Tamil News | Online Tamil News |
- தமிழகத்தில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரிப்பு: மின் தடையை அறிவிக்க மின் வாரியம் திணறல்
- தமிழர்களை வைத்து மேகதாது அணை கட்ட திட்டம்: கட்டுமான தொழிலாளர்களை அழைத்து செல்ல பேரம்
- காவிரியில் கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுமா? தடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் தமிழக எம்.பி.,க்கள் மனு
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க மூன்று நாடுகள் பயணம்: மோடி நம்பிக்கை
- லட்சக்கணக்கான சிறு, குறுந்தொழில்களுக்கு நஷ்டம்: நிதி ஆதாரம் இல்லாததால் நலிவடையும் பரிதாபம்
- வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிய சி.பி.சி.ஐ.டி.,
- லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்த வேண்டும்: பிரம்மா
- கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் 'பந்த்'
- ஆம் ஆத்மி செயற்குழுவில் இருந்து பிரசாந்த், யோகேந்திர யாதவ் நீக்கம்: கட்சியில் அரங்கேறியது உச்சகட்ட கலாட்டா
- பன்னீருக்கு 'ஓ' போடும் ஆளுங்கட்சி
- கிளார்க் திண் வெட்டோரி: உலகக்கோப்பை யாருக்கு வசப்படும்
| தமிழகத்தில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரிப்பு: மின் தடையை அறிவிக்க மின் வாரியம் திணறல் Posted: தமிழகத்திற்கு, கடந்த ஆண்டை விட, தற்போது, கூடுதலாக, 1,600 மெகாவாட் மின்சாரம் கிடைத்தும், மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல், மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர். மே மாதம் சென்னையில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்க இருப்பதால், மின் தடையை அறிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தின் மின் தேவை நாள்தோறும் சராசரியாக, 13 ஆயிரம்; மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது. இதனால், 2,000 மெகாவாட், மின் பற்றாக்குறை நிலவியதால், மின் தடை அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியிருப்புக்கு, சுழற்சி முறையில், சென்னையில், இரண்டு; மற்ற இடங்களில், நான்கு மணி ... |
| தமிழர்களை வைத்து மேகதாது அணை கட்ட திட்டம்: கட்டுமான தொழிலாளர்களை அழைத்து செல்ல பேரம் Posted: வேலூர்: மேகதாது அணை கட்ட, தமிழகத்தில் இருந்து, கட்டுமான தொழிலாளர்கள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், அணை கட்ட, கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆரம்ப கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்படுமானால், தமிழகத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், மேகதாது அணை, தமிழகத்தை சேர்ந்தவர்களாலேயே கட்டப்படவுள்ளது என்ற, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம், பெங்களூரு, மைசூரு என, பல இடங்களில் அதிகளவு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டடங்களை, ... |
| Posted: கர்நாடக மாநில அரசு, காவிரியில் புதிய அணை கட்டுவதற்கரு தடை விதிக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக எம்.பி.,க்கள் நேற்று ஒன்றாகச் சேர்ந்து மனு அளித்தனர்.இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வருவது கேள்விக்குறியாகிவிடும். காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். கர்நாடக மாநில அரசின் இந்த ... |
| இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க மூன்று நாடுகள் பயணம்: மோடி நம்பிக்கை Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஏப்., 7ம் தேதி முதல், 16ம் தேதி வரை, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். இந்தப் பயணம் தொடர்பாக, சமூக வலைதளத்தில் உள்ள, தன் வலைப்பக்கத்தில், அவர் கூறியுள்ளதாவது: நாட்டின் பொருளாதார செயல்திட்டத்தையும், நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதையும் மையமாகக் கொண்டே, என்னுடைய மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் அமைகிறது. மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தில், முதற்கட்டமாக, பிரான்ஸ் செல்லும் நான், அந்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை ... |
| லட்சக்கணக்கான சிறு, குறுந்தொழில்களுக்கு நஷ்டம்: நிதி ஆதாரம் இல்லாததால் நலிவடையும் பரிதாபம் Posted: புதுடில்லி: நம் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும், மின்வெட்டு போன்ற காரணங்களாலும் நலிவடைந்து, கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சுருக்கமாக சொன்னால், 3.6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தாயகம் இந்தியா. இவை, 8,000 தரமான பொருட்களை உற்பத்தி செய்வதோடு, 8 கோடி பேருக்கு வேலையையும் தருகின்றன. இந்த துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8 சதவீதத்தை பங்களிக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதியில், 43 சதவீதத்தையும் பங்களிக்கிறது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தி இதோடு முடிவடைந்து விடுகிறது. ... |
| வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிய சி.பி.சி.ஐ.டி., Posted: நெல்லை வேளாண் அதிகாரி மர்ம மரணத்தின் பின்னணியை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், உள்ளூர் ஆளுங்கட்சியினர் மூவரை வரிசையாக விசாரித்திருப்பது, அ.தி.மு.க., வட்டாரத்தில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை வேளாண் பொறியியல் துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி, கடந்த பிப்., 20ம் தேதி, நெல்லை தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, எதிரில் வந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு விட்டது தமிழக ... |
| லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்த வேண்டும்: பிரம்மா Posted: புதுடில்லி: ''லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்தினால், பல கோடி ரூபாய் மிச்சமாகும். இதை அமல்படுத்துவது பற்றி, பார்லிமென்ட் பரிசீலிக்க வேண்டும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பின், முதல், 20 ஆண்டுகளில், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாகவே தேர்தல் நடந்து உள்ளது. அதன்பின், இவற்றில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது; லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு, ... |
| கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் 'பந்த்' Posted: கர்நாடக அரசை கண்டித்து, தமிழகத்தில் நேற்று, விவசாய சங்கங்கள் நடத்திய, பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் இயக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.காவிரி டெல்டா மாவட்டங்களில், பரவலாக வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. பல இடங்களில், பஸ் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட, 1,641 பேர் கைது செய்யப்பட்டனர்.கரூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில், நேற்று, பரவலாக, வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. தஞ்சை, கும்பகோணம் ரயில்வே ... |
| Posted: புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நேற்று நீக்கப்பட்டனர். 'இது, திட்டமிட்ட ஜனநாயக படுகொலை' என, அவர்கள் இருவரும் விமர்ச்சித்துள்ளனர். ஆம் ஆத்மியில் ஏற்பட்டுள்ள இந்த கலாட்டாவால் அதிருப்தி அடைந்துள்ள சமூக ஆர்வலர் மேதா பட்கர், அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளார்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியின் மூத்த தலைவர்களும், கட்சியின் ... |
| பன்னீருக்கு 'ஓ' போடும் ஆளுங்கட்சி Posted: கடந்த ஏழு மாதங்களில், தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததாக, கட்சியினர் பாராட்டி மகிழ்கின்றனர். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதால், தன்னுடைய எம்.எல்.ஏ., பதவியையும், முதல்வர் பதவியையும் இழந்தார், ஜெயலலிதா. |
| கிளார்க் திண் வெட்டோரி: உலகக்கோப்பை யாருக்கு வசப்படும் Posted: மெல்போர்ன்: ஆஸி., நியூசி., இணைந்து நடத்தும் 11வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாறறில் 7வது முறையாக இறுதிப்போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக இறுதிப்போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்தும் நாளை இறுதிப்போட்டியில் மோதுகின்றன.கடந்த பத்து உலகக்கோப்பை போட்டிகளில் 6 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆஸி.,(1975, 87, 96, 99, 2003, 07) 1975 மற்றும் 96ல் தோல்வியடைந்தது; நான்கு முறை சாம்பியன் ஆனது. இதனால், இறுதிப்போட்டியில் வழக்கமான ஆட்டத்தை ஆஸி., வீரர்கள் பதற்றமின்றி வெளிப்படுத்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 29,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |