Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உம்மன் சாண்டி அரசுக்கு ஆபத்து: ஆளுங்கட்சி கூட்டணியில் விரிசல்

Posted:

திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில், மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உம்மன் சாண்டி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. 140 உறுப்பினர்களை உடைய சட்டசபையில், பெரும்பான்மைக்கு, 73 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு, 75 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளில், கேரள காங்கிரஸ் (எம்)க்கு, ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கட்சியின் மூத்த தலைவரா மாணி, ...

10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர்: 14 மாணவர்களுக்கு பாதிப்பு

Posted:

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள நாசரேத் பகுதி பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தடுத்ததால், தேர்வு எழுத முடியவில்லை என , மாணவர், அவரது பெற்றோர், உறவினர்களுடன் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.இதே போல 14 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.மாணவனின் தந்தை அழகு கலெக்டரிடம் அளித்த புகார்: நாசரேத் பகுதியில் மர்காஷியஸ் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் என் மகன் முத்துராமன் பத்தாம் வகுப்பு படித்தான். தேர்வு கட்டணம் செலுத்திவிட்டான், அவனுக்கான ஹால்டிக்கெட் வந்துவிட்டது. ஆனால் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோசப் ஜெயராஜ் என் மகனிடம், '' நீ ...

'கட்டமைப்பு துறையின் சர்வதேச மையமாக இந்தியா உருவாகும்'

Posted:

புதுடில்லி: ''சீனாவில் அனைத்து துறைகளிலும் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்து விட்டது. இதனால், தயாரிப்பு துறையில் இந்தியாவை நோக்கி, பல்வேறு நிறுவனங்களின் பார்வை திரும்பியுள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார்.

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று நடந்த விழாவில் பேசியதாவது: சீனாவில் தற்போது அனைத்து தொழில் துறைகளிலும் ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால், அங்கு செயல்படும் நிறுவனங்கள் சம்பளம் கொடுக்க முடியாமல் திணறுகின்றன; இது, இந்தியாவுக்கு சாதகமான அறிகுறி. ...

திட்டங்களை செயல்படுத்துவது எப்படி? புதிய குழுவை அமைக்க 'நிடி' முடிவு

Posted:

புதுடில்லி: மத்திய அரசின் திட்டங்களை, தீவிரமாக செயல்படுத்துவது எப்படி என்பது குறித்து, அறிக்கை தயாரிப்பதற்காக புதிய குழுவை அமைக்க, 'நிடி ஆயோக்' முடிவு செய்துள்ளது.

மூன்று குழுக்கள்:
பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திட்டக் கமிஷனுக்கு பதிலாக, தற்போது, 'நிடி ஆயோக்' என்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் முதல் நிர்வாக குழு கூட்டத்துக்கு பின், 'திறன் மேம்பாடு, மத்திய அரசின் திட்டங்கள், தூய்மை இந்தியா' ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக, மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. ம.பி., முதல்வரும், ...

காவிரியில் அணை கட்ட எதிர்ப்பு: சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்

Posted:

சென்னை: 'காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகத்தின் நடவடிக்கையை, மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்' என, அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன், தமிழக சட்டசபையில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முதல்வர் பன்னீர்செல்வம், சட்டசபையில், நேற்று கொண்டு வந்த தனிநபர் தீர்மானம்: காவிரி இறுதி தீர்ப்புக்கு முரணாக, காவிரியின் குறுக்கே, மேகதாதுவில், இரு புதிய அணைகள் கட்ட, கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதை கண்டித்து, 2014 டிச., 5ல், தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.இத்தீர்மானம் மீது, மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் ...

பால் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கவில்லை: பன்னீர்செல்வம்

Posted:

சென்னை: ''பால் விலை உயர்வால், ஏழை மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.இதுகுறித்து, சட்டசபையில் நடந்த விவாதம்:மா.கம்யூ., - பால:பாரதி: மத்திய அரசு, மக்கள் நலத்திட்டங்களில் கை வைத்தது போல், மாநில அரசு, பால் விலையை உயர்த்தி உள்ளது.அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால், பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டாம் என்கிறீர்களா?பாலபாரதி: அவ்வாறு கூறவில்லை. அதற்குரிய செலவை, அரசு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். பால் விலை உயர்வால், ஏழை மக்கள் ...

ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி: கொண்டாடிய காஷ்மீர் மக்கள்

Posted:

ஸ்ரீநகர்: உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி யில், ஆஸ்திரேலியாவிடம், இந்திய அணி தோல்வி அடைந்ததை, காஷ்மீர் மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.பா.ஜ., ஆதரவுடன், மக்கள் குடியரசு கட்சியை சேர்ந்த, முப்தி முகமது சயீத் தலைமையிலான ஆட்சி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடக்கிறது.கடந்த 26ம் தேதி, சிட்னியில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில்,இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடின.சமபலம் பொருந்திய இரு அணிகள் மோதியதில், இந்தியா 95 ரன் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.இந்திய அணி தோல்வி அடைந்ததை அறிந்தரசிகர்கள், தற்கொலை வரை ...

கேள்வி கேட்க கூடாது என்கிறார் கெஜ்ரிவால்: பிரஷாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் சரமாரி குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில், டில்லியில் இன்று கூடவுள்ள நிலையில், கட்சியின் நிறுவனத் தலைவர்களில் இருவரான, பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து, கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை, சரமாரியாக குற்றஞ்சாட்டினர்.கடந்த சில நாட்களாக, ஆம் ஆத்மி விவகாரம், டில்லி அரசியலில் சூட்டை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தி தலைவர்களான பூஷன் மற்றும் யாதவுடன் பேச்சு நடத்திய, மூத்த தலைவரான, முன்னாள் ராணுவ தளபதி அட்மிரல் ராமதாஸ், மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பரஸ்பரம் இருதரப்பினரும், பகிரங்கமாக புகார் ...

அடல்ஜிக்கு 'பாரத ரத்னா' விருது: வீட்டுக்கே சென்று விருதை வழங்கினார் ஜனாதிபதி

Posted:

புதுடில்லி: முன்னாள் பிரதமரும், அரசியல் வேறுபாடுகளை கடந்து, அனைத்து தரப்பினரின் அன்பை பெற்றவருமான வாஜ்பாய்க்கு, 90, நேற்று, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவரின் உடல்நலக் குறைவு கருதி, மரபை மீறி, அவரின் வீட்டுக்கே சென்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய். 1998 - 2004 வரை பிரதமராக பதவி வகித்தவர். காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஐந்து ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த பெருமையை அவர் பெற்றுள்ளார். 'சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஞாபக மறதி போன்ற ...

2.8 லட்சம் பேரால் ரூ.100 கோடி மிச்சம்: காஸ் மானியத்தை கைவிட்டவர்கள் பற்றி மோடி பெருமிதம்

Posted:

புதுடில்லி: ''பணக்காரர்களில், 2.8 லட்சம் பேர், சமையல் காஸ் மானியத்தை கைவிட்டதால், அரசுக்கு, 100 கோடி ரூபாய் மிச்ச மாகி உள்ளது. மீதமுள்ள பணக்காரர்களும், மானிய விலை சிலிண்டரை மறந்து, மார்க்கெட் விலை சிலிண்டர்களை வாங்குங்கள்,'' என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பெரும் சுமை:
இதுகுறித்து, பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:நாட்டின் பொருளா தார வளர்ச்சிக்கு, சமையல் காஸ் மானியம் பெரும் சுமையாக உள்ளது. இதனால், 'பணக்காரர்கள், மானிய விலையில் சிலிண்டர் வாங்குவதை தவிர்த்து, மார்க்கெட் விலையில் வாங்கதயாராக வேண்டும்' என, சில மாதங்களுக்கு முன் அழைப்பு ...

நில மசோதாவுக்கு ஆதரவு தர சோனியா மறுப்பு: அனுமதிக்க முடியாது என ஆவேச பதில்

Posted:

புதுடில்லி: 'நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஆதரவு தர வேண்டும்' என கேட்டு, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திற்கு, சோனியா நேற்று அனுப்பிய பதிலில், 'நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எந்தச் சூழ்நிலையிலும் ஆதரவு அளிக்க மாட்டேன்' என, தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார்.நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அவசியமான, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என, விரும்பும் மத்திய அரசுக்கு, எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக உள்ளன.

முடங்கி போய்...:
பா.ஜ., தலைமையிலான, ஆளும் தேசிய ஜனநாயக ...

எதிரெதிர் துருவங்களான தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி: நட்பை மலரச் செய்கிறது மேகதாது அணை பிரச்னை: அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்திக்க சம்மதம்

Posted:

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரும் சட்டசபை தீர்மானத்தை, பிரதமரிடம் வழங்க, தமிழகத்தைச் சேர்ந்த, எதிரெதிர் துருவங்களான தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்று சேர்கின்றன. அவற்றுடன், பா.ம.க., - பா.ஜ., - காங்., - கம்யூனிஸ்ட் என, எல்லா கட்சிகளின் எம்.பி.,க்களும் டில்லி செல்ல முன்வந்துள்ளனர். எலியும் பூனையுமாக இருக்கும் இக்கட்சிகள் அனைத்தும், இந்த விஷயத்தில், அ.தி.மு.க., அழைப்பை ஏற்று அணி சேர்ந்துள்ளது, அதிசய கூட்டணியாகவே கருதப்படுகிறது.'காவிரியில் புதிய அணை கட்ட, கர்நாடகத்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்' என, சட்டசபையில் நேற்று தீர்மானம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™