிவிக்கின்றன. |
| வேலைநிறுத்தம் காரணமாக இழப்பு: தமிழகம் முதலிடம் Posted: 04 Mar 2015 01:22 PM PST வேலைநிறுத்தம், போராட்டம் ஆகியவற்றின் காரணமாக, கடந்த ஆண்டு மனித வேலை நாள்கள் இழப்பு ஏற்பட்டதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. |
| சொத்துக் குவிப்பு வழக்கு: தனி நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி கேள்வி Posted: 04 Mar 2015 01:22 PM PST ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று, அரசு வழக்குரைஞருக்கு கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். |
| கருப்புப் பணத்தை பதுக்க உதவும் வங்கிகள் மீதும் நடவடிக்கை Posted: 04 Mar 2015 01:21 PM PST கருப்புப் பணத்தை பதுக்குவது தொடர்பாகக் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்தின் கீழ், குற்றம் புரிபவர்கள் மட்டுமல்லாது அவர்கள் குற்றம் புரிவதற்கு உடந்தையாக இருந்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் Posted: 04 Mar 2015 01:21 PM PST நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ முழுவீச்சில் விசாரணை மேற்கொள்ளாததற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. |
| சிறைவாசிகளுக்கு கேபிள் டிவி சேவை: குவாஹாட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Mar 2015 01:21 PM PST கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள், பிற நிகழ்ச்சிகளைக் கைதிகள் பார்ப்பதற்கு வசதியாக குவாஹாட்டி மத்திய சிறையின் பொதுப் பகுதியில் உள்ள தொலைக்காட்சிகளுக்கு கேபிள் டிவி இணைப்பு கொடுக்குமாறு குவாஹாட்டி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| அரசின் செல்லிடப்பேசி பயனுரு ஆலோசனைகள்: மக்களுக்குப் போட்டி Posted: 04 Mar 2015 01:20 PM PST பிரதமர் அலுவலகத்தை மக்கள் தொடர்பு கொள்வதற்கான செல்லிடப்பேசி பயனுரு (ஆப்ஸ்)மென்பொருள் தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பொதுமக்கள் வழங்குவதற்கான போட்டியை அரசு புதன்கிழமை அறிவித்தது. |
| அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லை: மகாராஷ்டிரம் அறிவிப்பு Posted: 04 Mar 2015 01:20 PM PST மகாராஷ்டிரத்தில் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று அந்த மாநில அரசு புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. |
| எரிவாயு உருளை நேரடி மானிய திட்டத்தில் 81% வாடிக்கையாளர்கள் Posted: 04 Mar 2015 01:19 PM PST சமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டத்தில், மொத்தமுள்ள 14.5 கோடி வாடிக்கையாளர்களில் இதுவரை 81 சதவீதத்தும் அதிகமானோர் (11.74 கோடி பேர்) இணைந்துள்ளனர் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
| குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் Posted: 04 Mar 2015 01:15 PM PST குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்தை சட்டமாக்கும் மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. |
| காஷ்மீர்: அமைச்சர் பொறுப்பை ஏற்க சஜ்ஜத் லோன் மறுப்பு Posted: 04 Mar 2015 01:14 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் அமைச்சராகப் பதவியேற்ற சஜ்ஜத் லோன், தனக்கு ஒதுக்கப்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்புத் துறைக்கான பொறுப்புகளை ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 04 Mar 2015 01:13 PM PST "சார்க் யாத்திரை'யின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார். |
| ஐ.நா. பொதுச் செயலர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: இந்தியா வலியுறுத்தல் Posted: 04 Mar 2015 01:03 PM PST ஐ.நா. பொதுச் செயலாளர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. |
| 1,600 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறை: மத்திய அரசு தகவல் Posted: 04 Mar 2015 01:03 PM PST நாடு முழுவதும் 1,600க்கும் மேற்பட்ட குடிமைப் பணி அதிகாரிகள்(ஐ.ஏ.எஸ்.) பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| நாகாலாந்து பயங்கரவாதிகளால் அஸ்ஸாமில் 161 பேர் பலி Posted: 04 Mar 2015 01:02 PM PST அஸ்ஸாம் மாநிலத்தில் 1972-ஆம் ஆண்டு முதல் இதுவரை 161 பேர், நாகாலாந்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்று அஸ்ஸாம் சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் ராக்கிபுல் ஹுசைன் தெரிவித்தார். |
| இலங்கைக்கு கூடுதல் கடன்: பன்னாட்டு நிதியம் நிராகரிப்பு Posted: 04 Mar 2015 01:01 PM PST இலங்கையில் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட கடன் சுமையை சீரமைக்க, புதிதாக 400 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க வேண்டும் என்ற சிறீசேனா அரசு விடுத்த கோரிக்கையை பன்னாட்டு நிதியம் நிராகரித்துவிட்டது. |
| 2014-இல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 7,086 பேருக்கு பாதிப்பு: மத்திய அரசு Posted: 04 Mar 2015 01:01 PM PST கடந்த 2014-ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 7,086 பேர், பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. |
| சேவை வரி விலக்கு கோரிய நடிகர் சித்தார்த் மனு தள்ளுபடி Posted: 04 Mar 2015 12:59 PM PST கிராமியக் கலைஞர்களுக்கு சேவை வரி விலக்கு வழங்குவது போல, திரைப்பட நடிகர்களுக்கும் வரி விலக்கு அளிக்கக் கோரி நடிகர் சித்தார்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| உலகத் தரத்திலான அங்கீகாரத்தை தமிழ் சினிமா அடையும்: இயக்குநர் மகேந்திரன் Posted: 04 Mar 2015 12:59 PM PST உலகத் தரத்திலான அங்கீகாரத்தை தமிழ் சினிமா அடையும் என்று திரைப்பட இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார். மேலும், தமிழ் சினிமா புரட்சிகரமான மாற்றங்களை அடையும் என்றும் அவர் தெரிவித்தார். |
| கல்லணையைப் புனரமைக்க விரிவான திட்ட அறிக்கை: தனியார் நிறுவனத்துக்கு ஒப்புதல் Posted: 04 Mar 2015 12:59 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணையைப் புனரமைக்கவும், மேம்படுத்தவும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| மாவட்ட அளவிலான முட்டை கொள்முதலுக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் Posted: 04 Mar 2015 12:58 PM PST பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்கான முட்டை கொள்முதல் நடைமுறையை மாநில அளவில் இருந்து மாவட்ட அளவுக்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. |
| கல்லூரிகளில் அழகுப் போட்டி நடத்தத் தடை: இயக்குநர் அலுவலகம் உத்தரவு Posted: 04 Mar 2015 12:58 PM PST உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆணழகன் போட்டி, அழகிப் போட்டி நடத்தத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. |
| சமையல் எரிவாயு உருளை முன்பதிவை விநியோகஸ்தர்கள் ரத்து செய்யக் கூடாது Posted: 04 Mar 2015 12:58 PM PST நேரடி மானியத் திட்டத்தில் சேராதவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை முன்பதிவை விநியோகஸ்தர்கள் ரத்து செய்யக் கூடாது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். |
| ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.24 குறைவு Posted: 04 Mar 2015 12:58 PM PST ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்து, புதன்கிழமை ஒரு பவுன் தங்கம் ரூ.20,128-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| சேலம் அருகே ஆட்டோ - பேருந்து மோதல்: 5 பேர் பலி Posted: 04 Mar 2015 12:58 PM PST சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து சேதப்படுத்தினர். |
| புதுகை வந்த அமைப்புசாராத் தொழிலாளர் கூட்டமைப்பின் ஊர்திப் பிரசாரப் பயணக்குழு Posted: 04 Mar 2015 12:31 PM PST அமைப்புசாராத் தொழிலாளர் கூட்டமைப்பினர் ஊர்திப் பிரசாரப் பயணக் குழுவினர் புதன்கிழமை புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டனர். |
| திருவரங்குளம் சிவன் கோயிலில் மாசிமகத் திருவிழா Posted: 04 Mar 2015 12:31 PM PST புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் மாசிமகத் திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் திருவீதிஉலா புதன்கிழமை நடைபெற்றது. |
| காவிரிப் பிரச்னை: திமுகவும் அதிமுகவும் அறிக்கைகள் மட்டுமே விடுக்கின்றன: வைகோ Posted: 04 Mar 2015 12:31 PM PST காவிரிப் பிரச்னையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒப்புக்கு அறிக்கைகள் மட்டுமே விடுக்கின்றன. இந்தக் கட்சிகள் விவசாயிகளுக்காக ஒருபோதும் போராடவில்லை என, மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். |
| திருவையாறில் நாளை புனித இசைத் திருவிழா Posted: 04 Mar 2015 12:30 PM PST திருவையாறில் சென்னை பிரகிருதி அறக்கட்டளைச் சார்பில் புனித இசைத் திருவிழா வரும் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| குழந்தைகள் உயர்கல்விக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் Posted: 04 Mar 2015 12:29 PM PST குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவும் வகையில் புதிய குழந்தைகள் பணமீட்சி காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார் தஞ்சாவூர் கோட்ட முதுநிலை மேலாளர் ப. சத்தியவதி. |
| "உடற்பயிற்சியால் தன்னம்பிக்கை வரும்' Posted: 04 Mar 2015 12:29 PM PST கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமால்பாட்சா தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரி தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் கோதண்டபாணி |
| சி.ஐ.டி.யு. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் Posted: 04 Mar 2015 12:29 PM PST மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் சி.ஐ.டி.யு. அமைப்பினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| Posted: 04 Mar 2015 12:28 PM PST நீடாமங்கலம் வட்டாரம் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் தற்கொலை Posted: 04 Mar 2015 12:28 PM PST நாகப்பட்டினம் அருகே கடன் தொல்லையால் ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| ஆலங்குடி கோயிலில் இன்று மாசி மகா குரு வார விழா Posted: 04 Mar 2015 12:27 PM PST ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை (மார்ச் 5) மாசி மகா குரு வார தரிசன விழா நடைபெறவுள்ளது. |
| Posted: 04 Mar 2015 12:27 PM PST நாகையில் கடன் தொல்லை காரணமாக பூட்டு பழுது நீக்குபவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Mar 2015 12:27 PM PST பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் புதன்கிழமை டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மார்ச் 8-ல் ஸ்கந்த சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் Posted: 04 Mar 2015 12:27 PM PST திருவாரூர் கீழசன்னதி தெரு வாசன்நகர் சாய்புரத்தில் ஸ்கந்த சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மார்ச் 8-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெ றவுள்ளது. |
| திருவாரூரில் நாளை மார்பக புற்றுநோய் சிகிச்சை முகாம் Posted: 04 Mar 2015 12:26 PM PST திருவாரூரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) உலக மகளிர் தினத்தையொட்டி, அதிமுக மகளிர் அணி சார்பில் மார்பக புற்றுநோய் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. |
| மதுக்கடையை அகற்றக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Mar 2015 12:26 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசுப் பள்ளிகளுக்கு அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை மூடவலியுறுத்தி, மாணவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| 249 பேருக்கு ரூ. 59.46 லட்சம் நலத் திட்ட உதவி Posted: 04 Mar 2015 12:26 PM PST அரியலூரில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 249 பேருக்கு ரூ. 59,46,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார். |
| 48 விவசாயிகளுக்கு நடவு துவரை இடுபொருட்கள் Posted: 04 Mar 2015 12:25 PM PST அரியலூர் மாவட்டம், தா.பழூரில் நடவு துவரை சாகுபடி செய்த விவசாயிகள் 48 பேருக்கு வேளாண்மைத் துறை சார்பில், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயசுதா இடுபொருட்களை செவ்வாய்க்கிழமை வழங்கினார். |
| திருமானூர் அருகேதொழிலாளி தீக்குளித்து தற்கொலை Posted: 04 Mar 2015 12:25 PM PST திருமானூர் அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கீழக்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (33). |
| "மாணவர்கள் தொழில்முனைவோராக மாறவேண்டும்' Posted: 04 Mar 2015 12:25 PM PST மாணவர்கள் படித்து முடித்த பிறகு சுயதொழில் மூலம் தொழில்முனைவோராக மாறவேண்டும் என்றார் ஐசிடி அகாதெமி ஒருங்கிணைப்பாளர் அந்தோனி. |
| போலி ஆவணம் மூலம் அமெரிக்க விசா பெற முயற்சி: இருவர் கைது Posted: 04 Mar 2015 12:25 PM PST போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் விசா பெற முயன்றதாக பெங்களூரு, குஜராத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். |
| அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி Posted: 04 Mar 2015 12:25 PM PST அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்க்கு வரும் 21-ம் தேதிவரை தடுப்பூசி போடப்படுகிறது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| "ஜயங்கொண்டம் பகுதியில் குற்றச்செயல் புரிவோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் Posted: 04 Mar 2015 12:24 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்றார் காவல் துணைக் கண்காணிப்பாளர் இனிகோதிவ்யன். |
| ரோவர் பாலிடெக்னிக் வளாக நேர்காணல்: 60 பேர் பணி நியமனம் Posted: 04 Mar 2015 12:24 PM PST பெரம்பலூர் ரோவர் பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வான 60 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. |
| மலையாளம், ஒடிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை எதிர்த்து வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் Posted: 04 Mar 2015 12:24 PM PST மலையாளம், ஒடிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| பிளஸ் 2 தேர்வு: புதுகையில் 18,164 பேர் எழுதுகின்றனர் Posted: 04 Mar 2015 12:23 PM PST புதுக்கோட் டை மாவட்டத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) தொடங்கும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் 8,101 பேர், மாணவிகள் 10,063 பேர் என மொத்தம் 18,164 பேர் பங்கேற்று எழுதுகின்றனர். |
| அவதூறு வழக்கு: விஜயகாந்த், பிரேமலதா ஆஜராக உத்தரவு Posted: 04 Mar 2015 12:23 PM PST தமிழக முன்னாள் முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் வரும் 25-ஆம் தேதி நேரில் ஆஜராகி புகார் நகலை பெற்றுக் கொள்ள வேண்டுமென, விழுப்புரம் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. |
| "நிச்சயமற்ற நீர்ப்பாசனத்தால் விவசாயம் பாதிக்கப்படும் நிலையை மாற்ற வேண்டும்' Posted: 04 Mar 2015 12:23 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் நீடித்துவரும் நிச்சயமற்ற நீர்ப்பாசனத்தால் விவசாயம் பாதிக்கப்படும் நிலையை விவசாயிகள் மாற்ற வேண்டும் என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பொருளியல், ஊரக வளர்ச்சித் துறைத் தலைவரும், பேராசிரியருமான அ. நாராயணமூர்த்தி தெரிவித்தார். |
| மின்னல் பாய்ந்து இருவர் பலி: 7 பேர் காயம் Posted: 04 Mar 2015 12:23 PM PST தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளர்கள் 2 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். |
| குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா Posted: 04 Mar 2015 12:23 PM PST புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| கிங்கிணிப்பட்டியில் முதல்வரின் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் Posted: 04 Mar 2015 12:22 PM PST புதுக்கோட்டை அருகே களங்குடி ஊராட்சிக்குள்பட்ட கிங்கிணிப்பட்டி கிராமத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தாக்குதலில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 04 Mar 2015 12:22 PM PST சென்னை குரோம்பேட்டை தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்தத் தொகை புதன்கிழமை அவர்களுக்கு நேரில் வழங்கப்பட்டது. |
| திண்டுக்கல்லில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளியில் சிறைவைப்பு: கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை Posted: 04 Mar 2015 12:22 PM PST திண்டுக்கல்லில் தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அறிக்கையை மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநருக்கு புதன்கிழமை அனுப்பி வைத்துள்ளனர். |
| பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் திறந்த நிலைப் பல்கலை. வகுப்பு தொடக்கம் Posted: 04 Mar 2015 12:22 PM PST புதுக்கோட்டை மாவட்டம், பொம்மாடிமலை பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழக வகுப்புகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| நல்லூரில் டெங்கு தடுப்பு பணிகள் Posted: 04 Mar 2015 12:22 PM PST பொன்னமராவதி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் சுகாதாரத்துறையினர் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மூலம் டெங்கு முன்தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன. |
| பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் அரசின் சிறப்பு மருத்துவ முகாம் Posted: 04 Mar 2015 12:21 PM PST கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பழையகந்தர்வகோட்டை ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| "ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தை ஆசிரியர்கள் தூண்ட வேண்டும்' Posted: 04 Mar 2015 12:21 PM PST மாணவர்களிடம் ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டியது ஆசிரியரின் கடமை என்று புதுகை மன்னர் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் எஸ். மேரி ஹேமலதா தெரிவித்தார். |
| வழக்கில் ஆஜராகாத ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் Posted: 04 Mar 2015 12:21 PM PST வழக்கில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு கும்பகோணம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோயில் காவல் சரகத்தில் கடந்த 2012-ல் இரண்டாம்கட்டளை கிராம |
| கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை தொடக்கம் Posted: 04 Mar 2015 12:20 PM PST தஞ்சாவூர் மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 238 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| மகாமகத்தை தேசிய திருவிழாவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் Posted: 04 Mar 2015 12:20 PM PST மகாமக திருவிழா மத நல்லிணக்க விழாவாகத் திகழ்வதால் அதைத் தேசிய திருவிழாவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார் விசாகப்பட்டினம் மெüலானந்த தபோவனத்தின் பீடாதிபதி ராமானந்த பாரதி தீர்த்த சுவாமிகள். |
| நாகரசம்பேட்டையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம் Posted: 04 Mar 2015 12:20 PM PST கும்பகோணம் அருகே நாகரசம்பேட்டையில் மக்கள் சிறப்பு குறைதீர் முகாம் மார்ச் 6 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. |
| இன்று மின்வாரிய குறைதீர் கூட்டம் Posted: 04 Mar 2015 12:19 PM PST தஞ்சாவூர் மின்பகிர்மான வட்ட நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை (5-ம் தேதி) நடைபெறுகிறது. |
| பெண் தீக்குளித்து சாவு : கோட்டாட்சியர் விசாரணை Posted: 04 Mar 2015 12:19 PM PST தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். |
| Posted: 04 Mar 2015 12:19 PM PST அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. "ஆணுக்குப் பெண் நிகர்' என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். |
| புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல் Posted: 04 Mar 2015 12:18 PM PST தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் புதைசாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| நகைக் கடையில் சுரங்கம் அமைத்து திருட்டு Posted: 04 Mar 2015 12:18 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுரங்கம் அமைத்து கவரிங் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பொதுத் தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 04 Mar 2015 12:18 PM PST பட்டுக்கோட்டை அருகே உள்ள அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நீயா-நானா கோபிநாத் பங்கு பெற்ற பொதுத்தேர்வு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 04 Mar 2015 12:18 PM PST உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் இந்திய திருநாட்டில், பல அம்சங்கள் உலகின் மற்ற நாடுகள் பார்த்து வியக்கும் அளவில் உள்ளன என நாம் பெருமைப்படுவதுண்டு. |
| குடந்தையில் நகர திமுக செயலர்கள் கூட்டம் Posted: 04 Mar 2015 12:18 PM PST கும்பகோணம் நகர திமுக சார்பில் வார்டு செயலர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நகர அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலர் தமிழழகன் வரவேற்றார். |
| தமிழ்ப் பல்கலை.யில் மே 20-ல் தேர்வு தொடக்கம் Posted: 04 Mar 2015 12:17 PM PST தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்தும் தேர்வுகள் மே 20-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. |
| Posted: 04 Mar 2015 12:17 PM PST கருப்புப் பணத்திற்கு எதிரான நிதியமைச்சரின் நடவடிக்கைக்கு எள்ளளவும் குறையாத முக்கியத்துவம் பெறும் நிதிநிலை அறிக்கையின் இன்னொரு அறிவிப்பு "முத்ரா' திட்டம். இந்தத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நரேந்திர மோடி அரசின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதுதான் இதன் முக்கிய அம்சம். |
| "மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் 16,165 பேர் பயனடைந்துள்ளனர்' Posted: 04 Mar 2015 12:17 PM PST நாகை மாவட்டத்தில் இதுவரை அரசு பொது இ சேவை மையங்கள் 122 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், 62 புதுவாழ்வு திட்ட அலுவலகங்கள், 8 வட்ட அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை |
| சோதனைச் சாவடியில் வாக்கி டாக்கி மாயம் Posted: 04 Mar 2015 12:17 PM PST நாகை திட்டச்சேரி, வாழ்மங்கலம் சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர். நடராஜன் பணியில் இருந்தார். |
| விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி காருக்கு தீ வைப்பு Posted: 04 Mar 2015 12:16 PM PST நாகை மாவட்டம், நாகூரில் விஷ்வஹிந்து பரிஷத் மாநில இணை அமைப்புச் செயலரின் கார் மீது மூடப்பட்டிருந்த தார்பாய் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. |
| வயலில் ஆடு மேய்ந்த தகராறில் பெண் அடித்துக் கொலை Posted: 04 Mar 2015 12:16 PM PST திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே புதன்கிழமை வயலில் ஆடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் அடித்து கொல்லப்பட்டார். |
| ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் Posted: 04 Mar 2015 12:16 PM PST டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 2016-ம் கல்வியாண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். |
| காப்பீடு, நிலக்கரிச் சுரங்க மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம் Posted: 04 Mar 2015 12:09 PM PST காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டத் திருத்த மசோதா, நிலக்கரிச் சுரங்கங்களை இணையவழி ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கு வகை செய்யும் மசோதா ஆகியவை மக்களவையில் புதன்கிழமை நிறைவேறின. |
| "மனித உரிமை' பெயரில் அமைப்பு நடத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் Posted: 04 Mar 2015 12:07 PM PST மனித உரிமை என்ற பெயரில், தனி நபர்கள் அமைப்பு நடத்தக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. |
| பான்சரே கொலை: சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க மும்பை உயர் நீதிமன்ற இரு அமர்வுகள் மறுப்பு Posted: 04 Mar 2015 12:06 PM PST மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், சமூக ஆர்வலருமான பான்சரே கொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிப்பதற்கு மும்பை உயர் நீதிமன்ற இரு அமர்வுகள் மறுத்து விட்டன. |
| திமுக செயற்குழு இன்று கூடுகிறது Posted: 04 Mar 2015 12:04 PM PST வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 5) நடைபெறுகிறது. |
| சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறுவதில் தாமதம் Posted: 04 Mar 2015 12:04 PM PST சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தாமதம் அடைந்திருப்பதாக மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| தமிழகத்தில் 3 லட்சம் செயலற்ற எரிவாயு இணைப்புகள்: 6 மாதம் பயன்படுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு Posted: 04 Mar 2015 12:03 PM PST சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் சுமார் 3.40 லட்சம் எரிவாயு இணைப்புகள் செயலற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. |
| 2ஜி, 3ஜி அலைக்கற்றை: முதல் நாளில் ரூ.60,000 கோடி ஏலம் Posted: 04 Mar 2015 12:02 PM PST 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றை ஏலம் புதன்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தின் முதல் நாளிலேயே அனைத்து அலைவரிசைகளிலும் ரூ.60,000 மதிப்பிலான அலைக்கற்றைகள் விற்பனை செய்யப்பட்டன. |
| நவீன நகரம் திட்டம்: தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிக்க உறுதி Posted: 04 Mar 2015 12:01 PM PST மத்திய அரசின் நவீன நகரம் திட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மக்களவையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு உறுதி அளித்தார். |
| Posted: 04 Mar 2015 11:35 AM PST |
| பெண் சாதனையாளர்கள் விருது பெற அழைப்பு Posted: 04 Mar 2015 11:35 AM PST பெண் சாதனையாளர்கள் விருதுபெற விண்ணப்பிக்குமாறு பாரதிதாசன் பல்கலை. மகளிரியல் துறை அழைப்பு விடுத்துள்ளது. |
| பாஸ்போர்ட்டில் முறைகேடு சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது Posted: 04 Mar 2015 11:35 AM PST பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து சிங்கப்பூர் செல்ல முயன்ற மதுரை நபரை திருச்சி விமான நிலைய போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |