Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


help

Posted: 23 Mar 2015 03:06 PM PDT

தமிழ் பொண்ட் imac pc தெரிந்திருந்தால் தர முடியிமா???

உலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச்.24, 1996)

Posted: 23 Mar 2015 02:32 PM PDT

காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே நாளில் டாக்டர் ராபர்ட் காக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகினை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவல் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரை கொன்று வந்தது. காக்கின் இந்த கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982-ம் ஆண்டில் ...

டி.எம்.சௌந்தராஜன் பிறந்த தினம் (மார்ச் 24, 1923)

Posted: 23 Mar 2015 02:31 PM PDT

40 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் பாடிய பெருமைபெற்ற டி.எம்.சௌந்தரராஜன் 1923-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். பிரபல வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசை பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாக கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவது தனது 'கிருஷ்ண விஜயம்' என்ற படத்தில் 'ராதே நீ என்னை விட்டு போகாதடி' என்ற பாடலை பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து ...

காதலின் ஆழம்

Posted: 23 Mar 2015 11:52 AM PDT

அன்னை முகம் கண்டதில்லை உன் முகம் என்றிருந்தேன் பாச அலையில் நீந்தலையே....! உன்னை எண்ணி நான் கரைந்தேன். உன் மடியில் துயில எண்ணி என் விழிகள் விழித்துக் கொண்டேன். உன் கண்ணில் மலரனுமே....! என் கண்ணீரில் பயிர் விளைத்தேன். உண்ணும் உணவில் சுவையில்லையே..! கம்பன் கவியில் நயமில்லையே....! உன்னை கண்ட அந்த நொடி தொலைந்தடீ என் வாழ்க்கை. என்னோடு பேசம்மா....! என் நெஞ்சு வலிக்குதடீ..! என் இதயம் எனதல்ல உன்னை நினைத்து வாழும் ஓருயிர் நான். என் குறை கருமையடீ....! அதனால் என்னை ...

வரலாற்றில் இன்று - மார்ச்

Posted: 23 Mar 2015 11:38 AM PDT

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Posted: 23 Mar 2015 11:35 AM PDT

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்



மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

முத்தத் தீர்மானம்

Posted: 23 Mar 2015 11:11 AM PDT

முத்தத் தீர்மானம் முத்தத்தின் மீது வெறுப்பென்று ஒன்றும் இல்லை முத்தம் தூய்மையானதுதான் கண்ணீரைத் தடம் மாற்ற  காமத்தை உருமாற்ற  பெருமைப் பட பாராட்ட எல்லாவற்றிற்குமே  ஒரு முத்தம் போதுமானதாக இருக்கின்றது ஆலயத்திற்கு ஒர் ஆடை அரங்கிற்கு ஒர் ஆடையென தரம் பிரித்து அணிவதைப் போல முத்தங்களும் தரம் பிரித்துப்  பரிமாறப் பட வேண்டும் அழுந்தப் பதியும் புறங்கை முத்தத்தில் கருகி விடுகின்றன உரோமங்கள்  உச்சி முகர்வதில் மெச்சிக் கொடுப்பதில் இதழ்வழி பீறிடும் வெப்பம்  ஓசோனின் கிழிசலாய் ...

என் முத்தத்தை ஒட்டிக்கொள் .....

Posted: 23 Mar 2015 11:05 AM PDT


உன் நெற்றிப் பொட்டு தீர்ந்து போனது ..
நேற்று நான் வாங்கி வந்த பொட்டு box -ம்
காணவில்லை என பதறிக் கொண்டிருந்தாய்...

உன் நெற்றில் முத்தமிட்டு செல்கிறேன்..
நான் பொட்டு வாங்கி வரும் வரை,,
என் முத்தத்தை ஒட்டிக்கொள் .....

கன்னியாகுமரி

Posted: 23 Mar 2015 10:10 AM PDT

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து நம்ம ஊருக்கு ஒரு பயணம். மாலை 5.30 சென்னையில ஏறியதும் உடனே நாகர்கோவில் வந்து விடாதா என்று ஓரு ஏக்கம். கொஞ்ச தூரம் வரை வேடிக்கை பார்ப்போம். விழுப்புரம் வரை ஒரு தூக்கம். அங்க ஒரு டீ வடை வாங்கி சாப்பிட தோணும். நம்ம ஊரு டீ வடை சாப்பிட்டவங்களுக்கு இதெல்லாம் வாயில வைக்கவே பிடிக்காது. பிறகு ரயிலில் திருச்சி வர மறுபடியும் குட்டி தூக்கம் அங்க முழிச்சுக்குவோம். எப்போ நம்ம ஊரு வரும்னு ஒரு ஏக்கம் மனதில் இருக்கும். காலையில் நம்ம அப்பா/அம்மா,தம்பி/தங்கச்சிய ...

புத்துணர்ச்சிக்கு திராட்சை!

Posted: 23 Mar 2015 09:22 AM PDT

திராட்சை இளமையை தக்க வைத்து முதுமையை அண்டவிடாமல் பாதுகாக்கக்கூடிய அருமையான பழமாகும். குறிப்பாக, உலர்ந்த தோலுடன் எடை குறைவாக உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். சத்து நிறைந்த திராட்சை பத்திய உணவுக்கு ஏற்றது. பசியைத் தூண்டி புத்துணர்ச்சியூட்டக் கூடியது. தாகத்தை தணித்து வயிற்றெரிச்சலை கட்டுப்படுத்தக்கூடியது. செரிமானத்தை சீராக்கி வாயுப்பொருமலை போக்கக்கூடியது. தினந்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. திராட்சைப்பழத்தில் மாலிக், சிட்ரிக், டர்டாரிக் ...

தமிழக முதல்வரைக் கைது செய்ய வேண்டும்: புகார் அளித்த மதுரை மாணவி!

Posted: 23 Mar 2015 09:18 AM PDT

தேனி: தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை கைது செய்ய வேண்டுமென மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவருடைய தந்தை ஆனந்தனுடன் வந்து தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''இந்திய தண்டனை சட்டப்பிரிவு 328-ன் படி ஒருவருக்கு காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது ஒரு குற்றத்தை செய்யும் அல்லது அதற்கு வசதி செய்யும் உட்கருத்துடன் அல்லது அதனால் அனேகமாக அவருக்கு காயம் விளைவிக்கக்கூடும் என்று அறிந்து, நஞ்சு எதையும் அல்லது மதிமயக்கம் செய்கிற ...

ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Posted: 23 Mar 2015 08:50 AM PDT

பிடிவாதக்காரர்களை ஒற்றைக்காலில் நின்று சாதிப்பவர்கள் என்று சொல்வதுண்டு. 'உங்களாலும் ஒற்றைக்காலில் நிற்க முடிந்தால் நீங்கள் பிடிவாதக்காரரோ இல்லையோ, ஆரோக்கியமானவர் என்றே அர்த்தம்' என்கிறது ஜப்பானில் மூளைத்தாக்கு நோய் பற்றி வெளியிடப்பட்ட ஆய்விதழ் தகவல் ஒன்று. ஒரே காலில் தாக்குப் பிடித்து 20 நொடிகள் வரை நிற்க முடிந்தவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவ்வாறு நிற்க முடியாமல் திணறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் அல்லது மறதி நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம். ஒரு காலில் சமாளித்து ...

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது?

Posted: 23 Mar 2015 07:10 AM PDT

சமீபத்தில் நடந்துமுடிந்த இஸ்ரேல் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து ஆச்சரியப் படுபவர்கள், இஸ்ரேலின் அரசியல் போக்குகுறித்து அதிகம் கவனம் செலுத்தாதவர்களாகத்தான் இருப்பார் கள். அதேசமயம், இந்தத் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடையாதவர்கள், நிச்சயமாக இதன் விளைவு எப்படியானதாக இருக்கும் என்றும், நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் மீது விழுந்திருக்கும் எத்தனை பெரிய அடி இது என்றும் அறியாதவர்களாக இருப்பார்கள். இந்தத் தேர்தல் மூலம் வெளிப்பட்டிருக்கும் ...

அறமும், ஒழுக்கமும் ஏட்டில் மட்டுமே படிக்கின்ற விஷயமாகி விட்டது!

Posted: 23 Mar 2015 06:58 AM PDT

''பள்ளிகளில் தேர்வு நடக்குபோது மாணவர்கள் பிட் அடிப்பது சாதாரண விஷயம். இதையெல்லாம் தடுக்க முடியாது. பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களால் தேர்வு நடத்த முடியாது. பெற்றோர்களே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?" - இப்படிச் சொன்னது ஒரு சுப்பனோ, குப்பனோ இல்லை. பீகார் மாநிலத்தின் கல்வி அமைச்சர் பி.கே.சாகி என்பதுதான் மீள முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது. முழுமையாக கட்டி முடிக்கப்படாத அடுக்கு மாடிக் கட்டடம் அது. கட்டத்தில் ...

மதுவிலக்கு சாத்தியமாகுமா ?

Posted: 23 Mar 2015 06:56 AM PDT

காந்தி பிறந்த குஜராத் மாநிலம் தவிர்த்து, சுதந்திர இந்தியாவில் மது விலக்கு அமலில் இருந்த ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான் என்றால் நம்ப முடிகிறதா? இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு பின்னர் ஏறத்தாழ 24 ஆண்டுகள் வரை (1971ம் ஆண்டு) தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல், மதுவிற் பனைக்கென்றே ஒரு அரசு நிறுவனத்தை செயல்படுத்தி, மதுவிற்பனையை அதிகரிக்க இலக்கும் ...

போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி

Posted: 23 Mar 2015 06:52 AM PDT

தாராபுரம்: செல்போனில் தங்களை தாங்களே படம் எடுத்து வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அனுப்புவது, பிரபலங்களுடன் சேர்ந்து நின்று 'செல்பி' எடுத்துக்கொள்வது என்ற கலாசாரம் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தாராபுரத்தைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை நாகப்பாம்புடன் விளையாடி அதனை 'செல்பி' எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டு உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார்(வயது 27). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி(23). இவர்களுக்கு ...

திக்...திக்...திக்! ஒரு ஏப்ரல் புத்திசாலி - இந்திரா சௌந்தர்ராஜன்

Posted: 23 Mar 2015 06:41 AM PDT

http://www.mediafire.com/download/u33g4pwpg74q9ok/Thick+Thick+Thick.படப் www.minnoolakam.blogspot.com என்றும் அன்புடன் செல்லா

பாடிய முதல் பாட்டு

Posted: 23 Mar 2015 06:20 AM PDT

- -  பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா. -  டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. -  பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்: "ஜாதகம்' -  ...

சாம்சங் கேலக்ஸி s6

Posted: 23 Mar 2015 06:15 AM PDT

சில வருடங்களுக்கு முன்பு உச்சக்கட்டத்தில் இருந்த சாம்சங் நிறுவனம், சமீப காலமாக பலமான தொய்வைக் கண்டுவருகிறது. மிகுந்த சிரமத்துக்குப்பின், சாம்சங் நிறுவனம் தனது பழைய நிலையை அடையும் முயற்சியில் தனது புதிய ஸ்மார்ட் போனான 'சாம்சங் கேலக்ஸி எஸ்6' ஸ்மார்ட் போனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் இந்திய விலை ரூபாய் 48,500 என்று எதிர்பார்க்கலாம். இயங்குதளம்! இது லேட்டஸ்ட் வெர்சனான லாலிபாப் 5.0.2 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. மேலும், சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேகமான 'TouchWiz' டிசைன் மாற்றங்களும் ...

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Posted: 23 Mar 2015 06:07 AM PDT


-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.

இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.
–
————————————

கீழாநெல்லி

Posted: 23 Mar 2015 05:20 AM PDT

கீரை வகைகள் என்றாலே, இதில் மருத்துவ குணம் கட்டாயம் இருப்பதாக அறியலாம். அத்தகைய மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை கீழாநெல்லி. கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி, இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். மேற்புறத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய மேலாநெல்லியும் உண்டு. கீழ் நோக்கிய காய்கள் கொண்டதா என்பதை உறுதிபடுத்திய பின்னரே, இதனை பயன்படுத்த வேண்டும். இக்கீரை இந்திய மருத்துவத்தில் ...

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

Posted: 23 Mar 2015 04:53 AM PDT

வாட்ஸ்–அப் இன்றைய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் இதில் மூழ்கியே கிடக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு வாலிப பட்டாளங்களை கவர்ந்துள்ள வாட்ஸ்–அப்பில் நல்லதும் கெட்டதுமாக ஏராளமான தகவல்கள் குவிந்துக்கிடக்கின்றன. ஆபாச ஆடியோக்கள், வீடியோக்களுக்கும் வாட்ஸ்–அப்பில் பஞ்சமில்லை. சென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசுடன் ஆபாசமாக பேசி வாட்ஸ்–அப்பில் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக வாட்ஸ்–அப்பில் வெளியான பல்வேறு வீடியோக்களும், போட்டோக்களும் வாட்ஸ்–அப் ...

குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Posted: 23 Mar 2015 04:51 AM PDT

அன்பின் பகிர்வு…!! * அழுகுரல் சத்தத்தோடு விடிந்தது அதிகாலை நேரம் எதற்கென்று சொல்லாமல் அழுவது குழந்தைகளின் குணம். சமாதானத்திற்குப் பிறகு அழுகை நிறுத்தி சிரித்தனர். பால் குடிக்க மறுத்து என்னை வினையாட அழைத்தனர். விளையாடினேன். கைபேசியை எடுத்துக் கொண்டு அவர்கள் அப்பாவிடம் பேசி விளையாடுவதை விளக்கினார்கள். பலூன்கள் ஊதிஊதி பெருசாக்கி வெடித்து மகிழ்ந்தார்கள். கள்ளிச் செடியின் மடலை ஒடித்து அதன் பசையை முகம் கைகால்கள் எல்லாம் தடவித் தடவிச் சந்தோஷித்தார்கள். என் முகமெல்லாம் தடவி விட்டு நல்லாயிருக்கா ...

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection

Posted: 23 Mar 2015 04:38 AM PDT

கூகுள் நிறுவனம் அண்டிரொய்டு இயங்குதளத்தில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'ஆன்-பாடி டிடெக்சன்' (On-body detection) என்ற சிறப்பான இந்த வசதி மூலம் பயனர்கள் திறன்பேசிகளை தங்கள் கைகளில் வைத்திருக்கும் போது தானாகவே 'அன்லாக்' (Unlock) செய்துகொள்ளும். அதே சமயத்தில் திறன்பேசிகள் கைகளில் இல்லாத தருணங்களில் தானாக லாக் செய்து கொள்ளும். இந்த புதிய வசதியின் முக்கிய நோக்கம், ஒருவரின் திறன்பேசிகள் தொலைந்துபோனால் தவறானவர்களின் கைகளில் கிடைத்து விடக் கூடாது என்பதாகும். இதற்காக அண்டிரொய்டில் பிரத்யேக ...

உலகச் செய்திகள்!

Posted: 23 Mar 2015 04:25 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள்

Posted: 23 Mar 2015 04:04 AM PDT

பிரதமர்: அரசாங்கம் ஹுடுட்டை நிராகரித்ததில்லை ஆனால்…… அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை நிராகரிக்கவில்லை ஆனால், அதைச் செயல்படுத்துமுன்னர் பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். ஹுடுட்டை அதன் நோக்கங்கள் சிதைவுறாமல் அமல்படுத்துவதற்குமுன் பல கட்டுப்பாடுகளையும் விவகாரங்களையும் ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும். "ஹுடுட்டை நிராகரிப்பதற்கும் அதைச் செயல்படுத்தாமலிருப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு", என்று நஜிப் கூறினார்.

ஜெயலலிதா அவர்களே இது நியாயம்தானா? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Posted: 23 Mar 2015 03:45 AM PDT

சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 23.03.2015 திங்கள்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மக்களுக்கு உழைப்பவர்கள் யார். எதிரானவர்கள் யார் என்பதை மக்கள் இப்போது உணர ஆரம்பித்துவிட்டார்கள். காங்கிரசை கடந்த தேர்தலில் ...

பாகிஸ்தானில் 'வேர்ட் பிரஸ்' இணையதளத்துக்கு தடை?

Posted: 23 Mar 2015 03:38 AM PDT

ப்ளாக் எனப்படும் வலைப்பதிவு சேவை வழங்கும் வேர்ட் பிரஸ் (Wordpress.com) இணையதளம், பாகிஸ்தானில் முடக்கப்பட்டுள்ளது. இணையப் பிரியர்கள் தங்களதுச் சிந்தனைகளை வெளிப்படுத்த உதவும் 'வோர்ட் ப்ரஸ்' இணையதளம் ஞாயிற்றுக்கிழமை முதல் பாகிஸ்தான் எங்கும் இயங்கவில்லை. ஆனால், இந்த இணையதளத்துக்கு தடை விதிக்கப்பட்டதுக்கான அறிவிப்பை பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவிக்காத நிலையில், இந்த இணைதளம் முடக்கப்பட்டதா... இல்லையா என்று அறியப்படவில்லை என்று டான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானில் ...

பேசும் படமும்... பேசப்படாத புகைப்பட நிருபரும்

Posted: 23 Mar 2015 02:54 AM PDT

உள்ளூர் ஊடகத்தில் பணியாற்றி வரும் ராஜேஷ் குமாருக்கு தெரியாது... தான் எடுத்த ஒரு புகைப்படம் தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்று. ஓர் ஆழமான புகைப்படம் அது. வெளிப்பூச்சு முற்றுபெறாத அந்த 4 அடுக்குமாடி கட்டத்தில் தொங்கிய சாரத்தில் ஏறி பெருங்கூட்டம் ஒன்று ஜன்னல்களை அடைந்திருந்தது. எதற்காகவென்றால், உள்ளே 10-ம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு 'பிட்' கொடுப்பதற்காக. சாரத்தில் தொங்கிக் கொண்டும், ஜன்னலில் நின்றபடி இருந்தவர்களோ உள்ளே தேர்வு எழுதிக்கொண்டிருந்த ...

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா

Posted: 23 Mar 2015 02:43 AM PDT

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்ம மரணம் தொடர்பான வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். ரவி மரணம் தொடர்பான விசாரணை நேர்மையாக நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அவரது மனைவிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், சித்தராமையா இவ்வாறு அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த கடந்த ...

இந்தியாவில் 735 பறவை இனங்கள்

Posted: 23 Mar 2015 01:33 AM PDT

உலகெங்கும் 116 நாடுகளில் பறவை ஆர்வலர்களால் அனைத்துலுக ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள ஆர்வலர்கள் பறவைப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் 735 பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள பறவை - ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்பினர் நடத்திய இந்தக் கணக்கெடுப்பில் அதிக அளவிலான பறவை இனங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் 325 பறவை இனங்களுடன் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. பறவைகள் இனத்தைக் கண்டறிவதில் இந்தியாவில் முதலிடத்தில் ...

மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்

Posted: 23 Mar 2015 01:19 AM PDT

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி மஹாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் [th]தகவல் பலகை[/th]சிவஸ்தலம் பெயர்திருவிடைமருதூர்இறைவன் பெயர்மஹாலிங்கேஸ்வரர்இறைவி பெயர்பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகிபதிகம்திருநாவுக்கரசர் - 5 திருஞானசம்பந்தர் - 5 சுந்தரர் - 1எப்படிப் போவதுகும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.ஆலய முகவரிஅருள்மிகு மஹாலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிடைமருதூர் திருவிடைமருதூர் ...

ஹெராயின் காதல்..!! -Mano Red

Posted: 23 Mar 2015 01:13 AM PDT

மந்திரப் பொடி தூவாமல் தந்திரமாக இழுத்ததில் எந்திரமாக மாறுகிறது சொக்கி மக்கிப் போன மனம், காய்ந்து போன நாட்களை மாய்ந்து மாய்ந்து புதுப்பித்தே தேய்கிறது காதல்..!! இதழுடன் இதழ் பொருத்த, இதயத்தை இடை நிறுத்தி காதல் கடை விரித்ததில், உடன்கட்டை வரை ஏறத் துணிவது ஏறத்தாழ காதல் குணமே..!! முருங்கை மரமேறும் வேதாளமாய், காதல் பாதாளத்தில் மீண்டும் மீண்டும் விழவே தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்கிறது பாழடைந்த நினைவு..!! எக்குத்தப்பாக எத்தனைமுறை பேசினாலும், சத்தமில்லாத அர்த்தமில்லாப் ...

முன்ஜென்ம தவறுகள் வரை ஞாபகம் வந்து தொலைக்கிறது...!!

Posted: 23 Mar 2015 01:03 AM PDT

அன்பை வேண்டி.........

Posted: 22 Mar 2015 11:05 PM PDT

திருமணம் முடிந்து திரும்பி பார்க்கும் முன்பே நான்கு வருடங்கள் நான்கு கால் பாய்ச்சலில் ஓட இத்தனை வருடங்களில் இம்மியளவும் மாற வில்லை என் இனிய கணவர்........... நீங்கள் கேட்கலாம் நீங்களும் அவரைப்போல் மாறினால் பிரச்சனையே வராதே என்று பிரச்சனையே அதுதான் அவரைபோல் இன்னொருவர் அகிலத்திலும் இல்லை அதனால் நான் அந்த முயற்சியில் அணுவளவும் முயற்சிக்கவில்லை............ அன்பு என்றால் என்ன? என்று கேட்டால் அகராதியை புரட்டும் மனிதரை தெரியாமல் பெற்றோர் சொல் கேட்டு மணந்து ...

ரமணியின் கவிதைகள்

Posted: 22 Mar 2015 10:27 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™