Tamil News | Online Tamil News |
- தரமற்ற பொருட்களை விற்பவர்களுக்கு 'காப்பு': நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம்
- நேரடி அன்னிய முதலீட்டில் பல்வேறு முறைகேடுகள்: ஆவண திருட்டில் 'திடுக்' தகவல்கள்
- 1 கி.மீ., புல்லட் ரயில் பாதைக்கு ரூ.100 கோடி: லோக்சபாவில் சுரேஷ் பிரபு தகவல்
- சி.பி.ஐ., அதிகாரிகள் மாற்றம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
- 'இந்தியாவிற்கு பிரகாசமான எதிர்காலம்': ஐ.எம்.எப்., புகழாரம்
- தமிழக பட்ஜெட் 25ம் தேதி தாக்கல்
- வி.வி.ஐ.பி.,க்கள் பற்றிய தகவலை போலீசார் சேகரிப்பது சகஜம்: ராகுல் விவகாரத்தில் பார்லிமென்டில் ஜெட்லி விளக்கம்
- சகாயம் அலுவலகத்தை காலி செய்ய 'நோட்டீஸ்'
- நில மசோதா விவகாரம்: ஜெ.,க்கு கருணாநிதி மீண்டும் பதிலடி
- வேளாண் அதிகாரி குடும்பத்தினருக்கு திடீர் தடை
- பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும்
- எல்லை மீறி வந்தால் சுடுவோம் மீண்டும் ரணில் 'திமிர்' பேச்சு
- ஐ.ஏ.எஸ்., அதிகாரி மர்ம மரணம்: மணல் கொள்ளையர் பின்னணி
| தரமற்ற பொருட்களை விற்பவர்களுக்கு 'காப்பு': நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம் Posted: புதுடில்லி: கொடுத்த வாக்குறுதிப்படி, குடியிருப்பை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், தரமற்ற பொருட்களை தலையில் கட்டும் வியாபாரிகள் போன்றோரை, சிறையில் தள்ள, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதாவை, ஏப்., 20ம் தேதி துவங்கும், பார்லிமென்டின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம் தொடர்பாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங் கள் துறை அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது: நுகர்வோர் ... |
| நேரடி அன்னிய முதலீட்டில் பல்வேறு முறைகேடுகள்: ஆவண திருட்டில் 'திடுக்' தகவல்கள் Posted: புதுடில்லி: மத்திய நிதி அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நிதியமைச்சகத்தின் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக, கைதான நபர்களிடம், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. விமானப் போக்குவரத்து சேவையில், நேரடி அன்னிய முதலீடு, 26 சதவீதத்திலிருந்து, 49 சதவீதமாக உயர்த்தப்பட்ட போது, பல்வேறு முறைகேடுகள் ... |
| 1 கி.மீ., புல்லட் ரயில் பாதைக்கு ரூ.100 கோடி: லோக்சபாவில் சுரேஷ் பிரபு தகவல் Posted: புதுடில்லி: ''ஒரு கிலோ மீட்டருக்கு புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கு, 100 - 140 கோடி ரூபாய் வரை செலவாகும்,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.லோக்சபாவில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: புல்லட் ரயில்கள் எனப்படும், அதிவேக ரயில்களை இயக்குவதற்கு தனி பாதை அமைக்க வேண்டியது அவசியம். சாதாரண ரயில் பாதை அமைக்கும் செலவை விட, புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கு, 14 மடங்கு அதிகமாக செலவாகும். குறிப்பாக, ஒரு கி.மீ., தூரத்துக்கு புல்லட் ரயில்பாதை அமைக்க, 100 - 140 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இதன்படி, ஒட்டுமொத்தமாக, புல்லட் ரயில் பாதை காரிடார் அமைக்க, 80 ஆயிரம் ... |
| சி.பி.ஐ., அதிகாரிகள் மாற்றம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு Posted: புதுடில்லி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள் மாற்றப்படுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், பா.ஜ.,வைச் சேர்ந்த சுப்ரமணியன் சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, துவக்கத்திலிருந்தே விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகளை மாற்றும் முயற்சி நடக்கிறது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., இணை இயக்குனர் அசோக் திவாரி, கடந்த ஜனவரியில் மாற்றம் செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து, தத்தா உள்ளிட்ட ... |
| 'இந்தியாவிற்கு பிரகாசமான எதிர்காலம்': ஐ.எம்.எப்., புகழாரம் Posted: புதுடில்லி: ''உலகளவில் நிலவும், மந்தமான பொருளாதார சூழலில், இந்தியா மட்டும் தனித்து, பிரகாசமாக காட்சி அளிக்கிறது,'' என, சர்வதேச நிதியகத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே புகழ்ந்துள்ளார்.டில்லியில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று பேசியது: மத்திய அரசின் கொள்கைகள், சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவை, இந்தியாவில் நம்பிக்கையுடன் வர்த்தகம் புரிவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளன. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும். நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.2 சதவீதமாகவும், வரும் நிதியாண்டில், 7.5 சதவீதமாகவும் உயரும். ... |
| தமிழக பட்ஜெட் 25ம் தேதி தாக்கல் Posted: சென்னை: தமிழக அரசின் 2015 - 16ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 25ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 17ம் தேதி துவங்கி 23ம் தேதி முடிந்தது. அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனெனில் தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின் அவர் தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் இது தான். ஜெயலலிதா முதல்வராக இல்லாத நிலையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறுகிறதா என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி துவங்குகிறது. அன்றே ... |
| Posted: புதுடில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பற்றி, டில்லி போலீசார் விசாரணை நடத்தியது, நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்தது. அப்போது, 'ராகுலை மத்திய அரசு உளவு பார்க்கிறது' என, காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர். பதில் அளித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ''வி.வி.ஐ.பி.,க்கள் பற்றிய தகவலை போலீசார் சேகரிப்பது சகஜமே. அந்த வகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பற்றி, டில்லி போலீசார் விசாரணை நடத்தியதும், வழக்கமான நடைமுறையே. போலீசாரின் ஒளிவு மறைவற்ற செயலை, உளவு பார்ப்பதாகக் கருதக்கூடாது,'' என, விளக்கம் அளித்தார்.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் ... |
| சகாயம் அலுவலகத்தை காலி செய்ய 'நோட்டீஸ்' Posted: மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்கும் விசாரணை அதிகாரி சகாயத்தின் மதுரை அலுவலகத்தை காலி செய்யும்படி, ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் பெயரில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது. மதுரையில் உள்ள பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பூமாலை வணிக வளாகம் உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவினர், தங்கள் உற்பத்தி பொருட்களை விற்க ஏதுவாக, 32 கடைகள் இங்கு உள்ளன.வாடகை உயர்வு:ஊரக வாழ்வாதார இயக்கம், விக்கிர மங்கலம் மகளிர் கூட்டமைப்பு மூலம், வளாகம் பராமரிக்கப்படுகிறது. மாத வாடகை 300 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், 1,000 ரூபாய் வாடகை அல்லது ... |
| நில மசோதா விவகாரம்: ஜெ.,க்கு கருணாநிதி மீண்டும் பதிலடி Posted: சென்னை : நில எடுப்பு திருத்த மசோதா விவகாரம் குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.அவரது அறிக்கை:மத்திய அரசின் நில எடுப்பு திருத்த மசோதாவை, இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகளும், பா.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளும், தீவிரமாக எதிர்த்து வெளிநடப்பு செய்து உள்ளன. இந்த மசோதாவை, 2013ல் கடுமையாக எதிர்த்த அ.தி.மு.க., தற்போது வலியச் சென்று, ஆதரித்து ஓட்டளித்தது பற்றிய இரட்டை நிலையை விளக்கி, நான் கொடுத்த அறிக்கையில், 'அ.தி.மு.க., தற்போது, இந்த மசோதாவை ஆதரிக்க, ஏதோ உள்நோக்கம் தான் காரணம்' என, ... |
| வேளாண் அதிகாரி குடும்பத்தினருக்கு திடீர் தடை Posted: நெல்லை வேளாண் பொறியியல் துறையில், செயற்பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தப்பிக்க வைக்கும் நோக்கில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருவதாக எதிர்க்கட்சியினரும், இறந்து போன முத்துக்குமாரசாமியின் உறவினர்களும் குற்றஞ்சாட்டி உள்ளனர். |
| பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Posted: கொழும்பு ''இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க வகை செய்யும், 13வது சட்ட திருத்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்,'' என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு, இலங்கையில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. அண்மையில் இலங்கை சென்று, அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்திய பிரதமர் மோடி, 'தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் சமத்துவமாக, மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். 'ஒற்றுமையான, அமைதியான, ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்க, இந்தியா துணை நிற்கும்; இதற்கு, 13வது அரசியல் சாசன சட்ட திருத்த அமலாக்கம் துணை புரியும்' என்று ... |
| எல்லை மீறி வந்தால் சுடுவோம் மீண்டும் ரணில் 'திமிர்' பேச்சு Posted: கொழும்பு: 'இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி யார் வந்தாலும் கடற்படையினர் சுடுவார்கள்' என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்து உள்ளார்.'அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம்' என அண்மையில் அவர் தெரிவித்த கருத்தால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.இதையடுத்து தம் பேச்சுக்கு ரணில் விக்ரமசிங்கே பகிரங்க வருத்தம் தெரிவித்தார்.இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இலங்கை கடல் எல்லைக்குள் வரும் எந்த நாட்டினரையும் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது; இது ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்து ... |
| ஐ.ஏ.எஸ்., அதிகாரி மர்ம மரணம்: மணல் கொள்ளையர் பின்னணி Posted: பெங்களூரு: வணிக வரித்துறை கூடுதல் கமிஷனர் ரவி வீட்டில் தூக்கில் தொங்கினார். கடந்த 2009 பிரிவில் ஐ.ஏ.எஸ்., தேர்வானவர் டி.கே.ரவி, 36. நேர்மையான அதிகாரி. கோலார் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது, மணல் கொள்ளையை தடுக்க முயன்றதால் பலரின் விரோதத்துக்கு ஆளானார். அவருக்கு மிரட்டல்கள் வந்தன. இதையடுத்து அவர் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக பெங்களூருவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். பெங்களூருவில் வரி மோசடிகளை கண்டுபிடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தலைமையிலான குழு 'கோல்டன் கேட் பிராப்பர்டீஸ்', 'பெபல் பேயின்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சோதனையிட்டனர். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 17,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |