Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உலக சிட்டுக்குருவி தினம்: மார்ச் 20

Posted: 19 Mar 2015 02:35 PM PDT

சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும். சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ. நீளமுள்ளவை. ...

அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 19 Mar 2015 02:23 PM PDT

வானிலிருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்கை தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி இந்தியாவின் காட்சிக்கு அப்பால் உள்ள இலக்கை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட, வானிலிருந்து ஏவி வானில் உள்ள இலக்கை தாக்கும் அஸ்திரா ஏவுகணை இன்று 2வது நாளாக வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ள இந்த ஏவுகணை ஒடிசா கடற்கரை பகுதியான பாலசோரில்(சந்திபூர்) உள்ள ஒருங்கிணைந்த சோதனை வட்டத்திற்குள் சோதித்து பார்க்கப்பட்டது. இன்றைய சோதனையின் போது சுகோய்-30 போர் ...

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

Posted: 19 Mar 2015 02:19 PM PDT

லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா...ஓஹோ...இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான ...

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

Posted: 19 Mar 2015 01:49 PM PDT

நன்றி: சக்திவிகடன்

புகை உயிருக்கு பகை

Posted: 19 Mar 2015 12:31 PM PDT

அமெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பு சார்பில் சுமார் பத்து லட்சம் பேரின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. இதில் புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது. அமெரிக்க துணை கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால் ஏற்படும் நோய்களாலும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. உலக ஐக்கிய சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம் என்று கண்டறியப்பட்டுள்ளது. புகை ...

சமூக வலைத் தளங்களில் பெண்களின் படங்களை பரப்புவோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

Posted: 19 Mar 2015 12:29 PM PDT

சமூக வலைத் தளங்களில் உள்நோக்கத்துடன் பெண்களின் படங்களை பரப்புவோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை சமூக வலைதளங்களில் பெண்களின் படத்தை உள் நோக்கத்துடன் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர். சென்னையில் பெண் போலீஸ் ஒருவருடன் காவல் உதவி ஆணையர் செல்போனில் பேசிய உரையாடல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த உதவி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ...

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளனர்

Posted: 19 Mar 2015 12:25 PM PDT

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் 'ஐகியூ' அளவு மிகவும் அதிகமாக உள்ளது என்றும், அவர்கள் அதிகமான அளவு வருமானம் ஈட்டுகின்றனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதியஆய்வானது சுமார் 3,500 பிறந்த குழந்தைகளிடம், 30 வருடம் நடத்தப்பட்டதில், ஒருவருடம் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையானது, நீண்டகாலம் பலன்களை பெறுகிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு குழுவில் இடம்பெற்று இருந்த பிரேசில் நாட்டு பல்கலைக்கழகத்தின் தலைமை ஆசிரியர் டாக்டர் பெர்னார்டோ லெஸ்சா ஹோர்டா பேசுகையில், 'நீண்டநாட்கள் ...

குற்றவாளிக்கு எதற்கு பேனர்? - கொதிக்கும் டிராஃபிக் ராமசாமி!

Posted: 19 Mar 2015 12:23 PM PDT

சென்னை: வீட்டை விட்டு வெளியே வர முடியாத குற்றவாளிக்கு எதற்கு பேனர்? என்று டிராஃபிக் ராமசாமி கொதிப்புடன் கேள்வி எழுப்பி உள்ளார். முழு பேட்டியின் வீடியோ கீழே உள்ளது. கடந்த வாரம் டிராஃபிக் ராமசாமி, சாலையில் நின்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, அவ்வழியாக வந்த ஒருவருடன் தகராறில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் அதிகாலையிலேயே வீட்டிற்குள் புகுந்து டிராஃபிக் ராமசாமியை கைது செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக டிராஃபிக் ராமசாமி, ...

டிராஃபிக் ராமசாமி

Posted: 19 Mar 2015 12:18 PM PDT

1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன். அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் ...

இரண்டாவது பெரிய கோள் சனி!

Posted: 19 Mar 2015 11:58 AM PDT

சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 29 வருடங்களை எடுத்துக் கொள்கிறது. தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. வியாழனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக்கிரகத்திற்குள் சரியாக 763 பூமிகளை அடக்கி விடலாம் என்றாலும், சனியின் எடை, பூமியின் எடையை விட 95 மடங்கு தான் அதிகம். சனி ஒரு வாயுக்கோளம். அதில் கடினமான உட்பகுதி மிகச்சிறியது. சனியின் ...

பெண்கள் ஆபாச செல்பி எடுத்தால் 5 ஆண்டு சிறை!

Posted: 19 Mar 2015 11:50 AM PDT

பாங்காக்: பெண்கள் ஆபாச செல்பி எடுத்து பரவவிட்டால் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது செல்போனில் 'செல்பி' எடுப்பது பிரபலமாகி விட்டது. அதில் எடுக்கப்படும் போட்டோக்களை மற்ற செல்போன்களுக்கு அனுப்பி பரவசம் அடைகின்றனர் செல்போன் வைத்திருப்போர். அறிமுகம் இல்லாத நபர்களின் போன்களுக்கும் சென்று விடுவது பல நேரங்களில் செல்பி எடுத்தவர்க்கு சிக்கலை உருவாக்கிவிடுகிறது. சில நேரங்களில் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து மரணத்தை தழுவியவர்களும் ...

வாட்ஸ் அப் ஆடியோ: 'ஹேர் ஆயில்... கஸ்டமர் ஃபீல் ஆயிட்டாப்ல...!'

Posted: 19 Mar 2015 11:48 AM PDT

காவல்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் என்றாலே, இப்போதைக்கு அலர்ஜியாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக உதவி கமிஷனர், போக்குவரத்துப்பிரிவு துணை கமிஷனர் ஆடியோ காவல்துறை வட்டாரத்தையே கலங்கடித்து விட்டது. இப்போது வாட்ஸ் அப்பில் வலம் வரும் லேட்டஸ்ட் ஆடியோ இது! முடி கொட்டும் பிரச்னைக்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் ஆயிலை தேய்த்து எல்லா முடியையும் பறி கொடுத்த வாடிக்கையாளரும், சம்பந்தப்பட்ட ஆயில் கம்பெனியின் விற்பனை பிரதிநிதியும் பேசுவதாக இடம்பெற்றுள்ள அந்த உரையாடல் இங்கே... கம்பெனியின் பெண் ...

புல் வெட்டு... களி சோறு... குடிக்க சாக்கடை நீர்: கதறவைத்த வெளிநாட்டு வேலை!

Posted: 19 Mar 2015 11:40 AM PDT

வட மாநிலத்தவர் வேலை வாய்ப்பை தேடி இங்கு வந்து கொண்டிருக்கும்போது, வெளிநாட்டு மோகத்தில் நம் ஆட்கள் கூலி வேலை செய்ய வெளிநாடுகளுக்கு போவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. டெக்னாலஜி, கம்யூனிகேஷன் எவ்வளவுதான் வளர்ந்தாலும், வெளிநாட்டு வேலைக்கு சென்ற இடத்தில் அல்லல்படுவோரில் தமிழர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. சீட்டிங் ஏஜெண்டுகளால் விசிட்டிங் விசாவில் போய் மாட்டிக்கொள்வதும், போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வெளிநாட்டு சிறைகளில் காலம் கழிப்பதும், சொந்த ஊருடன் எந்த தொடர்புமில்லாமல் ...

ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15

Posted: 19 Mar 2015 09:28 AM PDT

எப்போதும் மகிழ்ச்சியாகத் துள்ளி விளையாடும் தன் மகள் அபிராமி, சோர்வாக அமர்ந்துள்ளதைக் கண்டு வியந்த அவள் அமமா, "ஏண்டா செல்லம்? என்னாச்சு என் அபிக்குட்டிக்கு?' "உண்மை பேசினா தப்பா மம்மி?' என்றாள் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மகள் அபி. "ஏன்? பள்ளியில் என்ன நடந்தது?' என வினவினாள் அவள். மகள் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியுற்றவள், பள்ளி முதல்வரைச் சந்திக்க முடிவு செய்தாள். மறுநாள் காலை... "எஸ்.. வாட்ஸ் யுவர் பிராப்ளம்?' பள்ளி முதல்வர். முதல்நாள் வகுப்பில் நடந்ததைக் ...

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

Posted: 19 Mar 2015 09:22 AM PDT

கேள்வி : ''எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தார். இப்போது அவர் சொன்ன கெடுவுக்கு அருகில் நாம் இருக்கிறோம். இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' சத்குரு : ''புத்தர் சொல்லி ஏறக்குறைய 2,500 ஆண்டுகள் ஆகின்றன. நாம், இந்த நேரத்தில் இங்கே இருப்பது ஏதோ தற்செயலானது அல்ல. உலகின் அனைத்துக் கலாசாரங்களிலும், குறிப்பாக இந்தக் கலாசாரத்திலும், அடுத்த 200 வருடங்களில் ஆன்மீக நிலையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் நடக்கும். ...

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னன் ரகுவரன் - 7-வது நினைவு நாள்

Posted: 19 Mar 2015 09:09 AM PDT

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னன் ரகுவரனின் 7-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் மறைந்த இந்த தினத்தில் அவரைப் பற்றிய நினைவாக இந்த சிறப்பு கட்டுரையை வெளியிடுவதில் மாலைமலர்.காம் பெருமை கொள்கிறது. கடவுளின் தேசத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கலையுலகில் மிகப் பிரகாசமாக வருவார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்து ரசிகர்களை கவர்ந்து தன்னிகரற்று விளங்கியவர் நடிகர் ரகுவரன். ஏழாவது மனிதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவரின் சாதனை பயணம், 1986 ...

அரையிறுதியில் நுழைந்தது இந்தியா, பச்சை சட்டை கிழிந்தது!

Posted: 19 Mar 2015 05:06 AM PDT

உலகக் கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. . உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக ...

காக்கைச் சிறகினிலே

Posted: 19 Mar 2015 05:01 AM PDT

பறந்து வந்த காக்கைச் சிறகினிலே காலம் சொன்ன நியதியை கேளுங்கள். மண்ணில் புதைந்த வேர் உண்ணாத கனிகளை, கள்வன் திருடி உண்கிறான். படித்து பட்டம் பெற்ற பட்டதாரி அரசியல் வாதியின் பின்னால் கைகட்டிநிற்கின்றான். காதல் என்ற தூய வார்த்தை இன்று படுக்கையறைக்கான முத்திரையாகிவிட்டது. சட்டமெனும் தர்மதேவதையின் இல்லத்தில் அலிபாபாக்களும் நாற்பது திருடர்களும் இறங்கிவிட்டார்கள். மாலைனிலா உலகிற்கு ஒளி கொடுக்கும், ஏழைவீடென்றால் ஒளிகொடுக்க மறுத்திடுமோ? போராடி சுதந்திரம் பெற்றவர் சிலையினிலே ...

ஸ்ட்ரெய்ட்டா செமி பைனல்சே ஆடவிட்டுடுங்கடா இந்தியாவ...

Posted: 19 Mar 2015 04:40 AM PDT

ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பெற்றோர்களால் மகன்களைஅடிக்க உடியாது என்ற நிலைமை வரும் போது மருமகள்களுக்கு திருமணம் என்கிற போர்வையில் தாரை வார்த்துக் கொடுத்துடறாங்க போல...! - ஷங்கர் கார்த்தி - ----------------------------------------- - அற்ப மானிடப் பதரே என்றொரு வாக்கியப் பிரயோகம் இருக்கிறது. இரண்டு வார்த்தைகளை வீண்டித்திருக்கிறார்கள்..! - சுரேஷ் - ------------------------------------------- - பாகிஸ்தான் பச்சை, சவுத் ஆப்ரிக்கா பச்சை, அயர்லாந்து பச்சை, அடுத்து பங்களாதேஷ் ...

கணித புலிக்குட்டி..!!

Posted: 19 Mar 2015 03:54 AM PDT

- " அப்பா கோகுல் Cheating பண்றான்பா..!! " " இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்…!! " நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்டு இருந்ததுக… ( ஆஹா.. பஞ்சாயத்து தலைவருக்கு மறுபடியும் வேலையா…?!! ) " டேய்.. டேய்… நிறுத்துங்கடா.. என்னடா உங்க பிரச்னை..?! " சூர்யா ஆரம்பிச்சான்… " அப்பா.. மேத்ஸ் எக்ஸாம்ல ஜாஸ்தி மார்க் எடுக்கறவங்களுக்கு தோத்தவங்க உண்டியல் இருந்து பணம் எடுத்து Dairy Milk வாங்கி தரணும்னு " போட்டி வெச்சோம்லப்பா…. ( ஹி., ஹி., ஹி.. ...

அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ !

Posted: 19 Mar 2015 01:51 AM PDT

அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ: இன்ஸ்பெக்டரை `காய்ச்சும்` பெண் போலீஸ் அதிகாரி! சென்னை: இன்ஸ்பெக்டரை போனில் காய்ச்சி எடுக்கும் பெண் போலீஸ் உயர் அதிகாரியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போலீசார் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 15ஆம் தேதி, சென்னை உதவி கமிஷனராக இருந்த ஒரு அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றி வந்த, பெண் காவலரிடம் போன் மூலம், அத்துமீறும் ஆடியோ 'வாட்ஸ்-அப்'பில் பரவி போலீசாரை கதிகலங்க வைத்தது. இது தொடர்பாக ...

காதல் கவிதை...!!

Posted: 18 Mar 2015 09:17 PM PDT

அதிருஷ்டசாலிகள்…!!
*
என் சவ ஊர்வலத்தைப்
பார்த்து அழுவதற்கு
நீயில்லை.
உன் சவ ஊர்வலத்தைப்
பார்த்து நான் அழுததை
நீ பார்க்கவில்லை.
நாம் எவ்வளவு
அதிருஷ்டசாலிகள் பார்…!!
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™