Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


6961 - சுஜாதா (தெளிவான மின்னூல்)

Posted: 26 Mar 2015 11:39 AM PDT

இன்றைக்குச் சரியாக 54 வருடங்கள் முன்பு கணையாழியில் வெளிவந்த சுஜாதாவின் கதை 6961. அதாவது வெளிவந்த வருடமான 1961ஐத் தலைகீழாகத் திருப்பிப் போட்டால் வரும் எண் இது. ஆனால் தனது புகழையோஇ கணையாழியின் சர்க்குலேஷனைனையோ இந்தக் கதை தலைகீழாகத் திருப்பிப் போடப்போவதில்லை என்ற அபார நம்பிக்கை சுஜாதாவுக்கு. இந்தக் கதையையும்இ கல்கி இதழில் வெளிவந்த 'ரோஜா' என்ற கதையையும்இ தினமணிக் கதிரில் வெளிவந்த 'ஜோதி' என்ற கதையையும் விசா பப்ளிகேஷன்ஸ் தொகுத்து வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளார் ...

மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...!

Posted: 26 Mar 2015 10:24 AM PDT

- - கண் ஆபரேஷனே பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்த தலைவர் இப்போ திடீர்னு ஆபரேஷனுக்கு சம்மதிச்சுட்டாரே...ஏன்? - மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்...! - மு.மதிவாணன் - -------------------------------------- - நான் தனி ஆள் கிடையாது...! - வாஸ்தவம்தான் தலைவரே...இந்த ஜெயில்ல மொத்தம் ஆயிரம் கைதிங்க இருக்காங்களே...! - அ.ரியாஸ் - ---------------------------------------- - இந்த மாத்திரைகளை சாப்பிட்டுட்டு மறுபடியும் அடுத்த வாரம் வந்து பாருங்க...! - உங்களுக்காக இல்லைன்னாலும் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (102)

Posted: 26 Mar 2015 08:58 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

தியாக மலரே...

Posted: 26 Mar 2015 08:49 AM PDT

- மொட்டாய் இருந்தனை குழவிப் பருவத்தில் ஏ உலர்ந்த பூவே! முறுவலித்தாய் காற்று உன்னைத் தன் மடியில் விளையாடச் செய்த போது மென்மை மிகு எழில் மலராய் முழுவதும் நீ விரிந்தவுடன் மது தன்னை அவாவி வட்டமிட வந்தது வண்டுக் கூட்டம்! உறங்குவித்தது உன்னைத் தாலாட்டுப் பாடி. தோட்டக்காரரின் கவனிப்பு மகிழ்வித்தது உன்னை. பெருமிதமுடன் வீற்றிருந்தாய் கேளிக்கையில் ஈடுபட்டு. கவனத்தில் இருந்ததா அப்போது இந்த இறுதிக் காட்சி? - காய்ந்துபோய்ச் சிதறிக் கிடக்கிறாய் மண்மீது தற்காலம். வாசனையும் மென்மையும் ஒருங்கே ...

தாய் மகன் பாசம்

Posted: 26 Mar 2015 08:43 AM PDT

கருவில் சுமந்த தெய்வமே......! என் உதிரத்தில் உன் வாசம். வயிற்றில் ஈரத்துணியுடுத்து அமுதம் தந்தவளே.................!!! ஓட்டைக் குடிசையிலுள்ளே மாரி கால மழை முத்து எனை தீண்டாமல் சேலையில் அணைத்தவளே....................!!!!! உண்ண பருக எதுவுமில்லை. இருந்தும் சுமை தூக்கி பாலூட்டினாயம்மா...............!!! நீ கூலியாக இருந்தாலும் எஜமான்கள் குழந்தை போல் உடுக்க உடையும் கல்வியும் தந்தாய்-அதை விட பன்மடங்கு பாசத்தால் நேசித்தாய்........!!!! நான் ஆசைப்பட்டு எட்டாக் கனியாக இருந்தவை ...

3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை

Posted: 26 Mar 2015 08:33 AM PDT

புதுடில்லி: - - 'பிறவி மேதை' என்ற சொற்றொடருக்கு ஏற்ப, டில்லியை சேர்ந்த 3 வயது சிறுமி, வில்வித்தையில் சாதனை படைத்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். டில்லியில், வில்வித்தை பயிற்சி நிலையம் நடத்துபவர் செருகுரி சத்தியநாராயணன். இவரது இளைய மகள் 2004ம் ஆண்டும், வில்வித்தை பயிற்சியாளரான, மூத்த மகன், 2010ம் ஆண்டு நடந்த, சாலை விபத்திலும் இறந்துவிட்டனர். இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில், சத்தியநாராயணனும், அவரது மனைவியும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர். வாடகைத் தாய் ...

வச்சகுறி தப்பாது!

Posted: 26 Mar 2015 08:21 AM PDT

ஒருநாள், கிருஷ்ணதேவராயரின் அரசவைக்கு, உயரமான ஒரு மனிதன் வந்து, ""அரசே! என் பெயர் பாங்கா! வில் வித்தையில், எனக்கு நிகர் யாருமில்லை. அனுமதி தந்தால், இந்தச் சபையினர் முன், என் திறமையைச் செய்துகாட்டுகிறேன்,'' என்றான். மறுநாள் பாங்கா, தனது திறமையை காட்ட வந்தான். அரண்மனை எதிரில் பெரிய பந்தல் போடப்பட்டது. அதில், அரசர் முதலானோர் வந்து அமர்ந்தனர். எதிரில் ஒரு மரம், அதில், வெள்ளியிலான இலைகள் கட்டிக் தொங்கவிடப்பட்டிருந்தன. வில் வித்தை வீரன் பாங்கா, அதைக் குறி வைத்து அம்பு எய்ய வேண்டும். அவனது அந்த ...

தாம்பரத்தை தாண்டி குஷ்புவுக்கு எதுவுமே தெரியாது: தமிழிசை பதிலடி

Posted: 26 Mar 2015 08:12 AM PDT

- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நடிகை குஷ்பு, தாம்பரத்தை தாண்டி தாமரையை யாருக்குமே தெரியாது என்று கூறியிருந்ததற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மிகவும் காட்டமாக பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், தாம்பரத்தை தாண்டி தாமரையை யாருக்கும் தெரியாது என்று அவர் பேசி இருப்பதால், அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது என்பது தெரிகிறது. குஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுதான் தெரியும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் ...

தெரிஞ்சுக்கோங்க!............ பாட்டில் விழுங்கும் முட்டை!

Posted: 26 Mar 2015 07:55 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(355)

Posted: 26 Mar 2015 07:33 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு

Posted: 26 Mar 2015 04:18 AM PDT

சிட்னி: - - இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. பேட்டிங்கிற்கு சாதகமான சிட்னி மைதானத்தில், வெற்றி, தோல்விக்கு டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இரு அணிகளிலுமே கடந்த காலிறுதியில் ஆடிய அதே வீரர்கள் உள்ளனர். எந்த மாற்றமும் செய்யப் படவில்லை. - ----------------------------------------

ஒரு பக்கக் கதை - உபதேசம்

Posted: 26 Mar 2015 03:30 AM PDT

"மூடநம்பிக்கை' என்ற அந்த நாடகம் விறுவிறுப்பாக அரங்கேறிக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர் பகுதியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த நிருபர் விக்ரம் நிறைய குறிப்புகளை எழுதியவண்ணமிருந்தார். சமுதாயத்தில்நிலவும் மூடப்பழக்க வழக்கங்களை சரியான தாக்கங்களோடு வாங்கு வாங்கென வாங்கிக் கொண்டிருந்தனர். நாடகத்தில், பூனை குறுக்கால் போனால் அபசகுணம், கைம்பெண்கள் என்றால் துலங்காது, ராகுகாலம், எமகண்டம், ஜாதகம், ராசி, லக்னம், சாங்கியம், சடங்கு, நியூமராலஜி, அஸ்ட்ராலஜி என்று எதையுமே அலசாமல் விடவில்லை நாடக ...

புதிய விடியல்!

Posted: 26 Mar 2015 03:06 AM PDT

பள்ளி வளாகத்திலுள்ள மரங்களையும், நுழைவாயிலில் உள்ள நீரூற்றைச் சுற்றியிருக்கும் புல் தரையையும், பூச்செடிகளையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஏகாம்பரம். அத்தனையும், அவர் நட்டு வளர்ந்தவை; அவைகள் அனைத்தும், அவரது குழந்தைகள். அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் மேலாக, அவற்றை நேசித்து வருகிறார். குழந்தைகளுக்கு பாலூட்டி, சோறூட்டி வளர்ப்பது போல, தினமும் அவைகளுக்கு நீரூற்றி வளர்த்து வருகிறார். அவரை, பள்ளிக் குழந்தைகள், 'தாத்தா' என்று கூப்பிடுவதைப் போல், அந்த மரங்களும், செடிகளும் கூப்பிடுவதாக ...

படித்ததில் பிடித்தது :) --உறவே ஆனாலும்....ஜாக்கிரதை !

Posted: 26 Mar 2015 02:57 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

வரலாற்றில் இன்று - மார்ச்

Posted: 26 Mar 2015 02:41 AM PDT

என் ஆத்மா!!

Posted: 26 Mar 2015 12:56 AM PDT

அந்திமாலை மறையும் நேரம் மலர்ந்த புஷ்பம் நீயா? உன் கண்கலென்ன மனதை ஈர்க்கும் காந்தவிசை தானா? என்னுடலிலுள்ள உயிரும் கூட உன்னிடம் தஞ்சம், நிமிராத விழிகளால் மனதை பறித்தாய். கனவுகளை திருடிக் கொண்டாய். ஏக்கங்களை பகிர்ந்தாய், உன் இதழினில் குறுநகை, அந்த மயக்கம் தான் இன்றுவரை தெளியவில்லை. ஒவ்வொரு மலரின் உதயத்தின் பின்னாலும் அறியாத காரணம் உண்டு. அதே போல் என் தோளினினால் மறைத்த ஓரிடத்தில் ஒருத்தி ஒழிந்து கொண்டிருக்கிறாள் அவள் தான் என் ஆத்மா!

பஞ்சத்து ஆண்டி - தி. ஜானகிராமன்

Posted: 26 Mar 2015 12:36 AM PDT

அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: "எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க... ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை... எழுந்திருக்க மாட்டிஙக்?... இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை." இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில்thija ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் ...

ஆதார் பேஜார்!

Posted: 26 Mar 2015 12:11 AM PDT

ஆதார் அட்டையே அனைத்துக்கும் ஆதாரம் என்றாகி விட்டது இன்றைய நிலை. ஆனால், ஆதாருக்கு பதிவு செய்து இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்தும் இன்னும் அட்டை வழங்கப்படவில்லை என்று புகார்களும், இதில் பல குளறுபடிகள் இருப்பதாக குமுறல்களும் கிளம்பியுள்ளது. – ஏன் இந்தக் குழப்பம்? என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துறையின் மாநில இணை இயக்குனர் கிருஷ்ணாராவிடம் விளக்கம் கேட்டோம். – "பொதுவாக ஒருவரின் கைரேகையைப் பதிவு செய்யும் போது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட 5 கோடியே 21 லட்சம் பேருடைய கைரேகையுடன் பொருந்திப் போகிறதா ...

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Posted: 25 Mar 2015 10:17 PM PDT

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்



மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்ய அமெரிக்கா விருப்பம்

Posted: 25 Mar 2015 05:39 PM PDT

நியூயார்க்: 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத இயக்கம்' என, அறிவிக்க வலியுறுத்தி, அமெரிக்காவின் நியூயார்க் கோர்ட்டில், அங்குள்ள சீக்கிய அமைப்பு சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை, தள்ளுபடி செய்ய வேண்டும் என, அமெரிக்க நிர்வாகம், நியூயார்க் கோர்ட்டை கேட்டுக் கொண்டுள்ளது 'இந்தியாவை, 'இந்து ராஷ்டிரம்' எனப்படும், இந்துக்கள் வாழும் நாடாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, பல தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது' என, 'சீக்கியர்களுக்கு நீதி' என்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™