Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


திருவாரூர் மத்திய பல்கலை கட்டுமானத்தில்அலட்சியம்: கட்டடம் இடிந்து 5 பேர் பலி; 16 பேர் காயம்

Posted:

திருவாரூர்:திருவாரூர், மத்திய பல்கலைக்கழக ஊழியர் குடியிருப்பு கட்டுமானப் பணியில் காட்டப்பட்ட அலட்சியத்தால், கான்கிரீட் பீம்கள் இடிந்து விழுந்து, ஐந்து தொழிலாளர்கள் இறந்தனர்; 16 பேர் காயம் அடைந்தனர். கட்டட கான்ட்ராக்டர், தலைமறைவானார்.திருவாரூரில், 1,000 கோடி ரூபாய் செலவில், மத்திய பல்கலைக்கழகம் அமைக்கும் பணி, 2009ம் ஆண்டில், தி.மு.க., ஆட்சியில் துவங்கியது. ஆரம்பத்தில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், பல்கலைக்கழகம் இயங்கியது. பின், மயிலாடுதுறை சாலை கங்களாஞ்சேரியில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் மேற்கே, நீலக்குடி மற்றும் நாகக்குடியில், 500 ஏக்கர் இடம் ...

மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? 7வது சம்பள கமிஷன் விரைவில் பரிந்துரை

Posted:

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். நாட்டில் நிலவும் விலைவாசிக்கேற்ப, இவர்களுக்கான சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க, சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷன், 10 ஆண்டு களுக்கு ஒருமுறை, தன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்கும். இதன்படி, வரும் ...

சுரங்க மசோதா நிறைவேறிய ரகசியம் என்ன?மத்திய அரசு வட்டாரங்கள் பரபரப்பு தகவல்

Posted:

புதுடில்லி: நிலக்கரி சுரங்கம் மற்றும் கனிமங்கள் அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மசோதாக்கள், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதாக்கள் நிறைவேறியது தொடர்பாக, தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடும் எதிர்ப்பு:
பா.ஜ.,வுக்கு ராஜ்ய சபாவில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிகள், திடீரென ஆதரவு தெரிவித்தன. இதுகுறித்து, காங்கிரஸ் கூட வியப்பு தெரிவித்தது. ஆனால், மோடி உட்பட, பா.ஜ., ...

மானியத்தை 1 கோடி பேர் விட்டுக்கொடுப்பரா? சமையல் காஸ் விவகாரத்தில் அரசு எதிர்பார்ப்பு

Posted:

புதுடில்லி: 'சமையல் காஸ் மானியத்தை ஒரு கோடி வாடிக்கையாளர்கள் விட்டு கொடுப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு, சமையல் காஸ் சிலிண்டர் மானிய விலையில் வழங்குவதால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. சிலிண்டர் விவகாரத்தில் நடக்கும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காகவே, தற்போது நேரடி மானிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மானிய தொகை நேரடியாக செலுத்தப்படுகிறது. இதன் மூலம், போலி வாடிக்கையாளர்கள் மானியம் பெறும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி ...

ஜெ., வழிகாட்டலில் தமிழக அரசு இயங்கலாமா?கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை : 'தமிழக அரசின் செய்தித் துறை இணையதளத்தில், முதல்வர் பெயர் மாற்றப்படாததற்கு யார் காரணம்?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கைதான அவரை, ஜாமினில் விடுவிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், நீதிமன்றம் எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்க தயார்; ஜாமினில் விடுவித்தால் போதும் என, உறுதி அளித்தார். ஜாமின் கிடைத்ததும், நாரிமன், ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முயன்று, பார்க்க நேரம் கிடைக்காத நிலையில், ஜெயலலிதா என்னென்ன ...

அடுத்த வாரம் உதயமாகிறது 'ஜனதா பரிவார்': முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாக அறிவிப்பு

Posted:

புதுடில்லி: உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் அரியானாவில் உள்ள மாநில கட்சிகள் இணைந்து, 'ஜனதா பரிவார்' என்ற அமைப்பை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. அடுத்த வாரம் இதுகுறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என, முக்கிய கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மூன்றாவது அணி:
வட மாநிலங்களில், காங்., பலமிழந்துள்ள நிலையில், பா.ஜ., வளர்ச்சியை தடுக்கவும், காங்., - பா.ஜ., அல்லாத வலுவான மூன்றாவது அணியை உருவாக்கவும், வடமாநிலங்களை சேர்ந்த மாநிலக் கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அவ்வகையில், உ.பி.,யில் ஆளுங்கட்சியான முலாயம் சிங்கின் ...

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட 9ம் வகுப்பில் 'வடிகட்ட' உத்தரவு

Posted:

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு (2014 - 15) கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, கல்வித்துறை கெடுபிடி காட்டி வந்தது.இதற்கேற்ப, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மதிப்பெண் குறைந்த மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும், அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.'தேர்ச்சி ...

காதல் போர்வையில் ஏமாற்றப்படும் இளம்பெண்கள்: வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கொடுமை

Posted:

கோவை: காதல் என்ற பெயரில் இளம்பெண்களிடம் பழகி, அந்தரங்களை வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன; பணம் கொடுக்க முடியாத பெண்கள் தவறான பாதைக்கு சென்று சீரழிவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகர பகுதியில், தனிப்படை போலீசார் நடத்தி வரும் அதிரடி சோதனையில், விபசார கும்பல்கள் பிடிப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் பீளமேடு பகுதியில் நடத்திய சோதனையில், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கல்லுாரி மாணவி ஒருவர் மீட்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தன்னை காதலித்த கல்லுாரி மாணவர் ஒருவர் ...

பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவிக்கு தண்டனை: வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைத்து கொடுமை

Posted:

பெங்களூரு: கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, ஒன்றாம் வகுப்பு மாணவியை, நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக, தனியார் பள்ளி மீது புகார் எழுந்துள்ளது.பெங்களூரு, கல்யாண் நகர் முதலாவது பிளாக் தனியார் பள்ளி ஒன்றில், ஒன்றாம் வகுப்பு மாணவி, பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தனர்.கடந்த, 18ம் தேதிக்கு முன், 10 நாட்கள் காய்ச்சலால் சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், பள்ளி கட்டணம், 7,200 ரூபாயை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை.

சரியான பதில் இல்லை:
இதனால், கடந்த ௧௮ம் தேதி, ...

ஆம் ஆத்மியில் அதிரடி தொடருகிறது : முன்னாள் கடற்படை தளபதிக்கு 'கல்தா'

Posted:

புதுடில்லி :ஆம் ஆத்மி கட்சியில், நேற்றும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தன. கட்சியின் லோக்பால் பதவியிலிருந்து, முன்னாள் கடற்படை தளபதி ராம்தாசும், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்து, பிரஷாந்த் பூஷனும் நீக்கப்பட்டனர்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியின் முக்கிய தலைவர்களான யோகேந்திர யாதவும், பிரஷாந்த் பூஷனும், அரவிந்த் கெஜ்ரிவால் சர்வாதிகாரத்துடன் செயல்படுவதாக போர்க்கொடி தூக்கினர். இதை தொடர்ந்து, இருவரும், கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். நேற்று முன்தினம் ...

மாயாவதிக்கு எதிராக தனிக்கட்சி : கன்சிராம் சகோதரர் அறிவிப்பு

Posted:

லக்னோ: உ.பி., முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியால், அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராமின் உறவினர்களும், மாயாவதிக்கு போட்டியாக, தனிக்கட்சி துவக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியை துவக்கிய கன்சிராம், பஞ்சாபில் பிறந்தவர். ஆனால், அவரின் அரசி யல் பணிகள், உ.பி.,யில் தான் நடைபெற்றன. அவருடன் இணைந்திருந்த மாயாவதி, உ.பி., முதல்வராக பல முறை பொறுப்பேற்றுள்ளார்.எனினும், 2006ல், கன்சிராமின் மறைவுக்குப் பின், அவரின் உறவினர்களையும், கட்சியின் தீவிர ஆதரவாளர்களையும் மாயாவதி ...

'பிரீபெய்டு' அலைபேசி சேவை வடகிழக்கு மாநிலங்களில் தொடருமா

Posted:

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர், அசாம் மற்றும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில், மொபைல் போன் நிறுவனங்கள் வழங்கும், 'பிரீபெய்டு' சேவையை தொடர்வது குறித்த முக்கிய முடிவை, மத்திய அரசு நாளை அறிவிக்க உள்ளது.

நாட்டின் தகவல் தொடர்பு சேவையில் முக்கிய பங்காற்றும் முன்னணி மொபைல் போன் நிறுவனங்கள், ஜம்மு - காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், பிரீபெய்டு சேவை வழங்கக்கூடும் நிபந்தனைகள் நடைமுறையில் உள்ளன.இந்த மாநிலங்கள், பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், நேபாளம் போன்ற அண்டை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால், பாதுகாப்பு காரணங்கள் கருதி, அந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™