Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எபோலா - செய்தித் தொகுப்புகள்

Posted: 21 Mar 2015 02:06 PM PDT

சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 'எபோலா' என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ...

இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல்

Posted: 21 Mar 2015 12:34 PM PDT

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள தனியாக எந்த பிளானும் போடவேண்டியதில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 26-ம்தேதி நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கூறியதாவது:- எதிலுமே தோற்காத இந்திய அணியை, எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பது ஆஸ்திரேலிய அணியின் மீதான கேள்வியாக இருக்கிறது. இந்தியாவை, ஆஸ்திரேலியா எப்படி எதிர்கொண்டது ...

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Posted: 21 Mar 2015 12:02 PM PDT

கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவரது மகன்களில் ஒருவனான சலிம் என்ற 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் திருடிவிட்டதாக இன்று ஷகினா கேள்விப்பட்டார். பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் ...

உனக்காக ஒரு கவிதை எழுதுகிறேன்

Posted: 21 Mar 2015 09:29 AM PDT


-
வெட்டுப்புலித் தீப்பெட்டிக்குள்
பொன்வண்டுகளோடு
மூச்சடைத்துவிட்டன
உன் வயதுகளும் சிறகுகளும்
ஆளுயரக் கண்ணாடியின் முன்
உன் உடல் குறுகுகிறது
ஆடைகளின் பேய்
உன்னை ஆட்கொண்டிருக்கிறது
–

————————–
பழநிபாரதி

காதலை விட நட்பு..

Posted: 21 Mar 2015 06:46 AM PDT

- – காதலும் நட்பும் ஒன்றல்ல காதல் உறவை சேர்ந்தது நட்பு மனம் சேர்ந்தது நீ காதலை தேடி போனாய் ஆனால் நட்பு நம்மை தேடி வரும் காதல் சுனாமி போன்றது – ஆனால் நட்பு வானம் போன்றது நட்பு என்ற கோலத்திற்கு காதல் என்ற புள்ளி வைக்காதே! – ——————— >அனுசியா, கோத்தா நன்றி: வானம்பாடி

எதுவும் இல்லை

Posted: 21 Mar 2015 06:43 AM PDT


-
மனதில் எதையும்
நினைக்காமல்
மறைக்காமல்
சொல்லாமல்
எதுவும் இல்லை
ஆனால்
உன்னை பார்த்தவுடன்
இவையனைத்தும்
மறந்து விட்டன

–
==========================
>மிஸ்.பிரியமானவள்
நன்றி: வானம்பாடி

புல் பூண்டுகள்

Posted: 21 Mar 2015 06:40 AM PDT

- - - – பூமித் தாயின் நிர்வாணத்தை மறைக்க மண்டிக் கிடக்கும் மனிதாபிமானிகளான உயிர்கள் தாவர உண்ணிகளின் அட்சயப் பாத்திரங்கள் பனித்துளிகள் தங்கும் பச்சய விடுதிகள் ஊர்வன ஒளிந்து கொள்ளும் பசுமை மாறாக் காடுகள் – ————————– >கவிச்சிற்பி சிவ.ஜெய்சங்கர் நன்றி: வானம்பாடி

இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி'

Posted: 21 Mar 2015 05:24 AM PDT

சென்னை : பணியின் போது இறந்த பெண் ஊழியரை, மூன்று மாதங்களுக்கு பிறகு, பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்திருப்பதாக, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருப்பது, அதிர்ச்சியை, ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கடயம் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள், 40. இவர், சில ஆண்டுகளுக்கு முன், கருணை அடிப்படையில், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், டைப்பிஸ்டாக பணியில் சேர்ந்தார்.கடந்த டிசம்பர், 17ம் தேதி, மாரடைப்பால் இறந்தார். இது குறித்த தகவலை, அலுவலக ஊழியர்கள், உயர்அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இந்நிலையில், ...

கனவிலேயும் என் மனைவி வந்துடறா, டாக்டர்...!

Posted: 21 Mar 2015 04:08 AM PDT

சீனாவை விட்டு வெளியேறுகிறது யாஹூ

Posted: 21 Mar 2015 02:45 AM PDT

சீனாவில் இணையத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள், போட்டி நிறுவனங்களின் வரவு போன்ற காரணங்களால் யாஹூ நிறுவனம் சீனாவில் இருந்த தனது கடைசி ஆய்வு மையத்தையும் மூடியது. இதன் காரணமாக சுமார் 200 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு இணைய நிறுவனமான யாஹூ, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் தனது ஆய்வு மையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. டுவிட்டர் நிறுவனம் ஹாங் காங்கில் தனது அலுவலகத்தை திறந்துள்ள நிலையில், பேஸ்புக் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(353)

Posted: 21 Mar 2015 02:42 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி!

Posted: 21 Mar 2015 01:55 AM PDT

'தமிழகத்தின் பால் தாக்கரே' என தனது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலனுக்கு, இப்போது வயது 88. வயது மூப்பு காரணமாக சோர்வு தெரிந்தாலும், வார்த்தைகளில் கேலியும், கிண்டலும் அதிகம்! ''திராவிட இயக்கங்களின் தாயகமான தமிழகத்தில், இந்து இயக்கங்கள் முன் எப்போதையும்விட இப்போது வலுவாகக் காலூன்றத் துடிப்பதன் நோக்கம் என்ன?'' ''30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துக்களுக்காகப் போராடவும், வாதாடவும்தான் இந்து முன்னணி அமைப்பைத் தொடங்கினோம். நாங்கள்தான் பேசுகிறோம்... போராடுகிறோம். ஆனால், ...

வச்சகுறி தப்பாது!

Posted: 21 Mar 2015 01:28 AM PDT

ஒருநாள், கிருஷ்ணதேவராயரின் அரசவைக்கு, உயரமான ஒரு மனிதன் வந்து, ""அரசே! என் பெயர் பாங்கா! வில் வித்தையில், எனக்கு நிகர் யாருமில்லை. அனுமதி தந்தால், இந்தச் சபையினர் முன், என் திறமையைச் செய்து காட்டுகிறேன்," என்றான். – மறுநாள் பாங்கா, தனது திறமையை காட்ட வந்தான். அரண்மனை எதிரில் பெரிய பந்தல் போடப்பட்டது. அதில், அரசர் முதலானோர் வந்து அமர்ந்தனர். – எதிரில் ஒரு மரம், அதில், வெள்ளியிலான இலைகள் கட்டிக் தொங்கவிடப்பட்டிருந்தன. வில் வித்தை வீரன் பாங்கா, அதைக் குறி வைத்து அம்பு எய்ய வேண்டும். ...

மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய அரசு அறிவிப்பு!

Posted: 21 Mar 2015 01:12 AM PDT

புதுடெல்லி: தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் கூறிய கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தத்தை, ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy ...

வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை

Posted: 20 Mar 2015 10:06 PM PDT

புதுடெல்லி, மார்ச் 21 – கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 30 சதவீத வரியும், 90 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பண தடுப்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை, ஒரு ரூபாய் கூட விடாமல் மீட்போம் என்று, பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கருப்பு பணத்தை தடுக்கும் முக்கிய மசோதாவை, ...

உத்திரபிரதேச ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

Posted: 20 Mar 2015 10:05 PM PDT

train_accident_640x360உத்திரபிரதேசம், மார்ச் 21 – உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ரேபரேலி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் ...

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!

Posted: 20 Mar 2015 07:14 PM PDT

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'புறம்போக்கு'. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் இப்படத்தை ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் நிறுவனம், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசை வாசன். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வாரத்தில் இப்படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், படத்தின் பாடல்கள் திடீரென இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையறிந்த படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக ...

ஹன்சிகா காட்டில் மழை. - தென்னகத்தின் நம்பர் ஒன்?

Posted: 20 Mar 2015 07:10 PM PDT

- விஜய்யுடன் "புலி' படத்திலும், ஜெயம்ரவியுடன் "ரோமியோ ஜூலியட்' படத்திலும், "வாலு', "வேட்டை மன்னன்', "அரண்மனை 2' படங்களிலும் நடிக்கும் ஹன்சிகா தெலுங்குப் படம் உள்பட 7 படங்களில் புக்காகி இருக்கிறார். ஹன்சிகா ஷூட்டிங்குக்காக நாடுவிட்டு நாடு ஊரு விட்டு ஊரு போனாலும் தங்கும் இடத்திலும் குளிக்கும் அறையிலும் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கிறாராம். எதுக்கு? மார்பிங் பண்ணும் மாஃபியா கும்பலுக்காகத்தான். இப்போதைக்கு நயன்தாராவைவிட அதிக படங்களை கைவசம் வைத்திருப்பதால் ஹன்சிகாவிடம் "நீங்கதான் ...

758 பயனற்ற சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல்

Posted: 20 Mar 2015 06:56 PM PDT

நாட்டில் அமலில் உள்ள 758 பயனற்ற சட்டங்களை நீக்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. காலாவதியாகி விட்ட பழமையான சட்டங்கள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி, பழமையான 35 சட்டங்களை நீக்குவதற்கு வழிவகை செய்யும் மசோதாவை மக்களவை புதன்கிழமை நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 758 பயனற்ற சட்டங்களை நீக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இவை தங்கள் ...

உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி

Posted: 20 Mar 2015 06:55 PM PDT

- உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 38 பேர் பலியாகினர். 150 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாவது: உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து, உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசிக்கு ஜனதா விரைவு ரயில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. ரேபரேலி மாவட்டத்தில் உள்ள பச்ரவண் ரயில் நிலையம் அருகே இந்த ரயில் காலை 9.30 மணியளவில் திடீரென தடம்புரண்டு ...

பாரம்பரிய புத்தாண்டு தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted: 20 Mar 2015 06:51 PM PDT

- பாரம்பரிய புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நமது நாட்டின் பாரம்பரிய குணங்களான நட்பு, ஒற்றுமை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை போன்றவற்றை வலுப்படுத்துமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: நமது பாரம்பரிய புத்தாண்டு தினத்தை, நாடு முழுவதும் சனிக்கிழமையன்று பல்வேறு பெயர்களில் கொண்டாடுகிறோம். பாரம்பரிய ...

இனிய தெலுங்கு புது வருட வாழ்த்துகள் . ---கொண்டாடும் உறவுகளுக்கு

Posted: 20 Mar 2015 06:42 PM PDT

இனிய தெலுங்கு புது வருட வாழ்த்துகள் . --கொண்டாடும் உறவுகளுக்கு  தெலுங்கு புத்தாண்டை'யுகாதி' என்று குறிப்பிடுவர். 'யுகாதி' என்றால் 'ஆண்டின் தொடக்கம்'. 'யுக்மம்' என்ற சொல்லில் இருந்து இது பிறந்தது. இதற்கு 'யோகம்' அல்லது 'இணைப்பு' என்ற பொருள் உண்டு. மேஷ ராசியில் சூரியனும், சந்திரனும் இணையும் நாளே, தெலுங்கு புத்தாண்டின் துவக்க நாளாக உள்ளது. இன்று தேவுபெல்லா என்ற பச்சடியை அறுசுவையுடன் தயாரித்து சூரியனுக்குப் படைப்பர். இதில் வெல்லம், வேப்பம்பூ, புளி, மிளகாய், மிளகு, உப்பு, மாங்காய் சேர்க்கப்பட்டிருக்கும். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™