Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Posted: 29 Mar 2015 12:48 PM PDT

செல்போன் பற்றிய பீதியை மத்திய அரசே பற்ற வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்ட விளம்பரத்தில் செல்போனை எப்படி பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி இருந்த கட்டளைகள் மரண பயத்தை விதைப்பதாக உள்ளன. ஏன் இந்தத் திடீர் விளம்பரம்..? மனிதன் கண்டுபிடித்தப் பொருட்கள் அனைத்தும், ஆக்கத்துக்கும் அழிவுக்கும் அடிப்படையாக இருக்கின்றன என்ற கூற்று அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் செல்போனும் இதுக்கு விதிவிலக்கல்ல. செல்போன் கதிர்வீச்சால் ...

என் ஈழத்தோழனின் கண்ணீர்

Posted: 29 Mar 2015 12:11 PM PDT

யுத்தமானது இனமுறுவல் யுகங்கள் கடந்து உரிமை கேட்டவன் ஊமையாகி பிணமானான். வரட்சி கொன்ற மண்ணுக்கு மனிதன் பசளை நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது. நான்கு வேத நூல்களில் எந்தப் பக்கத்தில் மனிதனை மனிதன் அழிக்கச் சொல்கிறது. நிம்மதி மறந்தது ஈழம் அடிமை வாழ்வை துறந்தான் தோழன். படைவீரன் பயிற்சிப்பட்டறையில் வைக்கோல் பொம்மைக்கு பதிலீடு மனிதவுடலானது. இரவின் பகலின் சுழற்சி இடறில்லாத விடியலை தேடியது. அன்று பூத்த மங்கையின் கனவு கற்பு சூரையாடப்பட்டு களவானது. பெண்ணை விளையாட்டு பொருளாகினால் அவள் ...

முடக்கத்தான் கீரை!

Posted: 29 Mar 2015 11:47 AM PDT

முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறுகொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் ...

ஞாபக சக்தி அதிகரிக்க !

Posted: 29 Mar 2015 11:41 AM PDT

* ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது. * வெந்நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். * மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும். * பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும். * பசலைக்கீரை சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும். * பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி ...

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Posted: 29 Mar 2015 11:34 AM PDT

தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:- வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்) மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்) பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி) கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) தூத்துக்குடி-93.56 ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 29 Mar 2015 11:11 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

ஈகரை உறவுகளின் WhatsApp

Posted: 29 Mar 2015 11:02 AM PDT

நாம் அனைவரும்  வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின்  வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132  [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்!  [/noguest] அல்லது Code:[code] ...

விஷன் - 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன: ராமதாஸ்

Posted: 29 Mar 2015 10:56 AM PDT

சென்னை: 2023 என்ற தொலைநோக்குத் திட்டத்தை கடந்த 2011ம் ஆண்டு வெளியிட்டார் அப்போது முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா. ஆனால் அதில் சொன்னபடி இதுவரை எந்த திட்டமும், நடவடிக்கையம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப் போவதாக கடந்த 2001 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றது முதல் ஜெயலலிதா கூறி வந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. 2011 ...

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Posted: 29 Mar 2015 10:48 AM PDT

பன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு? இது 'H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு'க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் அதன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். புள்ளிவிவரங்கள் ...

இந்திய ஓபன் பேட்மிண்டன்

Posted: 29 Mar 2015 10:41 AM PDT

ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார் டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பேட்மிண்டன் தர வரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்தும், 6வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் விக்டர் ஏக்சல்சென்னும் மோதினர். இதில் முதல் கேமை ஸ்ரீகாந்த் 18-21 என்ற புள்ளி கணக்கில் கோட்டை விட்டார். எனினும் இரண்டாவது கேமில் திறமையாக விளையாடிய குண்டூர் புலி, அற்புதமாக விளையாடி ...

மெலிந்ததோர் யானை..!! -Mano Red

Posted: 29 Mar 2015 08:54 AM PDT

பூனையைக் கண்ட யானை புத்திக்கு உருவு கண்டு உருவானது பொல்லாப் பொறாமை..!! அந்த நொடி சபதத்தில் அடுத்த முயற்சியாய் ஆகிறேன் மெலிவாய் என்றே ஆட்டமாய் ஆடியது..!! கனவிலும் குழப்பமே கத்தியே விழித்தது, குடும்பத்தில் ஒருவனாய் கொஞ்சி மகிழும் பூனை நிலை எங்கே, பார்த்ததும் அஞ்சி விலகும் யானை எந்நிலை எங்கே..?? அச்சமயம் முதல் அச்ச பயம் இல்லாமல் வழியின்றி வலியுடன் மெலிய தொடங்கியது, யானை வயிறு பசித்தாலும் பானை சோறு வெறுத்தது..!! பூனையை நினைத்தே சுய நினைவு தொலைத்தது, கருமை நிறம் அகற்றவே ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (103)

Posted: 29 Mar 2015 08:40 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Posted: 29 Mar 2015 07:59 AM PDT

ஸ்ரீ மஹா விஷ்ணு  ராமர் அவதாரம் எடுக்கும் முன் , கைலாசம் சென்று சிவனை வழிபட சென்றார் - தினமும் தன்னை பார்க்க வரும் விஷ்ணு அன்று சற்றே பரபரப்புடன் இருப்பதை அறிந்த சிவன் - அன்புடன் விசாரிக்க தொடங்கினார் பிரபோ மனதில் மிகுந்த குழப்பம் - விடை தெரியாமல் திண்டாடுகிறேன் - உங்கள் விளக்கம் தேவை , செய்வது நியாமாக தெரியவில்லை , செய்யாமலும் இருக்க முடியாது ---- சிவன் சிரித்துக்கொண்டார் - சொல் ராமா - உன் குழப்பத்தை தெளிவிக்கிறேன் -- பிரபோ -- ராம அவதாரத்தில் இரண்டு தவறுகள் செய்ய போகிறேன் - சிவ நிந்தனைக்கு ...

கவிதை!

Posted: 29 Mar 2015 07:57 AM PDT

கனவு கண்டு காத்திருப்பதை விட ,
காலம் உணர்ந்து செயல் பட்டால்
கீழ்வானம் சிவக்கும் முன்
கின்னசிலும் இடம் பெறலாம் - நமக்கு
கேட்ட வரமும் கிடைத்திடலாம் !!!
களையான முகத்தில் கற்பனைகள்
வளர்த்து காட்சிகளை மெய்யாக்குங்கள்
வாழ்வில் இடையூரான நிகழ்வுகளை
எடுத்தெரியுங்கள் ...முன்னேற்றம்
நாம் நடக்கும் பாதையில் இல்லை ...
நம் பாதத்தில் இருக்கிறது !!!

எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது?

Posted: 29 Mar 2015 07:53 AM PDT

கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. இந்த கொலஸ்ட்ரால் வேறுபாட்டை எப்படி அறிவது? ரத்தக் கொழுப்புகள் அல்லது கொழுப்பு நிறைந்த பொருட்களில் (லிப்பிட்ஸ்) கொலஸ்ட்ரால், டிரைகிளசரைடுகள் உள்ளன. உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது (ஹைப்பர்லிபிடீமியா நிலை), அவை ரத்த நாளங்களில் படிகின்றன. இந்தக் கொழுப்புப் படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன. `நல்ல' ...

அனைத்து பள்ளிகளும் தமிழ் மொழி பாடம் கற்றலை நடைமுறைப்படுத்த உத்தரவு!

Posted: 29 Mar 2015 06:23 AM PDT

சென்னை: "நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளும், கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை, முதல் வகுப்பில், நடைமுறைப்படுத்த வேண்டும்" என, அரசு உத்தரவிட்டுள்ளது. "பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன" என, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 2015-16ம் கல்வியாண்டில் இருந்து, முதல் வகுப்பில் தொடங்கி, படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2015-16ல், பல வாரியங்களை சேர்ந்த, அனைத்து பள்ளிகளும், ...

எல்லா நாளும் ஏப்ரல் 1ம் தேதியே!

Posted: 29 Mar 2015 05:39 AM PDT

எல்லா நாளும் ஏப்ரல் 1ம் தேதியே! - வெ.இன்சுவை -பேராசிரியை/சமூக ஆர்வலர் ! ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்களின் தினமாக ஏன் அழைக்கிறோம்? கூகுளில் மேய்ந்தபோது, முட்டாள்களின் தினம் ஏன், எப்படி வந்தது? என்று தெரிய வந்தது. அக்காலத்தில் ஒருவரின் தொப்பி அல்லது உடையில், ஏதாவது ஒரு கோணங்கித்தனம் செய்து விட்டு, அவர்களின் முதுகுக்குப்பின் அவர்களைப் பரிகசிக்கும் பழக்கம் இருந்தது. மனிதனுக்கு எப்போதுமே பிறரை ஏமாற்றப் பிடிக்கும், நையாண்டி செய்யப் பிடிக்கும், சின்ன சேட்டைகள் செய்யும் பழக்கம் பள்ளிப் பிள்ளைகளிடம் ...

மகிஷாஸுரமர்தினி ஸ்லோகம் !

Posted: 29 Mar 2015 05:14 AM PDT

துர்க்கைத் தாயே துன்பங்களை நீக்குவாய்! மாதர் மே மது கைடபக்னி மஹிஷ ப்ராணாபஹாரோத்ய மே ஹேலா நிர்மித தூம்ரலோசன வதே ஹே சண்ட முண்டார்த்தினி நிச்சேஷீ க்ருத ரக்தபீஜ தனுஜே நித்யே நிசும்பாபஹே சும்ப த்வம்ஸினி ஸம்ஹராசு துரிதம் துர்கே நமஸ்தே அம்பிகே 1. அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 2. ஸுரவர வர்ஷிணி ...

மூளை இருக்கா?

Posted: 29 Mar 2015 05:11 AM PDT

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்க வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் ...

ஈகரை நண்பர்களுடன் whatsapp ல் சேர

Posted: 29 Mar 2015 05:10 AM PDT

ஈகரை நண்பர்களுடன் whatsapp குரூப்பில் என்னையும் சேருங்கள்...
ராஜா அண்ணா தான் admin ah..??

My wtsapp number
9600788986

தாய்

Posted: 29 Mar 2015 04:59 AM PDT

மண்ணில் பூத்த பலகோடி பூக்கள் சொல்லும் ஒரு வார்த்தை அது அம்மா. பத்து திங்கள் மடி சுமந்து சுவனச்சோலை சங்கமித்து தாய் பட்ட வேதனை யாரும் அறிந்ததுண்டோ? வலிமைக்கு பால் தந்தவளே! பாசத்தால் என்னை காத்தவளே! ஆயிரம் முத்துக்கள் நெய்தாலும் தாயினை பால் வருமா? பள்ளிக்கு என்னை கூட்டிச்செல்வா? நிலாசோறு ஊட்டி விடுவா?தோளினில் எனை அணைத்து மடியினில் தூங்க வைப்பா.அதுவும் ஒரு காலம். விண்ணுக்கு தாலாட்டுப்பாட அம்மா இல்லை.தூவுது மார்கழி கண்ணீர்மழை. கோபத்தில் என்னை தூற்றுகையில் என் ...

மாயை! -ஒரு பக்கக் கதை

Posted: 29 Mar 2015 04:38 AM PDT

காலை தனது மகளை தான் வேலை பார்க்கும் அரசு பள்ளியில் கொண்டு வந்து சேர்த்த சித்ராவை, மதியச் சாப்பாட்டு இடைவேளையின்போது சக ஆசிரியைகள் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். "ஏய் சித்ரா… இப்ப நீ முப்பத்தைந்தாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்குறே? உன் வீட்டுக்காரர் மாசம் நாற்பதாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்குறார்? உனக்கு இருப்பது இரண்டே பொண்ணுங்க… அப்படியிருக்க… நீ உம் பொண்ணை நல்லா சிபிஎஸ்சி ஸ்கூல்ல சேக்குறத விட்டுட்டு, இப்படி கார்ப்பரேஷன் ஸ்கூல்ல கொண்டுவந்து சேத்துருக்கே… என்னோட ரெண்டு பிள்ளைங்களுக்கும் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(357)

Posted: 29 Mar 2015 04:19 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

வலியவன் - படம் எப்படி?

Posted: 29 Mar 2015 01:14 AM PDT

ஒரு சாதாரண மனுஷன் நினைச்சா அசாதாரண மனுஷனா மாற முடியும், இதுதான் 'வலியவன்'! ஒரு பிரபல மால் ஒன்றில் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவா இருக்கிறார் ஜெய். சப்வே ஒன்றில் வைத்து ஆண்ட்ரியா 'ஐ லவ் யூ சொல்றாங்க' அப்பறம் ஜெய் ஆண்ட்ரியாவைத் தேடி அலையோ அலைனு அலையிறார். ஒரு வழியா தேடிப் பிடிச்சு லவ்வச் சொன்னா , ஆண்ட்ரியா 'எனக்காக நீ ஒண்ணு செய்யணும்'னு செக் வைக்கிறாங்க...'அது என்ன...? அந்த டெஸ்ட்டை கரெக்டா முடிச்சாரா நம்ம ஜெய்ங்கிறதுதான் மிச்ச கதை! - - என்னமோ தெரியலை... என்ன மாயமோ புரியலை, ஏன் பாஸ் இததான் ...

கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ்

Posted: 29 Mar 2015 01:09 AM PDT

கம்பரின் கற்பனையில் கதிரவன்                                                                                      கு.காமராஜ், எம்.ஏ, எம்,ஏ, எம்.ஃபில்.,                                                                           முனைவர் பட்ட ஆய்வாளர்,பாரதியார் பல்கலைக்கழகம். (பன்முக நோக்கில் கம்பராமாயணம் என்னும் தலைப்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரை)      ஒரு இலக்கியப் படைப்பாளியின் கருத்திற்கும் கற்பனைக்கும் அவர் ...

9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு

Posted: 28 Mar 2015 11:42 PM PDT

9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல் இளம் வயதினர் இரவு 9 மணி நேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். குறைவாக தூங்குபவர்களை விட அளவுக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாககவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு இரவு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதே நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கும் ...

அக்குபஞ்சர்

Posted: 28 Mar 2015 11:26 PM PDT

மனித உயிருக்குச் சிகிச்சை தருவதற்கு, அந்த உயிரின் உயிர் ஆற்றலைப் படிக்கத் தெரிந்தவரே மருத்துவம் செய்பவராக இருக்கமுடியும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நேர்நிலைக்குக் கொண்டுவந்து ஆரோக்கியத்தைத் தரக்கூடிய மருத்துவ முறையாக அக்குபஞ்சர் கருதப்படுகிறது. அக்குபஞ்சர் பரவல் நவீன அக்குபஞ்சர் மருத்துவம் உலகம் முழுக்கத் தற்போது பிரபலமாக இருப்பதற்குச் சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மாவோதான் காரணம். 1949-ல் கம்யூனிசப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பே சீனா போன்ற பரந்த, மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டின் ...

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி

Posted: 28 Mar 2015 10:42 PM PDT


--
மெல்பேர்ன் :
மெல்பேர்னில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை
கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா
அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற நியூசி., அணி பேட்டிங்கை தேர்வு
செய்துள்ளது.

முதலில் பேட் செய்யும் நியூசிலாந்து அணி
20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்து
விளையாடி வருகிறது.
-
------------------------------------------

எங்கும் இருக்கும் மைதிலி!

Posted: 28 Mar 2015 10:33 PM PDT

மதிய உணவு வேளை. மூன்றாம் வகுப்பு படிக்கும் மைதிலியின் பள்ளிக்கு வெளியே, மதில் சுவரை ஒட்டி கூட்டம். அங்கே இருந்து ஓடிவந்த லட்சுமியிடம், ''அங்கே என்னப்பா கூட்டம்?'' என்று கேட்டாள் மைதிலி. ''நாய் ஒண்ணு, கால்ல அடிபட்டிருக்கு.  ரத்தம் வருது. வயிறு பெருசா இருக்கு'' என்று துண்டு துண்டாகச் சொல்லிவிட்டு  ஓடினாள். அவளுக்கு மைதிலியைவிட க்ளோஸ் ஃப்ரெண்டு, ஆத்ரேயா.  அவளிடம் இதைச் சொல்லவே ஓடினாள். மைதிலி, கூட்டத்தை விலக்கிப் பார்த்தாள். சுவரை ஒட்டிப் படுத்திருந்த அந்த நாய், வலியால் முனகியது. அதன் ...

மருத்துவத்தில் புது மைல்கல் - புதிய ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு

Posted: 28 Mar 2015 10:20 PM PDT

நீண்டநாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆன்டிபயாடிக் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பாக்டீரியாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆன்டிபயாடிக் மருந்து, மிகவும் நம்பிக்கையளிப்பதாக, விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை. இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. ...

ஸ்ருதிஹாசனை ‘அட்டாக்’ செய்யும் சமந்தா!

Posted: 28 Mar 2015 08:36 PM PDT

- விஜய்யுடன், புலி படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு, அஜித் படத்தில் நடிப்பதற்கும், கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர் சிவா. இதற்கிடையே, அஞ்சான் மற்றும் கத்தி படங்களில் நடித்த சமந்தாவும் அஜித் படத்தில் நடிக்க, திரைக்குப் பின் அதிரடி முயற்சியில் ஈடுபட்டிருந்தவர், இப்போது ஸ்ருதி பக்கம் காத்தடிப்பதால், பின்வாங்கி விட்டார். விளைவு, ஏற்கனவே தெலுங்கில் நடித்த போது ஸ்ருதிஹாசனுடன் போட்டிக் கோதாவில் இறங்கிய சமந்தா, அடுத்து, தமிழிலும் அவரை போட்டியாக நினைத்து, அவருக்கு எதிராக செயல்படத் துவங்கியுள்ளார். முக்கியமாக, ...

தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!

Posted: 28 Mar 2015 08:27 PM PDT

ஸ்ரீதிவ்யாவின் கணக்கு! - - சிவகார்த்திகேயனுடன் நடித்த, காக்கி சட்டை படம் வெற்றியடைந்தால், 50 லட்சமான தன் சம்பளத்தை, ஒரு கோடியாக ரவுண்டு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் ஸ்ரீதிவ்யா. ஆனால், படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெற வில்லை. அதனால், சில கம்பெனிகளிடம் கதை கேட்டு, சம்பளம் பேசாமல் இழுத்தடித்து வந்த ஸ்ரீதிவ்யா, இப்போது படம் ஓடாததை காரணம் காட்டி, தன்னை ஓரங்கட்டி விடக்கூடாது என்பதற்காக, அந்த படங்களில் வேக வேகமாக ஒப்பந்தமாகி வருகிறார். இதையடுத்து, ஒருவேளை, காக்கி சட்டை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™