Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சிட்னியில் இந்தியா சட்னி: 'பைனல்' வாய்ப்பு அம்போ!

Posted:

சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின், 'நடப்பு' சாம்பியனான இந்திய அணி, நடையைக் கட்டியது. நேற்று சிட்னியில் நடந்த அரையிறுதியில், ஆஸ்திரேலியாவிடம், சட்னி ஆனது! 'பேட்டிங், பவுலிங், பீல்டிங்' என, முத்தரப்பு சாகசங்களிலும் கோட்டை விட்ட இந்திய அணி, 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, 'பைனல்' வாய்ப்பை இழந்தது.

ஆஸ்திரேலிய நாட்டின், சிட்னியில் நடந்த உலகக் கோப்பை தொடரின், இரண்டாவது அரையிறுதியில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஸ்மித் சதம்:
உமேஷ் ...

'சாகர்மாலா' திட்டத்தில் 12 'ஸ்மார்ட் சிட்டி'கள்: கடலோர பொருளாதார மண்டலங்களும் வருகிறது

Posted:

புதுடில்லி: ''பிரமாண்டமான, 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் குறைந்தபட்சம், 12 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் மற்றும் பல இடங்களில், கடலோர பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். இதன்மூலம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2 சதவீதம் அதிகரிக்கும்,'' என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வரும், பிரமாண்டமான, 'சாகர்மாலா' என்ற திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ...

பிரான்ஸ் விமானத்தை திட்டமிட்டு அழித்தாரா துணை விமானி?

Posted:

பாரிஸ்: ''ஜெர்மனி விமானத்தை இயக்கிய துணை விமானி தான், வேண்டுமென்றே மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்,'' என்ற திடுக்கிடும் தகவலை பிரான்ஸ் வழக்கறிஞர் பிரைஸ் ராபின் தெரிவித்துள்ளார்.

'லுப்தான்சா' விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ஜெர்மனி விங்ஸ்' நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 விமானம், சில தினங்களுக்கு முன் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. பார்சிலோனாவில் இருந்து, ஜெர்மனியின் டஸஸ்ல்டார்ப் நகருக்கு சென்று கொண்டிருந்த போது, நிகழ்ந்த இந்த விபத்தில், 150 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சேதம் அடைந்த கறுப்பு பெட்டி மீட்கப்பட்டது.அதில் பதிவான ...

சீனா - இந்தியா - இலங்கை இடையே முத்தரப்பு ஒத்துழைப்பு: சிறிசேன ஆர்வம்

Posted:

பீஜிங்: சீனா சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, சீனா - இலங்கை மற்றும் இந்தியா இடையே முத்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து, அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்குடன் விவாதித்து உள்ளார்.

முதல் முறையாக...:
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, அதிபராக பதவியேற்ற பின், முதல் முறையாக சீன பயணம் மேற்கொண்டு உள்ளார். நான்கு நாள் பயணமாக சென்றுள்ள அவருடன், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயகே, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரவுப் ஹக்கிம், இலங்கையின் பீல்ட் மார்ஷலாக ...

அ.தி.மு.க., அரசை விமர்சிக்க தடையில்லை: தமிழக பா.ஜ.,வுக்கு பச்சைக்கொடி

Posted:

தமிழகத்தில், அ.தி.மு.க., அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை; பிரச்னைகளின் அடிப்படையில், மாநில அரசை விமர்சிக்க தடையில்லை என, தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

ஆலோசனை:
டில்லியில், தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதில், தமிழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கே.என்.லட்சுமணன், தமிழிசை சவுந்தரராஜன், மோகன்ராஜுலு, ஜி.கே.செல்வக்குமார், நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் ...

மோடி மாம்பழம்: சுவை அபாரம்

Posted:

லக்னோ: ''பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான, 'மோடி மாம்பழங்கள்' காய்த்து தொங்குகின்றன. அருமையான சுவை கொண்ட அந்த மாம்பழங்களை, பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க விரும்புகிறேன்,'' என, உத்தர பிரதேசத்தை சேர்ந்த, பிரபல, மாம்பழ ஆராய்ச்சியாளரும், பண்ணையாளருமான கலிமுல்லா கூறினார்.

பிரபலங்கள் பெயரில் மாம்பழங்களை உற்பத்தி செய்து, அவற்றை பிரபலப்படுத்துவதில் வல்லவரான கலிமுல்லா, சில ஆண்டுகளுக்கு முன், மோடி மாம்பழம் என்ற பெயரில், அதிக சுவை கொண்ட, பார்ப்பதற்கு அழகான புதிய வகையை உருவாக்கினார். அப்போதே, அந்த செய்தி வெகு பரவலாக பேசப்பட்டது. இப்போது அந்த புதிய வகை ...

அதிக விலைக்கு 'ஸ்பெக்ட்ரம்' ஏலம்: பொதுமக்கள் தலையில் விடியும்

Posted:

புதுடில்லி: ''தொலைத் தொடர்பு அலைக்கற்றைகளான, 'ஸ்பெக்ட்ரம்' ஏலத்தை, அதிக விலைக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாங்கியுள்ளதால், அவற்றின் ஒட்டுமொத்த கடன், 3.5 லட்சம் கோடியாக உயரும். ''இதனால், தொலைத் தொடர்பு கட்டணங்கள் உயர்த்துவதைத் தவிர, இந்த நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை,'' என, 'அசோசேம்' எனப்படும், இந்திய வர்த்தக சபையின் (தொலைத் தொடர்பு) தலைவர், டி.வி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நிறைவடைந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம், 1.09 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு திரட்டியுள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதலாக, 68 சதவீத பிரீமியத்தில், ஸ்பெக்ட்ரம் ...

கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தில் நாளை 'பந்த்': பஸ், ஆட்டோக்கள் ஓடுமா?

Posted:

சென்னை: காவிரியின் குறுக்கே, அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழகத்தில், நாளை, 'பந்த்' நடத்துகிறது. 'அன்றைய தினம், அனைத்து கடைகளும் மூடப்படும்' என, வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. 'லாரிகள் ஓடாது' என அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ், ஆட்டோக்களின் நிலை குறித்து, இன்று முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடம் உட்பட, மூன்று இடங்களில் அணைகள் கட்ட, கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. ஆரம்ப கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து நாளை, தமிழகம் முழுவதும், ...

வாக்காளர் அட்டையில் ஆதார்: கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவு

Posted:

'வாக்காளர் அடையாள அட்டையில், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் உதவ வேண்டும்' என, தே.மு.தி.க.,வினருக்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டு உள்ளார்.

அவரது அறிக்கை:
வாக்காளர் பட்டியலில், 100 சதவீதம் பிழையில்லாமல் இருப்பதற்காக, ஆதார் எண், தொலைபேசி, மொபைல் போன் எண்கள், இ - மெயில் முகவரி ஆகியவைகளை சேர்க்கும் திட்டத்தை, தேர்தல் கமிஷன் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, தமிழகத்தில், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது என, தமிழக தேர்தல்அதிகாரி சந்தீப் ...

'என் நடவடிக்கை ரொம்ப சரி' : கெம்கா

Posted:

சண்டிகார் :''அரியானாவில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, சோனியா மருமகன் ராபர்ட் வாத்ராவின் நிறுவனத்திற்கு, முறைகேடாக சலுகை வழங்கப்பட்டுள்ளது என, கணக்கு தணிக்கை அலுவலகமான - சி.ஏ.ஜி., தெரிவித்திருந்தது. ''இது, என் நடவடிக்கையை சரியானதே என உறுதி செய்வதாக உள்ளது,'' என, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா தெரிவித்து உள்ளார்.

முறைகேடான...:
அரியானா சட்டசபையில், 2013 -- 2014ம் ஆண்டுக்கான, சி.ஏ.ஜி., அறிக்கை, நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'அரியானாவில், முன்னர் ஆட்சியிலிருந்த பூபிந்தர் சிங் ஹூடா அரசு, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் ...

முதல்வர் வேட்பாளரை அறிவிக்காதீங்க: பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் யோசனை

Posted:

புதுடில்லி: 'பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன், முதல்வர் வேட்பாளரை அறிவிக்கக் கூடாது' என, பாரதிய ஜனதா கட்சியை, சங்கப் பரிவார் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தி உள்ளது. டில்லியில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக, நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண் பேடி அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இந்தத் தேர்தலில், பா.ஜ., படுதோல்வி அடைந்தது. எனவே, 'டில்லி தேர்தலில் பெற்ற அனுபவத்தை, பா.ஜ., பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பீகார் மாநிலத்தில், இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வின் முதல்வர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™