Tamil News | Online Tamil News |
- 'இ மெயில்' கசிவு வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'
- மதமாற்ற தடை சட்டம் பற்றி விவாதம் தேவை: சொல்கிறார் அமைச்சர் ராஜ்நாத்
- கறுப்பு பணம் குறித்த தகவல் தந்தால் பரிசு
- மனைவியின் காலில் விழுந்து வணங்கும் அமைச்சர்: பெண்களை மதிப்பதாக கூறுகிறார் சந்தீப்
- தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: விஜயகாந்த் பங்கேற்பாரா?
- 38 நாடுகளின் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது இந்தியா
- சிங்கப்பூரின் நிறுவன தந்தை லீ குவான் யீவ் மரணம்
- விவசாயிகள் போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு
- சோனியா கேள்வி: பதில் கூற நாதியில்லை
- மீண்டும் அவசர சட்டமாக அமலாகிறது நிலம் கையகப்படுத்துதல் மசோதா
- பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்க பாக்., பிரதமருக்கு நரேந்திர மோடி கண்டிப்பு
- மாணவியரை தேர்வெழுத விடாமல் தலைமையாசிரியை திமிர்: 'ஆல் பாஸ்' காட்டுவதற்காக நடந்தேறியது கொடூர நாடகம்
| 'இ மெயில்' கசிவு வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்' Posted: புதுடில்லி: எஸ்ஸார் நிறுவனத்தின் ரகசிய மின்னஞ்சல் கசிவு வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எஸ்ஸார் நிறுவனத்திடம் முன்னாள் அமைச்சர்கள் சலுகை பெற்றது தொடர்பான மின்னஞ்சல் செய்திகள், கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, எஸ்ஸார் நிறுவனத்துடன், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பெற்ற சலுகைகள் குறித்து, சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ... |
| மதமாற்ற தடை சட்டம் பற்றி விவாதம் தேவை: சொல்கிறார் அமைச்சர் ராஜ்நாத் Posted: புதுடில்லி: ''மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, விரிவான அளவில் விவாதம் நடத்த வேண்டியது அவசியம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மாநில சிறுபான்மை ஆணையங்களின் மாநாடு, டில்லியில் நேற்று நடைபெற்றது. பல்வேறு சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற, இந்த மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறியவர்களை, மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றுவதை, 'கர் வாபசி' என, இந்து அமைப்புகள் அழைக்கின்றன. இந்த கர் வாபசி குறித்து, சில நேரங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன; ... |
| கறுப்பு பணம் குறித்த தகவல் தந்தால் பரிசு Posted: புதுடில்லி: சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளில், ஏராளமான இந்தியர்கள், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்து உள்ளனர். அதில், எச்.எஸ்.பி.சி., வங்கியும் ஒன்று. இந்த வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான, பிரான்சை சேர்ந்த ஹெர்வ் பால்சியானி, கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர், 'சுவிட்சர்லாந்து வங்கிகளில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்கள் எனக்கு தெரியும்' என, கூறியிருந்தார். இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வெளிநாட்டு ... |
| மனைவியின் காலில் விழுந்து வணங்கும் அமைச்சர்: பெண்களை மதிப்பதாக கூறுகிறார் சந்தீப் Posted: புதுடில்லி: டில்லியில், மாநில அமைச்சர் சந்தீப் குமார், தினமும் தன் மனைவியின் காலைத் தொட்டு வணங்கிய பின்னரே, பணிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆர்வம்: அரியானா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர், சந்தீப் குமார், 34. இவரின் தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால், இளம் வயது முதலே தேச சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராய் திகழ்ந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து, டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்தீப் குமார், மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சராக ... |
| தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: விஜயகாந்த் பங்கேற்பாரா? Posted: சென்னை: தமிழக அரசின், 2015 - 16ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வராக பொறுப்பேற்ற பின், பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டை, எதிர்க்கட்சி கள் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. காலை, 10:00 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வம், தொடர்ந்து ஐந்தாவது முறையாக, பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த நான்கு முறையும், அவர் நிதி அமைச்சராக மட்டும் இருந்தார். இம்முறை முதல்வராக உள்ளார். முதல்வராக ... |
| 38 நாடுகளின் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது இந்தியா Posted: புவனேஸ்வர்: ''இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள், 38 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதோடு, அந்த நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்,'' என, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், நேற்று நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பாரிக்கர் கூறியதாவது: குறைந்தபட்சம், 38 நாடுகள், தங்களின் ராணுவ வீரர்களை, பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளன. அத்துடன், இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள், அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம், தங்களின் ராணுவ ... |
| சிங்கப்பூரின் நிறுவன தந்தை லீ குவான் யீவ் மரணம் Posted: சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நிறுவன தந்தையும், அந்நாட்டின் அரசியலில் அரை நூற்றாண்டுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தியவருமான, லீ குவான் யீவ், 91, மரணம் அடைந்தார்.ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க நாடாக இருந்த சிங்கப்பூரை, உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், நிதி ரீதியாக வளமிக்க நாடாகவும் மாற்றிய பெருமைக்குரியவர், லீ குவான் யீவ். சிங்கப்பூரின் முதல் பிரதமரான இவர், உடல் நலக்குறைவு காரணமாக, பிப்ரவரி முதல், இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்; சிகிச்சை பலனின்றி, நேற்று மரணம் அடைந்தார். இவரின் மகன் லீ ஹிசைன் லூங் தான் தற்போது, சிங்கப்பூரின் பிரதமராக ... |
| விவசாயிகள் போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு Posted: சென்னை: 'விவசாயிகள் சங்கங்களின், 'பந்த்' போராட்டத்திற்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும்' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., தண்ணீரை, 12 மாதங்களில் பகிர்ந்து வழங்க வேண்டும். இதை காதில் போட்டுக் கொள்ளாத கர்நாடகா, அங்குள்ள அணைகள் நிரம்பியவுடன், உபரிநீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்குகிறது. அதனால், டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், உபரியாக தங்களிடம் உள்ள நீரை, தமிழகத்திற்கு வழங்கி வந்த கர்நாடகா, அந்த ... |
| சோனியா கேள்வி: பதில் கூற நாதியில்லை Posted: புதுடில்லி: காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டுவது குறித்து யோசனைகளை தெரிவிக்கும்படி, கட்சியின் அனைத்து மாநில தலைவர்களுக்கு சோனியா கடிதம் எழுதியும், பெரும்பாலான தலைவர்கள் அதை கண்டுகொள்ளாத தகவல் வெளியாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு பின், அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலிலும் காங்கிரசால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து, 'காங்கிரசில் அமைப்பு ரீதியாக என்னென்ன மாற்றங்களை செய்யலாம்; கட்சியை பலப்படுத்த என்ன திட்டங்களை நிறைவேற்றலாம்' என, யோசனை ... |
| மீண்டும் அவசர சட்டமாக அமலாகிறது நிலம் கையகப்படுத்துதல் மசோதா Posted: ஐதராபாத்: நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, வரும், 6ம் தேதிக்குள் ராஜ்யசபாவில் நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்பதால், அதை மீண்டும் அவசர சட்டமாக அமல்படுத்த, மத்திய அரசு தீர்மானித்துள்ளது.நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. அந்தச் சட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தற்போதைய மத்திய அரசு, கடந்த ஆண்டு சில திருத்தங்களை செய்தது. அந்தச் சட்ட திருத்தமானது, அவசர சட்டமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான, அந்த அவசர சட்டமானது, கடந்த, 10ம் தேதி, லோக்சபாவில் மசோதாவாக ... |
| பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்க பாக்., பிரதமருக்கு நரேந்திர மோடி கண்டிப்பு Posted: புதுடில்லி: 'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்னை களுக்கும் தீர்வு காண வேண்டுமானால், பயங்கரவாதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்குங்கள்' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, பிரதமர் மோடி, 'டுவிட்டர்' மூலம் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் தேசிய தினத்தையொட்டி, பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, நேற்று, வாழ்த்து செய்தி அனுப்பினார். அதில், அவர் மேலும் கூறியுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீரில் கடந்த வாரத்தில் மட்டும் இரு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது, கவலை அளிக்கிறது. இது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலவீனமாக்கும் ... |
| மாணவியரை தேர்வெழுத விடாமல் தலைமையாசிரியை திமிர்: 'ஆல் பாஸ்' காட்டுவதற்காக நடந்தேறியது கொடூர நாடகம் Posted: பள்ளியில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஐந்து மாணவியர் உட்பட, ஆறு பேரை தேர்வு எழுத விடாமல் தடுத்து, அவர்கள் வாழ்க்கையில் விளையாடிய, அரசு பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர் உட்பட மூவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சில தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளி ஆசிரியர்களும் நடந்து கொண்டது, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு பள்ளி களில், நடப்பு கல்வியாண்டு துவங்கியது முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சிக்காக, 'டார்கெட்' குறிக்கப்பட்டு, அந்த குறிக்கோளுக்காக, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 24,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |