Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரயில்களில் திருடர் ராஜ்யம்: பீதியில் பயணிகள்

Posted:

புதுடில்லி : ரயில் பயணிகளின் உடைமைகள் திருடப்படும் சம்பவங்கள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. எனினும், இதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக, ரயில்வே அதிகாரிகள் மழுப்பலாகபதிலளித்து உள்ளனர். கோடிக்கணக்கான மக்களின், மிக முக்கிய போக்குவரத்து சாதனமான ரயில்களில், பயணிகளின் உடைமைகள் களவு போவது அதிகரித்து உள்ளது. செயின் பறிப்பு, கொள்ளை தவிர, திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, 2012ல், 5,174 திருட்டுச் ...

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் மாஜி அமைச்சரின் பி.ஏ., பரபரப்பு வாக்குமூலம்

Posted:

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கி இருக்கும், முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், பல விஷயங்களை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நெல்லையில் வேளாண் பொறியியல் துறையில் செயற் பொறியாளராக பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி. இவர், வேளாண் பொறியியல் துறையில், காலியாக இருந்த ஏழு டிரைவர் பணியிடங்களுக்கு, கலெக்டர் ஒப்புதலைப் பெற்று, ஆட்களை நியமித்தார்.இந்த விவகாரத்தில், ஆளுங்கட்சியின் உள்ளூர் பிரமுகர்களும், அமைச்சராக இருந்த அக்ரியின் உதவியாளர்களும் கொடுத்த நெருக்கடியால் ...

நில மசோதாவை ஆதரித்ததில் இரட்டை நிலை இல்லை: கருணாநிதிக்கு ஜெ., பதில்

Posted:

சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின், நேற்றைய அறிக்கை:பா.ஜ., அரசால் கொண்டு வரப்பட்ட, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, அ.தி.மு.க., ஆதரித்ததற்கு, கற்பனை காரணங்களை தேடி, அற்பமான அறிக்கையை வெளியிட்டு உள்ளார், கருணாநிதி.தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் குறித்து, கருணாநிதி கூறியிருப்பது சரியல்ல. தனியார் கம்பெனிகளுக்கு, தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படுவதில்லை. எனவே, இதனால், விவசாயிகள் யாரும் எந்தவித பாதிப்பிற்கும் ஆளாக மாட்டார்கள்.கடந்த 2013ல், லோக்சபாவில் பேசும் போது, 'தனியார் நிறுவனங்களுக்காக, நில ...

காந்தி பிறந்த நாளில் விடுமுறை 'கட்'?திடீர் 'பல்டி' அடித்தார் முதல்வர் பார்சேகர்

Posted:

பனாஜி: மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்., 2ம் தேதியை, அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய, கோவா மாநில அரசின் செயல், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில், முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சியில் உள்ளது. ஆண்டு தோறும் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான விடுமுறை தினப் பட்டியலை மாநில அரசு வெளியிடுவது வழக்கம்.இதில், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்த நாள், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய தினங்கள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில், லட்சுமிகாந்த் தலைமையிலான கோவா அரசு வெளியிட்டுள்ள விடுமுறை ...

பொருளாதாரம், சாலை, சுகாதாரம் போன்ற துறைகளில், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் 'டாப்' மாநிலம்

Posted:

புதுடில்லி: 'கல்வியை தவிர, பொருளாதாரம், சாலை, சுகாதாரம் போன்ற துறைகளில், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது' என, இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான, அசோசெம் பாராட்டுதெரிவித்து உள்ளது.இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பான, அசோசெம் தலைவர் ராணா கபூர் கூறியதாவது:கடந்த 2009 - 11 மற்றும் 2011 - 14 ஆகிய ஆண்டுகளில், கல்வி, சுகாதாரம், மின்சாரம், தொழில், சாலை, பொருளாதாரம் உள்ளிட்ட ஒன்பது துறைகளில், சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் பட்டியல் தயாராகி உள்ளது. அசோசெம் குழு, பல்வேறு துறைகளிலும் ஆய்வு நடத்தி, இந்த ...

கேரள அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை?

Posted:

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொண்ட விதம், அரசியலமைப்பு சட்டத்தின், 356வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்குமாறு, ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும் வகையில் இருந்ததாக, மாநில கவர்னர் சதாசிவம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கவர்னரின் இந்த செயல், மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட் தாக்கல்:
கேரளாவில், காங்., முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, சமீபத்தில் மாநில நிதியமைச்சர் மணி தாக்கல் செய்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ...

'லோக்சபா தேர்தலின்போது, தனியார் விமானத்தில் சென்றது ஏன்?': பிரதமர் மோடி விளக்கம்

Posted:

பிரதமர் நரேந்திர மோடி பற்றிய புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்: தனியார் விமானத்தில் பிரசாரத்துக்கு சென்றதற்கும் விளக்கம்புதுடில்லி: 'லோக்சபா தேர்தலின்போது, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சென்றது ஏன்' என்பது உட்பட, பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய பல முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ள புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் லான்ஸ் பிரைஸ். கடந்த லோக்சபா தேர்தலின்போது, நரேந்திர மோடி பிரசாரம் செய்தபோது, அவருடன் சென்று, முக்கியமான தகவல்களை திரட்டினார். மோடியிடம் ...

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் விரைவில் மாற்றம்: பொய் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

Posted:

புதுடில்லி: வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, பொய் புகார் அளிக்கும் பெண்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், வரதட்சணை வழக்குகளில், இரு தரப்பினரும் சமரச தீர்வு காண்பதை அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை, பெண்களில் சிலர் தவறாக பயன்படுத்துவதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. அதாவது, தங்களுக்கு பிடிக்காத கணவரையும், அவரின் குடும்பத்தினரையும் பழிவாங்க, இந்த சட்ட விதிகளில், தங்களுக்கு சாதகமான பிரிவுகளை பயன்படுத்தி, ...

சுப்பிரமணியன் சாமிக்கு தடை: அசாம் அரசு பரிசீலனை

Posted:

கவுகாத்தி: சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட சுப்பிரமணியன் சாமிக்கு, அசாமில் நுழைய தடை விதிக்கப்படும் என, அம்மாநில முதல்வர் தருண் கோகோய் எச்சரித்து உள்ளார். கடந்த வாரம், அசாமில் சுப்பிரமணியன் சாமி பேசிய போது, ''மசூதிகளும், தேவாலயங்களும் பிரார்த்தனை செய்வதற்காக கூடும் கட்டடங்கள் என்பதால், அவற்றை இடிக்கலாம்; சவூதி அரேபியாவில் கூட மசூதிகள் இடிக்கப்படுகின்றன; ஆனால், கோவில்களில் தெய்வங்கள் குடியிருப்பதால், அவற்றை இடிக்கக் கூடாது,'' என்றார்.மேலும், ''நில எல்லை ஒப்பந்தப்படி, அசாம் எல்லையில் ஒரு பகுதியை, வங்கதேசத்திற்கு வழங்குவதில் தவறில்லை; இந்த ...

மத்திய அரசின் 'சுகன்யா சம்ருதி' திட்டத்திற்கு வரவேற்பு: 1.80 லட்சம் கணக்குகள் துவங்கி சாதனை

Posted:

புதுடில்லி: பெண் குழந்தைகளின் நலனுக்காக, மத்திய அரசின் சார்பில், ஜனவரியில் துவங்கப்பட்ட, 'சுகன்யா சம்ருதி' திட்டத்தின் கீழ், இரு மாதங்களில், 1.80 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக, ஜனவரி 22ல் பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டத்தை துவங்கி வைத்தார். 'சுகன்யா சம்ருதி' எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் வைப்புக் கணக்கு துவங்கி, அதில் பணத்தை சேமிக்க முடியும்.அதிகபட்சமாக...:திட்டம் துவங்கிய இரு மாதங்களில், நாடு முழுவதும், 1.80 லட்சம் ...

பிரதமரின் பிரசல்ஸ் பயணம் ரத்து

Posted:

புதுடில்லி:கேரள மீனவர்கள் கொலை வழக்கு தொடர்பாக, ஐரோப்பிய கூட்டமைப்பின் யோசனையை இந்தியா ஏற்காததால், பிரதமர் மோடியின், பிரசல்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, வரும் ஏப்ரல் மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கு செல்லும் அவர், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தலைநகரான, பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகருக்கு செல்வதை ரத்து செய்துள்ளார்.இதன் பின்னணியில், கடந்த, 2012ம் ஆண்டு கேரள மீனவர்கள் இருவரை, இரண்டு இத்தாலிய மாலுமிகள் சுட்டுக் கொன்ற வழக்கு தான் காரணம் என்று கூறப்படுகிறது.இந்த மாலுமிகள் மீதான வழக்கை சுப்ரீம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™