Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நடிகர் சைப் அலி கானின் பத்ம ஸ்ரீ விருது பறிபோகிறது?

Posted: 15 Mar 2015 02:30 PM PDT

பாலிவுட்டின் பிரபல கதாநாயகனாக இருக்கும் சைப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கரினா கபூரின் கணவரான சைப் அலி கான் மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த ஆண்டு தகராறில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. இதை தொடர்ந்து மும்பை கோர்ட்டில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து அவருக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப்பெற வேண்டும் என பத்ம விருது கமிட்டிக்கு சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அனுப்பினார். இது தொடர்பாக எந்த பதிலும் ...

வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்

Posted: 15 Mar 2015 02:12 PM PDT

யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மோடி, இந்தியா கட்டிக் கொடுத்த 27 ஆயிரம் வீடுகளை இலங்கை தமிழர்களுக்கு வழங்கினார். 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இலங்கை சென்றார். 2–வது நாள் சுற்றுப்பயணம் அன்று கொழும்பு நகரில் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவை சந்தித்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் ...

2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை

Posted: 15 Mar 2015 01:46 PM PDT

சென்னை - அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் தமிழ் நாட்டில் 10 இடங்களில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.இந்த மருத்துவ முகாம்களில் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முகாம்களிலும் 16000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரத்தில் கடந்த 6–ந்தேதி அன்று நடைபெற்ற மருத்துவ ...

ராஜதந்திரம் - திரை விமர்சனம்

Posted: 15 Mar 2015 01:42 PM PDT

இப்படித்தான் திருடப்போகிறோம் என்று நகைக் கடை உரிமையாளரிடம் வரைபடம் வரைந்து காட்டிவிட்டுத் தங்களின் வேலையைத் தொடங்கும் மூன்று தந்திரக்கார இளைஞர்கள் ஆடும் களவாட்டம்தான் இந்த 'ராஜதந்திரம்'. தர்மராஜாவின் (ஆடுகளம் நரேன்) சுக்ரா ஃபைனான்ஸ் திவாலாகி மக்கள் கொதித்து ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியோடு தொடங்குகிறது படம். சிறை செல்லும் தர்மராஜா என்ன ஆகிறார் என்ற கேள்வியை அப்படியே விட்டுவிட்டு மூன்று இளைஞர்களின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புகிறார் இயக்குநர் ஏ.ஜி. அமித். அர்ஜூன் (வீரா) தன் இரண்டு நண்பர்களுடன் ...

அரியானாவில் பசுக்களை கொன்றால் 10 ஆண்டு ஜெயில்

Posted: 15 Mar 2015 01:40 PM PDT

சண்டிகர் - அரியானாவில் பசுக்களை கொன்றால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரியானா சட்டசபையில் பசுக்களை பாதுகாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அரியானாவில் பசுக்களை வதை செய்வது, கொல்வது, இறைச்சிக்காக வெட்டுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்த சட்டம் பற்ரி மாநில கால்நடை துறை மந்திரி ஓம்பிரகாஷ் தன்கர் கூறுகையில், பசுக்களை கொன்றால் 10 ஆண்டு ஜெயில் ...

உத்தர பிரதேசத்தில் 350 பறவைகள் பலி: பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடப்பட்டது

Posted: 15 Mar 2015 01:38 PM PDT

உத்தர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் பறவைகள் இறந்ததால் அங்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய் தாக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், கடந்த மார்ச் 6-ந் தேதிக்குள் கோழி, வாத்து உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன. அவை மர்ம நோய் தாக்குதலில் பலியாகியுள்ளதை நிபுணர் குழு உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் சந்த்கார்ஹ் மற்றும் ஷுகுல்பஜா பகுதியில் உள்ள சரே கா பர்வா ஆகிய கிராமங்களில் பாதிப்பை ...

சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா மன்மோகன் சிங்?

Posted: 15 Mar 2015 01:35 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர் மிகவும் நெஞ்சுரம் மிக்கவர். தான் விசாரிக்க வேண்டியவர்களுடைய சமூக அந்தஸ்தோ, விசாரணை அமைப்பின் அதிகாரமோ அவரிடம் எந்த மலைப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவேதான், சி.பி.ஐ-யின் முடிவிலிருந்து அவர் மாறுபட்டிருக்கிறார். ஹிந்தால்கோ என்ற தனியார் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் நடந்துள்ள முறைகேடுகளுக்காக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே நேரில் விசாரணை நடத்துவது என்று ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 15 Mar 2015 01:32 PM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

மணத்தக்காளி கீரை

Posted: 15 Mar 2015 01:22 PM PDT

மணத்தக்காளி, தானாகவே தோட்டங்களில் வளரும் ஒருவகைச் செடி. இதன் இலை மற்றும் காய் மருத்துவக் குணம் வாய்ந்தது. மணத்தக்காளியின் பழம் கறுப்பாக மிளகு போல இருப்பதால் இதனை 'மிளகு தக்காளி' என்றும் கூறுவர். காய்க்கும் கபந்தீரும் காரிகையே – அவ்விலைக்கு வாய்கிரந்தி வேக்காடு மாறுங்காண் – தீக்குள் உணக்கிடு வற்றல் உறுபினை யோர்க் காகும் மணத்தக்காளிக்குள்ள வாறு மணத்தக்காளியின் காய், மார்பில் சேரும் கோழை, இருமல் மற்றும் இளைப்பை நீக்கும். வாயில் ஏற்படும் புண் மற்றும் உடல் சூட்டைப் போக்கும் என பதார்த்த ...

10ம் வகுப்பு: ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் - திருந்துமா தேர்வுத்துறை?

Posted: 15 Mar 2015 01:18 PM PDT

தேர்வு தேதியே மறக்கும் அளவிற்கு, அறிவிக்கப்பட்டுள்ளதால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் சோதனைக்கு ஆளாகியுள்ளனர். வாட்டி வதைக்கும் வெயிலின் நடுவே ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கின்றனர். இதனால் மார்ச் 31க்குள் தேர்வுகளை முடித்து விட வேண்டும் என கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவில் மார்ச் 19ல் துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்.,10 வரை இழு...இழு என 23 நாட்கள் நடக்கிறது. மார்ச் 19ல் துவங்கும் தமிழ் முதல் தாள் தேர்வுக்கு பின் நான்கு ...

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Posted: 15 Mar 2015 01:14 PM PDT

ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; ...

கேரள அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை?

Posted: 15 Mar 2015 01:09 PM PDT

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொண்ட விதம், அரசியலமைப்பு சட்டத்தின், 356வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்குமாறு, ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும் வகையில் இருந்ததாக, மாநில கவர்னர் சதாசிவம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கவர்னரின் இந்த செயல், மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் தாக்கல்: கேரளாவில், காங்., முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, சமீபத்தில் மாநில நிதியமைச்சர் மணி தாக்கல் ...

தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள்

Posted: 15 Mar 2015 11:27 AM PDT

தமிழகம் முழுவதும் விதிகளுக்கு புறம்பாக, உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும், பிரமாண்டமான விளம்பர போர்டுகளால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். விதிமீறலில், ஆளுங்கட்சியினர் அதிக அளவில் ஈடுபடுவதால், அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர். சென்னை நகரில் அகற்றப்பட்ட விளம்பர போர்டுகள் மீண்டும் முளைக்கத் துவங்கி விட்டன. அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்தியாவின் எந்த நகரிலும் இல்லாத அளவு சென்னை நகரில் விளம்பர போர்டுகள் எல்லா சாலைகளையும் ஆக்கிரமித்து இருந்தன. ...

பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்

Posted: 15 Mar 2015 10:58 AM PDT

* பெரம்பூரில் விபத்து திருவள்ளூரில் உடல் மீட்பு சென்னை: பெரம்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற விளையாட்டு வீரரின் உடல் ரயில் மோதி மேலே தூக்கியெறியப்பட்டு, இன்ஜின் முன்னுள்ள கொக்கியில் சிக்கியது. பெரம்பூரில் இருந்து திருவள்ளூர் வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இன்ஜினில் தொங்கியபடி உடல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பெரம்பூர் ஜவகர் நகர், வெற்றி நகரை சேர்ந்தவர் லோகநாதன். எண்ணூர் துறைமுகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பவித்ரன் (21). இறகு பந்து விளையாட்டு வீரரான ...

சுவிஸ் ஓபன் பாட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் : ஸ்ரீகாந்த் சாதனை

Posted: 15 Mar 2015 10:29 AM PDT

பசல்: சுவிட்சர்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் விக்டரை எதிர் கொண்டார். முதல் செட்டை 21-15 என கைப்பற்றிய ஸ்ரீகாந்த், அடுத்த செட்டை 12-21 என பறிகொடுத்தார். வெற்றியாளைரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் எழுச்சி பெற்ற ஸ்ரீகாந்த் 21-14 என தன்வசப்படுத்தினார். முடிவில், ஸ்ரீகாந்த் 21-15, 12-21, ...

என்னைப்பற்றி அறிமுகம்

Posted: 15 Mar 2015 10:20 AM PDT

பெயர்: சார்ல்ஸ் டார்வின்
சொந்த ஊர்: கன்னியாகுமரி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: வலைதளங்கள்
பொழுதுபோக்கு: முகபுத்தகம் , டிவி பார்ப்பது
தொழில்:  மெசின் ஆப்பரேட்டர்  
மேலும் என்னைப் பற்றி: சாதாரணமானவன்

கோட்டு சூட்டு போட்ட ரியல் எஸ்டேட் அதிபாராயிட்டேன் -

Posted: 15 Mar 2015 08:07 AM PDT

- வெளம்பரம் என்கிறவங்க - நம்ம ஊரு முதல்வரை இல்ல நம்ம எம்எல்ஏ- ஒருத்தரையாவது இதுமாதிரி வரச்சொல்லுங்க - --------------------------------- 50 வருஷமா விதைத்துப் பார்த்தேன் கோவணம்தான் மிஞ்சியது 50 துண்டா கூறு போட்டு வித்தேன் கோட்டு சூட்டு போட்ட ரியல் எஸ்டேட் அதிபாராயிட்டேன் - --------------------------------- உதடுகள் ஒட்டாத குறள்--- - நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. .#குறள்வாழ்க - ------------------------------------- பரிதிதமிழ் ட்விட்டரில் ...

காரடையான் நோன்பு அடை

Posted: 15 Mar 2015 07:26 AM PDT

- பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது. தேவையான பொருட்கள் வறுத்த பச்சரிசி மாவு 1 கப் காராமணி 1/4 கப் தேங்காய் சிறிய பற்களாக கீரியது – அரை கப் வெல்லம் (பொடித்தது) 1 கப் ஏலக்காய் தூள் 1 டீ ஸ்பூன் தண்ணீர் 2 கப் அடை செய்முறை: காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு ...

வரலாற்றில் இன்று - மார்ச்

Posted: 15 Mar 2015 06:47 AM PDT

பிடித்ததில். பிடித்தது

Posted: 15 Mar 2015 06:31 AM PDT

ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன்
மூலம் எதையும் இழந்துவிடாது...
ஆனால் அந்த இடத்தில்
ஒளி இரண்டு மடங்காகிவிடும்...
நம்மால்
முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவோம்...
அதனால் நாம்
இழக்கபோவது எதுவுமில்லை...!

"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?"

Posted: 15 Mar 2015 06:25 AM PDT

"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?" . மகா பெரியவாளின் கேள்வி. [மகா பெரியவாளின் அறிவுரைகள் பல முறை நகைச்சுவையுடன் கலந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை பக்தர்கள் முன் நடந்துள்ளது.) ஒருமுறை இருபதுபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அவரை தரிசிக்க வந்திருந்தனர். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க, அனைவரையும் ஆசிர்வதிக்கும் முன் பெரியவர் ஆண்கள் கூட்டத்தை நோக்கி கேட்டார். "உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?". திடீரென்று சம்பந்தமில்லாத ...

உருகாத வெண்ணெயும் ஓரடையும்...

Posted: 15 Mar 2015 06:25 AM PDT

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி விரதம், சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்; தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பார்கள். விரத பூஜையில் ...

அரசு விடுமுறை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கம் செய்து கோவா அரசு உத்தரவு

Posted: 15 Mar 2015 06:16 AM PDT

இந்த ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலில் இருந்து
காந்தி ஜெயந்தியை நீக்கம் செய்து கோவா அரசு
உத்தரவிட்டுள்ளது.

விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும் என்ற
திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை பட்டியலிலிருந்து
நீக்கம் செய்துள்ளதாக அம்மாநில அரசு கூறி உள்ளது.

இது எதிர்க்கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
-
-----------------------------------
தினமணி

தொடத் தொடத் தொல்காப்பியம்(352)

Posted: 15 Mar 2015 06:11 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கொசுக்கடி கொடுத்தது ஐடியா, வலிக்காமல் இன்சுலின் ஊசி தயாரிக்க!

Posted: 15 Mar 2015 05:43 AM PDT

கொசுக்கடி கொடுத்தது ஐடியா, வலிக்காமல் இன்சுலின் ஊசி தயாரிக்க!
-

-
டெவினா கோத்தாரி.
-
ஆங்கிலத்தில் படித்தேன்..
தமிழில் வந்திருந்தால் அது விபரம் பதிவிடுங்கள்
.

பெண் போலீஸ்

Posted: 15 Mar 2015 05:22 AM PDT

பெண் போலீஸ் சென்னை: பெண் போலீஸ் ஒருவரிடம் உதவி கமிஷனர் ஆபாசமாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் போலீசிடம் ஆபாசமாக பேசுவதாக அந்த ஆடியோ அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் போலீசே இந்த ஆடியோவை வாட்ஸ் அப்பில் பரவ விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது உறுதியாகி விட்டது. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் அவருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேசமயம், ...

whatsup

Posted: 15 Mar 2015 04:46 AM PDT

நண்பர்களே whatsup இல் வாய்ஸ் கால் பேசுசம் வசதி எப்படி activate பண்ணுவது என கொஞ்சம் விவரமாக தெரிய படுத்தவும் .புது version இன்ஸ்டால் பண்ணி இருக்கிறேன் ஆனால் கால் சிம்பிள் காட்டுவதில்லை , விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே

திரைப்பட செய்திகள் - ஒரு வரியில்

Posted: 15 Mar 2015 03:16 AM PDT


---
ஷாருக்கான் நடிக்­க­வுள்ள புதிய திரைப்­ப­ட­மொன்றில்
அவ­ருக்கு ஜோடி­யாக கத்­ரினா கைபை நடிக்கவைப்­ப­தற்கு
முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.
-

காரடையான் நோன்பு

Posted: 15 Mar 2015 03:06 AM PDT

அனைத்து சகோதரிகளுக்கும் காரடையான் நோன்பு நல் வாழ்த்துக்கள்

ஸ்தோத்திரம்

Posted: 14 Mar 2015 11:31 PM PDT

- -தேவன் இரு கண்களைப் படைத்தார் அவை திறந்திருக்கும்போது பகலும் மூடியிருக்கும்போது இரவும் உண்டாயின அவை நல்லதெனக் கண்டார். – நாசியைப் படைத்து அதன் துவாரங்களில் தன் ஆவியை ஊதினார். அவற்றிலிருந்து வந்த சுவாசத்தால் காற்றுவெளி உண்டானது. அதையும் நல்லதென நினைத்தார். – வயிற்றோடு இணைந்த இடுப்புப் பகுதி சதைத் திரட்சிகள், ரோமக் கால்களை உண்டாக்கினார். அப்போது சமவெளிகளும் ஈரச்சுனைகளும் மலைமுகடுகளும் வனங்களும் உண்டாயின. மலை, சமவெளி, வனங்கள் ஆகியவற்றில் இரையுண்டு சுனைகளில் தாகம் தீர்க்க உயிர்களை ...

தமிழுக்கு வரும் அசின்!

Posted: 14 Mar 2015 10:59 PM PDT

காவலன் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்த அசின், அதன்பின், இந்தி சினிமாவே கதியென்று மும்பையிலேயே முகாமிட்டிருந்தார். ஆனால், தற்போது தீபிகா படுகோனே உள்ளிட்ட சில நடிகைகள், அவரது மார்க்கெட்டை சரித்து விட்டனர். இதனால், அபிஷேக் பச்சனுடன் நடித்து வரும், ஆல் இஸ் வெல் படத்திற்கு பின், இந்தி படங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் இருக்கிறார். இந்நிலையில், தமிழ், இந்தியில் மாதவன் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க, அசினுக்கு அழைப்பு விடுத்த போது, உடனே ஓ.கே., சொல்லி விட்ட அவர், ...

காதலின் உணர்வுகள்

Posted: 14 Mar 2015 10:01 PM PDT

கல்லிருக்கும் சாலை நான் நடந்து போனேன்.பாதங்கள் சிந்திய உதிரங்கள் நோகல்லயே! இருந்தும் எனைப் பார்க்க ஆசை உண்டென இருந்தேனடீ? நான் இல்லா நேரம் உன் கண்கள் தேடும். ஆசையிலே உன்னைப் பார்க்க தலை குனிந்து செல்வாயடீ? இப்போது நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..! நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள் நான் பட்ட வேதனைக்கு மருந்தாக அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே மானே! காலம் செய்த கொடுமை தானெடீ.. எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம் தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க சொன்னேனடீ..!நேசமுள்ள ...

கட்சியில நிறைய நடிகைகளை சேர்க்கச் சொல்றீங்களே...ஏன்?

Posted: 14 Mar 2015 08:56 PM PDT

கணவர் அடித்து துன்புறுத்துவதாக போலீசில் நடிகை புகார்

Posted: 14 Mar 2015 08:06 PM PDT

- இயக்குனர் பாரதிராஜாவால் புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் ரதி அக்னி ஹோத்ரி (வயது 54). மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரால், 1981-ல் ஏக் துஜே கேலியே என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார். 80-களில் முன்னணி நடிகையாக தமிழில் முரட்டுக்காளை, உல்லாசப்பறவைகள் என ரஜினி, கமல்ஹாசன் ஆகியேருடனும் நடித்து புகழ்பெற்றார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் அனில் விர்வானி, மும்பை ஓர்லி பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு தனூஜ் என்ற மகன் உள்ளார். சனிக்கிழமை ...

பி.பி.சி.யை ஏமாற்றி பணம் சம்பாதித்த கில்லாடி

Posted: 14 Mar 2015 07:53 PM PDT

லண்டன்:பி.பி.சி. தொலைக்காட்சி தன் சொந்த நாட்டவர் ஒருவராலே ஏமாற்றப்பட்டிருக்கிறது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நதீம் அப்பாசி என்று கூறிய நதீம் ஆலம் என்பவர் தொடர்ந்து பி.பி.சி.யில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பணம் சம்பாதித்துள்ளார். பி.பி.சி. வேர்ல்டு நியூஸ், பி.பி.சி. ஏசியன் நெட்வொர்க் மற்றும் ரேடியோ பைவ் லைவ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியுள்ள ஆலம் பல ஆண்டுகளாக அந்த நிறுவனத்தை ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளார். பிரிட்டனில் உள்ள ஹட்டர்ஸ்பீல்டில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™