Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிளஸ் 2 தேர்வு என்னாகும்? பள்ளியில் மூவருக்கு பன்றிக் காய்ச்சல்

Posted:

'பள்ளியில் மூன்று பேருக்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளது; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம்' என, சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளி, பெற்றோருக்கு அனுப்பிய, எஸ்.எம்.எஸ்., தகவலால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம் முழுவதும், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ள நிலையில், நாளை துவங்கும் பிளஸ் 2 தேர்வு, என்ன ஆகுமோ என, பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தொ டர்ந்து, கடந்த மூன்று மாதங்களாக, பன்றிக்காய்ச்சல் பாதிப்பும், மக்களை அச்சமூட்டி வருகிறது. ...

ராமஜென்ம பூமி விவகாரத்தில் விஸ்வ இந்து பரிஷத் விஸ்வரூபம்: கியான்தாஸ் - அன்சாரியின் சமரச தீர்வுக்கு கடும் எதிர்ப்பு: அவசர சட்டம் இயற்ற வேண்டும் மோடிக்கு கோரிக்கை

Posted:

புதுடில்லி: ராமஜென்ம பூமி விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும் முயற்சியில், வழக்கில் தொடர்புடைய, கோவில் மற்றும் மசூதி நிர்வாகிகள் உடன்பாட்டை ஏற்படுத்தி வரும் நிலையில், 'ராமஜென்ம பூமி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, அவசர சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, பிரதமருக்கு விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது; இதனால், புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ள, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது, அயோத்தி நகரம். ராமபிரான் அவதரித்த இடமாக கருதப்படும் இங்கிருந்த ...

'நோக்கியா' ஆலை விரைவில் செயல்படும்

Posted:

புதுடில்லி: நோக்கியா ஆலை தொடர்பாக, ராஜ்யசபாவில், பிரதமர் மோடி பேசியதாவது: தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, 'நோக்கியா' மொபைல் போன் நிறுவனத்தை புனரமைத்து, மீண்டும் செயல்படுத்துவதில், எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக, மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விரைவில் அந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். கூடிய விரைவில், அந்த தொழிற்சாலை திறக்கப்படும்.

இழப்பீடு தொகை குறையாது:
புதிய, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் படி, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை குறைத்து வழங்கும் எண்ணம் எதுவும் எங்கள் அரசுக்கு ...

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளுக்கு திடீர் வெற்றி: அரசுக்கு பெரும் தர்மசங்கடம்

Posted:

கறுப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில், அரசின் நடவடிக்கை அதிருப்தியளிப்பதாக கூறி, ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்தது; இது, பா.ஜ.,வுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி தீர்மானம்:
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது, நேற்று ராஜ்யசபாவில், பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசினார். பிரதமர் பேசி முடித்ததும், பொதுவாக, ஜனாதிபதி உரையை ஒருமனதாக நிறைவேற்றுவது வழக்கம். ஆனால், நேற்றைய பிரதமரின் பதிலுரையின் போது, சரத்யாதவ், மாயாவதி போன்றவர்கள் ...

காங்., அறிவு ஜீவிகள் கூட்டத்தில் தலைவராகிறார் ராகுல்

Posted:

புதுடில்லி: லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் கண்ட தோல்வியால், காங்கிரஸ் கட்சி துவண்டு போயுள்ளது. கட்சியை புனரமைக்க வேண்டும் எனில், அதற்கு, ராகுலை தலைவராக்க வேண்டியது அவசியம் என, பல மூத்த தலைவர்கள் வெளிப்படையாக குரல் கொடுத்து வருகின்றனர். அதனால், வரும், 28ம் தேதி முதல் ஏப்ரல், 15க்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற உள்ள, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு மற்றும் அதையொட்டி நடைபெறும் அறிவு ஜீவிகள் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு செய்யப்படுவது நிச்சயம். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலரான ...

தலைவர்கள் சண்டையால் வேதனை அடைகிறேன்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம்

Posted:

புதுடில்லி: 'ஆம் ஆத்மியில் உருவாகியுள்ள உட்கட்சி பூசல், மிகுந்த மன வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த அசிங்கமான சண்டை, கட்சி மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகமாகும்' என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டில்லியில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள, 70 இடங்களில், 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தற்போது இந்த கட்சியில், உட்கட்சி சண்டை தலை தூக்கி உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர், முதல்வரும், ...

மாட்டிறைச்சி விற்றால் சிறை: மசோதாவுக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல்

Posted:

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யும், அம்மாநில விலங்குகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், மாட்டிறைச்சி விற்போருக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சி செய்தபோது, 1995ம் ஆண்டு, அம்மாநில சட்டமன்றத்தில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ...

உத்தரவிட்டும் பதவி விலகவில்லை: அடம் பிடிக்கிறார் ம.பி., கவர்னர்

Posted:

புதுடில்லி: 'மத்திய பிரதேசத்தில், வனக்காவலர் தேர்வு முறைகேட்டில் சிக்கிய, அம்மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவ் பதவி விலக வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டும் பலனில்லை. அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இம்மாநிலத்தின் கவர்னராக, 2011 முதல் பதவி வகிப்பவர், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ராம் நரேஷ் யாதவ். இவர், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர். கடந்த, 2013ல், மத்திய பிரதேசத்தில், வனக் காவலர் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க, மாநில தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு நடந்தது. ...

அ.தி.மு.க., - பா.ஜ., நெருக்கம் எதையோ 'சூசகமாக' தெரிவிக்கிறது: கருணாநிதி சந்தேகம்

Posted:

சென்னை: 'அ.தி.மு.க., - பா.ஜ., நெருக்கம் எதையோ சூசகமாக தெரிவிக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் ரயில்வே பட்ஜெட்டையும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி யின் பொது பட்ஜெட்டையும், எல்லாரையும் முந்தி, ஜெயலலிதா வரவேற்று அறிக்கை கொடுத்துள்ளார். முதல்வரும், நிதி அமைச்சருமான பன்னீர்செல்வம் மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் பற்றியோ, பொது பட்ஜெட் பற்றியோ, கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், ஏன் வாயையே திறக்காத நிலையில், வீட்டிலிருந்து வெளியே வராத முன்னாள் முதல்வர் நீதிமன்றத்தால், ...

நிலக்கரி சாம்பல் 20 நாட்களாக தேக்கம்: மின் வாரியத்துக்கு ரூ.1 கோடி இழப்பு

Posted:

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து, தினமும், 1,500 முதல் 2,000 டன் நிலக்கரி உலர் சாம்பல் விற்பனை ஆகாமல் தேங்கி வருவதால், மின் வாரியத்துக்கு, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 840 மெகாவாட் மின் உற்பத்திக்காக, தினமும், 14 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும், 3,500 டன் உலர் சாம்பலை, சிமென்ட் ஆலைகள் கொள்முதல் செய்தன.

முதலில் 410 ரூபாய்:
இதற்காக, அனல் மின் நிலையம் பின்புறம் சேமிக்கப்படும் உலர் சாம்பலை, பல சிமென்ட் நிறுவனங்கள், தினமும் லாரிகளில் எடுத்துச் ...

பேட்டிக்கு அனுமதித்தது ஏன்? திகார் சிறை அதிகாரியிடம் ராஜ்நாத் கோபம்

Posted:

புதுடில்லி: டில்லியில், கடந்த 2012ல், ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங்கிடம், பி.பி.சி., செய்தி நிறுவனம் பேட்டி எடுத்துள்ளது. இதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேட்டி எடுக்க யார் அனுமதித்தது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, டில்லி திகார் சிறை தலைமை இயக்குனர் அலோக்குமார் வர்மாவிடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் லெஸ்லி உத்வின், ...

கறுப்பு பண விவரம் தெரிவிக்க ஒரு வாய்ப்பு: மத்திய வருவாய் துறை செயலர் தகவல்

Posted:

புதுடில்லி: ''வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி உள்ளவர்கள், அதுபற்றிய விவரங்களை தெரிவிக்கவும், அதற்கான வரி மற்றும் அபராதம் செலுத்தவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், புதிதாக நிறைவேற்றப்பட உள்ள சட்டத்தில், ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும்,'' என, மத்திய வருவாய் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.டில்லியில், செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் கூறியதாவது: அன்னிய நாடுகளில் பதுக்கிய கறுப்பு பணம் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை மறைப்பவர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™