Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நில எடுப்பு மசோதாவை எதிர்த்து தலைநகர் டில்லியில் பேரணி: ஜனாதிபதியிடம் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் மனு

Posted:

புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், 100க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நேற்று ஊர்வலமாக சென்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்தனர்.பட்ஜெட் கூட்டத் தொடருக்காக, பார்லிமென்ட் கூடியுள்ளதால், பார்லிமென்ட் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'நான்கு பேருக்கு மேல், அந்த பகுதியில் கூடக் கூடாது' என, போலீஸ் தடை விதித்துள்ளதால், ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள், ...

அனுமதியின்றி தனியாரிடம் 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: அதிக விலைக்கு வாங்கும் அவலம்

Posted:

தனியாரிடம், 3,330 மெகாவாட் மின் கொள்முதல் விலைக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி தராத நிலையில், மின் வாரியம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.விண்ணப்பம்: தமிழ்நாடு மின் வாரியம், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, தனியாரிடம் மின் கொள்முதல் செய்ய முடிவு செய்தது. இதற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு, மின் வாரியம் விண்ணப்பம் செய்தது. இதையடுத்து, 'மின் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பணிகளில், மின் வாரியம் ஈடுபடலாம். விலை குறித்து, அனுமதி பெற வேண்டும்' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ...

மொபைல் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை: ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி: கிராமப்புற கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மொபைல் போன் மூலம் அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய முறை, வரும் ஆக., 15ல், சில மாநிலங்களில் அமலாகிறது.உலகிலேயே, அதிக டாக்டர்கள் பற்றாக்குறை நிலவும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இங்குள்ள கிரமாப்புற பெண்களுக்கு, போதிய மருத்துவ விழிப்புணர்வு இல்லாததால், பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் அதிகமாக உள்ளது.போராடி...: அது போல, பிறந்த குழந்தைகள் இறப்பு வீதமும், இந்தியாவில் அதிகம். இப்பிரச்னையை சரி செய்ய, இந்திய அரசு கடுமையாக போராடி வருகிறது. எனினும், ...

குரியனிடம் வாங்கி கட்டிய அ.தி.மு.க.,

Posted:

"பெரும்பான்மை உள்ளது என்பதற்காக, மற்றவர்கள் மீது, அதிகாரம் செலுத்தலாம் என, அ.தி.மு.க., நினைத்தால், அது நடக்காது. கனிமொழி, இந்த சபையின் உறுப்பினர் என்பதை, மறந்து விடாதீர்கள்." என்று, துணைத் தலைவர் குரியன் சத்தம் போட்ட தால், ராஜ்யசபாவில் பரபரப்பு எழுந்தது.அபாயம்: ராஜ்யசபாவில் நேற்று, கனிமொழி பேசுகையில், "தமிழகத்தில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை, செயல்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இத்திட்டத்தால், மண் வளமும், நீர் வளமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழலுக்கும், பாதிப்பு ஏற்படும்," என, பேசிக் கொண்டிருந்தபோதே, அ.தி.மு.க., - ...

பா.ஜ., படுதோல்வியை சந்திக்கும்: மோடியின் தம்பி அதிரடி

Posted:

புதுடில்லி: ''மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறி விட்டது. இப்படியே இருந்தால், பீகார், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்களில், டில்லி தேர்தல் போல, படுதோல்வி தான் கிடைக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி, பிரகலாத் மோடி கூறினார்.குஜராத் மாநில நியாய விலைக்கடை சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் பிரகலாத் மோடி, டில்லி, ஜந்தர்மந்தர் பகுதியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் ...

மோதல்களை தடுக்க திட்டம்: எஸ்.ஐ., முதல் ஏ.டி.எஸ்.பி., வரை மாற்றம்?

Posted:

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் ஜாதி மோதலுக்கு முடிவு கட்ட, இரு மாவட்டங்களிலும், எஸ்.ஐ., முதல் ஏ.டி.எஸ்.பி., வரையிலான அதிகாரிகளை, மேற்கு மண்டலத்துக்கு மாற்ற, உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், இரு பிரிவினரிடையே அடிக்கடி ஏற்படும் மோதல் காரணமாக, தினமும் ஒரு கொலை அரங்கேறி வருகிறது. கடந்த ஆறு மாதங்களில், 68 கொலைகள் வரை, இம்மாவட்டங்களில் நடந்துள்ளன. கொலை சம்பவங்களால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, சாலை மறியல், பஸ் உடைப்பு, இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தம் என, தொடர் சம்பவங்கள் அரங்கேறி ...

பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு: விஜயகாந்த் மீண்டும் தீவிர முயற்சி

Posted:

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கான முயற்சிகளை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமைத்த கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க., போட்டியிட்டது. அப்போது, சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி பங்கேற்றார். அவரிடம், தமிழக பிரச்னைகள் தொடர்பான கோரிக்கைகளை, கடிதமாக விஜயகாந்த் வழங்கினார். பிரதமராக பொறுப்பேற்ற பின், இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார். தேர்தல் வெற்றிக்கு பின், ...

கட்சி தேர்தல் முறைகேடுகள்: விசாரணைக்கு ஜெ., உத்தரவு

Posted:

அ.தி.மு.க.,வில் நடந்து வரும் உட்கட்சித் தேர்தலில், சென்னையில் முறைகேடுகளும் மோதலும் அதிகமாக காணப்படுகின்றன. தேர்தல் நடத்த நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட செயலர்களுக்கும் இடையே வெடித்துள்ள மோதல் காரணமாக, இரு தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில், புதன் கிழமைக்குள் வட்ட செயலர் தேர்தலை முடித்து, பட்டியலை வழங்க வேண்டும் என, கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, சென்னையில் உள்ள மாவட்டங்களில், அவசர அவசரமாக வட்டச் செயலர்கள் தேர்வு நடந்தது. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம், நேற்று முன்தினம் இரவு, கல்யாண ...

ஜெ.,க்கு ஏழு ஆண்டு தண்டனை கேட்டேன்: தாக்குதல் குறித்து டிராபிக் ராமசாமி புது குண்டு

Posted:

''என்னை கைது செய்ததன் பின்னணியில், பலமான சதி இருக்கிறது; என்னை தாக்கியது, அ.தி.மு.க.,வினர் தான்,'' என, 'டிராபிக்' ராமசாமி அதிர்ச்சி குற்றச்சாட்டை வைக்கிறார்.அவர் அளித்த பேட்டி: உரிய அனுமதி பெறாமல், தமிழகம் முழுவதும் வைக்கப்படும் பேனர்களை அகற்ற, நான் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றமும், பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிறது; ஆனாலும், அதை யாரும் கண்டு கொள்வதில்லை. நான், அ.தி.மு.க., சார்பில் வைக்கப்படும் பேனர்களை மட்டும் கிழிப்பதாக, அவர்கள் நினைத்து தான், என்னை எதிரியாக ...

ஊட்டி மலை ரயில் வாடகைக்கு கிடைக்கும்: ரயில்வே நிர்வாகம் பரிசீலனை

Posted:

ஊட்டி: 'நீலகிரியில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், ஊட்டி மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் (சார்ட்டர் டிரெயின்), சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் திட்டம் உள்ளது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.நீலகிரியில், அடுத்த மாதம், கோடை சீசன் துவங்க உள்ளது. தினமும், காலை, 7:10 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கும், மதியம், 2:25 மணிக்கு, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும், ரயில் இயக்கப்படுகிறது. கோடை சீசனில், ஏப்.,15 முதல், ஜூன் கடைசி வரை, மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே, கோடை சிறப்பு ரயில் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், ரயில் இன்ஜின்களில், அடிக்கடி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™