Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- முல்லைப் பெரியாறு: மத்திய தொழிலக பாதுகாப்பு தேவையில்லை
- பள்ளியில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
- தெரு நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்
- வாஜ்பாய்க்கு பாரத ரத்னா: சென்னையில் பாஜகவினர் கொண்டாட்டம்
- இளைஞர் விஷம் குடித்து தற்கொலை
- வரும் ஏப். 2 டாஸ்மாக் கடைகள் செயல்படாது
- உதவி ஆய்வாளர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்
- லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
- தோகைமலை அருகே மது போதையில் முதியவர் சாவு
- சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் தனியார் சர்க்கரை ஆலைக்கு சீல்: ஆட்சியர்
- கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயில் திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
- திருச்சியில் விவசாயிகள் சாலையில் படுத்து மறியல்
- மருத்துவ காப்பீடுத் திட்ட முகாம்:8 பேர் உயர் சிகிச்சைக்குப் பரிந்துரை
- வார்ப்பட்டு ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம்
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- "கற்றலை நிறுத்தாது தொடர வேண்டும்'
- கர்நாடகத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக நிர்பந்திக்க வலியுறுத்தல்
- மல்லிப்பட்டினத்தில் மீனவர் விழிப்புணர்வு கூட்டம்
- திருவாரூர் அருகே கார் மோதி ஒருவர் சாவு
- மண் பரிசோதனை: விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
- தேரழந்தூரில் மனுநீதி நாள் முகாம்: 62 மனுக்கள் ஏற்பு
- நில அளவையரை காரில் கடத்த முயற்சி
- மார்ச் 28 மின் தடை
- கோயில் திருவிழாவில் தகராறு: மேலும் 15 பேர் கைது
- கரூர் நகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்
- மாலத்தீவு மாணவர்கள் கரூர் வருகை
- திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுரை
- விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது
- இலவசக் கட்டாய கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சுய-உதவிக் குழுவுக்கு ரூ.96.20 லட்சம் சுழல் நிதி
- குளித்தலையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது
- 2}வது திருமணம் செய்த கணவர் மீது பெண் புகார்
- 20 பேருக்கு ரூ. 6.63 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி
- பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- செந்துறை வட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- "ஆதார் அட்டை இணைப்பு முகாமில் 1.36 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்பு
- வங்கி அலுவலர்களுடன் போலீஸார் ஆலோசனை
- பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை
- பாரதியின் தோழர் பரலி
- மரங்களல்ல, வரங்கள்!
- சரித்திரமாய் நிலைத்த ஆசியப் புலி!
- நிலம் கையகச் சட்டம்: பகிரங்க விவாதத்துக்கு அழைப்பது கேலிக்கூத்து: சோனியா
- சட்டப்பேரவை இன்று நடைபெறாது
- அரசியலில் இருந்து மு.க.ஸ்டாலின் விலகுவாரா? அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி
- காவிரி விவகாரம்: பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு
- அனைத்துக் கட்சிகள் குழு தில்லி செல்ல வேண்டும்
- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல்
- திருச்சி மாவட்டத்தில் ஈரடுக்கு காகித அட்டை தயாரிப்பு ஆலை: டிசம்பரில் திறக்கப்படும்
- உரம் விலை உயர்வுக்கு மு.க.அழகிரிதான் காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
- நியாய விலைக் கடைகளில் பருப்பு வகைகள் தடையில்லாமல் வழங்கப்படுகின்றன: அமைச்சர் காமராஜ்
- வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
- புதிய கட்டடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்
- மார்ச் 30-ல் நுகர்வோர் அமைப்பு ஆலோசனைக் கூட்டம்
- பொன்னமராவதியில் வர்த்தகர் கழகக் கூட்டம்
- "பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு விதிமீறலே காரணம்'
- விவசாய சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர் கழகம் ஆதரவு
- பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு
- லீ குவான் யூ மறைவு: நாடு முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு
- குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
- திருவாரூரில் மார்ச் 30-ல் உண்ணாவிரதம்: சுகாதார செவிலியர் சங்கம் முடிவு
- கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: சிபிஐ விசாரணை கோரிக்கை நிராகரிப்பு
- ஏப்.1-ல் நீச்சல் பயிற்சி தொடக்கம்
- கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது
- நிலம் கையக விவகாரத்தில் மீண்டும் அவசரச் சட்டம்: மத்திய அரசு முடிவு
- "கற்றலை நிறுத்தாது தொடர வேண்டும்
- மத்திய அரசு திட்டங்கள்: செயல்குழு அமைக்கிறது மத்திய கொள்கைக் குழு
- திருத்துறைப்பூண்டி
- தஞ்சாவூர்
- "சுற்றுச்சூழல் தொடர்பான 5 சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசனை'
- புதுக்கோட்டை
- கேஜரிவால் மீது யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் சரமாரி குற்றச்சாட்டு
- வாஜ்பாய்க்கு தலைவர்கள் வாழ்த்து
- 2ஜி: அமலாக்கத் துறை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு சாட்சிகளிடம் ஏப்ரல் 6-இல் விசாரணை
- வேகமாக காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வழக்கு: காரை ஓட்டியது நானில்லை: சல்மான் கான்
- இயற்கை எரிவாயுவின் விலை 9 சதவீதம் குறைப்பு
- விமான விபத்து: மற்றொரு அதிகாரியின் உடல் மீட்பு
- உலகின் மிகப் பெரிய தலைவர்கள் பட்டியல்: 5-ஆவது இடத்தில் மோடி: அமெரிக்கப் பத்திரிகை கணிப்பு
- சோனியா, கேஜரிவாலுடன் நிதீஷ் குமார் சந்திப்பு
- மிஸோரம் முன்னாள் முதல்வர் சைலோ மறைவு
- நிலம் கையக மசோதா: விவசாயிக்கு வேலை என்பதற்கு என்ன உத்தரவாதம்?: ஹசாரே
- ஜம்மு-காஷ்மீர் பேரவையில் அமளி: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அவைக் காவலர்கள் மோதல்
- கேஜரிவால் மீது யோகேந்திர யாதவ்,பிரசாந்த் பூஷண் சரமாரி புகார்
- மெல்லும் வகையிலான புகையிலை பொருள்களுக்கு தடை
- இணையதளம் மூலம் குடும்ப அட்டை பெறும் திட்டம்
- சிறுத்தையின் தோல் வைத்திருந்தவருக்கு ஓராண்டு சிறை
- ஆம் ஆத்மி உள்கட்சி பூசல்:காங்கிரஸ், பாஜக கருத்து
- டிடிஇஏ பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
- அன்புமணி ராமதாஸுக்கு எதிரான மனு தள்ளுபடி
- சோனியா, கேஜரிவாலுடன் நிதீஷ் குமார் சந்திப்பு
- துப்பாக்கி முனையில் கொள்ளை: இளைஞர், சிறார் கைது
- சொத்து வழக்கு: தந்தைக்குச் சொந்தமான வீட்டைக் காலி செய்ய மகனுக்கு உத்தரவு
- டைட்லர் மீதான வழக்கை முடிக்கும் அறிக்கை மீது ஏப்ரல் 22இல் பரிசீலனை
- தில்லி நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை தாக்கல்
- நதி நீர்ப் பகிர்வு பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்
- சீனாவில் கூலி உயர்வால் இந்தியாவுக்கு வாய்ப்பு: ஜேட்லி
- பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்: ஆட்சியர் தொடக்கி வைத்தார்
- ஓய்வூதியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் நேர்காணல்
- உத்தரமேரூரில் இன்று கடையடைப்பு
- மாநில அளவிலான 20-20 கிரிக்கெட்: வி.ஐ.டி. அணி சாம்பியன்
| முல்லைப் பெரியாறு: மத்திய தொழிலக பாதுகாப்பு தேவையில்லை Posted: 27 Mar 2015 01:24 PM PDT முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலாகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. |
| பள்ளியில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் Posted: 27 Mar 2015 01:23 PM PDT கரூர் அருகே உள்ள கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தெரு நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம் Posted: 27 Mar 2015 01:23 PM PDT குளித்தலை நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் தெரு நாய்கள் பிடிக்கும் பணியை நகராட்சி பணியாளர்கள் வெள்ளிக்கிழமை தொடங்கினர். |
| வாஜ்பாய்க்கு பாரத ரத்னா: சென்னையில் பாஜகவினர் கொண்டாட்டம் Posted: 27 Mar 2015 01:23 PM PDT முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர். |
| Posted: 27 Mar 2015 01:23 PM PDT கரூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் சோமூரைச் சேர்ந்தவர் சரத் (19). எலக்ட்ரீசியன். இவர் அண்மைக்காலமாக வேலைக்குச் செல்லாமல் |
| வரும் ஏப். 2 டாஸ்மாக் கடைகள் செயல்படாது Posted: 27 Mar 2015 01:23 PM PDT மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் ஏப். 2ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை செயல்படாது. |
| உதவி ஆய்வாளர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம் Posted: 27 Mar 2015 01:22 PM PDT கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை (மார்ச் 28) முதல் நடைபெற உள்ளன. |
| லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது Posted: 27 Mar 2015 01:22 PM PDT கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை தோகைமலை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| தோகைமலை அருகே மது போதையில் முதியவர் சாவு Posted: 27 Mar 2015 01:22 PM PDT தோகைமலை அருகே பாலத்தில் இருந்து விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். கரூர் மாவட்டம், நாகனூர் ஊராட்சி, கம்பத்தாம்பாறையைச் சேர்ந்தவர் சங்கர் (55). இவர், கடந்த 25 ஆம் |
| சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 27 Mar 2015 01:21 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார். |
| நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் தனியார் சர்க்கரை ஆலைக்கு சீல்: ஆட்சியர் Posted: 27 Mar 2015 01:21 PM PDT விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை இன்னும் 2 மாதங்களுக்குள் வழங்காவிட்டால் தனியார் சர்க்கரை ஆலை பூட்டி சீல் வைக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயில் திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 27 Mar 2015 01:21 PM PDT அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பெருந்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா சனிக்கிழமை (மார்ச் 28) கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. |
| திருச்சியில் விவசாயிகள் சாலையில் படுத்து மறியல் Posted: 27 Mar 2015 01:20 PM PDT திருச்சியில் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்க ஊர்வலமாகச் சென்ற விவசாயிகளை போலீஸார் கைது செய்வதாகக் கூறியதைத் தொடர்ந்து, சாலையில் அமர்ந்து தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மருத்துவ காப்பீடுத் திட்ட முகாம்:8 பேர் உயர் சிகிச்சைக்குப் பரிந்துரை Posted: 27 Mar 2015 01:20 PM PDT புதுக்கோட்டை அருகே காவேரி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்ட முகாமில் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். |
| வார்ப்பட்டு ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம் Posted: 27 Mar 2015 01:20 PM PDT பொன்ன மராவதி அரு கே உள்ள வார்ப்பட்டு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 27 Mar 2015 01:19 PM PDT அரியலூரில் மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார். அரியலூர் அருகேயுள்ள வாரணவாசி சமத்துவபுரத்தில் வசித்து வந்தவர் ராமலிங்கம் (55). கட்டடத் தொழியான இவர், கடந்த ஜனவரி மாதம் அரியலூர் புதுமார்க்கெட் தெருவில் கட்டடப் பண |
| "கற்றலை நிறுத்தாது தொடர வேண்டும்' Posted: 27 Mar 2015 01:19 PM PDT கற்றலுக்கு எல்லை கிடையாது என்பதால், கற்றல் பயணத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும் என்றார் சென்னை வர்சூஸா கன்சல்டிங் சர்வீஸஸ் நிறுவன துணைத் தலைவர் பிரகாஷ் அருணாசலம். |
| கர்நாடகத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக நிர்பந்திக்க வலியுறுத்தல் Posted: 27 Mar 2015 01:19 PM PDT காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகத்துக்கு எதிராக தமிழக அரசு அரசியல் ரீதியாக நிர்பந்தம் அளிக்க வேண்டும் என தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| மல்லிப்பட்டினத்தில் மீனவர் விழிப்புணர்வு கூட்டம் Posted: 27 Mar 2015 01:18 PM PDT பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் குறைதீர் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திருவாரூர் அருகே கார் மோதி ஒருவர் சாவு Posted: 27 Mar 2015 01:18 PM PDT திருவாரூர் அருகே வெள்ளிக்கிழமை கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். திருவாரூர் விஜயபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் (52). ஓய்வுபெற்ற ஓஎன்ஜிசி ஊழியர் இவர் இரு சக்கர வாகனத்தில் அம்மையப்பன் |
| மண் பரிசோதனை: விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல் Posted: 27 Mar 2015 01:18 PM PDT மண் பரிசோதனை தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தேரழந்தூரில் மனுநீதி நாள் முகாம்: 62 மனுக்கள் ஏற்பு Posted: 27 Mar 2015 01:17 PM PDT குத்தாலம் வட்டம், தேரழந்தூர் கம்பர் கோட்டத்தில் மேலையூர் வருவாய்க் கிராமத்திற்கான மனுநீதி நாள் முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| நில அளவையரை காரில் கடத்த முயற்சி Posted: 27 Mar 2015 01:17 PM PDT நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த நில அளவையரைத் தாக்கி காரில் கடத்த முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 27 Mar 2015 01:17 PM PDT திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டையில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (மார்ச் 28) மின் விநியோகம் இருக்காது. |
| கோயில் திருவிழாவில் தகராறு: மேலும் 15 பேர் கைது Posted: 27 Mar 2015 01:16 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருவிழாவில் போலீஸாரை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் 15 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| கரூர் நகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் Posted: 27 Mar 2015 01:16 PM PDT கரூர் நகராட்சியில் 2015-16ஆம் ஆண்டின் பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டதில் நிதிப்பற்றாக்குறை ரூ.1.98 கோடி என அறிவிக்கப்பட்டது. |
| மாலத்தீவு மாணவர்கள் கரூர் வருகை Posted: 27 Mar 2015 01:16 PM PDT இந்திய கலாச்சாரம், பண்பாடு அறிய மாலத்தீவு பள்ளி மாணவர்கள் கரூர் பரணிவித்யாலயா பள்ளிக்கு வியாழக்கிழமை வருகை தந்தனர். |
| திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுரை Posted: 27 Mar 2015 01:15 PM PDT திட்டப் பணிகளின் தேவை அறிந்து திட்டமிட்டு விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது Posted: 27 Mar 2015 01:15 PM PDT கரூர் மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கைது செய்தனர். |
| இலவசக் கட்டாய கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 27 Mar 2015 01:15 PM PDT தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும் என்றார் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பி. மார்கண்டேயன். |
| சுய-உதவிக் குழுவுக்கு ரூ.96.20 லட்சம் சுழல் நிதி Posted: 27 Mar 2015 01:14 PM PDT சுய-உதவிக் குழுவினருக்கு ரூ.96.20 லட்சம் சுழல் நிதிக்கடனை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெள்ளிக்கிழமை வழங்கினார். |
| குளித்தலையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது Posted: 27 Mar 2015 01:14 PM PDT குளித்தலையில் சனிக்கிழமையன்று (28-ம்தேதி) ஆட்டோக்கள் ஓடாது என குளித்தலை நகர ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். |
| 2}வது திருமணம் செய்த கணவர் மீது பெண் புகார் Posted: 27 Mar 2015 01:14 PM PDT வது திருமணம் செய்த கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இளம்பெண் ஒருவர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார். |
| 20 பேருக்கு ரூ. 6.63 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி Posted: 27 Mar 2015 01:13 PM PDT கட்டுமான நலவாரியம் சார்பில் 20 பேருக்கு ரூ. 6.63 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வழங்கினார். |
| பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 27 Mar 2015 01:13 PM PDT பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து, அரியலூரில் பட்டதாரி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| செந்துறை வட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 27 Mar 2015 01:13 PM PDT அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். |
| "ஆதார் அட்டை இணைப்பு முகாமில் 1.36 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்பு Posted: 27 Mar 2015 01:12 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு சிறப்பு முகாமில் 1.36 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார் |
| வங்கி அலுவலர்களுடன் போலீஸார் ஆலோசனை Posted: 27 Mar 2015 01:12 PM PDT பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கூட்ட அரங்கில், வங்கிகளின் பாதுகாப்பு குறித்து வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 27 Mar 2015 01:12 PM PDT பெரம்பலூரில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி மூட்டைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 27 Mar 2015 01:11 PM PDT |
| Posted: 27 Mar 2015 01:08 PM PDT உலகம் முழுவதும் பதினைந்து கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருப்பதாகவும், ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பனை மரங்கள் இருப்பதாக ஆய்ந்தறியப்பட்டிருக்கிறது. |
| சரித்திரமாய் நிலைத்த ஆசியப் புலி! Posted: 27 Mar 2015 01:07 PM PDT கடந்த திங்கள்கிழமை தனது 92-ஆவது வயதில் காலமான சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மரணத்துக்கு வேறு யார் அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்களும் தமிழகமும் அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். |
| நிலம் கையகச் சட்டம்: பகிரங்க விவாதத்துக்கு அழைப்பது கேலிக்கூத்து: சோனியா Posted: 27 Mar 2015 01:01 PM PDT நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தத்தை, அவசரச் சட்டத்தின் மூலம் தன்னிச்சையாக அமல்படுத்தி விட்டு, தற்போது அதுதொடர்பாக விவாதிக்க வருமாறு மத்திய அரசு அழைப்பது எதிர்க்கட்சிகளை கேலி செய்யும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். |
| Posted: 27 Mar 2015 12:59 PM PDT தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 28) நடைபெறாது என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. |
| அரசியலில் இருந்து மு.க.ஸ்டாலின் விலகுவாரா? அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி Posted: 27 Mar 2015 12:56 PM PDT அதிமுக ஆட்சியில் 3,354 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் குறிப்பிட்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அரசியலில் இருந்து மு.க.ஸ்டாலின் விலகுவாரா என்றும் பேரவையில் கேள்வி எழுப்பினார். |
| காவிரி விவகாரம்: பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு Posted: 27 Mar 2015 12:55 PM PDT காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தோடு ஏற்பட்ட விவாதத்தையடுத்து, திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| அனைத்துக் கட்சிகள் குழு தில்லி செல்ல வேண்டும் Posted: 27 Mar 2015 12:53 PM PDT மேக்கேதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாநிலத்தில் இருந்து அனைத்துக் கட்சிக் குழுவும் தில்லி செல்ல வேண்டும் என பேரவையில் வலியுறுத்தப்பட்டது. |
| முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் Posted: 27 Mar 2015 12:52 PM PDT முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு, சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. |
| திருச்சி மாவட்டத்தில் ஈரடுக்கு காகித அட்டை தயாரிப்பு ஆலை: டிசம்பரில் திறக்கப்படும் Posted: 27 Mar 2015 12:50 PM PDT திருச்சி மாவட்டத்தில் ஈரடுக்கு காகித அட்டை தயாரிப்பு ஆலை நிறுவனம் வரும் டிசம்பருக்குள் திறக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். |
| உரம் விலை உயர்வுக்கு மு.க.அழகிரிதான் காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜூ Posted: 27 Mar 2015 12:48 PM PDT உரம் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரிதான் காரணம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். |
| நியாய விலைக் கடைகளில் பருப்பு வகைகள் தடையில்லாமல் வழங்கப்படுகின்றன: அமைச்சர் காமராஜ் Posted: 27 Mar 2015 12:44 PM PDT நியாய விலைக் கடைகளில் பருப்பு வகைகள் தடையில்லாமல் வழங்கப்படுகின்றன என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார். |
| வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு Posted: 27 Mar 2015 12:32 PM PDT நாகப்பட்டினத்தில் நீதிபதியை தாக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். |
| புதிய கட்டடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் Posted: 27 Mar 2015 12:32 PM PDT புதுக்கோட்டையில் இசைப்பள்ளி மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் ஆகியவற்றுக்கு புதியக் கட்டடம் கட்டுவதற்கு தேவையான இடத்தை கலைப்பண்பாட்டுத் துறைக்கு வழங்க நகராட்சி மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ். |
| மார்ச் 30-ல் நுகர்வோர் அமைப்பு ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Mar 2015 12:32 PM PDT புதுக்கோட்டை மாவட்ட, தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான முதல் காலாண்டுக் கூட்டம் மார்ச் 30-ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பொன்னமராவதியில் வர்த்தகர் கழகக் கூட்டம் Posted: 27 Mar 2015 12:32 PM PDT பொன்னமராவதியில் வர்த்தகர் கழகத்தின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வர்த்தகர் கழகத் தலைவர் எஸ்கேஎஸ். பழனியப்பன் தலைமை வகித்தார். செயலர் மு. முகமது அப்துல்லா, பொருளாளர் பிஏஎல். தேனப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். |
| "பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு விதிமீறலே காரணம்' Posted: 27 Mar 2015 12:31 PM PDT சாலை விதிமுறைகளை மீறுவதாலே 90 சதவிகித விபத்துகள் நடைபெறுகின்றன என்றார் ஆலங்குடி நீதிபதி கிருபாகரன்மதுரம். |
| விவசாய சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர் கழகம் ஆதரவு Posted: 27 Mar 2015 12:31 PM PDT காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) அறிவித்துள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு புதுக்கோட்டை வர்த்தகர் கழகம் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. |
| பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு Posted: 27 Mar 2015 12:30 PM PDT புதுக்கோட்டை அருகே தைல மரக்காட்டில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். |
| லீ குவான் யூ மறைவு: நாடு முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு Posted: 27 Mar 2015 12:30 PM PDT மறைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவிற்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும், வரும் 29ஆம் தேதி துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு Posted: 27 Mar 2015 12:30 PM PDT தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சாகுபடிக்காக விவசாயிகள் அடமானம் வைத்த நகைகளை ஏலம் விடுவது தொடர்பாக மத்திய கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கும், அணைக்குடி பகுதியில் கொள்ளிடத்தில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் |
| திருவாரூரில் மார்ச் 30-ல் உண்ணாவிரதம்: சுகாதார செவிலியர் சங்கம் முடிவு Posted: 27 Mar 2015 12:30 PM PDT திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இந்திரா தாக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் 30-ஆம் தேதி திருவாரூர் நகராட்சி முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது |
| கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: சிபிஐ விசாரணை கோரிக்கை நிராகரிப்பு Posted: 27 Mar 2015 12:30 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நிராகரித்தது. |
| ஏப்.1-ல் நீச்சல் பயிற்சி தொடக்கம் Posted: 27 Mar 2015 12:29 PM PDT கோடை விடுமுறையை முன்னிட்டு, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் உள்ள குந்தவை நீச்சல் குளத்தில் ஏப்ரல் 1-ம் தேதி நீச்சல் பயிற்சி தொடங்கப்படவுள்ளது. |
| கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது Posted: 27 Mar 2015 12:29 PM PDT தஞ்சாவூர் விளாரில் உள்ள நாவலர் நகரைச் சேர்ந்தவர் ஆர். கோபிசுந்தரம் (37). இவர் கஞ்சா விற்பதாக தஞ்சாவூர் தாலுக்கா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. |
| நிலம் கையக விவகாரத்தில் மீண்டும் அவசரச் சட்டம்: மத்திய அரசு முடிவு Posted: 27 Mar 2015 12:29 PM PDT நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில், மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| "கற்றலை நிறுத்தாது தொடர வேண்டும் Posted: 27 Mar 2015 12:29 PM PDT கற்றலுக்கு எல்லை கிடையாது என்பதால், கற்றல் பயணத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும் என்றார் சென்னை வர்சூஸா கன்சல்டிங் சர்வீஸஸ் நிறுவன துணைத் தலைவர் பிரகாஷ் அருணாசலம். |
| மத்திய அரசு திட்டங்கள்: செயல்குழு அமைக்கிறது மத்திய கொள்கைக் குழு Posted: 27 Mar 2015 12:29 PM PDT மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை மேலும் திறம்பட அமல்படுத்துவது தொடர்பாக வரைவு அறிக்கை தயாரிப்பதற்காக, மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்), செயல்குழு ஒன்றை அமைக்க உள்ளது. |
| Posted: 27 Mar 2015 12:28 PM PDT |
| Posted: 27 Mar 2015 12:28 PM PDT |
| "சுற்றுச்சூழல் தொடர்பான 5 சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசனை' Posted: 27 Mar 2015 12:28 PM PDT சுற்றுச்சூழல் தொடர்பாக தற்போது நடைமுறையில் இருக்கும் 5 சட்டங்களில் திருத்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். |
| Posted: 27 Mar 2015 12:28 PM PDT |
| கேஜரிவால் மீது யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் சரமாரி குற்றச்சாட்டு Posted: 27 Mar 2015 12:27 PM PDT ஆம் ஆத்மியில் உள்கட்சிப் பூசலை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷணும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர். |
| வாஜ்பாய்க்கு தலைவர்கள் வாழ்த்து Posted: 27 Mar 2015 12:26 PM PDT பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய்க்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். |
| 2ஜி: அமலாக்கத் துறை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு சாட்சிகளிடம் ஏப்ரல் 6-இல் விசாரணை Posted: 27 Mar 2015 12:22 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்புச் சாட்சிகளிடம் ஏப்ரல் 6-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| வேகமாக காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வழக்கு: காரை ஓட்டியது நானில்லை: சல்மான் கான் Posted: 27 Mar 2015 12:21 PM PDT வேகமாக காரை ஓட்டி வந்து மோதி ஒருவரது உயிரைப் பறித்ததாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், மும்பை நீதிமன்றத்தில் ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வாக்குமூலம் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது. அப்போது, விபத்து நேரிட்டபோது காரை தான் ஓட்டவில்லை என்று அவர் தெரிவித்தார். |
| இயற்கை எரிவாயுவின் விலை 9 சதவீதம் குறைப்பு Posted: 27 Mar 2015 12:20 PM PDT இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் விலை முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 9 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ள இந்த விலைக் குறைப்பு, அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. |
| விமான விபத்து: மற்றொரு அதிகாரியின் உடல் மீட்பு Posted: 27 Mar 2015 12:17 PM PDT கோவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த மற்றொரு கடற்படை அதிகாரி அபிநவின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. |
| உலகின் மிகப் பெரிய தலைவர்கள் பட்டியல்: 5-ஆவது இடத்தில் மோடி: அமெரிக்கப் பத்திரிகை கணிப்பு Posted: 27 Mar 2015 12:14 PM PDT நிர்வாகம், தொழில் மற்றும் கொடை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் உலகத் தலைவர்களின் பட்டியலை அமெரிக்க நாளேடான "ஃபார்ச்சூன்' வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 5-ஆவது இடத்திலும், நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி 28-ஆவது இடத்திலும் உள்ளனர். |
| சோனியா, கேஜரிவாலுடன் நிதீஷ் குமார் சந்திப்பு Posted: 27 Mar 2015 12:12 PM PDT தில்லி சென்றுள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் (ஐஎன்எல்டி) தலைவர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| மிஸோரம் முன்னாள் முதல்வர் சைலோ மறைவு Posted: 27 Mar 2015 12:11 PM PDT மிஸோரமின் முன்னாள் முதல்வர் தென்புங்கா சைலோ, வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு, வயது 93. |
| நிலம் கையக மசோதா: விவசாயிக்கு வேலை என்பதற்கு என்ன உத்தரவாதம்?: ஹசாரே Posted: 27 Mar 2015 12:10 PM PDT நிலம் அளிக்கும் விவசாயியின் குடும்ப உறுப்பினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே புதன்கிழமை கேள்வி எழுப்பினார். |
| ஜம்மு-காஷ்மீர் பேரவையில் அமளி: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அவைக் காவலர்கள் மோதல் Posted: 27 Mar 2015 12:09 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை, சட்டமேலவையில், மின்சாரத் திட்டங்கள் தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை தொடர் அமளியில் ஈடுபட்டனர். |
| கேஜரிவால் மீது யோகேந்திர யாதவ்,பிரசாந்த் பூஷண் சரமாரி புகார் Posted: 27 Mar 2015 12:07 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், உள்கட்சி ஜனநாயகம் இன்றி சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாக அதன் அதிருப்தித் தலைவர்கள் பிரசாந்த் பூஷண், யோ |
| மெல்லும் வகையிலான புகையிலை பொருள்களுக்கு தடை Posted: 27 Mar 2015 12:07 PM PDT குத்கா, கெய்னி, ஜர்தா உள்ளிட்ட மெல்லும் வகையிலான புகையிலை பொருள்களுக்கு தில்லி அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த தடை உத்தரவு திங்கள்கிழமை (மார்ச் 30) முதல், தில்லி முழுவதும் அமலுக்கு வருகிறது. |
| இணையதளம் மூலம் குடும்ப அட்டை பெறும் திட்டம் Posted: 27 Mar 2015 12:06 PM PDT தில்லி மக்கள் பயன்பெறும் வகையில் மின்னணு முறையிலான குடும்ப அட்டை வசதியை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். இந்த வசதி நாட்டிலேயே முதல் முறையாக தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது. |
| சிறுத்தையின் தோல் வைத்திருந்தவருக்கு ஓராண்டு சிறை Posted: 27 Mar 2015 12:06 PM PDT சிறுத்தையின் தோலை விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| ஆம் ஆத்மி உள்கட்சி பூசல்:காங்கிரஸ், பாஜக கருத்து Posted: 27 Mar 2015 12:06 PM PDT ஆம் ஆத்மி அரசு சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, மக்களுக்காக பணியாற்றத் தொடங்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் விமர்சித்துள்ளார். |
| டிடிஇஏ பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை Posted: 27 Mar 2015 12:05 PM PDT தில்லியில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்ளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் செயலர் ராஜு தெரிவித்தார். |
| அன்புமணி ராமதாஸுக்கு எதிரான மனு தள்ளுபடி Posted: 27 Mar 2015 12:05 PM PDT விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி தாக்கப்பட்ட சம்பவத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. |
| சோனியா, கேஜரிவாலுடன் நிதீஷ் குமார் சந்திப்பு Posted: 27 Mar 2015 12:04 PM PDT தில்லி சென்றுள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் (ஐஎன்எல்டி) தலைவர் ஓம் பிரகாஷ் |
| துப்பாக்கி முனையில் கொள்ளை: இளைஞர், சிறார் கைது Posted: 27 Mar 2015 12:03 PM PDT தில்லியில் தனியார் கூரியர் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர், சிறார் இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.85 லட்சம் ரொக்கம், மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவை மீட்கப்பட்டன. |
| சொத்து வழக்கு: தந்தைக்குச் சொந்தமான வீட்டைக் காலி செய்ய மகனுக்கு உத்தரவு Posted: 27 Mar 2015 12:03 PM PDT சொத்துப் பிரச்னை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தந்தைக்குச் சொந்தமான வீட்டைக் காலி செய்யுமாறு மகனுக்கும், மருமகளுக்கும் தில்லி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| டைட்லர் மீதான வழக்கை முடிக்கும் அறிக்கை மீது ஏப்ரல் 22இல் பரிசீலனை Posted: 27 Mar 2015 12:03 PM PDT தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக 1984ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீதான வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ தாக்கல் |
| தில்லி நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை தாக்கல் Posted: 27 Mar 2015 12:02 PM PDT தில்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பெண்கள் சிலரிடம் நள்ளிரவுச் சோதனை செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தனர். |
| நதி நீர்ப் பகிர்வு பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் Posted: 27 Mar 2015 12:02 PM PDT கிருஷ்ணா நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக மாநிலங்களிடையே நிலவும் பிரச்னைகளை விரைவில் தீர்த்து வைப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. |
| சீனாவில் கூலி உயர்வால் இந்தியாவுக்கு வாய்ப்பு: ஜேட்லி Posted: 27 Mar 2015 12:02 PM PDT சீனாவில் கூலித் தொகை அதிகரித்து வருவதால், உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்: ஆட்சியர் தொடக்கி வைத்தார் Posted: 27 Mar 2015 12:01 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். |
| ஓய்வூதியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் நேர்காணல் Posted: 27 Mar 2015 12:00 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர், கருவூலங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ள, நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் அறிவித்துள்ளார். |
| உத்தரமேரூரில் இன்று கடையடைப்பு Posted: 27 Mar 2015 12:00 PM PDT காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். |
| மாநில அளவிலான 20-20 கிரிக்கெட்: வி.ஐ.டி. அணி சாம்பியன் Posted: 27 Mar 2015 11:59 AM PDT காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான 20-20 கிரிக்கெட் போட்டியில் சென்னை விஐடி அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |