Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


டி.கே. பட்டம்மாள் பிறந்த தினம்: மார்ச் 28 1919

Posted: 28 Mar 2015 12:09 PM PDT

டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் 28ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர். அலமேலு என்ற இயற்பெயருடைய ...

பச்சை பட்டாணி

Posted: 28 Mar 2015 12:05 PM PDT

ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, பழங்காலத்தில் இருந்தே விளையும் காய்கறிகளில் ஒன்றாகும். மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி, வணிகதானியங்களில் ஒன்றாகும். பெரும்பாலோர் பச்சை பட்டாணியை ஊட்டச்சத்து நிறைந்த காயாக கருதமாட்டார்கள். பச்சை பட்டாணியில் ப்ஹைடொநியூடிரிஷியன்ஸ் அதிகம் நிறைந்துள்ளதால் அதன் பலன்கள் ஏராளம். உழவனின் நண்பன் பச்சை பட்டாணிகள் ஊட்டச்சத்து வாய்ந்தவை மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் ஏற்ப வளரும் தன்மை வாய்ந்தவை. இவை மண்ணிற்கு அதிக பலன் தரும் நைட்ரஜன் ...

துன்பச்சிறை.

Posted: 28 Mar 2015 11:59 AM PDT

ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன். " என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர். "மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்" என்றான் "உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்" என்றார் பெரிவர் "அப்படியா சொல்கிறீர்கள்?" "ஆமாம்!" "அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" "மனதைப் புரிந்து கொள்... அது போதும்." "எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன். "இந்தக் கதையைக் கேள்" என்று அவர் சொன்னார் - "ஆசையாக ...

- திருஷ்டி! - ஒரு பக்க கதை

Posted: 28 Mar 2015 11:45 AM PDT

"ஏங்க! ஊரிலிருந்து வந்திருக்கிற உங்க தாத்தாவின் பார்வையே சரியில்லை!' - கணவரிடம் புகார் செய்தாள் கல்யாணி. "ஏண்டி! அவருக்கு வயசு எழுபதுக்குமேல் ஆகுது... அவரைப்போய்...' "ஐயோ... நான் அந்த அர்த்தத்தில் சொல்லலைங்க! போனவாரம், பக்கத்து வீட்டுக் குழந்தையைப் பார்த்து, ரொம்ப அழகா இருக்குன்னு திரும்ப திரும்பச் சொன்னார். இப்போ அந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்திடுச்சு!' "நாலு நாளைக்கு முன்னே அந்த குழந்தைக்கு, குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்தாங்களே... ஞாபகம் இருக்கா? அதனால் வந்திருக்கலாம்' ...

படிப்பு - ஒரு பக்க கதை

Posted: 28 Mar 2015 11:43 AM PDT

ஸ்டாப் - ஒரு பக்க கதை

Posted: 28 Mar 2015 11:40 AM PDT

அந்த நகரப் பேருந்து நிறுத்தங்களில்கூட சரிவர நிறுத்தப்படாமலேயே சென்று கொண்டிருந்தது. பயணிகள், நிறுத்து நிறுத்து என்று கூவியும், முதல்லயே சொல்லணும்... அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குங்க என்றார் நடத்துனர். கூட்டமும் அதிகமிருந்தது. ஓட்டுனரும் விரைவாக ஓட்டிக் கொண்டிருந்தார். இப்படிச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஓரிடத்தில் ஒரு பிச்சைக்கார கிழவி கை காட்டவும், நடத்தினர் ஸ்டாப் என்று விசில் கொடுத்தார். வண்டி சடன்பிரேக் போடப்பட்டு பயணிகள் முன்பின் சரிய நிறுத்தப்பட்டது. நடத்துனர், ...

உயிர் ஸ்பரிசம்!

Posted: 28 Mar 2015 11:38 AM PDT

மயன் மாளிகைக்குள் நுழைந்ததுபோல் இருந்தது சரஸ்வதிக்கு. எங்கிருந்து வருகிறதென்று தெரியாத வகையில் செயற்கை வெளிச்சமும் குளிரூட்டலும் பளீர்ச் சுவர்களும்... அரக்கும் பச்சையும் கலந்த அழகான சீருடைப் புடவைகள் அணிந்த பெண்களும்... - என்ன? மயன் மாளிகையில் எல்லோரும் இன்பக் கேளிக்கைகளில் ஈடுபட்டபடி மகிழ்ந்திருப்பார்களாயிருக்கும். இங்கோ, அனைவருமே டாக்டரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். - சரஸ்வதியும்தான். சக்கர நாற்காலியை விட்டு எழக் கூடாது என்பது அவளுக்கு இடப்பட்ட கட்டளை. - குமார் ...

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

Posted: 28 Mar 2015 11:24 AM PDT

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! பெங்களூரு: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு எதிராக கர்நாடக அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ் சேனல் ஒளிபரப்பு மற்றும் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதும் நிறுத்தப்பட்டன. கர்நாடக அரசு காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று கடை அடைப்பு ...

உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை

Posted: 28 Mar 2015 11:22 AM PDT

சென்னை : நாட்டில் நல்லதோ, கெட்டதோ என்ன நடந்தாலும் உடனடியாக அது தொடர்பாக கண்டனம் அல்லது ஆதரவு அறிக்கை வெளியிடுவது நமது கட்சித் தலைவர்களின் வழக்கம். அந்த வகையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்துடன் காணப்படுகின்றனர். எனவே, இந்திய அணியின் தோல்வி குறித்து நமது தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படி இருக்கும் என்று யாரோ ஒரு புண்ணிவான் ரொம்பக் கஷ்டப்பட்டு கற்பனை செய்து அந்த அறிக்கையை வாட்ஸ் ஆப் போட்டுள்ளார். ...

சுகபோக வாழ்வு

Posted: 28 Mar 2015 11:18 AM PDT

மாதம் மும்மாரி மழை பொழியும் என்பர் அல்லவா? விஜயநகரத்தில் மழைக்குப் பஞ்சமே இல்லை. – மழை பெய்து புற்கள் தழைத்து நின்றதால், அந்தப் புல் தரையில் இளைஞன் ஒருவன் ஆனந்தமாகப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்."குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. – மாமன்னர் கிருஷ்ண தேவராயரும், அப்பாஜியும் நகர்வலம் வந்த போது இதனைக் கண்டனர் – ""ஓரளவு குளிர்ந்த காற்று அடித்தாலும் நம்மால் அதைத் தாங்க முடியவில்லையே… இவன் இவ்விதம் கவலையில்லாமல் படுத்து உறங்குகிறானே, இவனால் இவ்விதம் படுத்து உறங்க எவ்விதம் முடிகிறது,"என்று தன் ...

பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!

Posted: 28 Mar 2015 09:46 AM PDT

அந்தப் பிராந்தியம்தான் அந்த நாட்டின் ஆன்மா; இதயப் பகுதி. அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிக்கும் இரண்டு கோடி மக்கள் குடிநீருக்கு அல்லாடுகிறார்கள். அங்கே இருக்கும் ஆறு, அணை, குளம், குட்டை என நாட்டில் ஒட்டுமொத்தத் தண்ணீர் கையிருப்புமே 10 சதவிகிதத்துக்கும் கீழ் (ஒரு நாட்டின் தண்ணீர் வளம் அந்த அளவுக்குக் குறைவதை 'டெட் வால்யூம்' என அபாயகரமாகக் குறிப்பிடுவர்). நாடு, கிட்டத்தட்ட பாதிப் பாலைவனம் ஆகிவிட்டது. வாரத்தில் ஐந்து நாட்களுக்குக் குழாய் களில் தண்ணீர் வராது. இரண்டு நாட்களுக்கு மட்டும் ...

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

Posted: 28 Mar 2015 09:24 AM PDT

ஸ்ரீஹரிகோட்டா : புவிசார் வழிகாட்டி தொழில்நுட்பத்திற்காக பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1டி செயற்கை கோள் தாங்கி சென்றது. பி.எஸ்.எல்.வி சி 27 சுமந்து செல்லும் 4 வது செயற்கை கோள் இது. ஸ்ரீரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 5.19 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. புவி வழிகாட்டி செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1டி.-யை ராக்கெட் சுமந்து சென்றது. ராணுவத்திற்கு உதவும், போர்க்கால நேரத்தில் நமது எல்லை ...

91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

Posted: 28 Mar 2015 09:06 AM PDT

முதுபெரும் பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் பிரதமருமான 91 வயது வாஜ்பாய்க்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விருதை வழங்கினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான 'பாரத ரத்னா' விருதினை வழங்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு, அவரது பிறந்த நாளின்போது அறிவித்தது. 91 வயது தலைவர் அப்போது அவரது பிறந்த நாளை நல்லாட்சி தினமாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 28 Mar 2015 07:42 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்!

Posted: 28 Mar 2015 06:42 AM PDT

உலக பேட்மிண்டன் தரவரிசையில் விரைவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதலிடம் பிடிக்கவுள்ளார். இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அவர் இந்த சாதனையை படைத்துவிடுவார். அந்த சாதனையை படைத்தால், சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பிறகு முதலிடம் பிடித்த முதல் சீனர் அல்லாத வீராங்கனை என்ற புதிய சாதனையை அவர் எட்டுவார். டெல்லியில் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேஷிய வீராங்கனை ஹனா ...

கஜூராகோ கோயில்கள்

Posted: 28 Mar 2015 06:39 AM PDT

கஜூராகோ மத்யபிரதேசத்தில் சத்ரபூர் மாவட்டத்தில் உள்ளது. கஜுராஹே என்ற பேரானது ஈச்சமரத்து ஓலையில் இருந்து பெறப்பட்டது. காஜூர் என்று அது இந்த பகுதியின் ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. இப்பகுதியே ஈச்சங்காடாக இருந்திருக்கிறது. இப்போதும் இப்பகுதியில் ஈச்சமரங்களை அதிகமாகக் காணலாம். கஜுராஹோ ஒருகாலத்தில் சந்தேலா மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கிறது. அவர்கள் கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 950 முதல் நூற்றைம்பது வருடக்கால இடைவெளியில் இங்குள்ள கோயில்கள் ...

உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.

Posted: 28 Mar 2015 06:17 AM PDT

புதுடில்லி; உலக பாட்மின்டன் தரவரிசையில் ('ரேங்க்') 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்தார் செய்னா நேவல். இந்த சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனை இவர் தான். டில்லியில் இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இத்தொடரில் பெறும் வெற்றியை பொறுத்து இந்திய வீராங்கனை செய்னா நேவல் ('நம்பர்-2', ஸ்பெயினின் கரோலினா மரின் (நம்பர்-4) இடையே, 'நம்பர்-1' இடத்தை பிடிப்பதில் போட்டி காணப்பட்டது. இதனிடையே, பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் செய்னா நேவல் முன்னேறினார். அதேநேரம் ...

அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் கேட்ட வரம்

Posted: 28 Mar 2015 03:56 AM PDT

'நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை' என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர். இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. ...

தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

Posted: 28 Mar 2015 03:54 AM PDT

சத்தியமூர்த்தி ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது. 1939-ம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் ...

ஓ.பன்னீர்செல்வம் சட்ட விதியை மீறி விட்டார்: ராமதாஸ் குற்றச்சாட்டு

Posted: 28 Mar 2015 03:48 AM PDT

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழக சட்டப்பேரவையில் 2015-16 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தமது உரையின் முடிவில், ''போற்றுதலுக்குரிய அம்மா வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையின் ...

பத்மினி - எதிர்பாராதது

Posted: 28 Mar 2015 03:27 AM PDT

1954. சிவாஜிக்கும் பத்மினிக்கும் மறக்க முடியாத மன்மத ஆண்டு. வருடக் கடைசியில் வெளியான எதிர்பாராதது, நிஜத்திலும் அப்படியே. தமிழ் சினிமாவின் முதல் மாறுபட்ட காதல் சித்திரம். ஸ்ரீதர் எழுதியது. அன்றைய கல்லூரிகளில் பாடத்தைவிட அதிகம் ஒப்பிக்கப்பட்டவை ஸ்ரீதரின் வசனங்கள். சுமதியாக பத்மினியும் சுந்தராக கணேசனும் பேசியதில் இருந்து சில வரிகள் - சுந்தர் - சுமதி! உன் பாட்டிலே நான் அப்படியே மெய்மறந்து... - சுமதி - தூங்கிட்டீங்களா! - சுந்தர் - இல்லை சுமதி. நீ பாடியது வெறும் பாட்டல்ல! என் இதய நரம்புகளை ...

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Posted: 28 Mar 2015 03:26 AM PDT


-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.

இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.
–
————————————

தொடத் தொடத் தொல்காப்பியம்(356)

Posted: 28 Mar 2015 02:17 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

லீ குவான் யூ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு!

Posted: 28 Mar 2015 12:10 AM PDT

நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டு வந்தவர், அந்த நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ (வயது 91). இவர் உடல் நலக்குறைவால் கடந்த 23–ஆம் தேதி மரணமடைந்தார். நேர்மையும், தூய்மையுமான நிர்வாகத்துக்கு பெயர் பெற்றவர் லீ குவான். இன்றைக்கு சிங்கப்பூர் அடைந்துள்ள எல்லா முன்னேற்றங்களுக்கும் அவர்தான் பிதாமகன். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சிங்கப்பூரில் தமிழ் மொழியையும், அதிகாரப்பூர்வ மொழியாக்கிய பெருமைக்குரியவர் லீ குவான். அவரது மறைவையொட்டி ...

உலகச் செய்திகள்!

Posted: 28 Mar 2015 12:09 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Posted: 27 Mar 2015 11:09 PM PDT

காத்திருப்பு…!!
*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 27 Mar 2015 09:18 PM PDT

*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™