Tamil News | Online Tamil News |
- சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பலம் குறைவதால் அ.தி.மு.க.,வினர் உற்சாகம்: தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் சபைக்கு வர ஒட்டுமொத்த தடை
- குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்குமா? மூன்று முறை நிராகரிக்கப்பட்டது இந்த முறை ஏற்கப்படுமா?
- புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லை!
- ரயில்கள் ஏன் தாமதமாகவே வருகிறது? மோடி கிடுக்கிப்பிடி
- வரி பாக்கி வைத்துள்ளவர்கள் 'வண்டவாளம்': வெளியிட்டது வருமான வரித்துறை
- தனிப்பட்ட ஒருவரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோட்டூர்புரம் அண்ணா நூலகம் பாழ்
- 'தமிழகத்தின் கடன் அளவு சதவீதம் குறைவு': முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்
- எந்த மாநிலத்திலும் இல்லாத தண்டனை: அரசு மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு
- ஆம் ஆத்மி கட்சி உடைகிறதா? புதிய கட்சி துவக்க யாதவ், பூஷன் திட்டம்
- நரசிம்மராவுக்கு டில்லியில் நினைவிடம்
- மேகதாது அணைக்கு அனுமதியா?
- யாரை கேட்டு வங்கதேச எல்லைக்கு சென்றார்: ராஜ்நாத் மீது மம்தா ஆத்திரம்
| Posted: தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், அடுத்த சட்டசபை தேர்தல் வரை, சட்டசபைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, சபையில் எதிர்க்கட்சியினரின் பலம் குறைந்துள்ளது. இதனால், அ.தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.தற்போதைய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில், பிப்ரவரி, 19ம் தேதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மோகன் ராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியதற்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும்படி, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபை காவலர்கள், ... |
| Posted: ஆமதாபாத்: பயங்கரவாத செயல்களை ஒடுக்க, முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட, 'தடா' மற்றும் 'பொடா' போன்ற கொடூரமான சட்டங்களைப் போன்ற, கடுமையான அம்சங்களை கொண்ட, பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை, குஜராத் சட்டசபை நேற்று மீண்டும் நிறைவேற்றியது.குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ஆனந்திபென் படேல் அரசு உள்ளது. இப்போதைய பிரதமர் மோடி, அந்த மாநிலத்தில் முதல்வராக இருந்த போது, 2004 மற்றும் 2008ம் ஆண்டுகளில், 'குஜ்கோக்' எனப்படும், குஜராத்தில் பயங்கரவாதம் மற்றும் கூட்டுக் குற்றங்கள் தடுப்பு மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்றினார். ஆனால், அந்த மசோதாவுக்கு, அப்போது ஜனாதிபதியாக ... |
| புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லை! Posted: புதுடில்லி: 'சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவ தால் தான் புற்றுநோய் வருகிறது என, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் ஏதும் தெரிவித்துள்ளதா... இல்லையே. எதன் அடிப்படையில், புகைபிடித்தால், புற்றுநோய் வரும் என கூறி, ஏராளமான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க முயற்சிக்கிறீர்கள்...' என, பா.ஜ., - எம்.பி., ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.விற்பனைக்கான சிகரெட் பாக்கெட்டில், 'புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது' என்ற வாசகத்துடன், புகை பிடித்ததால் பாதிக்கப்பட்ட நுரையீரல், வாய் போன்றவற்றின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இப்போது, 40 சதவீதமாக ... |
| ரயில்கள் ஏன் தாமதமாகவே வருகிறது? மோடி கிடுக்கிப்பிடி Posted: புதுடில்லி: ரயில் போக்குவரத்தில் ஏற்படும் தாமதம் குறித்து, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம், பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.ரயில்கள் தாமதமாக வந்து செல்வது குறித்து, பொதுமக்களிடம் இருந்து, பிரதமர் அலுவலகத்திற்கு பல புகார்கள் வந்ததையடுத்து, ரயில்வே அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு, 1975ம் ஆண்டு, எமர்ஜன்சி காலத்தில், ரயில் போக்கு வரத்து, 90 சதவீதம் வரை சரியான நேரத்தில் இயங்கியது. அதுபோல், தற்போதும் ரயில்களை இயங்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக, ரயில்வே அதிகாரி ஒருவர் பதில் கூறியுள்ளார். ரயில் போக்குவரத்தில் ஏற்படும் ... |
| வரி பாக்கி வைத்துள்ளவர்கள் 'வண்டவாளம்': வெளியிட்டது வருமான வரித்துறை Posted: புதுடில்லி: அதிகமாக வரி பாக்கி வைத்துள்ள, 18 பேரின் பட்டியலை வருமான வரித்துறை முதல் முதலாக பொதுமக்கள் பார்வைக்கு பகிரங்கமாக பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக வருமான வரி செலுத்தாமல், பல கோடி ரூபாய் அளவுக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது, வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கையை துவங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வரி செலுத்தாதவர்கள் எங்கே உள்ளனர் என்பது போன்ற தகவல்களை பொதுமக்கள் தருவதற்கு வசதியாகவும், சில முக்கிய முடிவுகளை வருமான வரித்துறை எடுத்துள்ளது. இதன்படி, 10 கோடி ரூபாய்க்கு மேல் வரி ... |
| தனிப்பட்ட ஒருவரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோட்டூர்புரம் அண்ணா நூலகம் பாழ் Posted: சென்னை: 'அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தனிப்பட்ட ஒரே ஒருவருடைய காழ்ப்புணர்ச்சி காரணமாக, அனைத்து வசதிகளும் பாழ்பட்ட நிலையில் உள்ளன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: அண்ணா நூலகத்தில், இணை இயக்குனர் உட்பட, அரசு அதிகாரிகள் யாரும் ஆய்வுக்காக வரவே இல்லை; கடந்த நான்கு ஆண்டுகளாக, புதிதாக ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை; பார்வையற்றோருக்கான, 'பிரெய்லி' பிரிவு, பராமரிப்பின்றி கிடக்கிறது. நூலக வளாகத்தில் உள்ள, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான விடுதி, காவலாளிகள் தங்குமிடமாக மாறி உள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த, ... |
| 'தமிழகத்தின் கடன் அளவு சதவீதம் குறைவு': முதல்வர் பன்னீர்செல்வம் தகவல் Posted: சென்னை : 'மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தின் கடன் அளவு சதவீதம் குறைவாக உள்ளது' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.இதுகுறித்து, சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - ஸ்டாலின்: பொதுத் துறை நிறுவனங்களின் நஷ்டத்தை சேர்த்து, தமிழக அரசின் கடன், நான்கு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது;மின் வாரியத்திற்கு மட்டும், 72 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது; போக்குவரத்து துறைக்கு, 2,000 கோடி ரூபாய், கடன் உள்ளது.பொது நிறுவனங்கள், 77ல், 11 நிறுவனங்களில், வருவாயே இல்லை; 20 நிறுவனங்களில், 8,047 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது;தமிழகத்தின் தற்போதைய கடன், 1.81 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது; ... |
| எந்த மாநிலத்திலும் இல்லாத தண்டனை: அரசு மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு Posted: சென்னை : 'எந்த மாநிலத்திலும், இல்லாத வகையில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, மிக கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்த பின்பும், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், மோகன் ராஜ், வெங்கடேசன், பார்த்திபன், சேகரன், தினகரன் ஆகிய ஆறு பேரையும் நடப்பு கூட்டத் தொடர், அடுத்த கூட்டத் தொடர் என, ஓர் ஆண்டு காலம் 'சஸ்பெண்ட்' செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள, ... |
| ஆம் ஆத்மி கட்சி உடைகிறதா? புதிய கட்சி துவக்க யாதவ், பூஷன் திட்டம் Posted: புதுடில்லி: ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ள, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர், விரைவில் கட்சியில் இருந்தும் நீக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தங்கள் ஆதரவாளர்கள் கூட்டத்தை, வரும், 14ம் தேதி கூட்டி உள்ளனர். ஆம் ஆத்மியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, சமீபத்தில் போர்க்கொடி உயர்த்திய, அக்கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போது, ... |
| நரசிம்மராவுக்கு டில்லியில் நினைவிடம் Posted: புதுடில்லி: நாட்டில், பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாக முக்கிய காரணமாக இருந்த, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு, டில்லியில் நினைவிடம் அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகள் எல்லாம், நரசிம்மராவ் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப் பட்டன. ஆனால், நரசிம்ம ராவின் மறைவுக்கு முன்னரே, அவரை, காங்கிரஸ் கட்சி கைவிட்டு விட்டது. எனவே, அவருக்கு உரிய கவுரவத்தை அளிக்கும் பணியில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. ... |
| Posted: "காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, கோரிக்கை ஏதும் வரவில்லை. மத்திய அரசின் அனுமதியின்றி, புதிய அணையை கட்டுவது, சாத்தியமில்லாத ஒன்று," என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். கர்நாடகாவில் உள்ள, மேகதாது என்ற இடத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, புதிய அணையை கட்டும் நடவடிக்கைகளில், அம்மாநில அரசு இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு, தமிழகத்தில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேகதாதுவில், அணை கட்டப்பட்டால், தமிழகத்தில், காவிரி நீர்ப்பாசன விளை நிலங்கள் உள்ள, தஞ்சை ... |
| யாரை கேட்டு வங்கதேச எல்லைக்கு சென்றார்: ராஜ்நாத் மீது மம்தா ஆத்திரம் Posted: கோல்கட்டா: யாரை கேட்டு இந்திய-வங்கதேச எல்லைக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்றார். மாநில அரசிடம் ஏன் தெரிவிக்கவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசப்பட்டார்.மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங். கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், கூச்பிஹார் மாவட்டத்தின் டீன்பிஹா என்ற எல்லைப்பகுதி இந்திய -வங்கதேச எல்லைப்பகுதியாகும். இங்கு சிஹிட் மஹால் என்ற பகுதிக்கு பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் திடீரென விஜயம் செய்தார்.ராஜ்நாத்சிங்கின் திடீர் வருகைக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 01,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |