Tamil News | Online Tamil News |
- அரசு பணியில் நேர்மையாக பணி செய்பவர்களுக்கு மிரட்டல் தொடாகிறது: அதிகாரி தற்கொலையை தொடர்ந்து பெண் நீதிபதி மீது தாக்கு
- உஸ்... அப்பாடா... பேச விட்டாங்களே...! அ.தி.மு.க.,வை ஆதரித்த கனிமொழி
- பொதுத்தேர்வில் காப்பியடிக்க பெற்றோர் உதவி
- நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள மாநிலங்களுக்கு பணம் கொட்டும்: 30 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி கிடைக்கும்
- சகாயத்திற்கு மீண்டும் கொலை மிரட்டல்
- இந்திய முஸ்லிம்கள் தேச பக்தர்கள்: ராஜ்நாத் புகழாரம்
- சர்வதேச விவகாரங்களை கையாளும் தலைவர்களில் மோடிக்கு முதலிடம்
- புதன் தோறும் நெய் தீபம் ஏற்றி இளவரசி வழிபாடு: பார்த்தசாரதி கோவிலில் ரகசிய ஏற்பாடு
- 66 ஏக்கர் அரசு நிலத்தை மோசடி செய்த எட்டப்பன் வாரிசு: அரசியல் பெரும்புள்ளிகள் உதவியுடன் கைவரிசை
- நில மசோதா குறித்த விவாதத்திற்கு தயார்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு கடிதம்
| Posted: நேர்மையாக பணி செய்யும் அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்கிறது. நெல்லையில் வேளாண் அதிகாரி தற்கொலை, பெங்களூரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தற்கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாக, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பெண் நீதிபதி மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.வேதாரண்யம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருபவர், லதா, 40. நாகை மாவட்ட நீதிபதி விடுமுறை என்பதால், காலையில் வேதாரண்யத்திலும், மாலையில், நாகையிலும் லதா பணியாற்றி வந்தார். கடந்த, 18ம் தேதி, நாகை நீதிமன்றத்தில் பணிகளை முடித்து விட்டு இரவு, 8:00 மணிக்கு, வேதாரண்யத்தில் உள்ள வீட்டுக்கு, ... |
| உஸ்... அப்பாடா... பேச விட்டாங்களே...! அ.தி.மு.க.,வை ஆதரித்த கனிமொழி Posted: எதற்கெடுத்தாலும், ஒருவரையொருவர் எதிர்த்து நின்று ரகளையில் ஈடுபட்டு வந்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சி எம்.பி.,க்கள், நீண்ட இடைவெளிக்கு பின், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்த அதிசயம், ராஜ்யசபாவில் அரங்கேறியது.ராஜ்யசபாவில் தி.மு.க., வுக்கு, நான்கு எம்.பி.,க்கள் உள்ளனர். இதனால், தமிழகம் சார்ந்த பிரச்னைகள் கிளம்பும் போதெல்லாம், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள், கடுமையாக மோதிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று, நாடு முழுவதும் விவசாயிகள் படும் துயரங்கள் குறித்த விவாதம் ராஜ்யசபாவில் ... |
| பொதுத்தேர்வில் காப்பியடிக்க பெற்றோர் உதவி Posted: பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநிலத்தின், ஹாஜிப்பூர் மற்றும் வைஷாலியில் உள்ள தேர்வு மையங்களில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு, அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள், விடைகளை அளித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று காலை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன், தேர்வு அறைக்கு வந்த அதிகாரிகள், தேர்வில் காப்பி அடிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.அராரியா டி.எம்., கூறியதாவது: தேர்வு நேரத்தில், மாணவர்கள் பேசிக் ... |
| Posted: புதுடில்லி: நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டுவரும் மத்திய அரசு, அதில் கிடைக்கும் பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, மாநில அரசுகளுக்கு வழங்க முன்வந்துள்ளதால், இன்னும், 30 ஆண்டுகளுக்குள், ஆறு மாநிலங்களுக்கு, 15 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வரும் இந்த பின்னடைவு மாநிலங்களுக்கு, இந்த நிதி, உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தங்கள் இஷ்டத்திற்கு, நிலக்கரி சுரங்கங்கள் அடிமாட்டு விலைக்கு, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த சுரங்கங்களில் ... |
| சகாயத்திற்கு மீண்டும் கொலை மிரட்டல் Posted: மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து ஒன்பதாம் கட்ட விசாரணையை நேற்று துவங்கிய விசாரணை கமிஷனர் சகாயத்திற்கு, இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க, மேலும் இரு மாதங்கள் சகாயத்துக்கு ஐகோர்ட் அவகாசம் வழங்கிஉள்ளது. இதையடுத்து, ஒன்பதாம் கட்ட விசாரணையை மதுரையில், நேற்று துவக்கினார். அப்போது, கடந்த, 9ம் தேதி வந்த ஒரு கடிதத்தை, விசாரணைக் குழுவைச் சேர்ந்தோர் வழங்கினர். பெயர், முகவரி இல்லாத அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: கிரானைட் முறைகேடு குறித்து உண்மையான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யக் கூடாது. ... |
| இந்திய முஸ்லிம்கள் தேச பக்தர்கள்: ராஜ்நாத் புகழாரம் Posted: ஜெய்ப்பூர்: ''இந்திய முஸ்லிம்கள் தேச பக்தர்கள்; பழமைவாத, பயங்கரவாத கொள்கைகளுக்கு, அவர்கள் எப்போதும் விலை போக மாட்டார்கள்; பயங்கரவாதம் என்பது, இந்திய முஸ்லிம்களின் ரத்தத்தில் இல்லாதது,'' என, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,வை சேர்ந்த, ராஜ்நாத் சிங் கூறினார்.மூன்று நாள்: பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில், மூன்று நாள், பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு துவங்கியுள்ளது; மாநாட்டை துவக்கி, ராஜ்நாத் சிங் பேசியதாவது: மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய, ஐ.எஸ்.ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்பில், ... |
| சர்வதேச விவகாரங்களை கையாளும் தலைவர்களில் மோடிக்கு முதலிடம் Posted: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களை கையாள்வதில் திறமையான தலைவர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களை கையாள்வதில், கைதேர்ந்த தலைவர்கள் யார் என்பதை தேர்வு செய்வதற்காக, சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, கடந்த ஆண்டில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் ஆப்ரிக்கா, இந்தியா, ரஷ்யா, பிரேசில் மற்றும் சீனா என, ஒன்பது நாடுகளில் ஆய்வு நடத்தியது. மொத்தம், 4,500 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பிரதமர் நரேந்திர மோடி ... |
| புதன் தோறும் நெய் தீபம் ஏற்றி இளவரசி வழிபாடு: பார்த்தசாரதி கோவிலில் ரகசிய ஏற்பாடு Posted: சசிகலாவின் அண்ணியும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவருமான, இளவரசி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், புதன் கிழமை தோறும், நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி வருகிறார்.ரகசியம்: இதற்காக, புதன் தோறும் இரவில், தன் மகளுடன் கோவிலுக்கு வரும் இளவரசிக்கு, கோவில் நிர்வாகத்தார் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவதுடன், அவரது வருகை பற்றிய விஷயத்தையும் ரகசியமாக வைத்து உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றவர்களில், இளவரசியும் ஒருவர். ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவின் அண்ணன் மனைவியான ... |
| 66 ஏக்கர் அரசு நிலத்தை மோசடி செய்த எட்டப்பன் வாரிசு: அரசியல் பெரும்புள்ளிகள் உதவியுடன் கைவரிசை Posted: அரசுக்கு சொந்தமான, 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள, 66 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த, எட்டப்பன் வாரிசுக்கு, அரசியல் பெரும் புள்ளிகள் உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர், சிவசூரியன். அவர், சில மாதங்களுக்கு முன், முதல்வர் தனிப்பிரிவில் அளித்த புகார் மனுவில்,' காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிக்கரணையில், அரசுக்கு சொந்தமான, 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள, சர்வே எண்:657/1 கொண்ட, 66 ஏக்கர், 70 சென்ட் நிலத்தை, மர்ம நபர்கள் அபகரித்து விட்டனர்' என, தெரிவித்து இருந்தார். இது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, ... |
| நில மசோதா குறித்த விவாதத்திற்கு தயார்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு கடிதம் Posted: புதுடில்லி: 'நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து சந்தேகம் இருந்தால், அது பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது' என தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கடிதம் எழுதியுள்ளார்.நிலம் கையகப்படுத்தும் மசோதா, இந்த மாதம் 11ல், லோக்சபாவில் நிறைவேறியுள்ள நிலையில், ஆளும் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத ராஜ்யசபாவில், அந்த மசோதா கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. என்ன ஆனாலும், அந்த மசோதாவை நிறைவேற்ற விட மாட்டோம் என, காங்கிரஸ் தலைமையில், 14 கட்சிகள் வரிந்து கட்டி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 20,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |