Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Posted: 27 Mar 2015 11:22 AM PDT

அன்பு ஈகரை உறவுகளுக்கு, ஏற்கனவே சொல்லியிருந்தேன் இல்லையா? இதோ நானும் பறக்கப்போகிறேன். எங்கேயா.....? அ..... அது சஸ்பென்ஸ். அதை போய்வந்து சொல்கிறேன்.  ஒரு சின்ன க்ளு...! அது மிக, மிக அழகான இடமாம். லோக்கல் தான். சுற்றுலா ஸ்தலம். எங்கே என்று யூகியுங்கள் பார்ப்போம்...? அங்கே நம்ம ஆளுங்க யாரும் இல்லை என்று நினைக்கிறேன். சென்று வருகிறேன். பை....! நாளை காலை 9.50-க்கு flight - நிறைய வேலை இருக்கிறது. மறுபடியும் திங்களன்று சந்திப்போம். . . . . . . . . . . . . . . . . . அதுவரை, ...

மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன?

Posted: 27 Mar 2015 11:11 AM PDT

மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1 மூலம்: வால்டர் வுல்லன்வெபர் / தமிழில்: அருணகிரி இந்தக்கட்டுரை, ஜெர்மனியைச்சார்ந்த ஸ்டெர்ன் (STERN) என்கிற ஊடக நிறுவனம் 2003-இல் வெளியிட்ட கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாக்கி எழுதப்பட்டது. இதில் வெளிச்சம் போடப்பட்டுள்ள பல விஷயங்களைக்குறித்து புத்தகங்களும், கார்டியன் முதலான பத்திரிகைகளில் கட்டுரைகள் பலவும், சானல் 4 டாக்குமெண்டரிகளும் வெளிவந்து விட்டன. ஆனால் இன்றுவரை இந்த கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் மதர் தெரசாவின் "சேவையின் பிரசாரகர்கள்" ...

தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?

Posted: 27 Mar 2015 10:40 AM PDT

தாலியும் தமிழரும்! - "செந்தமிழ் வேள்விச் சதுரர்" திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை 'மக்கள் மேடை' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு எறிந்து அது வெடித்தது என்றும், நல்ல வேளையாக எந்த நபரும் ...

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!

Posted: 27 Mar 2015 08:11 AM PDT

சென்னை: தேர்தலில் லஞ்சம், ஊழலை தடுக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் 100 சதவிகிதம் பிழையில்லாமல் இருப்பதற்காக, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவைகளை வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கும் திட்டத்தை நேற்று ...

தேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை!

Posted: 27 Mar 2015 07:55 AM PDT

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ்–1 மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாக்குமூட்டையில் சடலமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பெரியமணலி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயியான செல்வராஜின் மகள் ஸ்ரீஜா (16) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்துள்ளார். ஸ்ரீஜா நேற்று காலை வழக்கம்போல் தேர்வு எழுத செல்கிறேன் என்று கூறிவிட்டு பள்ளிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால், ...

நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு!

Posted: 27 Mar 2015 07:47 AM PDT

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 3 ஆயிரம் மலிவு விலை மருந்தகங்கள்  திறக்கப்பட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் கூறியுள்ளார். ஆந்திரம் மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்குப்  பேட்டியளித்த அமைச்சர் ஹன்ஸ்ராஜ், " ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், வெளிச்சந்தை விலையை வைத்து ஒப்பிட்டுப்பார்க்கையில் 20-30 சதவீத விலையில் மருந்து, மாத்திரைகளை விற்கும் 'ஜன் ஔஷாதி' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் ...

செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு

Posted: 27 Mar 2015 07:42 AM PDT

அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க விரும்பும் பொதுமக்கள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அஞ்சலகங்கள் செயல் படும் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, பெண் குழந்தைகளுக்கான "சுகன்யா சம்ரித்தி' சேமிப்புக் கணக்கு என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியால் நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ...

போய் வருகிறேன் - கண்ணதாசன்

Posted: 27 Mar 2015 06:53 AM PDT

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொள்ளும்படி தனது கருத்துக்களை எளிமையான கவிதை நடையில் எழுதியிருக்கிறார். http://www.mediafire.com/download/petwew8ontg54pj/Poi+Varukiren.படப் என்றும் அன்புடன் செல்லா

பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்!

Posted: 27 Mar 2015 04:59 AM PDT

பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்களுக்கு பெற்றோர்களே பிட் கொடுத்த போட்டோ வாட்ஸ் அப்பில் பரவி பகிரங்கப்படுத்தியது. அடுத்து, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 கணித தேர்வு வினாத்தாளை தேர்வு கண்காணிப்பாளரே வாட்ஸ் அப் மூலம் அனுப்பியது கல்வித்துறையே களங்கப்படுத்தியது. வாட்ஸ் அப் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், கார்த்திக்கேயன், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதற்காக இந்த செயல்கள் ...

வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்!

Posted: 27 Mar 2015 04:55 AM PDT

உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. அடுத்து தென்ஆப்ரிக்க அணி நியூசிலாந்து அணியிடம் பரிதாபகரமான முறையில் தோல்வி கண்டது. அதற்காக அந்த வீரர்களுக்கு எதிராக அந்த நாடுகளில் போராட்டங்கள் நடைபெறவில்லை. வீரர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்படவில்லை, வீரர்களின் படங்கள் எரிக்கப்படவில்லை. வங்கதேச ரசிகர்கள் தங்கள் வீரர்கள் திறமையான முறையில் விளையாடியதாகவும் நடுவர்கள் செய்த தவறால்தான் தோற்றதாகவும் முழுமையாக தங்கள் வீரர்களின் பக்கம் இருந்தார். ...

ஏமன் உள்நாட்டுப் போர்

Posted: 27 Mar 2015 04:44 AM PDT

உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. சனாவை கைப்பற்றினர் அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் ...

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Posted: 27 Mar 2015 04:27 AM PDT

தும்பிகள்…!!
*
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
*

ஓய்வூதியர்கள் ஜூனுக்குள் சான்றுகள் அளிக்க வேண்டும்

Posted: 27 Mar 2015 04:20 AM PDT

ஓய்வூதியர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆஜராகி சான்றுகளை சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சான்றுகளை வழங்க ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜராக இயலாதவர்கள் வாழ்வுச் சான்றுடன் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நேரில் வருபவர்கள்: ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் ...

சீதனம் அழியாதா பெண்மை மதிக்கப்படாதா

Posted: 27 Mar 2015 04:13 AM PDT

ஏழை வீட்டுக்கு எத்தனை தரகர்கள் வருவார்கள். சம்மந்தமெனும் பெயரில் எத்தனை வீட்டார் வருவார்கள் . ஏழை வீட்டுக்கன்னி எத்தனை தடவை அலங்காரம் செய்வது, பெண் பார்க்கும் பெயரில் எத்தனை காமநாய்களின் முன்னால் அவள் கூனிக்குறுகி அமர்ந்திருப்பது. அவள் ஏழை வீட்டு கன்னி என்றாலும் ஜாடையில் சீத்தா லட்சுமிதான், நாணத்தில் கதிஜா பிராட்டிதான் ஏரியில் மிதக்கும் முதலை இரையை மட்டும் கெளவும்.அந்த மாமியார் முதலை ஏழை உடம்பிலுள்ள உதிரத்தை உறிஞ்சும் வண்ணம் சீதனமெனும் பெயரில் கைநீட்டாமல் யாசகம் கேட்பாள். ...

வதேரா நில பேர விவகாரம்: எனது செயல்பாடுகள் சரியென சிஏஜி அறிக்கை நிரூபித்துவிட்டது: கெம்கா

Posted: 27 Mar 2015 03:57 AM PDT

- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில பேர முறைகேடுகள் விவகாரத்தில், எனது செயல்பாடுகள் சரியென்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நிரூபித்து விட்டது' என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா கூறினார். ஹரியாணா மாநிலத்தில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் மூலம் மாநில அரசு நிலத்தை டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு விற்பனை செய்வது தொடர்பாக நடைபெற்ற நில ...

ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய விண்கல் இன்று பூமியைக் கடக்கிறது!

Posted: 27 Mar 2015 03:55 AM PDT

ஒரு நாட்டையே அழிக்கும் திறன் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று இன்று பூமியைக் கடக்க இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை அந்த விண்கல் பூமியில் மோதினால், பருவநிலை மாற்றம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2014 ஒய்.பி.35 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கல்லானது, 1000 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளதென்றும் அது, மணிக்கு சுமார் 37000 கி.மீ. வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் நாசா ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த ...

மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது!

Posted: 27 Mar 2015 03:47 AM PDT

மலேசியாவும், இந்தியாவும் பல வருட தாமதத்திற்குப் பிறகு தங்கள் வரி அமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வர உள்ளன. இரு நாடுகளும் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST)-ஐ அமல்படுத்த இருப்பதால், வரி விதிப்பு நடைமுறைகள் எளிமையாகி பணச் சுமை குறைய வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். மலேசியாவைப் பொருத்தவரை நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 5 வருடங்களுக்கும் மேலாகி உள்ளது. எனினும், ஏப்ரல் 1-aaம் ...

பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)

Posted: 27 Mar 2015 01:58 AM PDT

அன்று இரவு சிவராமனுக்கு உறக்கம் பிடிக்கவே இல்லை....பொழுது விடிந்தால் அவருடைய பேரன், அமெரிக்காவிலிருந்து 4 வருடங்கள் கழித்து வருகிறான்.அது மட்டும் அல்ல, அவன் இவர்களின் குல தெய்வமான, செந்தில் ஆண்டவனுக்கு 'தங்க வேல்' சார்த்தப்போகிறான்.............அது தான் இவருக்கு இப்போது அவன் வருகையை விட, ரொம்ப சந்தோஷமான விஷையமாக  இருந்தது. அவர் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. அன்பான  மனைவியும்,  4 மகன்களும் 2 மகள்களும். குடும்பம் பெரியதானாலும்  அன்பான குடும்பம். கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொருவரையும் ஆளாக்கினார். பசங்களும் ...

பாமரர் தேவாரம்

Posted: 26 Mar 2015 09:36 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™