Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தார் முதல்வர் மம்தா

Posted:

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நாடியா மாவட்டத்தில், கான்வென்ட் பள்ளியில் இருந்த, 71 வயது கன்னியாஸ்திரி, சமீபத்தில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த, மேற்கு வங்க போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில், 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கன்னியாஸ்திரி ...

இந்திரா கொலையாளிகளை கவுரவிக்கும் காலண்டரால் பிரச்னை

Posted:

புதுடில்லி: முன்னாள் பிரதமர், காங்கிரசை சேர்ந்த, இந்திரா, ராணுவ முன்னாள் தளபதி, ஏ.எஸ்.வைத்யா ஆகியோரை படுகொலை செய்த சீக்கிய கொலையாளிகளின் நினைவு தினங்களை உள்ளடக்கிய, 'நானாக்சாஹி' காலண்டரை, சீக்கிய அமைப்பு வெளியிட்டுள்ளதற்கு, பார்லிமென்டில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது.சிரோன்மணி அகாலி தளம் கட்சியுடன், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்துள்ள பஞ்சாப் மாநில சீக்கிய மத அமைப்பு வெளியிட்டுள்ள காலண்டரில், சீக்கிய கொலையாளிகளின் இறந்த நாட்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய செயல், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரான செயல் என, பார்லிமென்டின் இரு ...

தடம் மாறும் பயணம்: குற்ற வழக்குகளில் கல்லூரி மாணவர்கள் : கோவையை அதிர வைக்கும் சமூக மாற்றம்!

Posted:

கோவை: சமீபகாலமாக, திருட்டு, விபசாரம் போன்ற குற்ற வழக்குகளில், கல்லூரி மாணவ, மாணவியர் அதிகளவில் சிக்கி வருவது, பொது மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.ஆறு பல்கலைக்கழகங்கள், மூன்று மருத்துவக் கல்லூரிகள், ஒரு சட்டக்கல்லூரி, 43 பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள், 90 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என தமிழகத்தின் தலை சிறந்த உயர் கல்வி மையமாக, கோவை மாவட்டம் பெயர் பெற்று வருகிறது. சென்னைக்கு அடுத்ததாக, அதிகளவிலான கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டிருப்பது, கோவை மாவட்டம் தான்.வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் ...

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு எப்போது?

Posted:

கொழும்பு: ''தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வகை செய்யும், '13ஏ' சட்ட திருத்த மசோதாவை, அடுத்த பார்லிமென்ட் தேர்தலுக்கு பின் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது குறித்த, '13ஏ' சட்ட திருத்த மசோதாவை, ...

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, பெண் டாக்டர் கொடூரம் : சிகிச்சை அளிக்க மறுத்து அடாவடி செய்தது அம்பலம்

Posted:

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அருகே, பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, அரசு டாக்டர், சிகிச்சை அளிக்க மறுத்து, நான்கு மணி நேரம், காக்க வைத்த கொடுமை வெளியாகி உள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன், காம கொடூரர்களால், சரளா என்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஐந்து பேர் கைது:
இது தொடர்பாக, நேற்று முன்தினம், ஜெய்சூர்யா, பிர்லா, கணேஷ், ராஜேஸ் ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அஜீத், 24, நேற்று, நாமக்கல் நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது, போலீசார் கைது செய்தனர். ...

உடன்குடி மின் திட்டம் ரத்து செய்தது ஏன்: கருணாநிதி

Posted:

சென்னை: 'உடன்குடி மின் நிலைய கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை, தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டெண்டரை, ரத்து செய்தது குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான, பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.,) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து, 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு யூனிட்டுகள் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இந்த திட்டத்தை, முழுவதுமாக, 2012ம் ஆண்டு ரத்து ...

தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்கதவறிய ஆம் ஆத்மி அங்கீகாரம் ரத்து? தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்'

Posted:

புதுடில்லி: கடந்த லோக்சபா தேர்தலுக்கான செலவு கணக்குகளை சமர்ப்பிக்க தவறிய, ஆம் ஆத்மி உள்ளிட்ட 6 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.விதிமுறைகளின்படி, தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுடைய செலவு கணக்குகளை, 90 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்க தவறும், அரசியல் கட்சிகள், அவற்றின் அங்கீகாரம் மற்றும் சின்னம் ஆகியவற்றை இழக்க நேரிடும். அதனடிப்படையில், தேர்தல் கமிஷன், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, கேரள ...

ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மரணம்: கர்நாடகாவில் கொந்தளிப்பு: தற்கொலை செய்யப்போவதாக பெற்றோர் மிரட்டல்

Posted:

புதுடில்லி: கர்நாடகாவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவியின், மர்ம மரணம், மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்காவிட்டால், தற்கொலை செய்யப் போவதாக அவரின் குடும்பத்தினர் மிரட்டல் விடுத்து உள்ளனர்.

தற்கொலை?
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி, 35, இரண்டு நாட்களுக்கு முன், மர்மமான முறையில் இறந்தார். அவர், தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கர்நாடக ...

சோனியா, அத்வானி ஸ்மிருதி இராணி உள்ளிட்ட தலைவர்கள் கோடிக்கணக்கில் பாக்கி: தண்ணீர், மின் கட்டணம் செலுத்தாதோர் பட்டியல் 'ரிலீஸ்!'

Posted:

புதுடில்லி: டில்லியில், வி.வி.ஐ.பி.,க்கள் பகுதியில் குடியிருக்கும், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பலர், தண்ணீர், மின் கட்டணம் செலுத்தாமல், கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளது, அம்பலமாகி உள்ளது. என்.எம்.டி.சி., எனப்படும், 'நியூடெல்லி முனிசிபல் கவுன்சில்' வெளியிட்டுள்ள பட்டியலில், காங்., தலைவர் சோனியா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட, பலரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அந்த வீடுகளுக்கு மிகக்குறைந்த வாடகையே கொடுக்கின்றனர்; பெரும்பாலானோர் ...

கொதிக்கிறது பருப்பு கொள்முதல் விவகாரம்: மின்சாரத்தை தொடர்ந்து அரசுக்கு அடுத்த 'ஷாக்!'

Posted:

கடந்த மூன்று மாதங்களாகவே, தமிழகம் எங்கும் ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு இருந்து வருகிறது. மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்குள், ரேஷன் கடைகளில் பருப்பு இருப்பு தீர்ந்து விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும், தங்களிடம் போதுமான இருப்பு இல்லாததால், தேவையில், 55 சதவீதத்தை மட்டுமே கடைகளுக்கு அனுப்புவதாகக் கூறுகின்றனர். இந்த நிலைக்கு முக்கிய காரணம், கடந்த ஜனவரி மாதம் முதல், பருப்பு கொள்முதலுக்கான ஒப்பந்த புள்ளி இறுதி செய்யப்படாமல் இருந்தது தான் என, தெரிகிறது. தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜுக்கும், வாணிப கழக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™