Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அறந்தாங்கி அருகே புள்ளிமான் மீட்பு

Posted: 26 Mar 2015 01:27 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கிராமத்தில் வியாழக்கிழமை மீட்கப்பட்ட புள்ளிமான் நார்த்தாமலை காட்டில் விடப்பட்டது.

"பொதுமக்கள் காவல் துறையினரை நண்பர்களாகக் கருத வேண்டும்'

Posted: 26 Mar 2015 01:27 PM PDT

பொதுமக்கள் காவல் துறையினரை நண்பர்களாகக் கருத வேண்டும் என்றார் பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் டி. இளங்கோவன்.

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.43 லட்சம்

Posted: 26 Mar 2015 01:27 PM PDT

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் மூலம் ரூ.43.30 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

பொன்னமராவதியில் வாடகைக் கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 26 Mar 2015 01:26 PM PDT

பொன்னமராவதியில் வாடகைக் கார் ஓட்டுநர் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். பொன்னமராவதி பெருமாள் கோயில் வீதி விடிகேஎம் நகரைச் சேர்ந்தவர் எஸ். சுரேஷ்குமார் (35). வாட

இன்று பிளஸ் 2 இயற்பியல் தேர்வு

Posted: 26 Mar 2015 01:26 PM PDT

பி.இ. படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 இயற்பியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

செல்வமகள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு விழா

Posted: 26 Mar 2015 01:25 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இந்திய அஞ்சல் துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொது இடங்களில் திரிந்த 15 மன நோயாளிகள் மீட்பு

Posted: 26 Mar 2015 01:25 PM PDT

தஞ்சாவூரில் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 15 மன நோயாளிகள் வியாழக்கிழமை மீட்கப்பட்டு மன நல மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைவுக்கு அஞ்சலி

Posted: 26 Mar 2015 01:25 PM PDT

சிங்கப்பூரின் தந்தை என்றழைப்படும் லீகுவான் இயூ மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் தஞ்சாவூரில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணி மாநில நிர்வாகி மீது வழக்கு

Posted: 26 Mar 2015 01:25 PM PDT

தஞ்சாவூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக தமிழர் தேசிய முன்னணியின் மாநில பொதுச்செயலர் ஐயனாவரம் முருகேசன் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

"தமிழ்ப் புத்தாண்டு நாளில் தொல்காப்பியர் சிலை கால்கோள் விழா'

Posted: 26 Mar 2015 01:25 PM PDT

தமிழ்ப் புத்தாண்டு நாளில் தொல்காப்பியர் சிலை நிறுவுவதற்கான கால்கோள் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என, தொல்காப்பியர் சிலை அமைப்பு குழுச் செயலர் சுப.தங்கமணி தெரிவித்தார்.

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

Posted: 26 Mar 2015 01:24 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 137 பெண்கள் உள்பட 792 தபால் ஊழியர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

பசுமை வீடுகள் மூலம் 10,326 குடும்பங்கள் பயன்

Posted: 26 Mar 2015 01:24 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் 10,326 குடும்பங்கள் பயனடைந்துள்ளன என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மறியல்

Posted: 26 Mar 2015 01:24 PM PDT

கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.

தாமதமாகும் சாந்தபிள்ளை கேட் மேம்பாலக் கட்டுமானம்

Posted: 26 Mar 2015 01:24 PM PDT

தஞ்சாவூர் சாந்தபிள்ளை ரயில்வே கேட் மேம்பாலக் கட்டுமானப் பணி தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் மாநகர மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

தமிழகம் முழுவதும் அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 26 Mar 2015 01:23 PM PDT

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, அஞ்சல் பட்டுவாடா உள்ளிட்ட பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கொளத்தூர் வனப் பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம்

Posted: 26 Mar 2015 01:22 PM PDT

சேலம் மாவட்டம், கொளத்தூர் வனப் பகுதியில் அட்டகாசம் செய்துவரும் ஒற்றை யானையால் மலையோர கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 வினாத் தாள்: கைதான ஆசிரியர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: எஸ்.பி.

Posted: 26 Mar 2015 01:14 PM PDT

கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 கணித வினாத் தாளை அனுப்பிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தெரிவித்தார்.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்

Posted: 26 Mar 2015 01:14 PM PDT

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Posted: 26 Mar 2015 01:13 PM PDT

தென் தமிழகத்தில் ஆங்காங்கே வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடகுக் கடையில் 70 பவுன் தங்க நகைகள் கொள்ளை

Posted: 26 Mar 2015 01:12 PM PDT

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் உள்ள அடகுக் கடையில் புதன்கிழமை இரவு 70 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மணல் கடத்தலைத் தடுத்த வி.ஏ.ஓ.க்கள் மீது தாக்குதல்

Posted: 26 Mar 2015 01:12 PM PDT

கர்நாடகத்துக்கு மணல் கடத்திச் சென்ற லாரிகளை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஓட்டுநர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கத்தி, செல்லிடப்பேசியுடன் தேர்வெழுதிய மாணவர்கள் கைது

Posted: 26 Mar 2015 01:11 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வறையில் பறிமுதல் செய்த கத்தி, செல்லிடப்பேசியை திருப்பித் தருமாறு கேட்டு, ஆசிரியையை மிரட்டிய பிளஸ் 1 மாணவர்கள் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

66(அ) - தீர்ப்பின் மறுபக்கம்

Posted: 26 Mar 2015 01:04 PM PDT

சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்துகளைப் பதிவு செய்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66அ நீக்கப்பட வேண்டும்

சுதந்திரத்தின் எல்லைகள்!

Posted: 26 Mar 2015 01:03 PM PDT

கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் "நாங்கள் படைப்பாளிகள்; சுதந்திரமானவர்கள்; எங்கள் எழுத்துகளுக்கு யாரும் தடை போட முடியாது; தடை போட்டுத் தடுக்க முற்படுவது பிற்போக்குத்தனமானது; அது படைப்பின் வீரியத்தைக் குறைத்துவிடும்; அதோடு, எழுத்தாளனுக்கென்றே இருக்கும் அடிப்படை சுதந்திரத்தையும் பறித்துவிடும்; எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு நாங்கள் எழுதியதற்கும், எழுதப் போவதற்கும் ஆதரவு நல்க வேண்டும்.

கேள்விக்கு ஒருவரில்லை!

Posted: 26 Mar 2015 01:01 PM PDT

மேக்கேதாட்டு அணைக்கு தமிழக அரசு தெரிவித்த எதிர்ப்புகளை மீறி, உச்ச நீதிமன்றத்தில் ஓர் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும்கூட, கர்நாடக அரசு இந்த அணை குறித்த திட்ட அறிக்கை தயாரிக்க நிதிநிலை அறிக்கையில் ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்திருக்கிறது.

ஜெகன்மோகன் வழக்கில் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கம்

Posted: 26 Mar 2015 12:53 PM PDT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.130 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

வதேரா நில பேர விவகாரம்: எனது செயல்பாடுகள் சரியென சிஏஜி அறிக்கை நிரூபித்துவிட்டது: கெம்கா

Posted: 26 Mar 2015 12:52 PM PDT

"காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில பேர முறைகேடுகள் விவகாரத்தில், எனது செயல்பாடுகள் சரியென்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நிரூபித்து விட்டது' என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா கூறினார்.

செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களுக்கான வரிச் சலுகைகள் ஏப்ரல் 1 முதல் அமல்

Posted: 26 Mar 2015 12:50 PM PDT

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கான அரசின் உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அலைக்கற்றை ஏலத்தை இறுதி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

Posted: 26 Mar 2015 12:48 PM PDT

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தை இறுதி செய்ய ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நீக்கியது.

நிலம் கையகச் சட்டம்: மோடியுடன் பகிரங்க விவாதத்துக்குத் தயார்

Posted: 26 Mar 2015 12:47 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தத்தில் உள்ள பாதக அம்சங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிரங்க விவாதம் நடத்தத் தயாராக உள்ளதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வியாழக்கிழமை தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: கால அவகாசம் நீட்டிப்பு

Posted: 26 Mar 2015 12:46 PM PDT

அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம் மே வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணையாமல் இருப்பவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேக்கேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தில் நாளை முழு அடைப்பு

Posted: 26 Mar 2015 12:45 PM PDT

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து சனிக்கிழமை (மார்ச் 28) நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வரிடம் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜாட் சமூக இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பூர்வமான தீர்வு: பிரதமர் மோடி உறுதி

Posted: 26 Mar 2015 12:43 PM PDT

ஜாட் சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததற்கு சட்டப்பூர்வமான முறையில் தீர்வு காண மத்திய அரசு முயலும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!

Posted: 26 Mar 2015 12:38 PM PDT

தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்தடையால் கோடை சாகுபடி பாதிப்பு

Posted: 26 Mar 2015 12:34 PM PDT

அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கோடை சாகுபடி பாதிக்கப்படுகிறது என்று திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Mar 2015 12:34 PM PDT

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"நெல் கொள்முதல் நிலைய சொந்த கட்டடத்துக்கு நிலம் கொடுக்கலாம்'

Posted: 26 Mar 2015 12:34 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட நிலம் உள்ளவர்கள் கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

தெருநாய் கடித்து பள்ளி மாணவர் சாவு

Posted: 26 Mar 2015 12:33 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தெருநாய் கடித்ததில் பாதிப்புக்குள்ளான பள்ளி மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

இன்று ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 26 Mar 2015 12:33 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேசிய மக்கள்தொகை கணக்ககெடுப்பில் விடுப்பட்ட நபர்களுக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தொடங்குகிறது.

"மாற்றங்களே முன்னேற்றத்துக்கு அடித்தளம்'

Posted: 26 Mar 2015 12:33 PM PDT

மாற்றங்களை மாணவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாற்றங்கள்தான் முன்னேற்றத்துக்கு அடித்தளம் என்றார் தமிழ்நாடு கல்லூரிக் கல்வித் துறை இயக்குநரகத்தின் இயக்குநரும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எம். தேவதாஸ்.

அஞ்சல் ஊழியர்கள்வேலைநிறுத்தம்

Posted: 26 Mar 2015 12:32 PM PDT

நாகப்பட்டினத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிற்சி வகுப்புக்குஊதியம் வழங்க கோரிக்கை

Posted: 26 Mar 2015 12:32 PM PDT

பொதுத்தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் வழங்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன உயிரினங்கள் குறித்த படம்: சுப்பையா நல்லமுத்துவுக்கு தேசிய விருது

Posted: 26 Mar 2015 12:31 PM PDT

தமிழகத்தைச் சேர்ந்த சுப்பையா நல்லமுத்துவுக்கு வன உயிரினங்களைப் பற்றிய படம் எடுத்ததற்காக மத்திய அரசின் தேசிய விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.

ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு

Posted: 26 Mar 2015 12:31 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ஒரே நாளில் ரூ.400 உயர்ந்து, ரூ.20,336-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

பழனி கோயில் உண்டியல் வரவு ரூ.1.36 கோடி

Posted: 26 Mar 2015 12:24 PM PDT

பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் கடந்த 21 நாள்களில் நிரம்பியதை அடுத்து, வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ கொடியேற்றம்

Posted: 26 Mar 2015 12:22 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இ-ரிக்ஷா: பயிற்சி ஓட்டுநர் உரிமம் பெற புதிய முறை அமல்

Posted: 26 Mar 2015 12:15 PM PDT

மின்சக்தி மூலம் இயங்கும் ரிக்ஷோக்களின் (இ-ரிக்ஷா) ஓட்டுநர்கள், பயிற்சி ஓட்டுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெற, கணினியில் நடத்தப்படும் தேர்வுக்கு பதிலாக வாய்மொழி மூலமாக கேள்விகள் கேட்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

சிபிஐக்கு எதிராக சீக்கியர்கள் தடையை மீறி போராட்டம்

Posted: 26 Mar 2015 12:15 PM PDT

கடந்த 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர்.

இரு அரசு மருத்துவமனைகளில் சுகாதார அமைச்சர் திடீர் ஆய்வு: விளக்கம் தர உத்தரவு

Posted: 26 Mar 2015 12:15 PM PDT

தில்லியில் உள்ள இரு அரசு மருத்துவமனைகளில் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திங்கள்கிழமை இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

Posted: 26 Mar 2015 12:14 PM PDT

 தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

குடிசைகளை இடிக்கும் நடவடிக்கை தாற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும்

Posted: 26 Mar 2015 12:14 PM PDT

தில்லியின் பல்வேறு பகுதிகளில் ரயில்வே தண்டவாளத்துக்கு அருகே அமைந்துள்ள தாற்காலிக குடியிருப்புகளை இடித்து அகற்றும் நடவடிக்கை தற்போதைக்கு நிறுத்திவைக்கப்படும் என்று மத்திய ரயில்

ஆர்.கே.புரம் டிடிஇஏ பள்ளியில் வருடாந்திர பாடத் திட்டக் கூட்டம்

Posted: 26 Mar 2015 12:14 PM PDT

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) ஏழு பள்ளிகளின் ஆசிரியர்கள் பங்கேற்ற வருடாந்திர பாடத் திட்டக் கூட்டம் தில்லி ஆர்.கே.புரம் டிடிஇஏ பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பேரவையில் ஆஜராக மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவருக்கு அழைப்பாணை

Posted: 26 Mar 2015 12:13 PM PDT

தில்லியில் மின் விநியோகம், கட்டணம் ஆகியவற்றில் ஒழுங்கற்ற முறையில் இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக, தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவருக்கு பேரவைத் தலைவர்

அரசியல் தலையீட்டால் கல்வி முறைக்கு பாதிப்பு

Posted: 26 Mar 2015 12:13 PM PDT

அரசியல் தலையீட்டின் காரணமாக, கல்வி முறைக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வருத்தம் தெரிவித்தார்.

அன்னியச் செலாவணி பரிவர்த்தனை அலுவலகத்தில் கொள்ளையடிக்க முயற்சி

Posted: 26 Mar 2015 12:13 PM PDT

மேற்கு தில்லியில் தனியார் அன்னியச் செலாவணி பரிவர்த்தனை அலுவலகத்தில் கொள்ளையடிக்க முயன்றதாக மூவர் கைது செய்யப்பட்டனர்.

கால்டாக்ஸிக்களின் இணையதளத்தை முடக்க மத்திய அரசுக்கு கோரிக்கை

Posted: 26 Mar 2015 12:12 PM PDT

உபேர், ஓலா, டாக்ஸி ஃபார் ஷியூர் ஆகிய கால்டாக்ஸி நிறுவனங்களின் இணையதளத்தை முடக்குமாறு மத்திய அரசிடம் தில்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பார்வையற்றோருக்கு டிடிசி பஸ்களில் ஓர் இருக்கை

Posted: 26 Mar 2015 12:12 PM PDT

 தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்துகள் அனைத்திலும் ஓட்டுநருக்குப் பின்பகுதியில் உள்ள ஓர் இருக்கையை பார்வையற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமண ஆசைகாட்டி பெண் பலாத்காரம்: விமானப் படை ஊழியர் மீது புகார்

Posted: 26 Mar 2015 12:11 PM PDT

திருமண ஆசை காட்டி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு ஏமாற்றியதாக இந்திய விமானப் படை அலுவலக ஊழியர் மீது இளம்பெண் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா: எம்எல்சி தேர்தலில் பாஜக வெற்றி

Posted: 26 Mar 2015 12:11 PM PDT

தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் -ரங்காரெட்டி -மெஹபூப்நகர் பட்டதாரிகள் தொகுதி மேலவை உறுப்பினருக்காக நடைபெற்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த ராமச்சந்திர ராவ் வெற்றி பெற்றார்.

விஐபிக்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க தயங்கமாட்டோம்: கேஜரிவாலின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

Posted: 26 Mar 2015 12:11 PM PDT

தில்லியில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டால், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரைத் தவிர பிற விஐபிக்கள் இல்லத்துக்கு அளிக்கப்படும் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க தில்லி அரசு தயங்காது என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு

Posted: 26 Mar 2015 12:11 PM PDT

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் உயிரிழந்த 21 வயதான அதுல் சர்மாவின் பெற்றோருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோர

அரசு பங்களாவில் குடியேறினார் முதல்வர்

Posted: 26 Mar 2015 12:10 PM PDT

வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதி அரசு பங்களாவில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை குடியேறினார்.

கணவர் குத்திக் கொலை:மனைவியிடம் தீவிர விசாரணை

Posted: 26 Mar 2015 12:10 PM PDT

தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் மாவட்டம், சஹிபாபாத் அருகே உள்ள அர்தலா கிராமத்தில் மது அருந்திவிட்டு வந்த கணவரை கத்தியால் குத்திக் கொன்றதாக மனைவியிடம் போலீஸார்

இந்தியாவில் முதலீடு செய்ய இது உரிய தருணம்

Posted: 26 Mar 2015 12:10 PM PDT

"இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால், இங்கு பாதுகாப்பு, காப்பீடு, ரயில்வே உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கத்தார் அரசு முதலீடு செய்ய வேண்டும்; இந்தியாவில் முதலீடு செய்ய இது உரிய தருணம்' என்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமது அல் தானியிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

மெட்ரோ ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை:நாவடாவில் சம்பவம்

Posted: 26 Mar 2015 12:10 PM PDT

தில்லியில் ஓடும் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவுடனான சுமுகப் பேச்சுவார்த்தை தோல்வி

Posted: 26 Mar 2015 12:10 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவர்கள் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருடன் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த சுமுகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துவிட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக வியாழக்கிழமை அறிவித்தது.

வங்கதேச சுதந்திர தினம்: மோடி, மம்தா வாழ்த்து

Posted: 26 Mar 2015 12:09 PM PDT

வங்கதேச சுதந்திர தினத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்தனர்.

பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு:விசாரணை ஏப்ரல் 1-க்கு ஒத்திவைப்புகுளச்சலில் வர்த்தக துறைமுகம்

Posted: 26 Mar 2015 12:08 PM PDT

குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக குமரி மாவட்ட பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நித்திரவிளை அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

Posted: 26 Mar 2015 12:07 PM PDT

நித்திரவிளை அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அங்கவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (24). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சு. இத்தம்பதிக்கு

பளுகல் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 26 Mar 2015 12:07 PM PDT

பளுகல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மார்ச் 28 மின் தடை

Posted: 26 Mar 2015 12:07 PM PDT

நாகர்கோவில், பேச்சிப்பாறை, வீயன்னூர் உள்ளிட்டப் பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 28) மின்தடை செய்யப்படுகிறது.

31 தனியார் மின் நிறுவனங்களுக்கு ரூ. 7,500 கோடி மானியம்

Posted: 26 Mar 2015 12:07 PM PDT

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மின் உற்பத்தியை தொடக்க முடியாமல் தவிக்கும் 31 தனியார் மின்சார நிறுவனங்களுக்கு, அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 7,500 கோடி வரை மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிதி நிறுவனத்தில் திருட முயற்சி: ரெüடி உள்பட 6 பேர் கைது

Posted: 26 Mar 2015 12:06 PM PDT

 நாகர்கோவில் அருகே ஈத்தாமொழியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் திருட்டில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ம.பி. பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted: 26 Mar 2015 12:06 PM PDT

விவசாயிகள் பிரச்னையை தீர்க்கக் கோரி, மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரியில் தேசிய புனரமைப்பு திட்டப் பயிற்சி இன்று தொடக்கம்

Posted: 26 Mar 2015 12:06 PM PDT

கன்னியாகுமரியில் புனர்ஜாகரன் என்னும் தேசிய புனரமைப்புத் திட்டம் குறித்த பயிற்சி மற்றும் தொடக்க விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெறுகிறது.

மையங்களில் பணியைப் புறக்கணித்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Mar 2015 12:06 PM PDT

தேர்வு அறைகளில் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவதாகக் கூறி, நாகர்கோவிலில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையல் பேரூராட்சி பழங்குடி கிராமங்களில் "ஆதார்' முகாமில்லை

Posted: 26 Mar 2015 12:06 PM PDT

கடையல் பேரூராட்சியில் உள்ள பழங்குடி கிராமங்களில் ஆதார் முகாம்கள் நடத்தப்படாததால் அந்தக் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.

அரசு நலத்திட்ட உதவிகள் பெற கிராம நிர்வாக அலுவலரிடம் ஆதார் எண் வழங்க அறிவுறுத்தல்

Posted: 26 Mar 2015 12:05 PM PDT

குமரி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் தங்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும்.

மேற்குவங்க கன்னியாஸ்திரி பலாத்காரச் சம்பவம்குமரி மாவட்டத்தில் இன்று கிறிஸ்தவர்கள் அமைதி பவனி

Posted: 26 Mar 2015 12:05 PM PDT

மேற்குவங்க மாநில கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மார்ச் 27ஆம் தேதி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பவனி நடைபெறுகிறது.

அஞ்சல்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 26 Mar 2015 12:05 PM PDT

குமரி மாவட்டத்தில் அஞ்சல்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வியாழக்கிழமை அஞ்சல் சேவை பாதிக்கப்பட்டது.

பேரிடர் மேலாண்மை பணிக்கு அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

Posted: 26 Mar 2015 12:04 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.

சூரியஒளி மின்திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

Posted: 26 Mar 2015 12:04 PM PDT

சூரியஒளி மின்சார உற்பத்தி திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்.

தமிழக நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் புறக்கணிப்பு

Posted: 26 Mar 2015 12:03 PM PDT

தமிழக நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜுனன் குற்றம்சாட்டியுள்ளார்.

வல்லநாடு அருகே முதியவர் சடலம் மீட்பு

Posted: 26 Mar 2015 12:03 PM PDT

வல்லநாடு அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

5 இடங்களில் இன்று அம்மா திட்ட முகாம்

Posted: 26 Mar 2015 12:03 PM PDT

: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) 5 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

நாசரேத் பேரூராட்சிவாரச்சந்தை குத்தகை ரூ.8.55 லட்சத்துக்கு ஏலம்

Posted: 26 Mar 2015 12:02 PM PDT

நாசரேத் பேரூராட்சி வாரச் சந்தை குத்தகை ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்து 555-க்கு ஏலம்போனது. நாசரேத் வாரச் சந்தையை குத்தகை எடுப்பதற்கான ஏலம் புதன்கிழமை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்

தூத்துக்குடியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Mar 2015 12:02 PM PDT

தூத்துக்குடியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூடுதல் தொகை

கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிக்கு மெர்க்கன்டைல் வங்கி ரூ. 1.80 கோடி ஒதுக்கீடு

Posted: 26 Mar 2015 12:02 PM PDT

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ. 1.80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஹெச்.எஸ்.உபேந்திராகாமத் தெரிவித்துள்ளார்.

எட்டயபுரத்தில் கார்- பைக் மோதல்: முதியவர் சாவு

Posted: 26 Mar 2015 12:01 PM PDT

எட்டயபுரத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவர் இறந்தார். எட்டயபுரம் வட்டம், இளம்புவனத்தைச் சேர்ந்தவர் பெரியசோலையப்பன் (62). கூலித் தொழிலாளியான இவர், அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.

பிஎஸ்என்எல் தனியார்மயமாக்கலை கண்டித்து கையெழுத்து இயக்கம்

Posted: 26 Mar 2015 12:01 PM PDT

பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்தை தனியார் மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி பிஎஸ்என்எல் பணியாளர்கள் சாத்தான்குளத்தில் வியாழக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 26 Mar 2015 12:01 PM PDT

தமிழக அரசின் விலையில்லா பொருள்களை தகுதி பெற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலுப்பையூரணி ஊராட்சி பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Mar 2015 12:01 PM PDT

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கோவில்பட்டி கிளை சார்பில் விடைத்தாள் திருத்தும் மைய வளாகத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீரபத்ர சிங்குக்கு எதிரான வழக்கில் உதவ வழக்குரைஞர்களை நியமித்தது நீதிமன்றம்

Posted: 26 Mar 2015 12:01 PM PDT

ஹிமாசல பிரதேச மாநில முதல்வர் வீரபத்ர சிங், ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து ஆய்வு செய்து உதவுவதற்காக (amicus curiae), 2 மூத்த வழக்குரைஞர்களை தில்லி உயர் நீதிமன்றம் நியமித்தது.

பெண் மீது தாக்குதல்: 2 பெண்கள் கைது

Posted: 26 Mar 2015 12:00 PM PDT

சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய இரு பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி முகாம்

Posted: 26 Mar 2015 12:00 PM PDT

எட்டயபுரத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட எட்டயபுரம் வட்டார பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

குஜராத்தில் பாஜக நகர்மன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

Posted: 26 Mar 2015 12:00 PM PDT

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜஸ்தான் நகர்மன்ற பாஜக உறுப்பினரை, மற்றொரு உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் வந்து சுட்டுக் கொன்றார்.

விஷம் குடித்து விமான நிலைய ஒப்பந்த ஊழியர் தற்கொலை மற்றொருவர் உயிருக்கு போராட்டம்

Posted: 26 Mar 2015 11:59 AM PDT

திருச்சியில் விமான நிலைய ஒப்பந்த ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். உடன் தற்கொலைக்கு முயன்ற நண்பர் உயிருக்கு போராடி வருகிறார்.

வீடு வீடாகச் சென்று ஆதார் எண்ணை பதிவு செய்யும் பணியாளர்களுக்கு பயிற்சி

Posted: 26 Mar 2015 11:59 AM PDT

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கிழக்கு மற்றும் மேற்குத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் ஆதார் எண்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

கே.கே.நகர் அஞ்சல் அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

Posted: 26 Mar 2015 11:59 AM PDT

திருச்சி கே.கே.நகர் அருகேயுள்ள அஞ்சல் அலுவலகத்தில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க மூதாட்டிகள் காத்திருப்பு

Posted: 26 Mar 2015 11:59 AM PDT

 உத்தமபாளையத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க பல மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டியிருப்பதால், மூதாட்டிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™