Tamil News | Online Tamil News |
- மாணவர் காப்பி அடிப்பதை கண்டித்த ஆசிரியருக்கு அடி, உதை: பீகாரை அடுத்து உ.பி.,யிலும் களைகட்டியது 'பிட்' கலாசாரம்
- பருவம் தவறிய மழையால் உணவு பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை: போதுமான கையிருப்பு உள்ளதாக ஜெட்லி உறுதி
- மங்கள்யான் மேலும் ஆறு மாதம் செயல்படும்: எரிபொருள் அதிகம் உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு
- தமிழக சட்டசபையில் 4 ஆண்டுகள் நடந்தது என்ன? 147 முறை எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு: கருணாநிதி 5; விஜயகாந்த் 27 நாள் வருகை
- ராகுலுக்கு காங்., தலைவர் சோனியா 'பாடம்!': தானே முன்னின்று நடத்துகிறார் அரசியல்
- தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய நெருக்கடி? அதிக விலைக்கு வாங்குவதால் மின் வாரியத்திற்கு இழப்பு
- டெண்டர் கோரி 3 ஆண்டுக்கு பின்தான் குறை தெரிந்ததா: கருணாநிதி கேள்வி
- தேர்தலில் நிற்காத கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை
- டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்
- போக்குவரத்து கழகங்கள் தர வேண்டிய இழப்பீடு தொகை ரூ.100 கோடி: 700 பஸ்கள் மீட்கப்படுமா?
- தற்போதைய அரசியலுக்கு நான் லாயக்கற்றவன்: யஷ்வந்த் சின்கா வருத்தம்
| Posted: ஜான்சி: பீகாரைத் தொடர்ந்து, உ.பி.,யிலும், 'பிட்' கலாசாரம் களைகட்டியுள்ளது. கல்லூரி தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்த பேராசிரியரை, மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சியினர், இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருந்த, திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில், சமீபத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. அப்போது, வைஷாலி, சஹார்சா, நவாடா ஆகிய மாவட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர், நண்பர்கள், காப்பி அடிப்பதற்காக, 'பிட்' கொடுத்தனர். ... |
| பருவம் தவறிய மழையால் உணவு பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை: போதுமான கையிருப்பு உள்ளதாக ஜெட்லி உறுதி Posted: புதுடில்லி: ''பருவம் தவறி பெய்த மழையால், நாடு முழுவதும், 24 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆனாலும், உணவுப் பொருட்கள் கையிருப்பு உபரியாக உள்ளதால், அவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதியாக தெரிவித்தார். நடப்பு, 2014 - 15ம் ராபி பருவத்தில் (அக்., - மார்ச்), 13.23 கோடி ஏக்கரில் உணவு தானியங்களும், 1.96 கோடி ஏக்கரில் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்பட்டுள்ளன. |
| மங்கள்யான் மேலும் ஆறு மாதம் செயல்படும்: எரிபொருள் அதிகம் உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு Posted: புதுடில்லி: 'மங்கள்யான் விண்கலம் இன்னும் ஆறு மாதங்களுக்கு செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து செயல்படும்' என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான 'இஸ்ரோ' சார்பில் மங்கள்யான் விண்கலம் நவ. 5ம் தேதி 2013ல் விண்ணில் செலுத்தப்பட்டது. 'செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஆறு மாதங்கள் மட்டுமே மங்கள்யான் விண்கலம் செயல்படும்' என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி வரும் 24ம் தேதியுடன் இந்த காலக்கெடு முடிவடைகிறது.இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ... |
| Posted: கோவை: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகள் நிறைவடைய போகின்றன; சட்டசபை எத்தனை முறை கூடியுள்ளன; 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு; எம்.எல்.ஏ.,க்கள் பெறும் சலுகை என்னென்ன; எதிர்க்கட்சிகள் என்ன செய்தனர் என்ற விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக வெளியாகி உள்ளன.கோவை வெள்ளலூரைச் சேர்ந்த, டேனியல் ஏசுதாஸ் என்பவர், கேட்டிருந்த தகவல்களும், கிடைத்த விவரங்களின் தொகுப்பும் வருமாறு: |
| ராகுலுக்கு காங்., தலைவர் சோனியா 'பாடம்!': தானே முன்னின்று நடத்துகிறார் அரசியல் Posted: புதுடில்லி: ஒரு மாத காலமாக எங்கிருக்கிறார் என தெரியாமல், மாயமாக உள்ள, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, அவரின் தாயும், காங்கிரஸ் தலைவருமான சோனியா, மறைமுகமாக பாடம் கற்பித்துள்ளார். கட்சி மற்றும் அரசியல் நடவடிக்கைகளை தானே முன்னின்று நடத்தி, 'நீ இல்லாவிட்டால் என்ன, என்னால் முடியும்!' என, ராகுலுக்கு, சோனியா மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், அதிரடி அரசியல் நடவடிக்கைகளை துவக்கி உள்ளார். |
| Posted: 'தனியாரிடம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டாம்' என, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்த நிலையில், உயர் மட்ட நெருக்கடி காரணமாக, மீண்டும், மதுரை பவர், சமல்பட்டி நிறுவனங்களிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மின் வாரியத்தின் இந்த முடிவால், தமிழக அரசுக்கு மேலும் நிதி சுமை அதிகமாகிறது.தமிழ்நாடு மின் வாரியம், ஏழு தனியார் நிறுவனங்களிடம், 1,154 மெகாவாட், மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஏழு நிறுவனங்களிடம், சந்தையில் எரிபொருள் விலைக்கு ஏற்ப, மின் கொள்முதல் விலை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ... |
| டெண்டர் கோரி 3 ஆண்டுக்கு பின்தான் குறை தெரிந்ததா: கருணாநிதி கேள்வி Posted: சென்னை : 'உடன்குடி மின் திட்டத்துக்கு, டெண்டர் கோரி, மூன்று ஆண்டுகளுக்குப் பின், அதிலிருக்கும் குறையை, மின் துறை அமைச்சர் கண்டுபிடித்தாரா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., ஆட்சியில், 2009ல், உடன்குடி மின் திட்டம் துவங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அத்திட்டத்தை கைவிட்டு, 2013ம் ஆண்டு, புதிதாக, உடன்குடி மின் உற்பத்தித் திட்டத்தை துவங்கினர். இதற்கான அறிவிப்பை, 2012ல் ஜெயலலிதா வெளியிட்டார்.இப்புதிய திட்டத்தை நிறைவேற்ற, 2013ல் டெண்டர் கோரப்பட்டது. இந்நிலையில், மூன்றாண்டுகள் கழித்து, ... |
| தேர்தலில் நிற்காத கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை Posted: கோல்கட்டா: ''தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருகிறது,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் எச்.எஸ். பிரம்மா கூறினார். |
| டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Posted: நாமக்கல்: நாமக்கல் பெண் பலாத்கார சம்பவத்தில், ஐந்து பேர் மட்டும் கைதாகி உள்ள நிலையில், எத்தனை பேர், அந்த பெண்ணை சீரழித்தனர் என, கணக்கிட முடியாத அளவிற்கு, பல பேர் பலாத்காரம் செய்ததாக, வாக்குமூலம் அளித்து உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அந்த பெண்ணை, பலர், பலமுறை பலாத்காரம் செய்திருந்தாலும், ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். சம்பவ நாளன்று, கைதான ஐந்து பேரும், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம், அனைவரையும் துடிதுடிக்கச் செய்துள்ளது. அந்த வாக்குமூலத்தில், வாலிபர்கள் கொடுத்த விவரம்:நாங்கள் மது போதையில் மாலை நேரத்தில், ... |
| போக்குவரத்து கழகங்கள் தர வேண்டிய இழப்பீடு தொகை ரூ.100 கோடி: 700 பஸ்கள் மீட்கப்படுமா? Posted: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், ஆண்டு தோறும் விபத்து இழப்பீடாக, 100 கோடி ரூபாய் வரை வழங்கி வரும் நிலையில், தற்போது நிதி நெருக்கடி காரணமாக, நீதிமன்றங்களில் அடை காக்கும், 700 பஸ்களை மீட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 100 கோடி ரூபாய் நிதி வழங்கி, பஸ்களை மீட்டுத் தர தொழிற்சங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின், எட்டு கோட்டங்கள், 21 மண்டலங்களின் கட்டுப்பாட்டில், 22,501 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் தினம் தோறும், இரண்டு கோடி பேர் பயணிக்கின்றனர். கடந்த, 2011 துவங்கி இது வரை, 4,500 புதிய பஸ்கள் ... |
| தற்போதைய அரசியலுக்கு நான் லாயக்கற்றவன்: யஷ்வந்த் சின்கா வருத்தம் Posted: புதுடில்லி: தீவிர அரசியலில் என்னால் முத்திரை பதிக்க முடியாமல் போய்விட்டதால் தற்போதைய நவீன அரசியலுக்கு நான் சிறிதும் பொருத்தமற்றவனாக போய்விட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறினார்.பா.ஜ.வைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யஷ்வந்த் சின்கா(78), மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையிலும், வாஜ்பாய் (2002) அமைச்சரவையிலும் மத்திய நிதி அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட இவருக்கு சீட் கிடைக்கவில்லை. மாறாக இவரது மகன் ஜெயந்த் சின்காவிற்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 22,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |