Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இணையதள விளம்பரத்துக்கு கடிவாளம் எப்போது?

Posted: 16 Mar 2015 11:52 AM PDT

இணையதளம் வந்த பிறகு மொத்த பிஸினஸ் உலகும் மாறி வருகிறது. மேலும் இணையம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதினால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்த ஆன்லைன் ஊடகங்களையே பயன்படுத்தி வருகிறார்கள். அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு தேவை இருந்தாலும் ஆன்லைன் மீடியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதுதான் சர்வதேச அளவில் கணிப்பாக இருக்கிறது. இதனால் இணையதளத்தை பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இதற்காக செய்தி ஊடகம்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. ...

1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்

Posted: 16 Mar 2015 11:51 AM PDT

நத்தையம்மா நத்தையம்மா எங்கே போகிறாய்? அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன் எத்தனை நாள் ஆகும் அத்தை வீடு செல்லவே? பத்தே நாள்தான்; வேணுமானால் பார்த்துக்கொண்டிரு! குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் இருப்பதுதான் சிறந்த குழந்தை இலக்கியம் என்பார்கள். மேற்கண்ட பாடலுக்கும் இந்த இலக்கணம் பொருந்துகிறதல்லவா? குழந்தைகளின் கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. அதேபோல், குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பது என்பது அசாத்தியமான உழைப்பைக் கோருவது. அவர்களுக்கான ...

ரூ. 30 ஆயிரத்தில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்: ஜுன் மாதம் இந்தியாவில் கிடைக்கும்

Posted: 16 Mar 2015 11:46 AM PDT

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்' வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனையாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகை தனது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின் மூலமாகவும் பிரம்மிப்பில் ஆழ்த்தி வரும் ஆப்பிள் நிறுவனம் நவீன தொழில்நுட்ப உலகின் அடுத்தகட்ட கண்டுபிடிப்பான ஸ்மார்ட் வாட்சை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கடந்த 9-ம் தேதி அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சில் போன் அழைப்புகளை ஏற்க முடியும். இமெயில் பார்க்கலாம். வைபை, புளூடூத் ...

சமையல் சந்தேகங்கள்

Posted: 16 Mar 2015 11:41 AM PDT

'சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயம் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி சத்துக்கள்தான் இருக்கின்றனவா... எந்த உணவில் எதை உபயோகித்தால் சரியாக இருக்கும்?' 'எல்லா வகை வெங்காயத்திலும் வைட்ட மின்களும் காப்பர், மெக்னீஷியம் போன்ற தாதுப்பொருட்களும் உள்ளது. அவற்றோடு நார்ச் சத்தும் உள்ளது. ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியது வெங்காயம். இது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் பல நோய்களைத் தடுக்கும். சின்ன வெங்காயத்தை சாம்பார், குழம்பு, பிஸிபேளாபாத், ...

எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம்

Posted: 16 Mar 2015 11:31 AM PDT

'வாவ்..! இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் எப்படி இருக்கும்?' என நம் எல்லோருக்குள்ளும் ஏங்குபவனே, இந்த 'எனக்குள் ஒருவன்'! 'க்ரௌவுட் ஃபண்டிங்', 'பின்நவீனத்துவ சினிமா முயற்சி' என்றெல்லாம் கன்னடத்தில் டிரெண்டிங் அடித்த 'லூசியா' மாத்திரைக்கு தமிழ் புகட்டியிருக்கிறார்கள்! அடாசு தியேட்டர் ஒன்றில் வேலைபார்க்கும் சித்தார்த், ரொம்பவே சுமார் மூஞ்சி குமார். இரவுகளில் தூக்கம் வராமல் தவிப்பவருக்கு லூசியா மாத்திரை கிடைக்கிறது. அந்த மாத்திரையைச் சாப்பிட்டால் தூக்கம் வரும்... கூடவே மனம் விரும்பும் கனவும் ...

மறந்து போன தமிழர் உணவுகள்!

Posted: 16 Mar 2015 11:19 AM PDT

ரெட் ரோஸ் வெஜிடபிள் பிரியாணி தேவையானவை: எண்ணெய் - 150 மில்லி காய்ந்த ரெட் ரோஸ் இதழ்கள் - 25 கிராம் பிரியாணி இலை - 10 கிராம் பட்டை - 15 கிராம் ஏலக்காய் - 5 கிராம்பு - 5 கிராம் சின்னவெங்ககாயம் - 180 கிராம் பச்சைமிளகாய் - 5 தயிர் - 50 மில்லி (ரைத்தாவுக்கு) மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் பாஸ்மதி அரிசி - 1 கிலோ ரோஸ் வாட்டர் - 30 மில்லி புதினா ...

சிங்கப்பூர் மீன் தலைக்கறி!

Posted: 16 Mar 2015 11:11 AM PDT

'செஃப்' தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்! ஓர் உண(ர்)வுப் பயணம் ஒவ்வொரு முறையும் தான் மேற்கொண்ட பயணங்கள், அவற்றில் ஏற்பட்ட உணர்வுகள், கற்றுக்கொண்ட ரெசிப்பிக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் டாக்டர் செஃப் தாமு, இந்த முறை பகிர்ந்துகொண்டது சிங்கப்பூர் பயணம் பற்றி. 'இன்டர்நேஷனல் குக்கிங் காம்படீஷன் சிங்கப்பூர்ல மூணு மாசத்துக்கு முன்ன நடந்தது. இந்தியாவுல இருந்து ஒரே ஜட்ஜ்... நான் மட்டும்தான். சென்னையில இருந்து சிஙக்ப்பூருக்கு மிட் நைட்ல ஃப்ளைட். அரக்க பறக்க சாப்பிடாம கிளம்பி, ஏர்போர்ட் போய் ...

ஓடும் ரயிலிலிருந்து சிறுமியை தூக்கி எறிந்த கொடூரன்!

Posted: 16 Mar 2015 11:06 AM PDT

இந்நூர்: ஓடும் ரயிலில் இருந்து 8 வயது சிறுமியை வெளியே தூக்கி எறிந்த கொடூரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசரத்தில் உள்ள ரத்லாமுக்கும்-மண்டிசோர் என்ற இடத்திற்கும் இடையே ரத்லாம்-ஆக்ரா போர்ட் ரயில் சென்று கொண்டிந்தது அப்பொது, அந்த ரயிலின் பொது வகுப்பு பெட்டியில் அமர்வதில் முகமத் தஸ்லின் (45) என்ற நபருக்கும் சக பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த முகமத் தஸ்லின், சண்டையின் இடையே 8 வயது சிறுமியை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசி ...

நேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்!

Posted: 16 Mar 2015 11:03 AM PDT

கணேஷும் ராஜனும் கல்லூரி காலத்தில் நெருங்கிய நண்பர்கள். ஆனால், படித்து முடித்தபிறகு இருவரும் இருவேறு பாதையில் சென்றுவிட்டார்கள். தினப்படி வேலைகளில் இருவருமே பிஸியாக இருக்க, பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மீண்டும் இருவரும் இணைய, சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தார்கள். கணேஷ் தன்னுடைய பைக்கில் போய் ஹோட்டலில் இறங்கினான். ராஜன் தன்னுடைய புதிய காரில் ஹோட்டலுக்கு வந்தான். கார் மட்டுமல்ல, அவன் வாங்கியிருந்த வீடு, அவன் அணிந்திருந்த ஆடை, சேர்த்திருந்த சொத்து என எல்லாமே ...

செல்பி பரபரக்கும் புது கலாசாரம்

Posted: 16 Mar 2015 10:44 AM PDT

கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி' (Selfie) எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் 'செல்பி' எடுக்கப்படுகிறது. இன்றைக்கு 'செல்பி' ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு 'டிஜிடல் புற்று நோய்' போல விரைந்து பரவுகிறது. ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன. சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும் தனது செல்பிகளுக்குக் ...

ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள்

Posted: 16 Mar 2015 10:37 AM PDT

பிரதமர்: அரசாங்கம் ஹுடுட்டை நிராகரித்ததில்லை ஆனால்…… அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை நிராகரிக்கவில்லை ஆனால், அதைச் செயல்படுத்துமுன்னர் பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். ஹுடுட்டை அதன் நோக்கங்கள் சிதைவுறாமல் அமல்படுத்துவதற்குமுன் பல கட்டுப்பாடுகளையும் விவகாரங்களையும் ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும். "ஹுடுட்டை நிராகரிப்பதற்கும் அதைச் செயல்படுத்தாமலிருப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு", என்று நஜிப் கூறினார்.

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது

Posted: 16 Mar 2015 10:33 AM PDT

மலேசிய எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை மலேசிய போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம், தனது தந்தைக்கு எதிரான அப்பீல் கோர்ட்டின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் விமர்சித்து பேசியதற்காக தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, பாராளுமன்றத்தின் உரிமையில் குறுக்கிடும் செயல் என்று அவருடைய வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார்.அன்வர் இப்ராகிம், ஓரின சேர்க்கை வழக்கில் 5 ஆண்டு ஜெயில் ...

பீர் உடலுக்கு நல்லதா?

Posted: 16 Mar 2015 10:25 AM PDT

மதுவகைகளில் ஒன்றான பீரை நிறைய பேர் மதுவகையில் சேர்ப்பதில்லை. பீரில் ஆல்கஹாலின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது உடலுக்கு கெடுதல் செய்யாது, மாறாக உடலுக்கு நல்லது செய்யும் பானம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்களும், உணவியல் வல்லுநர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதில்லை. மதுபானங்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ அத்தனையும் பீரில் உண்டு என்கிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரை, வடஇந்தியாவை சேர்ந்த சில பெண்களிடையே பீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. மிகப் பெரிய நகரங்களில் ...

புயல் மழையில் பீட்ஸா வாங்க கடைக்கு போனவன்…!

Posted: 16 Mar 2015 08:50 AM PDT

- நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..? – சும்மா இருங்க சார்.., Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!! – ————————- – உன் பேரு என்ன..? " சௌமியா " – உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? – தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க., – ——————————– – உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..? – சுவிஸ்சர்லாந்து.. – எங்கே Spelling சொல்லுங்க.. – ஐயையோ.. அப்படின்னா " கோவா " – ——————————– – ( ...

கணித புலிக்குட்டி..!!

Posted: 16 Mar 2015 08:48 AM PDT

- " அப்பா கோகுல் Cheating பண்றான்பா..!! " " இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்…!! " நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்டு இருந்ததுக… ( ஆஹா.. பஞ்சாயத்து தலைவருக்கு மறுபடியும் வேலையா…?!! ) " டேய்.. டேய்… நிறுத்துங்கடா.. என்னடா உங்க பிரச்னை..?! " சூர்யா ஆரம்பிச்சான்… " அப்பா.. மேத்ஸ் எக்ஸாம்ல ஜாஸ்தி மார்க் எடுக்கறவங்களுக்கு தோத்தவங்க உண்டியல் இருந்து பணம் எடுத்து Dairy Milk வாங்கி தரணும்னு " போட்டி வெச்சோம்லப்பா…. ( ஹி., ஹி., ஹி.. ...

அம்மாவின் அருமை

Posted: 16 Mar 2015 08:43 AM PDT

அன்று சுயநலமாய் நான் , சங்கடத்தில் நீங்கள் திமிராய் நான் , திணறிய நீங்கள் கர்வமாய் நான் , காயத்தோடு நீங்கள் சோம்பேறியாய் நான் , சோர்ந்த நீங்கள் …. - இன்று நான் காயத்தோடு சங்கடத்தில் சோர்ந்து திணறும் போது சுருக்கென்று உறைக்கிறது ! சமையலறையில் உதவிக்கு அழைக்கும் நேரம் பலவகை சாக்குபோக்கு சொல்லி நழுவியதும் ஐந்து பேருக்கு சமைக்க ஒருவர் மட்டும் போதுமே என்று வார்த்தையால் மடக்கியதும் இன்று நான் தனியாக சமையலறையில் பாத்திரங்களோடு போராடும் அந்த தருணத்தில் எட்டி பார்கிறது ...

அறுவடை

Posted: 16 Mar 2015 08:43 AM PDT

காற்றினோடு கைக்கோர்த்து செல்லும் வெண்மேகமே    கண்ணீர் சிந்த ஒன்று கூடுகிறாய் கருநிறமாகவே ! காற்றும் நகர்ந்திட கண்ணீரும் நீ சிந்திட    சிந்தும் மழைத்துளி ஒவ்வொன்றும் மண்ணை முத்தமிட ! முத்தங்கள் ஒவ்வொன்றும் முத்துகளாய் மாற    இறுகிய நெஞ்சங்கள் மகிழ்ச்சியில் ஆள ! பட்டான கதிர்கள் பட்டுபோல் ஆக    மண்ணில் புதைந்த உயிர் தலைமுறையாக எல ! நச்சுகள் அழித்து தலைமுறைகள் படர    செழிமையாய் நடந்தது இவ்வாண்டு "அறுவடை" ! ஆக்கம் பா.பிரசாந்த்

பேஷண்டுக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சா..?

Posted: 16 Mar 2015 08:41 AM PDT

- பேஷண்டுக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சா..?! – எப்பவோ தெளிஞ்சுடுச்சு, ஆபரேஷன் சக்சஸ் ஆன அதிர்ச்சியில் சர்ஜனுக்கு ஏற்பட்ட மயக்கம்தான் தெளியலே…! – —————————————— – அந்த டாக்டர் சரியான பந்தா பேர்வழி…! – எப்படி சொல்றே? – அவரோட கிளினிக்ல பத்து, பதினைஞ்சு பேரை நோயாளிகள் மாதிரி செட்டப் பண்ணி, பர்மனென்டா வெச்சிருக்காரு…! – ——————————————- துணி சோப் விளம்பரப் படங்களில் நம்ப முடியாதது அதிசயமானது எல்லாம் காமிக்கிறாங்க..? – எதை சொல்றே? – பொம்பளைங்க துணி துவைக்கிற மாதிரி காமிக்கிறாங்களே…! – —————————————- – நம்ம ...

பாண்டவர்களில் ஜோதிட நிபுணர்…

Posted: 16 Mar 2015 08:30 AM PDT

திருச்சாத்து உருண்டை என்னும் மருந்து வழங்கும் தலம்…. வைத்தீஸ்வரன் கோவில் காஞ்சி வரதராஜரிடம் மிகுந்த பக்தி கொண்ட அடியவர்…. தொட்டாச்சாரியார் பட்சிராஜர் என்று சிறப்பிக்கப்படுவது…. கருடன் பாண்டவர்களில் ஜோதிட நிபுணர்… சகாதேவன் சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் எத்தனை? பதினான்கு பிதாமகர் பீஷ்மரின் பெற்றோர்… சந்தனு, கங்கா மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்…. 64 தெய்வீகமான வடகிழக்கு திசையை …. என்று குறிப்பிடுவர். ஈசானம் அர்ஜூனனுக்குரிய கொடி… அனுமன் கொடி கண்ணனை ...

“கடை விரித்தேன்.. கொள்வாரில்லை’ என்று வருந்தியவர்…

Posted: 16 Mar 2015 08:28 AM PDT

- - தசரதருக்குப் புத்திரசாபம் கொடுத்தவன்…. ஜலபோஜன். திருநாவுக்கரசரின் இயற்பெயர்…. மருள்நீக்கியார் பிரகலாதனுக்கு தாயின் கருவிலேயே உபதேசித்தவர்…. நாரதர் விழிக்கே அருளுண்டு' என்று அம்பிகையைப் பாடியவர்… அபிராமி பட்டர் சுப்ரபாதம் என்பதன் பொருள்… நல்ல காலைவேளை கூடற்கலாப மயில் எனப்படும்அம்பிகை …. மீனாட்சி அம்மன் ஆழ்வார்களில் அமர்ந்தபடி காட்சியளிப்பவர்… நம்மாழ்வார் தட்சிணேஸ்வர காளியுடன் நேரில் பேசிய அருளாளர்… ராமகிருஷ்ண பரமஹம்சர் தாமரையின் பேரால் குறிக்கப்படும் சங்கரரின் ...

பேட்டி!

Posted: 16 Mar 2015 08:14 AM PDT

''எடுத்தவுடனே நான் வெற்றிய தொட்டுடல,'' என்று கணீர் குரலில் சொல்லி, புன்னகையுடன் நாற்காலியை முன் நகர்த்திப் போட்டு கொண்டார் ரவிபிரகாஷ். பிரபல கட்டுமான நிறுவனத்தின், எம்.டி., அவரது பிரத்யேக அறையில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். முன்னதாக, அவரை டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்து முடித்திருந்தேன். அவர் பேட்டியை பதிவு செய்ய, ரெக்கார்டரை அவர் முன் வைத்தேன். ''நான், பொதுவா தனி பேட்டிகளை விரும்பறதில்ல; அந்த நேரத்துல நிர்வாக வேலைய கவனிக்கலாமேன்னு நினைக்கிறவன். ஆனா, நீங்க நல்லா பேசி கவுத்துட்டிங்க,'' ...

கந்தசஷ்டிகவசம் யார் மீது பாடப்பட்டது?

Posted: 16 Mar 2015 08:06 AM PDT

-- ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் பாடிய தலம்…. திருச்செந்தூர் - முருக நாமத்தை எப்போதும் ஜெபித்த பெண் அடியார்….. முருகம்மையார் கந்தசஷ்டிகவசம் யார்மீது பாடப்பட்டது? சென்னிமலை முருகன் குருவாக உபதேசித்த முருகன் அருளும் தலம்… சுவாமிமலை சித்தன்வாழ்வு என அழைக்கப்படும் தலம்…. பழநி பாம்பன்சுவாமிகள் முருகன் மீது பாடிய பாடல்கள்…. 6666 முருகனை வணங்க நாலாயிரம் கண்கள் தேவை என பாடியவர்….. அருணகிரிநாதர் ஆறுபடைவீடுகளில் முதல்வீடாக திகழும் தலம்… திருப்பரங்குன்றம் சரவணன் என்பதன் ...

உறவுகள் வேண்டும்!

Posted: 16 Mar 2015 07:59 AM PDT

நீண்ட நாட்களுக்குப் பின், கடைவீதியில் தன் பழைய நண்பன் ராசுவைப் பார்த்தார் பாண்டி. ''என்ன பாண்டி எப்படி இருக்க... பாத்து ரொம்ப நாளாச்சு,'' என்று ராசு தான் முதலில் ஆரம்பித்தார். ''நல்லா இருக்கேன் ராசு, நீ எப்படி இருக்க...'' ''நானும் நல்லா இருக்கேன்; பிள்ளைங்கள்லாம் என்ன செய்யுது... உன் மூத்த மகனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டயா...'' ''இல்ல ராசு... கல்யாணப் பேச்ச எடுத்தாலே வேணாங்கிறான்; அதான், ஒரே கவலையா இருக்கு.'' ''பாத்து பாண்டி... இப்படித்தான், எங்க பக்கத்து வீட்டுப் பையன் கல்யாணம் ...

தெரிஞ்சுக்கோங்க!............வீனஸ் பிளை!

Posted: 16 Mar 2015 07:50 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

ஆமோதித்து மறுக்கும் அரிய கலை!

Posted: 16 Mar 2015 06:17 AM PDT

எவர் ஒருவரிடமும் எப்பேர்ப்பட்ட விஷயங்களையும், பலமான வாதங்களையும், எதிர்மறை கருத்துகளையும் முன்னெடுத்து வைத்து விட முடியும். ஆனால், இதற்கென்று சில அணுகுமுறைகள் உள்ளன. நீதிபதியின் முன் விரல் நீட்டிப் பேச மண்ணில் எவருக்கும் உரிமையோ, திராணியோ இல்லை. மறுப்பாரும், எதிர்ப்பாரும் இல்லாதிருக்கும் இவர்களிடம் கூட, 'கனம் நீதிபதி அவர்களே...' என ஆரம்பித்து, அவர் கடந்து வராத வழக்குகளையும், அறிந்திராத சில தீர்ப்புகளையும் ஒரு இளம் வழக்கறிஞர், தம் திறமையான அணுகுமுறையால் நீதிபதியையே கேட்க வைத்து, தம் கட்சிக்காரருக்கு ...

குழந்தையை வேண்டும் என்றே தொலைத்த பெற்றோர்!

Posted: 16 Mar 2015 06:15 AM PDT

வாடகை தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் பார்னேல் தம்பதியர், சறோ கசியா என்ற பெண்ணை, வாடகை தாயாக நியமித்து, ஒரு பெண் குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்து கொண்டிருந்த போது, குழந்தையின் மன வளர்ச்சி குறித்து தம்பதியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், குழந்தையை மருத்துவரிடம் காட்டினர். அக்குழந்தைக்கு மனநல பாதிப்பு உள்ளதை அறிந்தவர்கள், சுற்றுலா செல்வது போல், தாய்லாந்திற்கு சென்று குழந்தையை தவற விட்டு நாடு திரும்பினர். ...

கவிதை!

Posted: 16 Mar 2015 06:14 AM PDT

கனவு கண்டு காத்திருப்பதை விட ,
காலம் உணர்ந்து செயல் பட்டால்
கீழ்வானம் சிவக்கும் முன்
கின்னசிலும் இடம் பெறலாம் - நமக்கு
கேட்ட வரமும் கிடைத்திடலாம் !!!
களையான முகத்தில் கற்பனைகள்
வளர்த்து காட்சிகளை மெய்யாக்குங்கள்
வாழ்வில் இடையூரான நிகழ்வுகளை
எடுத்தெரியுங்கள் ...முன்னேற்றம்
நாம் நடக்கும் பாதையில் இல்லை ...
நம் பாதத்தில் இருக்கிறது !!!

கூடு!

Posted: 16 Mar 2015 06:06 AM PDT

கம்ப்யூட்டரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. அவனைத் தேடி மாடிக்கு வந்த உமா, அவன், 'லேப் - டாப்'யே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ''என்னத்த இப்படி சுவாரசியமா பாத்துக்கிட்டு இருக்கீங்க?'' என்று கேட்டவள், லேப் - டாப் திரையைப் பார்த்தாள். அதில் தெரிந்த படங்களைப் பார்த்ததும், ''இத எத்தனை தடவ தான் பாப்பீங்களோ...'' என அலுத்துக் கொண்டாள். ஆனால், புகைப்படங்களை பார்த்த ரகுவிற்கோ அப்பாவின் நினைவு, மனதை ஆக்கிரமித்தது. கம்ப்யூட்டர் என்றாலே, காத தூரம் ஓடும் அப்பா, தன் வாழ்வின் கடைசி இரு ...

பதவி அதிகாரம்!

Posted: 16 Mar 2015 06:02 AM PDT

வீட்டுக்கு போயி அப்பாவப் பாத்து பேசினாத்தான், மனசுக்கு அமைதி...' என்று மனசுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் குணா. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, வருவாய்த் துறையின் உயர் பதவிக்கு, நேரடி பணி நியமனம் செய்யப்பட்டிருந்தான் குணா. பணியில் சேர்ந்து, மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தது. ஆனால், அதற்குள், ஏகப்பட்ட பிரச்னைகள்.இளம் வயதில், பொறுப்புமிக்க பதவியில் அமர்த்தப்பட்டிருந்தது, அவனது கல்வி தகுதிக்கு ஏற்றதாய் இருந்தாலும், 'குருவி தலையில் சுமத்தப்பட்ட ...

படித்ததில் பிடித்தது :) --மாற்றி யோசி; பலன் கிடைக்கும்!

Posted: 16 Mar 2015 06:00 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

கவிதை

Posted: 16 Mar 2015 05:33 AM PDT

உலோக பானைகள் எல்லாம்
உருண்டோடி வந்ததனால்
மண் பானை பாத்திரம்
மறைந்த காலம் போய் ...
மறுபடியும் உன் உதவி மக்களுக்கு
வேண்டும் என மண்ணிடம் கேட்ட போது,
புதியதை பார்த்ததும் பழையதை மறந்த மானுடா !
உன் உடம்பு மட்டும் கெடவில்லை
என் உயிர்துளியும் நீங்கள்
இட்ட உரத்தால் இறந்து வெகு நாட்கள் ஆனதடா !!!
நல்லதை மட்டுமே கொடுத்து பழகிய எனக்கு
உங்களைபோல் கெட்டதை கொடுக்க
மனமும் இல்லை
மண்ணில் வளமும் இல்லை....

ரகுவம்சத்தின் குலகுருவாக இருந்தவர்

Posted: 16 Mar 2015 03:07 AM PDT

சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை… என்ற பெயரால் அழைப்பர். அனங்கன்(அங்கம் இல்லாதவன்) - - ராவணனின் தம்பிகளில் மூத்தவன்…. கும்பகர்ணன் அக்ஷன் என்பவன் யார்? ராவணனின் இரண்டாவது மகன் ராமசகாயன் என்று அழைக்கப்படுபவன்… சுக்ரீவன் ராவணனின் அழிவிற்கு விதையிட்டவள் யார்? சூர்ப்பனகை விஸ்வமித்திரரின் கட்டளையால் ராமன் யாரைக் கொன்றார்? தாடகை சீதைக்கு அசோகவனத்தில் உதவி செய்த அரக்கி… திரிஜடை இந்திரஜித்தின் தாய் … மண்டோதரி சீதையை அபகரிக்க ராவணனுடன் மாயமானாக வந்தவன்… மாரீசன் ரகுவம்சத்தின் ...

மழைத்துளியே!!!

Posted: 16 Mar 2015 02:43 AM PDT

மழைத்துளியே!!!


மண்ணில் விழுந்த
மழைத்துளியே ...
விண்ணும் மண்ணும்
சண்டையிட்டதால்
நிலமகளை விரிசலுக்குள்
விழ வைத்து விட்டாயே !
நீ எப்பொழுது வருவாய் என்று
கானக்கருக்களில்
கதவைத்திறந்து காத்திருக்கிறோம் ....

நட்பு கவிதைகள் !

Posted: 15 Mar 2015 11:47 PM PDT

மனதில் தோன்றும் எண்ணங்களே
மாசற்று தோன்றகூடாதா ?
மனிதம் என்ற புனிதத்தை
மறந்து வாழும் மனிதர்களே ,
மாசுபட்ட எண்ணங்களை
துறந்து வாழப்பழகுங்கள் ...
நாட்டை சுத்தப்படுத்தும் முன்
நம் நாவை சுத்திகரிக்க வேண்டும் ...
நாட்களை கடத்தி வந்தால்
நாடும் வீடும் நலமாக இராது !
நல்லனவற்றை நினைப்போம்
நல்லதையே செய்வோம்
நட்பாக இருப்போம் !!!

யாழ்ப்பாணத்தில் தமிழர்களை நெகிழ வைத்த மோடி! (வீடியோ)

Posted: 15 Mar 2015 11:04 PM PDT

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்த தமிழர்களிடம் சகஜமாக பேசியதோடு, குழந்தைகளையும் அரவணைத்தது தமிழர்களை நெகிழ வைத்தது. யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவுடன் மதிய போசன விருத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் ...

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Posted: 15 Mar 2015 10:54 PM PDT

நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர் வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா, தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது. கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.   ஒரு கோதுமை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™