Tamil News | Online Tamil News |
- காற்றாலை மின்சாரம் முழுதும் தெலுங்கானாவுக்கே போச்சு: மின் வாரிய அலட்சியத்தால் உற்பத்தியாளர்கள் முடிவு
- மத்திய அரசு திட்டங்களுக்கான செலவு பல மடங்கு அதிகரிப்பு: குறித்த காலத்திற்குள் முடிக்காததால் எகிறியது
- 'தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய்'
- மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் செயல்படாத அமைச்சர்களுக்கு 'ஆப்பு'
- 'பார்லி.,க்கே லீவு போட்ட ராகுல் கோர்ட்டுக்கு எப்படி வருவார்?'
- சட்டசபை முன் நடந்த போராட்டம் வாபஸ்: எம்.எல்.ஏ.,க்களை திருப்பி விட்ட விஜயகாந்த்
- வழக்கு போட சுப்பிரமணியன் சாமி தயார்: பன்னீரால் ஜெயலலிதாவுக்கு சிக்கல்
- நெல்லை, தூத்துக்குடியில் நிம்மதி என்ன விலை? வீடுகளை விற்று மக்கள் வெளியேறும் அவலம்
- ஏமனில் சிக்கியுள்ள 50 தமிழக பெண்கள்: கதறும் திண்டுக்கல் தாய்
- மோடி உள்ளிட்ட 31 தலைவர்களின் அந்தரங்க விவரம் அம்பலம்
- இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள்?
- கட்சி நல்லாதான் போய்கிட்டிருக்கு: என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
| Posted: காற்றாலை மின்சாரத்தை வாங்க, தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், மின் வாரியம் மூலமாகவே, தெலுங்கானா மாநிலத்திற்கு விற்பனை செய்ய, காற்றாலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், நெல்லை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், ஜூன் முதல், அக்., மாதம் வரை, காற்றாலை சீசன் துவங்கும். அப்போது, காற்று பலமாக வீசும் என்பதால், காற்றாலை மின் நிலையங்களில் இருந்து, நாள்தோறும், 3,000 - 4,000 மெகாவாட், மின்சாரம் கிடைக்கும். காற்றாலை உற்பத்தியாளர்கள், ... |
| மத்திய அரசு திட்டங்களுக்கான செலவு பல மடங்கு அதிகரிப்பு: குறித்த காலத்திற்குள் முடிக்காததால் எகிறியது Posted: புதுடில்லி: மத்திய அரசால் அறிவிக்கப்படும், 10 திட்டங்களில், நான்கு திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. இதனால், இவற்றுக்கான செலவு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட, பல மடங்கு அதிகரித்துள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்டங்களை நடைமுறைப் படுத்தும் மத்திய அமைச்சகம், சமீபத்தில் லோக்சபாவில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், சில அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, 100 கோடி ரூபாய் மதிப்புக்கு அதிகமான, 738 ... |
| 'தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய்' Posted: புதுடில்லி: தமிழகத்தில், ஒரு ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை வாக்காளருக்கு கொடுக்கப்படுகிறது என, சட்டக் கமிஷன் தலைவர் ஏ.பி. ஷா தெரிவித்து உள்ளனர். |
| மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் செயல்படாத அமைச்சர்களுக்கு 'ஆப்பு' Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விரைவில் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம், பெங்களூரில் நடைபெறவுள்ள பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பின், அமைச்சரவை விரிவாக்கம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. |
| 'பார்லி.,க்கே லீவு போட்ட ராகுல் கோர்ட்டுக்கு எப்படி வருவார்?' Posted: மும்பை: 'காங்., துணைத் தலைவர் ராகுல், சொந்த காரணங்களுக்காக பார்லி., கூட்டத்தொடருக்கு கூட செல்லாமல், விடுமுறையில் உள்ளார். எனவே, அவரால் கோர்ட்டில் ஆஜராக முடியாது' என, அவரின் வழக்கறிஞர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காங்., துணைத் தலைவர் ராகுல், சொந்த காரணங்களுக்காக, விடுமுறையில் செல்வதாக அறிவித்து உள்ளார். இதனால், தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ள அவர், பார்லி., கூட்டத்தொடரிலும் பங்கேற்கவில்லை. 'ராகுல் எங்கே இருக்கிறார்' என்பது, அவரின் கட்சியினருக்கே தெரியாது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பிவந்தியில், கடந்தாண்டு ஆர்.எஸ்.எஸ்., ... |
| சட்டசபை முன் நடந்த போராட்டம் வாபஸ்: எம்.எல்.ஏ.,க்களை திருப்பி விட்ட விஜயகாந்த் Posted: 'சட்டசபையில் அனுமதிக்கக் கோரி, இனி போராட்டம் நடத்த வேண்டாம்' என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், அறிவுரை வழங்கியுள்ளார்.சட்டசபையில், கடந்த பிப்., 19ம் தேதி, கவர்னர் உரை மீதான விவாதம் நடந்தது; அப்போது, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குறித்து, தே.மு.தி.க.,வினர் தெரிவித்த கருத்தால், பிரச்னை எழுந்தது. இதையடுத்து, தே.மு.தி.க.,வின், 19 எம்.எல்.ஏ.,க்களையும், சபாநாயகர், 'சஸ்பெண்ட்' செய்தார். கவர்னர் உரை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படாததால், சட்டசபை நடவடிக்கைகளில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ... |
| வழக்கு போட சுப்பிரமணியன் சாமி தயார்: பன்னீரால் ஜெயலலிதாவுக்கு சிக்கல் Posted: ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி, தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை சமர்ப்பித்த, முதல்வர் பன்னீர்செல்வம் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார். |
| நெல்லை, தூத்துக்குடியில் நிம்மதி என்ன விலை? வீடுகளை விற்று மக்கள் வெளியேறும் அவலம் Posted: நெல்லை, தூத்துக்குடியில், ஜாதி மோதல்களால், கொலைகள் அதிகரித்து, ரத்த பூமியாக காட்சியளிப்பதால், அந்த மாவட்ட மக்கள், வீடுகளை விற்று வெளியேற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில், மணல் கடத்தல், குடும்பத் தகராறு, கள்ளத் தொடர்பு, ஜாதி மோதல், தேர்தல் நேர பகை, அரசியல் ரீதியான முன் விரோதம் போன்ற காரணங்களால், தினசரி ஒரு கொலையாவது நடந்து விடுகிறது. இதுபோன்று, கடந்த, 11 மாதங்களில், 90 கொலைகள் நடந்துள்ளன. மேலும், பேருந்துக்கு தீ வைத்தல், தலைவர்களின் சிலைகளை உடைத்தல் போன்ற சம்பவங்களில், திடீர் கலவரம் வெடிப்பதால், வெளியில் சென்று, ... |
| ஏமனில் சிக்கியுள்ள 50 தமிழக பெண்கள்: கதறும் திண்டுக்கல் தாய் Posted: ''உள்நாட்டு போர் மூண்டுள்ள, ஏமன் நாட்டில் சிக்கியுள்ள, என் மகளை காப்பாற்றுங்கள்,'' என, திண்டுக்கல்லைச் சேர்ந்த சுபாஷினி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.திண்டுக்கல்லில், டெய்லராக இருப்பவர் தயாளராஜன். இவரது மனைவி சுபாஷினி. இவர்களுக்கு, இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஏஞ்சலின் ஜெரீனா, 27; நர்சிங் டிப்ளமோ படித்து உள்ளார். உள்நாட்டு போர்: கடந்த, ஆண்டு மே மாதம், 14ம் தேதி, நர்ஸ் பணிக்காக, ஏமன் நாட்டுக்கு ஏஞ்சலின் சென்றார். அந்நாட்டில், தற்போது உள்நாட்டு போர் மூண்டுள்ளதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் ஏஞ்சலின் தவிப்பதாக சுபாஷினி ... |
| மோடி உள்ளிட்ட 31 தலைவர்களின் அந்தரங்க விவரம் அம்பலம் Posted: லண்டன்: ஆஸ்திரேலியாவில், 'ஜி 20' உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி உள்ளிட்ட, 31 தலைவர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியில் கசிந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நவ., 7ம் தேதி, பிரிஸ்பேனில், 'ஜி 20' உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜீ ஜிங்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் பெயர், பிறந்த நாள், தாய் நாடு, வகிக்கும் பதவி, பாஸ் போர்ட் எண், விசா உள்ளிட்ட விவரங்கள், மின்னஞ்சல் மூலம் ஆசிய கோப்பை போட்டியின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பி ... |
| இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள்? Posted: யாழ்ப்பாணம்: இலங்கையில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாக, இலங்கையின் மறுவாழ்வு ஆணையாளர், மேஜர் ஜெனரல் ஜெகத் விஜயதிலக்க தெரிவித்து இருக்கிறார். மறுவாழ்வு: இலங்கையில், விடுதலைப்புலிகள், போராளிகள் ஆகியோருக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்பின் தலைவரான அவர் கூறியதாவது: இலங்கையில், ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரின்போது சரணடைந்த, 12 ஆயிரத்து 346 விடுதலைப் புலிகளில், 6 முதல் 7 சதவீதத்தினர் கரும்புலிகள் என்ற தற்கொலை பிரிவைச் சேர்ந்தவர்கள். ... |
| கட்சி நல்லாதான் போய்கிட்டிருக்கு: என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் Posted:
புதுடில்லி: எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை, கட்சி நன்றாக தான் உள்ளது என ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியினை நிறுவிய மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூசன் மற்றும் ராமதாஸ் ஆகியோர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து கட்சியின் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எதைப்பற்றியும் கவலையில்லை இந்த பரபரப்பான ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 31,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |